Saturday, January 24, 2009

விஜய் டிவியின் நீயா, நானா

விஜய் டிவியின் ‘நீயா, நானா’ நிகழ்ச்சி விருந்தினராக நானும் என் மனைவியும் நேற்று சென்றிருந்தோம். அடுத்த இரண்டு மாதங்களில் என்றாவது ஒரு நாள் ஒளிபரப்பாகலாம்.

தொழில்முனைவர்கள், வேலையையும் சொந்த வாழ்க்கையையும் எப்படி நிர்வகிக்கிறார்கள்? தொழில்முனையும் கணவர்கள் சதா வேலை, வேலை என்று இருக்க, அவர்களது மனைவிமார்கள் நிலை எப்படி உள்ளது? தொழில்முனையும் ஆண்கள் எதை வாழ்வில் இழக்கிறார்கள்? அவர்களது மனைவிகள் எதை இழக்கிறார்கள்? எதைப் பெறுகிறார்கள்? இவர்களுக்கிடையில் என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்படுகின்றன? பணம் வந்தபின் சந்தோஷமாக இருக்கிறார்களா அல்லது பணம் வருவதற்குமுன் மகிழ்ச்சியாக இருந்தார்களா?

நிகழ்ச்சியின் ‘நங்கூர’மான கோபிநாத் எழுதிய புத்தகம் ஒன்று (“ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” - அதுதான் அந்தப் புத்தகத்தின் தலைப்பு) சமீபத்தில் புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், சொந்தமாகச் சிறுதொழில்கள் நடத்தும் சுமார் 20 பேர், அவர்களது மனைவிகளுடன் விவாதத்தில் ஈடுபடுவர். நிகழ்ச்சி பாதிக்குப் பிறகு, நானும் என் மனைவியும் சேர்ந்துகொண்டு, எங்களுக்கென சில பிரத்யேகமான கேள்விகள் இருக்கும்.

யாராவது நிகழ்ச்சியை யுட்யூபில் போடுவார்கள். அப்போது சுட்டி கிடைத்தால் தருகிறேன்.

[இதற்குமுன், இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நேரமே இல்லாமல் போய்விட்டது. அதன் யூட்யூப் சுட்டிகூட ஓரிடத்தில் குறித்துவைத்திருந்தேன். தேடிப் பார்க்கிறேன்.]

11 comments:

  1. வாழ்த்துக்கள்..பத்ரி சார்...
    இதோ இன்னுமொரு சாதனை...குமுதம் Top 10 ல்....
    http://muralikkannan.blogspot.com/2009/01/10.html

    ReplyDelete
  2. Badri!
    Surprising & Expecting to see you in Neeya Naana! Do you have any idea when it will be telecasted? (I can watch with my parents & can boast "Hey! you know ma, I know Badri, He is the junior of our CEO & a good friend of mine!" :-))
    Gopinath is a good writer ("தெருவெங்கும் தேவதைகள்", கவிதைத் தொகுப்பு) & a good சண்டைமூட்டி :-)

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  3. And you can watch past videos of Neeya Naana at TubeTamil & at techsatish - http://tamil.techsatish.net/file/neeya-naana-1
    http://tamil.techsatish.net/file/neeya-naana-2
    http://tamil.techsatish.net/file/neeya-naana-3
    ...
    ...
    ...
    http://tamil.techsatish.net/file/neeya-naana-17 (17, As of now!)

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. Wow that is great, will surely watch Neeya Naana.

    ReplyDelete
  6. முன்னமே உங்கல சன்செய்திகள்ல ஒருதடவ பாத்திருக்கேன்.நியா நானா எப்பையாவதுதான் பாப்பேன்.முடிஞ்சா எப்போ ஒளிபரப்பு பன்னுராங்கனு தேதி சொல்லுங்க.
    வாழ்துக்கள்.

    ReplyDelete
  7. நீங்கள் கேட்டீர்களா எனத் தெரியவில்லை, ஆனால், கேட்டதுபோல் ஞாபமிருப்பதால்...
    மொழிபெயர்ப்புக்கென Ishmael by Daniel Quinn-ஐ பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பத்ரி சார். குமுதத்திலும் விஜய் தொலைக்காட்சியிலும் ஜொலிப்பதற்கு.......

    சமீபகாலமாக தங்கள் இடுகைகளை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்.

    ReplyDelete
  9. Congrats Sir,
    The Video Link is:
    http://www.usertube.com/neeya-naana-episode-24/with-bussiness-man-and-their-wifes-part-6-video_517006471.html

    ReplyDelete
  10. i like this blog.lot of messages in this blog. keep it up. best wishes.

    ReplyDelete
  11. i can see a ad of your blog in "kumudam" book.
    all the best sir.

    ReplyDelete