என் பெண் படிக்காமல் தகராறு செய்யும்போது என் பெண்ணுக்கும் என் மனைவிக்கும் எப்போதும் சண்டை வரும். நான்தான் தலையிட்டு சமாதானம் செய்வேன். அப்போது, “படித்து என்ன ஆகப்போகிறது? பத்திருபது பன்றிகளை மேய்த்தாலாவது உபயோகமாக இருக்கும்” என்பேன். உடனே பன்றி மேய்ப்பது, கழுதை மேய்ப்பது என்று பேச்சு போய், குபுக்கென்று எல்லோருக்கும் சிரிப்பு வந்து, நிலைமை இலகுவாகும்.
நான் ஓய்வு பெறும் காலத்தில் கட்டாயமாக, பன்றி வளர்ப்பில்தான் ஈடுபடுவேன் என்று வீட்டில் அடித்துச் சொல்லிவந்திருக்கிறேன். இதுவரை விளையாட்டாகத்தான் சொல்லிவந்தேன். இன்று தீர்மானமான முடிவாகவே எடுத்துவிட்டேன்.
தி ஹிந்து செய்தியைப் படியுங்கள்..
அப்போது பெயரை பூவராகன் என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் :)
ReplyDeleteபன்றி வளர்த்து வளம் பெற வாழ்த்துகள். இன்று முதல் தவறாமல் நக்கீரன் படியுங்கள். மகாத்மா மாடர்ன் ஃபார்ம் என்கிற நிறுவனம், இதழ்தோறும் அதில் விளம்பரம் செய்கிறது. பன்றி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு [கோழி வளர்த்தால் குபேரனாகலாம். பன்றி வளர்த்தால் பணக்காரனாகலாம்] குறித்த அற்புதத் தகவல்களுடன், நாங்களே வாங்கிக்கொள்கிறோம், கிலோ கறி இத்தனை ரூபாய், முட்டை இன்ன விலை என்று மார்க்கெட் நிலவரத்தை அவ்வப்போது தெரியப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்தபடியே பெரும்பணக்காரராக இதனைக் காட்டிலும் வேறு உபாயமில்லை என்னும் இந்நிறுவனம், கிராமப்புறங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
ReplyDeleteவராஹ அவதாரத்தின் மீது தங்களுக்குள்ள ஈடுபாடு புரிந்துகொள்ளக்கூடியதே!
ReplyDeleteபத்ரி பன்றி வளர்ப்பாரோ இல்லையோ விரைவில்
ReplyDeleteகிழக்கு வெளியீடாக பன்றி வளர்ப்பது, கோழி வளர்ப்பது,ஆடு வளர்ப்பது பற்றிய புத்தகங்களை
எதிர்பார்க்கலாம் :).
இப்படி விள்ம்பரங்களை நம்பி
பிராய்லர் கோழி வளர்த்து
கடனாளிகளானவர்கள்,பணமிழந்தவர்கள் கதை பாராவுக்கு தெரிந்திருக்காது.
கிழக்கு பதிப்பகம், ‘ஆடு வளர்ப்பு’ என்ற நூலை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இன்னமும் இணையக்கடையில் ஏற்றவில்லை. செய்ததும் அதற்கான லிங்க் கொடுக்கிறேன். அடுத்து கோழி, பன்றி வளர்ப்பு பற்றி புத்தகங்கள் நிச்சயமாக வரும்.
ReplyDeleteIt is not a practcable idea.
ReplyDelete