அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
நாங்கள் வெளியிட்டிருக்கும் (பெரும்பாலும் சொக்கன் எழுதியுள்ள) தொழில்துறை வரலாற்றுப் புத்தகங்களில், விற்பனையைப் பொருத்தமட்டில், பொதுவாகவே ஓர் அம்சம் தென்படுகிறது.
ஓர் ஆளை முன்னிறுத்தி, அட்டைப்படத்தில் அவரது முகத்தை வைத்தால் அந்தப் புத்தகம் அதிகமாக விற்கும். ஒரு நிறுவனத்தை முன்னிறுத்தி, அது தொடர்பாக எழுதினால், அந்தப் புத்தகத்தின் விற்பனை குறைவாகவே இருக்கும். இதன் லாஜிக் என்ன என்பது தனியாக ஆராயப்படவேண்டிய ஒன்று.
ஆனால், அமுல் என்பது வர்கீஸ் குரியனால் மட்டும் தொடங்கி நடத்தப்பட்ட நிறுவனமல்ல. குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கம் என்ற அமைப்பில் இன்று வர்கீஸ் குரியன் இல்லை. குரியன், 2005-ல் இந்த நிறுவனத்திலிருந்து “ஓரங்கட்டப்பட்டார்.” இப்போது இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மனாக இருப்பவர் பாடோல் என்பவர். குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கத்தை ஆரம்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டவர் திருபுவன்தாஸ் படேல். இவருக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் மொரார்ஜி தேசாய், வல்லபபாய் படேல். உருவான காலகட்டம் 1946.
அங்கிருந்து, அமுல் என்ற அடுத்த கட்டத்தை எட்டுவதற்குப் பெரும் உதவியாக இருந்தது வர்கீஸ் குரியன்தான்.
அமுல் அடைந்த வெற்றியை இந்தியாவின் வேறு எந்த பால் கூட்டுறவும் அடையவில்லை. அது ஒரு சோகமே.
அமுல் ஒருவிதத்தில் ஆச்சரியம் தரக்கூடிய அமைப்புதான். கூட்டுறவுச் சங்கங்கள் என்றாலே அரசியல், தில்லுமுல்லு, நிதி நிர்வாகத்தில் திறமையின்மை, ஊழல், அலட்சியம், பிராண்டிங் பற்றிய புரிதல் இன்மை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றுகிறது. ஆனால், குஜராத் பால் விற்பனை சங்கம் மட்டும் எப்படி இவற்றிலிருந்து தப்பித்தது? குரியன் என்பவருக்கு மட்டும் இந்த நிறுவனத்தை மேலும் மேலும் பெரிதாக்கவேண்டும், புதிய புதிய பொருள்களை உருவாக்கி விற்பனை செய்யவேண்டும் என்று தோன்றியது? இப்படியெல்லாம் செய்வதற்காக அவருக்கு அதிகச் சம்பளம் ஒன்றையும் அமுல் தந்துவிடவில்லை.
ஒரு முதலாளித்துவ அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பினும், அமுல் என்ற நிறுவனம் எப்படி நல்ல லாபம் சம்பாதிக்கும் நிலையை அடைந்துள்ளது என்ற ஆச்சரியத்தின் கதைதான், இந்தப் புத்தகம்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
// ஓர் ஆளை முன்னிறுத்தி, அட்டைப்படத்தில் அவரது முகத்தை வைத்தால் அந்தப் புத்தகம் அதிகமாக விற்கும்
ReplyDeleteசுவாரஸியமான தகவல்.
Canadian TV நிகழ்ச்சிகளையும் US (CNN) TV நிகழ்ச்சிகளையும் compare செய்தால், LarryKing-AndersonCooper-LouDobbs என்று US-இல் பெயர்கள்/முகங்கள் முன்னிறுத்தப்படுவதை கவனிக்கலாம்.
ஆனாலும், AMUL என்ற branded ஆங்கில font-எழுத்துக்களை பெரிதாக அட்டையில் போட்டிருக்கலாம்.
-விகடகவி
அன்புள்ள பத்ரிக்கு,
ReplyDelete“அமுல்” என்பது சரியான மொழிபெயர்ப்புதானா?
“அமூல்” என்பது சரியா?
எஸ். கிருஷ்ணமூர்த்தி