Friday, October 23, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்பா தேவர்


முருக பக்தர் தேவர். நாத்திகப் போர்வாள் ராதா. தமிழ் நாடகத்துறையை மாற்றி அமைத்தவர் ராதா. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, இருவரையும் வைத்து வெற்றிப்படங்கள் எடுத்துத் தள்ளியவர் தேவர்.

எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூட்டுக்கு, தேவர் படத்தில் இருவரும் நடிக்கும்போது ஏற்பட்ட ஒரு தகராறும்கூடக் காரணம்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகள் ராதாவும் தேவரும். இருவருமே கடவுளைத் திட்டுவார்கள். தேவர் செல்லமாக. ராதா கடவுள் மறுப்பாளனாக.

எம்.ஆர்.ராதாயணம் புத்தகத்தை எழுதிய முகிலும் சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்தை எழுதிய தீனதயாளனும் சித்ராவுடன் பேசுகின்றனர். ஜுகல்பந்தியை ரசியுங்கள்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கம் செய்ய: கிழக்கு பாட்காஸ்ட்

முகிலின் புத்தகங்கள் | தீனதயாளனின் புத்தகங்கள்

தொடர்புள்ள புத்தகங்கள்:

                   

No comments:

Post a Comment