இன்று மாலை (புதன்கிழமை, 28 அக்டோபர் 2009) தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.
இந்தச் சங்கத்தில் முதலில் உறுப்பினர் ஆவதற்கு மூன்று ஆண்டு காலமாவது புத்தகத் துறையில் பதிப்பாளராக இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். அடுத்து, உறுப்பினர் ஆனபிறகு, மூன்று ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் நிற்கமுடியாது என்றும் கமிட்டி எதிலும் உறுப்பினர் ஆகமுடியாது என்றும் சொன்னார்கள். (இதெல்லாம் சங்கத்தின் அமைப்பு யாப்பில் உள்ளதா என்று கவனமாகப் பார்க்கவேண்டும்.)
ஆக, நான் தேர்தலில் நிற்கக்கூடிய முதல் வாய்ப்பைப் பெறுவது இப்போதுதான். தலைவர், துணைத்தலைவர் (தமிழ்), துணைத்தலைவர் (ஆங்கிலம்), செயலர், இணைச்செயலர், பொருளாளர் ஆகியவை முதன்மைப் பதவிகள்.
அடுத்து செயல்குழுவில் 8 பேர் - அதில் 4 பேர் தமிழ் பதிப்பாளர்/விற்பனையாளர்கள், 4 பேர் ஆங்கில பதிப்பாளர்/விற்பனையாளர்கள்.
இதில் செயல்குழு உறுப்பினர் (தமிழ்) என்ற நிலைக்கு நானும் நிற்கிறேன்.
நான் இதுவரை நேரில் பார்த்தது ஒரு தேர்தல்தான். இம்முறை தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன. அணிகளாகப் போட்டியிடும் முறை எனக்குப் புதுமையாக உள்ளது. நான் தனியாகப் போட்டியிடுகிறேன். எந்த அணியிலும் இல்லை.
இதுவரையில் வாக்கு கேட்டு வந்த சில கடிதங்களுடன் ஒரு மொட்டைக் கடுதாசியும் அதற்கு ஒரு பதில் கடுதாசியும் வந்துள்ளன.
பபாஸி, தேர்தல், பதிப்புலகம் செல்லவேண்டிய பாதை, தூரம் போன்ற பலவற்றைப் பற்றி நிறையக் கருத்து சொல்ல விரும்புகிறேன். ஆனால் அனைத்தும் இன்று தேர்தல் முடிந்தபின், நாளையிலிருந்து!
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
14 hours ago
எதற்காக இத்தனை போட்டி? இவர்களுக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன?
ReplyDeleteஇல்லை இது அமெரிக்கத் தமிழ் சங்கத் தேர்தல்களைப் போல "perceived prestige" விஷயங்களா? :-)
All the best! Hope you win.
ReplyDelete-yetanothervenkat
பத்ரி
ReplyDeleteநீங்கள் ஏதாவது அணியில் நிற்பது நலம் என்று நான் நினைக்கிறேன்! எப்படி இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துகள்!
~~
தேர்தலில் - ஏதாவது கேள்விகள் இருந்தால் நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சியை கேட்கவும்! அவருக்கு தேர்தல் அதிகாரியாக இருந்து பழக்கம் :-))
என்ன ஸ்ரீகாந்த் சென்னை சென்றபிறகும் "தமிழ்ச் சங்க தேர்தல்கள்" மறக்கவில்லை போலும்?!
மயிலாடுதுறை சிவா...
செட்டியார் ஜாதி வெறியர்களின் ஆதிக்கத்தில் முழுகிக்கிடக்கும் பபாஸியில் செட்டியார்கள் அல்லது அவர்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு துதிபாடும் ஜால்ராக்கள் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பது கண்கூடு.
ReplyDeleteபபாஸி தேர்தலில் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteGood luck.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDelete