Saturday, October 10, 2009

ஒபாமா நோபல் பரிசு

அவசரப் பதிவு. பராக் ஒபாமாவுக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுத்திருப்பது வருத்தம் தருகிறது. ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆகி, சில மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில், ஒன்றும் கான்கிரீட்டாகச் சாதிக்காத நிலையில், ஆஃப்கன் போரில் காலை விட்டுவிட்டு வெளியே மீளமுடியாமல், ஈராக்கில் சொன்னதுபோல் வெளியேறமுடியாமல், காண்டானமோ பே சிறை பிரச்னையை சரியாகத் தீர்க்கமுடியாமல் தடுமாறும் நிலையில், இந்த விருது அவசியம் இல்லை.

ஒபாமாவுக்கே இது distraction ஆக அமையும். ஒபாமா எதிரிகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக.

[ஆனால், அதேநேரம், ஒபாமாவின் புத்தகங்களை தமிழில் வெளியிடும் அதிகாரபூர்வ பதிப்பாளனாக - Dreams From My Father, The Audacity of Hope, Change We can Believe in - அவர் நோபல் வாங்கிய விஷயத்தை மிகவும் பெருமையுடன் அட்டையில் குறிப்பிடுவோம். விரைவில் புத்தகங்களை எதிர்பாருங்கள்!]

13 comments:

 1. ”மார்ட்டின் லூதர் கிங் விருது” என்று ஒன்றை ஏற்படுத்தி, அதைத் தனக்குத் தானே கருணாநிதி பாணியில் கொடுத்துக் கொள்ளாதவரை ஒபாமாவைக் குற்றம் சொல்லமுடியாது.

  அமைதிக்கான நோபல் பரிசு அரசியல் மயமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. சில மில்லியன் டாலர்களைச் செலவழித்து லாபி செய்தால் கருணாநிதிகூட அதை வாங்கிவிட முடியும்.

  ReplyDelete
 2. சந்தோசப்படுங்கள். மகிந்தா ராஜபக்சேவுக்கு கொடுக்காமல் அட்லீஸ்ட் ஒபாமாவுக்கு தந்தார்களே
  என்று

  ReplyDelete
 3. ம்ம். நோபெலும் வியாபாரம்தான் போலருக்கு.

  -வித்யா

  ReplyDelete
 4. //பா. ரெங்கதுரை said...
  ”மார்ட்டின் லூதர் கிங் விருது” என்று ஒன்றை ஏற்படுத்தி, அதைத் தனக்குத் தானே கருணாநிதி பாணியில் கொடுத்துக் கொள்ளாதவரை ஒபாமாவைக் குற்றம் சொல்லமுடியாது.

  அமைதிக்கான நோபல் பரிசு அரசியல் மயமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. சில மில்லியன் டாலர்களைச் செலவழித்து லாபி செய்தால் கருணாநிதிகூட அதை வாங்கிவிட முடியும்.

  //


  ஒபாமா நோபல் பெற்றதைவிட விமர்சிப்பதைவிட கலைஞரை குறிவைப்பதுதான் முக்கிய நோக்கம்போல :)

  ReplyDelete
 5. அமெரிக்க அதிபராக இருந்தும் புதிதாக எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காமல் இருந்தாமைக்கான பரிசாகக் கூட இருக்கலாமோ...?!

  ReplyDelete
 6. ஜார்ஜ் புஷ்ஷிர்க்கு குடுத்திருக்கலாம்.

  1. லிப்யாவின் சர்வாதிகாரி கதாஃபியை "அணு ஆயுதம் வேண்டாம் என்று" பயந்து விடச்செய்தார்.

  2. தனக்கு வசதியான சர்வாதிகாரிகளை ஆதரித்தும், ஜனநாயக இந்தியாவை என்றும் எதிர்க்கும் இடதுசாரி முட்டாள் டெமாக்ரட்டிக் கட்சியை போல் அல்லாமல்,

  3. கியோட்டோ ஒப்பந்த காது குத்தலை ஏற்காமல் தைரியமாக எதிர்த்தார்.

  4. "அருணாசல் பிரதேசம் என்னுடையது," என்று கேட்கவில்லை. இடதுசாரி என்றால், அமெரிக்காவை மட்டும் திட்டி, சீனாவுக்கும் க்யூபாவிற்கும், கிம், சாவெஸ் போன்ற அயோக்கிய முட்டாள்களுக்கு செருப்பு நக்கி ஜால்ராக்கள் என்று சாயம் வெளுக்க வைத்தார்.

  மற்றும் பல. படிப்போர் விருப்பம் இருந்தால் எழுதுவேன்.

  -புஷ் ரசிகன் :-)

  ReplyDelete
 7. ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுத்தற்கு பதில் அதிகாரத்தினை இன்றும் தைரியமாய் எதிர்க்கும் நபர்களுக்கு கொடுத்திருக்கலாம். நோபல் பரிசிற்கு பரீசிலனையில் இருந்த ஒரு நபர் சீனாவில் சிறையில் வாடும் அங்கே அதிகாரத்தை எதிர்ப்பவர். பாருங்கள், எனக்கு அவர் பெயர் கூட மறந்து விட்டது. இப்படிபட்ட போராளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் அவர்களுக்கு moral support கொடுக்கவும் நோபல் பயன்பட்டிருக்கலாம். ஒபாமாவிற்கு உலகமே எழுந்து வணக்கம் சொன்னது தேர்தல் சமயத்தில். இப்போது அவர் பதில் மரியாதை தெரிவிக்க வேண்டிய நேரம். பார்க்கலாம், இனி அவர் எப்படி இருக்கிறார் என்று...

  ReplyDelete
 8. MR Badri
  I am a regular follower of u r blog recently u r giving u r video files in veoh site it is not comfort to me because

  my internet traffic is not unlimited
  (bsnl ) limited useage limit 2.5 gb permonth
  i have free download time 2 am to 8 am i use this time to down load the video

  but veoh it so complex it shows only 5 min previews .after i down load plugin it is not comming flowly
  I tried to download video through IDM , REALPLAYER, but it is not giving results

  download is breaking suddenly at different moment some time in first 5 min other 13 min like that

  and the down load speed it also is not wrothy it takes 1hour to down load 128 mb (256 kb to 2mb speed of internet connection }
  ''Prof Swaminathan'' if i try to down load through veoh site a link blow on video it shows same vidow 300+mb (same quality or high quality}
  normaly to download 120 mb it take max 20 min

  i try keepvid , savethevideo site to download veoh but it failed

  so if u have any suggestion to download these video fastly and minimum mb capacity (hard disk space probe ) share with us
  IF u have time probe to upload the video in u tube 10 ,10 min u try http://video.yahoo.com/
  i able to see 30 min 40 , video there

  like me so many may struggle

  one suggession
  when giving title to video on youtube dont specifive like பாஸ்கர் சக்தி (3/11) '' use general terms like ''tamil talk '' by பாஸ்கர் சக்தி (3/11) on sirukathaigal .
  '' tamil writer ''பாஸ்கர் சக்தி (3/11) on sirukathaigal .
  IT will allow more viewer to get the view when they search random

  thanks

  ReplyDelete
 9. //ஆனால், அதேநேரம், ஒபாமாவின் புத்தகங்களை தமிழில் வெளியிடும் அதிகாரபூர்வ பதிப்பாளனாக அவர் நோபல் வாங்கிய விஷயத்தை மிகவும் பெருமையுடன் அட்டையில் குறிப்பிடுவோம்//
  That's an essential & Timely disclaimer! Badri! You are really smart!

  Regards
  Venkatramanan

  ReplyDelete
 10. கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசியாகத்தான் இருக்கும்.
  உங்கள் புத்தகங்களைக் கொண்டுவாருங்கள். படித்து ருசிப்போம்.

  ReplyDelete
 11. How the award declaration, makes you sad or disappointed? I did not understand. Did any of your favorites missed out this year or you just think Obama did not deserve it. I guess you don't have the right to decide who gets Nobel peace prize, the bunch of people who had the right decided it. As Nobel committee (and Obama) announced, it is not for his accomplishments, it is for the aspiring beginning. It is a call for action. Why you had to react so urgently? Trying to be a sensational journalist, publishing first opinion on everything happening below the Sun...

  ReplyDelete
 12. I read your blogs regularly. i like your initiatives in bringing the science / info to public adudience. keep doing it.

  //ஆனால், அதேநேரம், ஒபாமாவின் புத்தகங்களை தமிழில் வெளியிடும் அதிகாரபூர்வ பதிப்பாளனாக அவர் நோபல் வாங்கிய விஷயத்தை மிகவும் பெருமையுடன் அட்டையில் குறிப்பிடுவோம்//

  If you dont believe the award done justice, then WHY SHOULD YOU PUBLISH / FALSE PROMOTE to the public audience. It would be apt if you dont mention the nobel win in the title page, i think.

  -Muthuganesh

  ReplyDelete
 13. முத்துகணேஷ்: ‘நான்’ என்னும் தனி மனிதனின் கருத்துகளுக்கும் ‘நாங்கள்’ என்னும் பதிப்பகத்தின் கருத்துக்கும் வித்தியாசம் உண்டு என்பதைத் தெளிவாகக் காண்பிக்கவே அந்த disclaimer. ‘குறிப்பிடுவோம்’ என்பதுதான் ஆபரேட்டிங் வேர்ட்.

  ReplyDelete