இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
- 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
- ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
- சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
- வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
- நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
- மாயாவதி, சி.என்.எஸ்
- இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
- அத்வானி, ஆர்.முத்துக்குமார்
- ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
- சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர் (இந்தப் புத்தகம் கோட்டா முடிந்துவிட்டது! அவ்வளவு ஆர்வமாக பலரும் கேட்டு, கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்தாகிவிட்டது. பிற புத்தகங்களைக் கேட்கவும்.)
- பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
- விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
- பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
- வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
- நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
- மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
- விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
- மெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா
- தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
- ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
- உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
- மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
- ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
- உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
- ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
- பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
- விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
- புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
- விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
- ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
- ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
- இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
- இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
- புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
- ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
- ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.
Karumbu tinna kooliya.... mail anupiyaachu :)
ReplyDeleteமூன்றாவது திட்டத்திலிருந்து புத்தகங்களைப் பெற முடியுமா?
ReplyDeleteஅடுத்த விமர்சனத் திட்டம் எப்போது? இல்லை 4 திட்டங்களொடு முடிந்து விட்டதா?
ReplyDeleteமுதல் நான்கு விமர்சனத் டிட்டங்களிடையே ஒரு மாதம், மூன்று மாதம் , ஆறு மாத கால இடைவெளி இருக்கும் போது, அடுத்த திட்டத்திற்கு ஏன் இவ்வளவு தாமதம்? ஒரு வேளை விமர்சனத் திட்டத்தை நிறுத்திவிட்டீர்களா?
ReplyDelete