Monday, October 05, 2009

பாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரையாடல்

இன்று மதியம் அலுவலகத்தில் வேலை செய்வோரிடையே பாமக, அஇஅதிமுக அணியிலிருந்து விலகியது தொடர்பாக ஒரு சிறு கருத்துக் கணிப்பு + உரையாடல் நடத்தினேன். அதன் ஒலிவடிவம் இங்கே:மேலே உள்ள இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால், ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்லுங்கள்.

7 comments:

 1. ராமதாஸும் விஜயகாந்தும் ஏன் கூட்டணி சேரக் கூடாது?

  ஏன் இதற்குமுன் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை?

  அ.தி.மு.க வும் தி.மு.க வும் கூட்டணில் சேர்க்காதபட்சத்தில் அவர் தனித்து நிற்க மாட்டார். விஜயகாந்துடன் சேரலாம்.

  அப்பொழுது விஜயகாந்த் பா.ம.க வையும் ம.தி.மு.க வையும் பகைடை காயாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

  காங்கிரஸ்+தேமு.தி.க+பா.ம.க+ம.தி.மு.க

  அல்லது

  தே.மு.தி.க+பா.ம.க+ம.தி.மு.க+இடது மற்றும் வலது சாரிகள்

  ஏன் சேராது?

  அதிலும் முக்கியமாக,

  தே.மு.தி.க. வும் பா.ம.க வும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள்.

  அவர்கள் என்ன பரம எதிரிகளா?.

  குறிப்பாக விஜயகாந்துக்கும், ராமதாஸுக்கும் பொது எதிரி கலைஞரும், ஜெயலலிதாவும் மட்டுமே இது எப்பொழுது இருவருக்கும் பொதுவான என்றால் ராமதாஸை அ.தி.மு.க. வும் தி.மு.க வும் புறக்கணிக்கும் போது ராமதாசுக்கு இருவரும் பொதுவான எதிரி.

  விஜயகாந்துக்கு முதல்வர் நார்காலி பிடிப்பதில் கலைஞரும், ஜெயலலிதாவும் பொது எதிரி ஏன் இதில் ராமதாஸ் வரவில்லை என்றால் அவருடைய கட்சி அந்தளவிற்கு பலம்வாய்ந்ததாக இல்லை அதனால் அவர் எதிரிக்கு எதிரி நண்பன்.

  விஜயகாந்திற்கு ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டு (இடது+வலது) ஆதரவு உள்ள போது, அவர் ராமதாஸை நாடக்கூடும்.

  பா.ம.க விற்கு வடதமிழ் நாட்டில் பலம் கொஞ்சம் அதிகம். நீங்கள் கேட்கலாம் எல்லாகட்சிகளும் தனித்து நின்றால்
  பா.ம.க வெற்றி பெருமா என்று. கண்டிப்பாக 91 சட்டமன்ற தேர்தலைப் போன்று குறைந்த பட்சம் 4 அல்லது 5 தொகுதிகளை பிடிக்கும்.

  வடதமிழ் நாட்டில் சமபலத்துடன் இருக்கும் தி.மு.க வையும் அ.தி.மு.க வையும் வீழ்த்த விஜயகாந்து ராமதாஸுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

  ராமதாஸும் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லலாம்.

  கடந்த முறை ஜெயலலிதாவை சகோதரி என்று சொல்லிய ராமதாஸுக்கு இது ஒன்றும் புதிது இல்லை.

  அரசியலில் எல்லாம் நடக்கும்.

  அவர்கள் இருவரும் பரம எதிரிகள் இல்லை, இவர்களை போன்று.

  1969 தேர்தலில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரஸும், தி.மு.க வும் கூட்டணி அமைக்கவில்லையா ?

  சரத்பவார் சோனியாவை வேளிநாட்டுக் காரி என்றகோஷத்தை முன்வைத்தவர் அவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கவில்லையா ?

  ReplyDelete
 2. விஜயகாந்துக்கும் பா.மா.கா வுக்கும் கூட்டனியா !!!!!!!!! வாய்ப்பே இல்லை . அப்படி நடந்தால் பா.மா.கா மேல இருந்த கொஞ்ச நஞ்சம் மரியாதையும், நம்பிக்கையும் போய்விடும் . பா.மா. கா சரத்குமாருடன் இணையலாம் - எனக்கு என்னமோ சரத் நல்லா பன்னுறாருன்னு தோணுது!. ராமதாஸ் இப்போது உள்ள சூழ்நிலையை கையாள கட்சித் தாவல் செய்கிறார், இது நீடித்தால் வட தமிழ் நாட்டில் கூட அவருடைய பலம குறைந்து விடும் .. பட் பா.மா.கா மட்டும் அடாவடித்தனம் பண்ணுற கட்சின்னு சொல்லுறது சிறு புள்ள தனம் .எந்த கட்சி அடாவடித்தனம் பண்ணுல ?...

  விஜய் பிரசன்னா

  ReplyDelete
 3. Badri,

  Good to hear the analysis/comments on PMK ADMK breakup.

  IMO, there is no compelling reason for MK to jump and accept PMK. MK has beaten them to death in the last LS elections and made the world know PMKs worth. Now PMK will not be in a position for hard bargain...

  Thanks

  Venkat

  ReplyDelete
 4. திமுக, அதிமுக, காங்கிரசஸ், கம்யூனிஸ்ட் என அனைவரும் பச்சோந்திகள். மற்றவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க, அதிகாரம் செய்ய, பணம் சம்பாதிக்க கூட்டணி மாறி மாறி அசிங்கள் செய்கிறார்கள், ஆனால் இந்த சிகப்பு சட்டை காரர்களும் மாறி மாறி என்னத்த சாதிக்கரங்கன்னு தெரியல.

  ReplyDelete
 5. கிழக்கில் ராமதாஸ்மீது பலருக்கு காண்டு என்று தெரிகிறது. அது அவசியமில்லை. ஒரு கவுண்டமணி, ஒரு செந்தில், ஒரு விவேக், ஒரு வடிவேலு, ஒரு ராமதாஸ் இல்லாமல் என்னய்யா வாழ்வில் சுவாரசியம் இருக்கும்? ராமதாஸ் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் இப்படியே தொடர்வதுதான் தமிழருக்கு நல்லது.

  ReplyDelete
 6. - not related to the post -
  hi badhri,
  Is it really impossible to interlink the rivers?
  Rahul bhai also told this during his visit to TN.

  Could you please arrange some knowledgeable person in this area and do a podcast?
  Without proper evaluation , how Jairam can tell that it will affect ecology and rahul can tell its against nature?

  http://economictimes.indiatimes.com/news/politics/nation/Jairam-objects-to-river-interlinking/articleshow/5092343.cms


  - related -
  Ramdoss => we should not give importance this fellow

  ReplyDelete
 7. இரண்டு விஷயங்கள் முனைவர் பத்ரி அவர்களே!
  (1) நீங்கள் உரையாடல் நடத்தியதை முழுமையாகப் பதிவு செய்து போடவும். தங்களின் கேள்விகளுக்கு தங்களின் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எவ்வளவு sincere-ஆக பதில் சொன்னார்கள்? அதற்கு கடைசியில் ஒரு நன்றி சொல்லி இருக்கலாம்.
  (2) பா.ம.க. கட்சியைப் பற்றியோ, அல்லது மருத்துவர் ஐயா தமிழ்க்குடிதாங்கியைப்பற்றியோ இனிமேலும் அலசி ஆராய்ந்து உங்கள்/மற்றும் உங்களின் சக ஊழியர்களின் பொன்னான நேரத்தை வீணாக்காமல், உருப்படியாக ஏதாவது செய்யலாம். (இப்போ பாருங்கள், நானும் என்னோட நேரத்தை வீணாக்கி உள்ளேன்).

  :-D

  ReplyDelete