நானும் சாலமன் ஜெயப்பிரகாஷும் ஒரு குறுங்கடன் நிறுவனத்தில் (independent) இயக்குனர்களாக உள்ளோம். சில மாதங்களுக்குமுன் இயக்குனர் சந்திப்பின்போது பெங்களூருவில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பெங்களூருவில் லேபர்நெட் என்ற அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார். அமைப்புசாராத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்தத் தொழிலாளர்கள் குழாய் வேலை செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மின் வேலை செய்பவர்கள்... ஆனால் தினக்கூலிகள். இதில் பலரும் மாதச் சம்பளம் வாங்குபவர்களைவிட அதிகப் பணத்தை ஒரு மாதத்தில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மாதச் சம்பளக்காரர்களை விட ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றார் சாலமன்.
தினக்கூலி பெறுபவர்களது மனநிலையே ஏழைமை சார்ந்தது என்கிறார் இவர். இவர்கள் கையில் பணம் தங்குவதே இல்லை. உணவுக்கு என இவர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்கிறார்கள். மாதாமாதம் மளிகைப் பொருள்களை வாங்குவதற்குபதில் தினம் தினம் மளிகைச் சாமான்களை வாங்குவதனால் நமக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. பணத்தை வீட்டில் வைத்திருக்க இவர்களிடம் இடம் இல்லை. மளிகைப் பொருள்களை, உணவுப் பொருள்களை வாங்கிச் சேர்த்துவைக்கவும் இவர்கள் வீடுகளில் இடம் இருப்பதில்லை.
தினக்கூலி என்பது வாரக்கூலியாக மாறும்போது இவர்களது வாழ்க்கை சற்றே மேம்படுகிறதாம். மாதம் இருமுறை என்றாலும், மாதச் சம்பளம் என்றாலும் ஒன்றுதான் என்கிறார்.
***
இந்தத் தகவல் கிடைத்தபிறகு, இதனை பிராக்டிகலாகச் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.
எங்களுக்கு துணிகளை அயர்ன் செய்து தருபவர் நாளுக்கு எளிதாக 300 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் அவருக்கும் மாதக் கடைசியில் கையில் ஒரு பைசா மிஞ்சுவதே இல்லை. கடைசியில் அவரிடம் பேசி, நாங்கள் தினமும் தரும் தொகையை உடனடியாகத் தராமல், கணக்கு வைத்திருந்து, மாதக் கடைசியில் மொத்தமாகத் தருவதாகச் சொன்னோம். ஒப்புக்கொண்டார். அதன்படி மாதக் கடைசியில் அவர் கையில் துளியும் பணம் இல்லாதபோது கணிசமாக ஒரு தொகை அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது.
***
ஆனால் இதனை எப்படி முறைப்படுத்துவது? தினக்கூலி வேலை மாறப்போவதில்லை. மாதச் சம்பளத்துக்கு அவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. அவர்களது சம்பளம் உடனுக்குடன் அவர்கள் கைக்குக் கிடைக்கக்கூடாது! சற்றே கிறுக்குத்தனமாக இருந்தாலும் இதுதான் உண்மை. அவர்களுக்கு ஃபினான்ஷியல் டிசிப்ளின் வரும்வரை அவர்களது பணம் மாதம் ஒருமுறை கைக்குக் கிடைப்பதாக இருக்கவேண்டும். அந்தப் பணத்திலிருந்து அவர்கள் வீட்டு வாடகை, மளிகைப் பொருள்கள், பால் என்று பெரும் செலவுகளை உடனடியாக முடிக்கவேண்டும். மீதிப் பணத்தை மாதாமாதம் சேமிக்கவேண்டும்.
ஏதேனும் அவசரச் செலவுகள் என்றால், தேவைப்பட்டால்தான் பணத்தை எடுக்கவேண்டும்.
ஆனால் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதில் என்ன பிரச்னை? வங்கிக் கணக்கு ஆரம்பித்தாலும் தினம் தினம் இரவு 8.00 மணிக்கு(?) வங்கிக் கணக்கில் 200 அல்லது 300 ரூபாயைச் சேர்க்கமுடியுமா? முடியாது! தினம் தினம் நமது வங்கிக் கணக்கு இருக்கும் அதே கிளைக்குச் சென்று பணத்தைப் போட முடியுமா? முதலில் தினக்கூலி வேலை செய்வோருக்கு வேலை முடிய ஆகும் நேரம் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு டாக்ஸி டிரைவர்கள். வேலை முடிந்து வீட்டுக்குப் போய்த் தூங்குவதற்கே நேரம் இருக்காது. இப்படிப் பல பிரச்னைகள்.
இதை ஆராய்வதற்குமுன் வேறு சில விஷயங்களைப் பற்றியும் ஆராய்வோம்.
(தொடரும்)
முதல் பகுதி
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
15 hours ago
இப்பதிவுக்கு நன்றி. நடுவிலே விட்டுவிடாமல், முழுமையாக எழுதி முடிக்க போயஸ்தோட்ட ஆண்டவன் துணையிருக்கட்டும்.
ReplyDeleteஅரசு சாரா அமைப்புகளின் முயற்சி, ஓரளவுக்கு அல்லது மிகக் குறைந்த அளவிலேயே பலனளிக்கும் என்று தோன்றுகிறது.
இந்த தினக்கூலி பிராக்கெட் என்பது வங்கிகளுக்கு மிகப் பெரிய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி. நடுத்தர வர்க்க மக்களுக்காக வித விதமாக சேமிப்பு / வைப்பு / காப்பீட்டு ப்ராடக்டுகளை வடிவமைக்கப் பணத்தையும் நேரத்தையும், கல்வியறிவையும் செலவிடுவதில் பாதியை, வங்கிகள், தின ஊதிய மக்களுக்கு என்று தனிப்பட்ட சேவைகளை, அரசின் துணையுடன் துவங்கினால், மிகப் பெரிய அளவில் பலன் இருக்கும். 60 களில் சிறுசேமிப்பு விழிப்புணர்வு ஏற்பட்டதைப் போல.
இது குறித்து எனக்கும் சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் எழுதுகிறேன்.
Good Analysis..Thanks for sharing, Badri.
ReplyDeleteTo help such people, pioneering work was done by Syndicate Bank in South Canara district(even before nationalisation)by starting a daily savings scheme called"Pygmy Deposit" by appointing agents to do the collection.It ran successfully for many years and was copied by many other banks.But with the focus of the Banks getting diverted from the common man and due to some unscrupulous agents,such schemes have been dropped by the banks
ReplyDeleteif the banks appoint collection agents (day by day )for each area in a large scale it will work out very well .addinaly feature job oppertunity .paticularly in city and town
ReplyDeletebuy introduing money cards like 5,10 .50.100. rs cards in athorised depart mentel stores they can change the money in to cards at any time. they can change cards to money only through banks they ststem may work out
The good old undiyal system can be re-introduced. NGO's can distribute the piggyy banks and ask the daily paid workers to deposit daily amounts.
ReplyDeleteMotivating them would be a difficult thing to do.
எனது பள்ளி பருவத்தில், எங்கள் கிராமத்தில் கூட்டுறவு வங்கியில் மினி டெபொசிட் என்று ஒரு scheme இருந்தது. தினமும் ஒரு ஏஜென்ட் வந்து 10 , 20 என பணம் வசூல் செய்துகொண்டு போவர். ஆனால் வங்கி மேலாளரும் , ஏஜென்ட் செய்த கூட்டு மோசடியால் மக்கள் பணம் போடுவதை நிறுத்திவிட்டனர்.
ReplyDeleteதபால் நிலையத்தில் ஒரு scheme இருந்தது. ருபாய் 4 ல் அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். mullitple of 4 பணம் டெபொசிட் செய்யலாம்.
உங்கள் அக்கறை உண்மையானது... தொடர் நன்கு போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள்!
ReplyDeleteபணத்தை டெப்பாசிட் செய்யும் மெஷின்கள் நம் ஊரில் உண்டா? அப்படி இருந்தால் 24 மணிநேரமும் அவரவர் விருப்பப்படி தங்கள் அக்கவுண்டில் வரவு வைத்துக்கொள்ளலாமே. சவுதி அரேபியாவில் ஒரு சில ஏடிஎம் மெஷின்களில் அத்தகைய வசதி உண்டு, இந்தியாவிலும் அப்படி உண்டா?
ReplyDelete//பணத்தை டெப்பாசிட் செய்யும் மெஷின்கள் நம் ஊரில் உண்டா//
ReplyDeleteAirtel has cash machines for bill payment in some outlets. Banks also can deploy them
It is good to see liberals also talking about conservative ideas like household savings.
ReplyDeleteWelcome to the conservative club.
//It is good to see liberals also talking about conservative ideas like household savings.
ReplyDeleteWelcome to the conservative club.//
Dear Anon, economic liberalism does not suggest 'borrow and spend' recklessly. I do not know you, and may not want to join your conservative club. I am quite allergic to conservatism, in general.
//I am quite allergic to conservatism//
ReplyDeleteEveryone is allergic to ageing but it eventually happens.
:)
I dont want to digress from your nice write up. Good going.