Tuesday, October 20, 2009

Banking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை

கிராமங்களில் பெற்றோர்கள் அல்லது மனைவி/குழந்தைகள் வசிக்க, நகரத்தில் வேலை செய்யும் ஆண்கள் எத்தனையோ பேர். பொருளாதார நிலையில் கீழே இருக்கும் குடும்பங்களில்தான் பணப் பட்டுவாடா அதிகமாக இருக்கும். நகரில் இருந்து பணம் வந்தால்தான் சாப்பாடு என நிலையில் பல குடும்பங்கள். இன்னும் பல குடும்பங்களில் சாப்பாட்டுப் பிரச்னை இல்லை என்றாலும் ஏதேனும் பொருள்கள் அல்லது துணிமணி வாங்கவேண்டும் என்றால் அதற்கு பிள்ளைகளிடமிருந்து பணம் வந்தாகவேண்டும்.

மற்றொரு பக்கம், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பணம் அனுப்புகிறார்கள். சென்னையில் வேலை தேடி வாடும், மேன்ஷனில் வசிக்கும் பிள்ளைகளும் பெற்றோர்கள் பணம் அனுப்புகிறார்கள்.

எங்கள் அடுக்ககத்தில் பாதுகாவல் வேலையில் இருந்தவர்கள் அனைவருக்கும் இது ஒரு பிரச்னை. இப்போது வேலையில் இருப்பது இந்த வேலைக்கு என்றே ‘விதிக்கப்பட்ட’ நேபாளி ஒருவர். இதற்குமுன் இருந்த மூவர் தமிழகத்தின் பஞ்ச பூமியிலிருந்து வந்தவர்கள் (மதுரைப் பக்கம், திருவாரூர் பக்கம், இப்படி). இவர்கள் மாதச் சம்பளத்தை என்ன செய்கிறார்கள், எப்படி தத்தம் ஊர்களுக்கு அனுப்புகிறார்கள் என்று ஆராய்ந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

முதலில் இவர்கள் யாருக்கும் வங்கிக் கணக்கு என்பதே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு முன் இருந்தவர்கள் கையில் மொபைல் போன் கூட இருந்ததில்லை. இப்போது இருக்கும் நேபாளி கையில் போன் உண்டு.

பொதுவாக இவர்கள் அனைவருக்கும் பணம் கேட்டு ‘செய்தி’ வரும். இப்போது போன் கால் வருகிறது. பணம் அனுப்பவேண்டும் என்றால் இவர்கள் பொதுவாக formal channel எதையுமே பயன்படுத்துவதில்லை. “எங்கூருக்கு சொந்தக்காரன் ஒர்த்தன் போறான், அவங்கிட்ட கொடுத்து அனுப்பப்போறேன்” என்றுதான் பதில் வரும். பணத்தைச் சுருட்டி, ஒரு பண்டில் ஆக்கி கொடுத்து அனுப்பப்படும். நேபாளியும் அதைத்தான் செய்கிறார். சென்னையில் இருக்கும் பல்வேறு நேபாளி பாதுகாவல் வேலை செய்பவர்களில் யாராவது ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஊருக்குச் செல்கிறார். அவர் கையோடு எடுத்துச் செல்வார். சரியாகப் பணத்தைப் பட்டுவாடா செய்துவிடுவார் என்பது நம்பிக்கை. பொதுவாக இந்த நம்பிக்கை பொய்ப்பதில்லை.

ஆனால் இதில் என்ன பிரச்னை? பணம் எதிர்பார்க்கும்போது கிடைக்காது. நான்கு நாள், ஐந்து நாள் முதல் ஒரு மாதம் வரை ஆகிவிடும். திடீர் செலவு என்றால்?

அடுத்து மனி ஆர்டர் எனப்படும் தபால் ஆஃபீஸ் வழியாக அனுப்பப்படும் பணவிடை. இன்றும்கூட எங்கள் பதிப்பகத்திலிருந்து புத்தகம் வாங்க மனி ஆர்டர் அனுப்பப்படுகிறது. அதற்கு 5% அஞ்சலகத்துக்கு கமிஷன் தொகை தரவேண்டும். அந்தத் தொகை பணம் கட்டுபவரிடமிருந்து பெறப்படுகிறது.

5% என்பதே மிக அதிகம். ஆனால் அதைத் தாண்டி இதில் வேறு ஒரு பிரச்னை உள்ளது. எங்கள் அலுவலகத்துக்கு வந்து பணம் தரும் அஞ்சல் ஊழியர் எங்களிடம் லஞ்சப் பணம் கேட்பதில்லை. கேட்டாலும் கொடுக்கமாட்டோம். ஆனால் கிராமங்களில், சிறு நகரங்களில் பணம் கொண்டுவந்து தரும் ஊழியருக்கு கையில் பணம் வெட்டியே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் மிக மோசம் அரசு உதவித்தொகை பெறும் முதியோர்கள். தமிழக அரசு கொடுக்கும் முதியோர் உதவித்தொகை அஞ்சலகம் வழியாக பணவிடையாகத் தரப்படுகிறது. இதில் கணிசமான பகுதியை அஞ்சலக ஊழியர்கள் அடாவடியாகத் திருடுகிறார்கள். எதிர்த்தால், உங்கள் பணம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. “குறிப்பிட்ட ஆசாமி இல்லை” என்று சொல்லி பணத்தைத் திரும்ப அனுப்பிவிடுவார்கள்.

வெஸ்டெர்ன் யூனியன் மனி டிரான்ஸ்ஃபர் வசதியை இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை. அது பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப மட்டுமே பயனாகிறது. அதிலும் transaction cost அதிகமே! வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவதிலும்கூட இன்றும் ஹவாலா முறையே பல இடங்களில் நிகழ்கிறது. ஆனால், நம் ஃபோகஸ் இந்தியாவுக்குள் பணம் அனுப்புவதில்/பெறுவதில் மட்டுமே.

இந்தியாவுக்குள்ளேயே, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பணம் அனுப்புவது எளிதல்ல. வங்கிக் கணக்கு இருந்தால், at par காசோலை கொடுக்கும் வசதி இருந்தால், பெரும்பாலும் காசோலை கிடைத்து அடுத்த நாளே பணம் கிடைக்கும். வரைவோலை அனுப்புவதில் கமிஷன் தொகை உண்டு. ரிசர்வ் வங்கி NEFT (National Electronic Funds Transfer) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று NEFT முறையில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கியில் உள்ள கணக்குக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை பணம் செலுத்த ஒரு டிரான்சாக்‌ஷனுக்கு ரூ 5 செலவாகிறது. சில நூறு ரூபாய்கள் செலுத்துவது என்றால் இது அதிக சதவிகிதம் செலவு. ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்றால் பரவாயில்லை. ஒரு லட்சத்துக்கு மேல் என்றால் ரூ 25 செலவு. (நீங்கள் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பவேண்டும் என்றால், 99,999 அனுப்பினால் 5 ரூபாய் செலவு. 1,00,000 அனுப்பினால் ரூ 25 செலவு!) இந்தப் பணம் ஒரு நாளைக்குள் சென்றுவிடும்.

வங்கிக் கணக்கு வைத்திருந்தாலே தலையால் தண்ணி குடிக்கவேண்டும் என்னும்போது வங்கிக் கணக்கே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அஞ்சலகம் என்னும் பெரும்பாலும் ஊழல் செய்யும் ஊழியர்களைக் கொண்ட துறையை மட்டுமே நம்பி இருக்கவேண்டும். அங்கும் oversight கிடையாது. அனுப்பிய பணம் சென்று சேர்ந்ததா என்பதை எப்படிப் பரிசீலிப்பது? போய்ச் சேராவிட்டால் எப்படிப் பணத்தைத் திரும்பப் பெறுவது?

ஒரு நொடியில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பணம் அனுப்ப முடியுமா? நம் உறவினர்கள் போனில் நம்மிடம் பேசிய உடனே அடுத்த விநாடியே அவர்கள் கையில் பணம் இருக்குமாறு செய்யமுடியாதா?

இன்று ஒரே வங்கியில் இருவர் கணக்கு வைத்திருந்தால் இதைச் செய்ய முடியும். வங்கிக் கணக்கே இல்லாவிட்டால்?

தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? எப்படி இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்?

(தொடரும்)

ஒன்று | இரண்டு
.

16 comments:

  1. தொடர் வெகு சுவாரசியமா போகுது பத்ரி. நிறுத்திடாம தொடருங்க

    ReplyDelete
  2. Fantastic series.

    Last year I forced my father to open bank account.
    He was refusing and told several alternatives, like he will come to chennai so that he can see me also can get money. But i didn't agree with this, bus fare 300 is waste if the reason is only money.

    Then he asked me to transfer money to one of our relative who has bank account. I didn't agree this too.
    Recently the terrible thing happened, for some reason my father and the relative had fight.

    Just because of little fear, ignorance my father has been refusing to open account. My fathers did degree but stayed in agriculture. Its difficult to insist fathers than moms.

    I am planning to force my mom to open post office account, somewhat she believes my father or somebody can take money from post office without her knowledge because operated by local people.

    ReplyDelete
  3. Post Office also has some innovative schemes for transfer.Corruption is an issue still by and large the postal department in functioning well and is the only source for millions to send/receive money.'அஞ்சலகம் என்னும் பெரும்பாலும் ஊழல் செய்யும் ஊழியர்களைக் கொண்ட துறையை மட்டுமே நம்பி இருக்கவேண்டும். அங்கும் oversight கிடையாது'
    this is an exaggeration.

    ReplyDelete
  4. I sent a M.O to a city but remittance was not delivered and it was found out that the money has been sent to another post office by oversight.The money came back to me.I just gave a complaint and followed up. My experience with postal dept has been positive. Given the volume of mail and other materials and the number of persons employed it is efficient.Like other public services it needs to be improved but branding all postal employees as corrupt will do no good.

    ReplyDelete
  5. //this is an exaggeration.//

    என்ன மிகைப்படுத்தல் என்று சொல்லுங்களேன்? வங்கியில் போய் பணத்தைப் பொட, எடுக்க எந்த அலுவலராவது லஞ்சம் கேட்கிறாரா? மனி ஆர்டர் கொடுக்கும்போது எத்தனை சதவிகிதம் அஞ்சலக ஊழியர்கள் பணம் வாங்காமல் கொடுக்கிறார்கள்? முதியோர் உதவித் தொகை பணம் வாங்கும் ஏழைகளிடம் நீங்கள் பேசியதுண்டா? பேசிப் பாருங்கள், உண்மை தெரியும்.

    அஞ்சலகத்தில் தபால், அஞ்சல் தலை விற்கும் ஊழியர் பிரச்னை தராமல் இருக்கலாம். ஆனால் மனி ஆர்டர் விஷயத்தில் உண்மை என்ன என்று சொல்லுங்கள்.

    அஞ்சலகத்தை நம்பியே பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அதுதான் என் பயமே! அங்குதான் oversight இல்லை என்கிறேன். அஞ்சலகம் வழியாக ஆண்டுக்கு எத்தனை கோடி மனி ஆர்டர் முறையில் செல்கிறது? அதில் எத்தனை சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சரியாகப் போயுள்ளது? இது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட தபால் துறை இதுவரையில் ஆடிட் செய்துள்ளதா? இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் கண்காணிப்பு என்பதே இல்லாத இடம் இது என்று சொல்கிறேன்.

    ReplyDelete
  6. //Like other public services it needs to be improved but branding all postal employees as corrupt will do no good.//

    அனைத்து அஞ்சலக ஊழியர்களையும் ஊழல்வாதிகள் என்று நான் சொல்லவில்லை. பெரும்பாலும்... என்றுதான் சொன்னேன். அதிலும் குறிப்பாக மனி ஆர்டர் பணத்தைத் தருபவர்களை.

    இதுதானே பலருக்கு வாழ்வாதாரம்?

    ரேஷன் கடை என்றால் நாம் என்ன சொல்கிறோம்? ஊழல் கடை என்றுதானே? அதைப்போலத்தான். அஞ்சல் மணி பட்டுவாடா விஷயத்தைச் சரி செய்யவேண்டியது அஞ்சல் துறையின் கடமை. அஞ்சல் துறையில் வேலை செய்யும் நல்ல உள்ளம் கொண்ட ஊழியர்கள் கடமை.

    ReplyDelete
  7. இது போன்ற பண பட்டுவாடா செய்ய வங்கியில்லாத அமைப்புக்கு RBI அனுமதி கொடுக்குமா என்பது சந்தேகமே? வங்கிகள் தனியாக கிராமபுரங்களில் கிளைகளை தொடக்க பணபுழக்கத்தின் அளவு போதுமானதாக இல்லை. இந்த குறையை நீக்கவே NFC போன்ற தொழில்நுட்ப உதவியுடன் சில நிறுவனங்கள் முயன்று வருகின்றன (e.g www.alittleworld.com)

    ReplyDelete
  8. HDFC do not charge NEFT but ICICI do.

    ReplyDelete
  9. Sir,

    Sorry you are wrong in the case of Post men doing corruption. My brother is working as Village Post man. He is not a permanent employee of Postal Departement. He is a ED, that means he belongs to extra department. His monthly income is within 3000 Rs. But the workload is too much. You might have known that after the price reduction in cellphone and service provider cost, there is no more post cards and inland letters, only very few are using. Now post offices have become almost bank and insurance. They are serviving still, because of their huge network. Mostly the village post master and post men belong to the same village. So they cannot cheat the villagers. Even if they cheat Mail Oversears are coming twice a week or once in a month to check the post office. Post men have to carry inlands, post cards, money orders and stamps with them while they are going for delivery. They have targets for selling all the inlands, post cards, stamps and even rural village insurance too......The village post men and post masters are facing lot of torture from their superiors in fullfilling the targets of getting insurance every year. In village most people will not take insurance, even if they take they will ask the post men / master to pay the first premium and then they will tell that i will pay you afterwards. If the post men / master belived the man's word and if they process the premiums thats all, again that man who assured the post men/master will not pay the premium. Otherwise to meet the target some times the post men / master is taking lot of policies on their kith kin names and paying the premiums as much as possible. Doing corruption is not at all possible. All the thing they can do is they can nag the people for tips, thats all. that too it is not possible always as he belongs to same village and many people will be known to him very well. So every month he cannot nag.

    Please make sure about the true situation and then write. This bloody indian government is unable to permanent the ED employees and they are not capable of modernizing the postal department.

    Since Money Order has 5% comission Most of the villagers have a bank account or they are sending to the bank account of relatives through DD.

    ReplyDelete
  10. Do not think that the poors are too good people. they are also greedy. In every village there is self help group right, In that group my brother's (post man's wife) has joined. they had paid monthly some 300 rupees. After 1 year the principal + interest has to be handed over to respective persons. but still that self help group madam (lady belongs to a poor class) has not handed over the money. Almost 6 months has gone, Still she is not giving the money in spite of asking regularly. Her mother is getting OLD AGE PENSION Rs. 500 /- If the postman deducts Rs. 250 /- every month from the OAP till he / her wife gets their money whats wrong in it? (All the self help group has got Rs. 200 per head from ruling party to caste vote in parliament election.)

    The old age pension has to been given to senior citizens, who are ill, not capable to go to work and who do not have husband/wife/son/daughter. he should not have any blood relatives or even if they are there she/he should not be in their house in relative's support.

    the villagers who are above 60 applies for Old Age Pension pretends that they do not get support from daughters / sons / grandsons / grand daughters and then getting OAP. They used to give money for the OAP approval officer who comes for checking and inspection.

    In the above mentioned case if the postmen knows the true story he also can ask for money from the pensioners right? otherwise he might say i will return your money saying that no body is in the address or i will say you are living in your son's support. Mistake is in everyone's part. Every one is greedy the Postal officials are also greedy that's all.

    When you write about some postmen who is doing wrong. Write from the perspective of the postmen too. Only cities the post men harass the people for money during diwali/pongal as the city people cannot recognize their postmen due to busy city life. in village corruption is not possible from postmen side. In village there is a strict rule that the post master should have a house in the village itself. in his house only the post office should run. this tradition is continuing from the British period.

    ReplyDelete
  11. //அஞ்சலகம் என்னும் பெரும்பாலும் ஊழல் செய்யும் ஊழியர்களைக் கொண்ட துறையை மட்டுமே நம்பி இருக்கவேண்டும்.//

    மறுக்கிறேன்.

    ஊழல் மிக குறைவாக இருக்கும் துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்று

    என்னிடம் இதுவரை எந்த தபால் காரரும் லஞ்சம் கேட்டதில்லை

    // அங்கும் oversight கிடையாது. அனுப்பிய பணம் சென்று சேர்ந்ததா என்பதை எப்படிப் பரிசீலிப்பது? //

    மணி ஆர்டர் படிவத்தில் இறுதியில் acknowledgement என்று இருக்கும். அதில் பணம் பெற்றவர் பெற்றுக்கொண்டு கையொப்பம் இடவேண்டும். அது அனுப்பியவருக்கு வந்து விடும்

    நீங்கள் இதுவரை மணிஆர்டர் அனுப்பியதேயில்லையா

    என்ன கொடுமை சார் இது !!

    ReplyDelete
  12. //ostly the village post master and post men belong to the same village. So they cannot cheat the villagers.//
    இது நடைமுறை உண்மை

    // Even if they cheat Mail Oversears are coming twice a week or once in a month to check the post office. Post men have to carry inlands, post cards, money orders and stamps with them while they are going for delivery. They have targets for selling all the inlands, post cards, stamps and even rural village insurance too......The village post men and post masters are facing lot of torture from their superiors in fullfilling the targets of getting insurance every year.//

    இதுவும் சோகக்கதை தான் !! ஆனால் torture என்ற பதம் சரியா என்று தெரியவில்லை

    ReplyDelete
  13. //In the above mentioned case if the postmen knows the true story he also can ask for money from the pensioners right? otherwise he might say i will return your money saying that no body is in the address or i will say you are living in your son's support. Mistake is in everyone's part. Every one is greedy the Postal officials are also greedy that's all.
    //

    :( :(

    //. in village corruption is not possible from postmen side.//
    ஐயா. மேலே கூறியதற்கு பெயர் என்ன :) :)

    ReplyDelete
  14. பத்ரி

    சில வருடங்களுக்கு முன்னர் ஜனனி சுரக்‌ஷா யோஜனா என்று ஒரு திட்டம் இருந்தது

    கர்ப்பமான பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஐநூறு ரூபாய் அனுப்பப்படும் - (இன்று தமிழகத்தில் கர்ப்பமான (below poverty line) பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை 6000 - காசோலை மூலம்)

    --

    நாங்கள் அனுப்பிய மணி ஆர்டரின் அக்நானெட்ஜ்மெண்ட் ஒழுங்காக வந்து சேர்ந்து விடும்.

    ஒரு வேளை நபர் இல்லை என்றால் (உதாரணம் தாய் வீட்டிற்கு சென்று இருந்தால்) - பணமும் திரும்பி வந்து விடும்.

    அப்பொழுது எனக்கு தெரிந்து யாரும் தபால்காரர் காசு கேட்டார் என்று புகார் கூறவில்லை

    --

    ReplyDelete
  15. // வங்கியில் போய் பணத்தைப் பொட, எடுக்க எந்த அலுவலராவது லஞ்சம் கேட்கிறாரா? //

    இதே கேள்வியை நான் சில நாட்கள் முன்னால் வேறு ஒரு பதிவில் கேட்டேன்.

    நீங்கள் பதில் கூறவில்லை :) :) :) :)

    இப்பொழுது பதில் கூறியதற்கு நன்றி :) :) :)

    ReplyDelete