Monday, October 19, 2009

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம், இந்த உலகம் என்ன ஆகும்?

[மாற்றம்: வேறு ஒரு நிகழ்வு (சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெறுவதால்) இந்தப் பேச்சு 29 அக்டோபர் 2009, புதன்வியாழக் கிழமைக்கு மாற்றப்படுகிறது.]

திடீர் வெள்ளம். கடும் வறட்சி. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஒரு பக்கம் புயலும் சூறாவளியும். மறு பக்கம் பருவ மழை தள்ளிக்கொண்டே போகிறது.

எல்லாவற்றுக்கும் குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமடைதலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ இதைக் கடுமையாக மறுக்கிறார்கள்.

பூமியில் திடீரென கரியமில வாயு அதிகமாக வெளியேறுவதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். தினம் தினம் செய்தித்தாளில் இது பற்றி என்னென்னவோ செய்திகள் வருகின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றைப் பற்றி அதிகம் புரிவதில்லை.

வானிலை மாற்றம் பற்றி எல்.வி.கிருஷ்ணன் பேச உள்ளார். இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், அணுப் பாதுகாப்புப் பிரிவில் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர்.

நாள்: 24.10.2009, சனிக்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி

7 comments:

  1. Roja Muthiah is organizing a lecture at 5pm the same day on "The Archaeology of the Indus script" by Bryan Wells. Could you postpone your meet to 6.30 to accomodate any of us who would like to attend both?

    ReplyDelete
  2. I will consult with the speaker and see if the event can be shifted some other day. Shifting it by 30 minutes may not help. Roja Muthiah event may extend a bit.

    ReplyDelete
  3. வேறு ஒரு நிகழ்வு (இந்து சமவெளி நாகரிகம் பற்றி ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெறுவதால்) இந்தப் பேச்சு 28 அக்டோபர் 2009, புதன் கிழமைக்கு மாற்றப்படுகிறது.

    ReplyDelete
  4. இந்து சமவெளியா, சிந்து சமவெளியா?

    ReplyDelete
  5. ஔச்! சிந்து சமவெளி. தடாலடி கட் & பேஸ்ட்! பபாஸி தேர்தலி முன்னிட்டு, இது 29-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது!

    ReplyDelete
  6. Please update timings in main blog entry also.

    Maybe post another blog?

    Gopu

    ReplyDelete
  7. 29 அக்டோபர் 2009, புதன் கிழமைக்கு மாற்றப்படுகிறது.]

    ஆனால் நமக்குத்தான் இவற்றைப் பற்றி அதிகம் புரிவதில்லை

    summa time pass comment podanumilayaa

    ReplyDelete