Tuesday, September 06, 2011

சன் இல்லையேல் டிவி இல்லை

அரசு கேபிள் தொடங்கியதே சன் டிவிக்குத் தொல்லை கொடுக்கத்தான். அதனால் சன் டிவி, அரசு கேபிளுக்குத் தொல்லை தருவது ஒருவிதத்தில் தொழில் தர்மமே.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பேட்ச் அப் வேலைகள் முடிந்ததும் அரசு கேபிள் முடக்கப்பட்டது. ஆங்காங்கே கேபிள்கள் வெட்டப்பட்டன. ஆனால் இப்போது ஜெயலலிதா ஆட்சி என்பதால் கேபிள் வெட்டுதல் பயன் தராது. தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சக்சேனா உள்ளே இருக்கிறார்.

எனவே சன் டிவி தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதத்தை முன்வைத்துப் போராடுகிறது. சன் டிவி சீரியல்கள்தாம் அந்த ஆயுதம். சீரியல்கள் பார்க்காமல் நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் வாழ்க்கை நடப்பதில்லை என்பதால் அரசு கேபிள் வேண்டாம் என்று பல இடங்களில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்று சன் நியூஸ் தெரிவிக்கிறது!

எல்லா கேபிள் விநியோக நிறுவனங்களுக்கும் எல்லா சானல்களும் தரப்படவேண்டுமா? உதாரணமாக, சன் டிவி தன் சானல்களை ஏர்டெல் டிடிஎச்சுக்குத் தரமாட்டேன் என்று சொல்லமுடியுமா?

இந்தப் பிரச்னைகள் எல்லாம் இதற்குமுன் ஏற்கெனவே வந்துள்ளன. டாடா ஸ்கை - சன், டிஷ் டிடிஎச் - சன் என்று இந்தப் போராட்டங்கள் இதற்குமுன் நடக்காமல் இல்லை. கொஞ்ச நாட்கள் இழுத்தடித்துவிட்டு, TRAI, TDSAT என்று போராடிவிட்டு, இறுதியில் சன் டிவி தன் சானல்களை அரசு கேபிளுக்குத் தந்துதான் ஆகவேண்டும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சன் டிவி தன் ஊடக பலத்தைக் கொண்டு அரசிடம் கொஞ்சம் வாலாட்டிப் பார்க்கும்.

பொதுவாக அரசு இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவதை நான் ஆதரிப்பவன் அல்லன். ஆனால் இந்த விஷயத்தில் அரசின் தலையீடு தேவை என்று நம்புகிறேன். வலுவான தொழில்முறை எதிரிகளையெல்லாம் சன் குழுமம் சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்தித் துரத்திவிட்டது. அப்படிப்பட்ட உருவாகியுள்ள ஒரு மொனாபொலி எந்தத் துறைக்குமே நன்மை செய்யப்போவதில்லை. அந்த மொனாபொலியைத்தான் அரசு உடைக்க முயல்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, மாறாக சன் டிவியை, திமுகவின் ஆதார பலத்தை அசைக்கவேண்டும் என்பதற்காகவே. பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களை நளினமான முறையில் செய்வதற்கு அரசு நிறுவனங்களுக்குத் தெரியாது. மேலும் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக (அல்லது மாறனுக்கு நட்பான கட்சி) ஆட்சிக்கு வந்தால், அரசு கேபிள் கந்தரகோலமாகிவிடும்.

ஆனால் என் நம்பிக்கை, அதற்குள்ளாக குறைந்தபட்சம் இன்னுமொரு தரைவழி கேபிள் நிறுவனம் தமிழகம் முழுக்கக் கால் பதித்திருக்கும் என்பதே. அப்படி ஆனால்தான் சன் குழுமத்தில் கேபிள் மொனாபொலியைக் கட்டுப்படுத்த முடியும். டிடிஎச் என்பது கொஞ்சம் விலை அதிகமானதாகவே தெரிகிறது.

நிஜமாகவே கேட்கிறேன்... இந்த சன் டிவி சீரியல்களைப் பார்க்காவிட்டால் என்னதான் ஆகும்? அப்படி என்னதான் அந்த சீரியல்களில் உள்ளது?

20 comments:

  1. என்ன செய்வது.... இந்த சன் டிவி 'இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக................ சூப்பர் ஹிட் திரைபடம்' மற்றும் சலமன் பாப்பையா மற்றும் அனைத்தும்(சீரியல்,சன் திரை பட trailer) தமிழ் மக்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாதா அங்கம் ஆகிவிட்டது. இது போதாது என்று K-டிவி ,சன் மியூசிக், ஆதித்யா , சன் நியூஸ்...............

    ReplyDelete
  2. டிடிஎச் DDH ? Can you explain this for NRIs please ?

    ReplyDelete
  3. govt can give DTH free to everybody.. it costs apprx 1000 rupees for decoder and 500 installation (average) cheaper than TV/Grinder..
    Surya

    ReplyDelete
  4. Basically this is about pay channels.
    Is it possible for TRAI/TDSAT to order the channels to give the feed, free to Arasu cable?
    Airtel/TataSky are all paying money to pay channels.

    If the pay channels become free only,Arasu can have it.Even Vijay/Raj are not giving the free feed to Arasu, Sun is unlikely to relent.

    If Advt pressure to retain the viewership forced the channels to become free or Arasu cable decides to have pay chennels, then only Arasu cable will be workable solution.

    ReplyDelete
  5. நிஜமாகவே கேட்கிறேன்... இந்த சன் டிவி சீரியல்களைப் பார்க்காவிட்டால் என்னதான் ஆகும்? அப்படி என்னதான் அந்த சீரியல்களில் உள்ளது?

    மக்களது நேரத்தை வீணாக்குகிறது. மனத்தைக் கெடுக்கிறது.

    ReplyDelete
  6. //எனவே சன் டிவி தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதத்தை முன்வைத்துப் போராடுகிறது. //

    சரியான கிரவுண்ட் ரியாலிட்டி அறியாமல் இந்த பஸ்ஸை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    சன்னின் ஆயுதம் வெறும் சீரியல்கள் மட்டுமல்ல. அது தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பிராண்ட் நேம்.

    உங்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது புதுசாக குடிவருபவர்கள் உங்களிடம் இப்படித்தான் விசாரிப்பார்கள். “சன் டிவி கனெக்‌ஷன் கொடுக்கணும். இங்கே ஆபரேட்டர் யாருங்க”

    கவனிங்க. கேபிள் கனெக்‌ஷன் என்று நம் மக்கள் சொல்வதில்லை. சன் டிவி கனெக்‌ஷன் என்றுதான் பேசுகிறார்கள்.

    அதன் பிராண்ட் நேமுக்கு காரணமாக நான் நினைப்பது டிவி பார்க்கும் சாதாரண ரசிகர்களின் நாடித்துடிப்பை பிடித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகள்...

    பெரும்பாலான நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளின் மேம்பட்ட வடிவமாகவே இருக்கும். தங்களால் முடிந்தாலும் கூட ஓவர் டெக்னிக்கல் எக்செலண்ஸ் காட்ட மாட்டார்கள். அடக்கியே வாசிப்பார்கள்.

    டிவி என்பது எப்படி மக்கள் மனதில் பதிந்திருக்கிறதோ, அப்படியொரு டிவியை நடத்துவதுதான் கலாநிதிமாறனின் பலம்.

    ReplyDelete
  7. //DTH - Direct to Home Satellite TV. // with a set-up box with individual parbola (dish) or DSL with land-telephone line or undergroup cable connexion ??? #candid

    ReplyDelete
  8. DTH is with a satellite receiver, roughly parabolic, around 30 inches in diameter dish, can be hung from the walls, like what you see all over Europe and UK. There is also a cable + digital set top box. Sun Group is into both in Tamil Nadu.

    ReplyDelete
  9. ok thanks for the explanation Badri....I'm still having a 60 cm diameter dish fixed on the outside wall !!!! #indiashines

    ReplyDelete
  10. I hope ADMK doesn't get affected in the local body elections because of this.

    ReplyDelete
  11. அப்படி என்ன இருக்கிறதா ? நல்ல கதை. பழைய ராஜகுமாரி கதைகளில்(தானே ?) சொல்வார்களே, ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஒரு கிளியின் உடம்பில் உயிர் இருப்பதாக, அதுபோல டி.வி சீரியல்களில்தான் நம் மகளிரின் ஆன்மாவே இருக்கிறது என்று தோன்றுகிறது.

    பின்னே சும்மாவா முன்பொருமுறை சன் டி.வி தெரியவில்லை என்று "நாங்கள் வேறென்ன பல்லாங்குழியா ஆடுவது ?" என்று மாவட்ட ஆட்சியரையே உலுக்கி எடுத்தவர்களாயிற்றே !

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  12. // கவனிங்க. கேபிள் கனெக்‌ஷன் என்று நம் மக்கள் சொல்வதில்லை. சன் டிவி கனெக்‌ஷன் என்றுதான் பேசுகிறார்கள். //

    யுவகிருஷ்ணா சொன்னது சரிதான். சன் டிவி தமிழ் மக்களிடையே ஒரு இன்றியமையாத பொழுது போக்கு அம்சம் ஆயிற்று.

    தூர்தர்ஷன்க்கு பிறகு, சன் டிவி தான். அது இவ்வளவு வருடமாக இருந்ததும், அதனுடைய விழியின் தரம் மற்றும் நிகழ்ச்சுகள் அருமையாக இருப்பதாலேயே அதனை மக்கள் விரும்புகின்றனர்.

    நானும் எவ்வளவோ தமிழ் டிவி சேனல் பார்த்திருக்கிறேன். சன் கிளேரட்டியை அடிச்சிக்க முடியல.

    அரசு கேபிள் இன்னும் கொஞ்ச நாளில் அரசு டி.டி.எச் ஆகி விடும்.
    கேபிளை விட டி.டி.எச் கொடுக்கும் தரம் அதிகம். கேபிளில் புள்ளிகள் அதிகமாக வரும். கேபிள் ஆப்பிரேட்டர்கள் சரிவர கேபிள்களை கவனிப்பதில்லை. டி.டி.எச் ஓரளவுக்கும் பரவாயில்லை. என்ன மழை பொழியும் போது வராது.

    நம்ம வீட்டுல மின்சாரம் இருந்தால், கண்டிப்பாக டிவி பார்க்க முடியும். கேபிள்னா.. அப்படி இல்லை.

    // நிஜமாகவே கேட்கிறேன்... இந்த சன் டிவி சீரியல்களைப் பார்க்காவிட்டால் என்னதான் ஆகும்? அப்படி என்னதான் அந்த சீரியல்களில் உள்ளது? //

    மண்டை குழம்பி போய்விடும் என்பது உறுதி.

    என் அம்மா, மாலை ஆறு மணிக்கு சன் டி.வி பார்க்க ஆரம்பித்தாள், இரவு 11 மணி வரை நாடகத்தினை பார்ப்பாள்.

    ReplyDelete
  13. well said....

    சீரியல்கள் தெரியாததால் சிலருக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரியும், சிலருக்கு பைத்தியம் தெளிஞ்ச மாதிரியும் இருக்காம்.

    ReplyDelete
  14. தமிழன் சன் டிவி இல்லாமல் வழமுடியாது. அம்மா அவர்கள் சன் டிவி பார்க்கும் மக்களுக்கு 1000ரூபாய் வரி போட்டாலும்,கலாநிதி மாறன் மாதம் 1000ரூபாய்கேட்டாலும் கொடுக்க தயார்.தமிழச்சி தன் கணவனை சன் டிவி பார்பதற்காக விவாகரத்து செய்யவும் ரெடி.அம்மா அவர்கள் புரிந்தால் நல்லது.உள்ளாட்ச்சி தேர்தல் சன் டிவி தான் முடிவு செய்யும்.சன் டிவியிடம் சரணண் அடடையுங்கள்

    ReplyDelete
  15. ஐயா சன் டிவி சீரியல் தேவையில்லை ஆனா சவுண்டூ நன்றாக இல்லை /?

    ReplyDelete
  16. // மேலும் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக (அல்லது மாறனுக்கு நட்பான கட்சி) ஆட்சிக்கு வந்தால், //
    இதென்ன சாமி புது கதை?? ஒருவேளை மாறன் அதிமுகவுடன் நட்பாகி விடுவாரோ?
    உங்கள் கடைசி பாராவில் தெரிகிறது - தமிழ் நாட்டில் சன் டிவி சீரியல் பார்க்காத சில நூறு குடும்பங்களில் உங்களுதும் ஒன்று. அல்லது (என்னைப்போல) இரவு 10 மணிக்கு முன் வீட்டிற்கு செல்வதில்லையா?
    -ஜெகன்

    ReplyDelete
  17. சன் டி வி இல்லை என்றால் உலகமே இருண்டு விடும் என்கின்ற மாயையை அன்று முதல் இன்று வரை மீடியா மூலம் அவர்கள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.சன்னை விட்டு வாருங்கள் மற்ற சேனல்களில் இதைவிட பிரமாதமான சீரியல்கள், நிகழ்ச்சிகள் வலம் வருகின்றன. கொஞ்ச நாள் வேண்டுமானல் சன் ஆட்டம் காட்டலாம். கத்திரிக்காய் ஏனும் சன் முற்றினால் சந்தைக்கு மக்கள் முன் வந்துதான் தீரவேண்டும். ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். சன் மக்கள் முன் வர மறுத்தால் அவர்களின் விளம்பர வருவாய் நாளடைவில் தேய்ந்து கட்டெறும்பு ஆகும்போது அவர்களே வழிக்கு வந்துதான தீர வேண்டும் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்கள் பெரும்பாலான் மக்களை சென்றடைவதையே விரும்புவார்கள். புதுகை ஜி வீ ஆர்

    ReplyDelete
  18. //சன்னின் ஆயுதம் வெறும் சீரியல்கள் மட்டுமல்ல. அது தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பிராண்ட் நேம்.//

    பழைய பேப்பர் கடைக்காரனுக்கு எல்லா ஆங்கிலப் பேப்பரும் ஹிண்டுதான். நமக்கு எல்லா photo copier machine னும் xerox machine தான் ( xerox கம்பெனியே ஊத்தி மூடிக்கிச்சு). எல்லா வனஸ்பதியும் டால்டா தான். நெட்டில் தேடுவது எல்லாமே googling தான்.

    இப்படி ஒரு brand name, பொதுவிலே உபயோகிக்கத் துவங்கும் பொழுது ஏற்படும் நிலைக்குப் பெயர், trademark dilution. அந்த பிராண்ட் பெயரை, பிற பொருள் / சேவைகளைக்கு நீட்டித்து ( brand extension) , அதன் மூலம் காசு பண்ண முடிந்தால் தப்பிக்கலாம். ஆனால் சன் டீவி, தூர்தர்ஷன் மாடலை பின் பற்றுவதால்,தூர்தர்ஷனுக்கு ஏற்பட்ட நிலைதான், நாளை சன்னுக்கும் ஏற்படும்.

    இதை தொழில் வழக்கில், 'Genericized trademark' என்று சொல்வார்கள். இதனால், அந்த பிராண்டுக்கு ஒரு புண்ணாக்கு நன்மையும் இல்லை. தீமை வர வாய்ப்பு அதிகம். ( நாளை கேபிள் டீவி ஒழுங்கா வேலை செய்யலைன்னா, சன் டீவி சரியில்லைன்னு சொல்லுவார்கள்)

    வீட்டுப் பெண்கள், ஒரு காலத்தில் தொடர்கதை படித்தார்கள். சில வருடங்களுக்குப் பின்னர், ஊட்டுக்காரர் ஆபீஸ் போனதும், பக்கத்து வீட்டு அக்காவுடன் மேகலாவிலே மாட்டுக்கார வேலன் / வடிவுக்கு வளைகாப்பு பார்த்தார்கள். கொஞ்ச நாள் கழித்து, மத்தியான வேளைகளிலே, ஜுனூனும், சுயமாரியாதையும் பார்த்தார்கள். இப்போது நாதஸ்வரம்/ மெட்டி ஒலியிலே வந்து செட்டில் ஆகியிருக்கிறார்கள். இவர்கள் அடுத்த இடத்துக்குப் போகும் பொழுது, அந்த இடத்திலே, சன் டீவியின் ஏதாவது ஒரு சேவை இருக்க வேண்டும். இருக்குமா?

    குறைந்த பட்சம், சன் நியூஸ் செய்தியாளர்கள் கொண்டு குவிக்கிற செய்திகளைக் கொண்டு, தட்ஸ்தமிழ் மாதிரி ஒரு சுடச்சுட ஒரு இணையத்தளம்?

    //தங்களால் முடிந்தாலும் கூட ஓவர் டெக்னிக்கல் எக்செலண்ஸ் காட்ட மாட்டார்கள். அடக்கியே வாசிப்பார்கள்.//

    சன் டீவியிடம் டெக்னிகல் எக்ஸ்லன்ஸ் எல்லாம் இருக்கு. இல்லாவிட்டால், அதன் ஒளி/ஒலிபரப்பு, மற்ற சானல்களை விட இத்தனை துல்லியமாக இருக்காது. அந்தத் நுட்பத்தை வைத்துக் கொண்டு என்ன கழட்டுகிறார்கள் என்பதுதான் கேள்வி. இந்த தொழில் நுட்ப உன்னதத்தைக் காசு கொண்டு அடைந்து விடலாம். ஆனால், attitude? vision?

    நேற்றைக்குப் புதுசாக வந்த anchor பெண் கூட, பதினைந்து வருஷத்துக்கு முந்தைய பெப்சி உமா மாதிரியே, அதே பேட்டர்னில் கையை ஆட்டுகிறார், அதே மாடுலேஷனிலே பேசுகிறார்.

    சன் டீவிக்கு இருக்கிற முக்கியமான பலங்கள், first mover advantage ( இதனாலே பெருசா ஒண்ணும் பலனில்லே), ஒளிபரப்புத் துல்லியம் ( துட்டு இருந்தா....). ad placement ( மத்த சானல் மாதிரி, கொலை வெறி ஏற்படுத்தாது) . பலவீனம் - content.

    ReplyDelete
  19. //யுவகிருஷ்ணா
    அந்த "சன் டிவி கனெக்‌ஷன்" என்ற வார்த்தைக்கு பின்னால் நசுக்கப்பட்ட பல கேபிள் ஆபரேட்டர்களின் வரலாறு இருக்கிறது..

    சன் டிவியின் "மஸ்தானா மஸ்தானா" தமிழ், ஹிந்தி சானல்களிடம் இருந்து காப்பி அடிக்கபட்டது....

    அசத்தல் மன்னர்கள் நிகழ்ச்சியும் தமிழ், ஹிந்தி சானல்களிடம் இருந்து காப்பி அடிக்கபட்டது....( விஜய் டிவியிடமிருந்து பிடுங்கப்பட்டது)

    கல்வி, விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒரு நாளாவது சன் டிவியில் ஒளிபரப்பானது உண்டா?

    ReplyDelete