Wednesday, January 11, 2012

சேத்தன் பகத்தின் வழியில்...

பண்புடன் - இணைய இதழுக்காக நான் எழுதியுள்ள கட்டுரை. அதிலிருந்து ஒரு சிறு மேற்கோள்:

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.
முழுவதையும் அங்கு சென்று படித்துவிடுங்கள்.

25 comments:

 1. Clear, focused. In engineering industries, a manufacturer who markets his own products, normally enters into exclusive agreements with sales channels too. Over a period of time, they understood the value of 'multi-brand' sales outlets and corrected themselves. Yet, they still continue with their own, exclusive outs also. Eg.: Godrej Interio; Panosonic; soni; Apple etc. (I am not talking about exclusive trading companies like Landmark; Giriyas; Viveks; kevin care etc.)

  Incidentally, even though I did not like Chetan's books, I am impressed by the things he did to make his books zoom in the market. Badri brings out the details well in this note.

  ReplyDelete
 2. Good. Since you are considering books as products that you manufacture, I wish to comment upon some manufacturing defects noticed in "Communism" by Aravindan Neelakandan. The print quality is inconsistent as the fonts appear in varying shades of black.I think the paper was'nt cur properly with the result the print matter is not properly centred on the page- it is kind of skewered.
  Srinivasan

  ReplyDelete
 3. Srinivasan: You are correct. A few books in the current print lot have been produced in a quality not acceptable to me. I will work towards improving it. Communism by Aravindan is one. East India Company also the same. I was quite disappointed. Apologies for the same.

  At the same time, I invite you to take a look at the new lot of Devan books we have produced.

  Thanks.

  ReplyDelete
 4. மிக அருமையாக, இந்த காலத்தின் மாற்றத்தை புரிந்து செயல்பட சொல்லி இருக்கிறீர்கள்...
  உண்மைதான்...

  ReplyDelete
 5. //எதைப் படிப்பது என்பதில் நான் ஒரு வரைமுறையை வைத்துக்கொள்வதே இல்லை. ஒரே நேரத்தில் என்னால் மிகவும் சீரியஸான இலக்கியத்தைப் படிக்கமுடியும், ‘குப்பை’ என்று பலராலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட, மேலோட்டமான பல்ப் பிக்‌ஷனையும் படிக்கமுடியும். கடலை சுற்றிவந்த காகிதத்தில் உள்ள பாதி கிழிந்த துணுக்கைக்கூட விடாமல் படிப்பவன் நான். இதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று பாடமெடுக்கும் சட்டாம்பிள்ளைகளை நான் கண்டுகொள்வதே இல்லை. இதையும் படியுங்கள் என்று சொல்வோரையே நான் மதிக்கிறேன்.//
  -மிகவும் சரியானது

  எல்லாவறையும் சோதித்துப்பார்த்து, நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள்.

  1 தெசலோனிக்கேயர் 5:21

  but test everything; hold fast what is good.

  1 Thessalonians 5:21

  ReplyDelete
 6. A very good vision about your future.
  All the best.
  If possible please concentrate in Translation of Pulp fictions (Jeffrey Archer's, Sherlock Holmes, etc.,). Since the two existing translations (Not a penny less & more, A study on scarlet)are very good to read.

  V.Rajasekar
  rajasekar.vivekanandan@gmail.com

  ReplyDelete
 7. Good post. When does the industry rates a tamil book a success?

  ReplyDelete
 8. indha kalathil yaarume bramanargalo,soothirargalo ,kshathiriyargalo illai.Ellarume vanigargal thaan.(This is said by Cho).

  Very good policy Badri.

  ReplyDelete
 9. ஏன் புக் ஃபேர் பற்றி டெய்லி ரிப்போர்ட் யாரும் தருவதில்லை? (பட்டாம்பூச்சி நாட்குறிப்பு தவிர)

  > தமிழ் பேப்பரில் நீங்கள் எழுதுவது

  > தன் வலைப்பதிவில் பா.ராகவன் எழுதுவது

  > இட்லி வடையில் ஹரன் பிரசன்னா எழுதுவது

  > மருதன் எழுதுவது

  இதெல்லாம் இந்த வருடம் என்ன ஆச்சு?

  சரவணன்

  ReplyDelete
 10. One major reason I consider myself w.r.t selling books in thousands is that, publisher also want to be seller. They do not want to hand over the selling part to the Seller. If a new seller (online retailer) like me comes in, its very rare that a publisher encourages.

  Publishers still trust the traditional way of selling books via physical books store (with credits). For Tamil publishers, online selling is not a proven one.

  There could be other reasons too!

  Scaling to thousands of books in the online catalog from various publishers takes months. Publisher needs to know new form of selling using technology.

  Effective marketing of new books (going to be released) on the internet websites will make it waves. In that way, I admire your way that you had marketed 'Exile' book. Pre-order, video trailer, podcast, videocast etc.... good one.

  we wish to do such things and we are very limited because people like me needs lots of encouragement and co-operation from publishers.

  - Bala
  http://www.chennaishopping.com

  ReplyDelete
 11. பத்ரி, பணம் பண்ணுவதுதான் குறிக்கோள் என்றால் அமெரிக்காவிலேயே பொறியாளராக செட்டில் ஆகி இருக்கலாமே. அது சரி. வண்ணநிலவன் புத்தகங்களை கிழக்கு மறு பதிப்பு செய்வதாக கேள்விப்பட்டேன். இவரது சிறுகதை தொகுப்பை புத்தக கண்காட்சியில் கிழக்கில் தேடினேன். கிடைக்கவில்லை. வெளியிடும் எண்ணம் உண்டா? வேறு ஏதாவது பதிப்பகத்தில் கிடைக்குமா? நன்றி.

  ReplyDelete
 12. வெங்கடேசன்: வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பு கிழக்கில் கிடைக்கிறது. இப்போது சென்றீர்கள் என்றால் கிடைக்கும்.

  எதைச் செய்து, எங்கு வாழ்ந்து பணம் பண்ணவேண்டும் என்பதைத் தீர்மானம் செய்வதற்கு எனக்கு சுதந்தரம் வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே? நன்றி.

  ReplyDelete
 13. Dear Badri,One may agree or disagree with your views but none can deny the great contribution you made/are making to Tamil publishing industry.I am a fan of yours and also used your novel discount scheme to the full.You would go a very long way and would be a force to reckon with in the Indian Publishers.
  Pl.keep these good books coming.God Bless
  Best wishes,
  Ganpat

  ReplyDelete
 14. அது உங்கள் முடிவென்றால் அதை சொல்ல ஏன் சேதன் பகத்தை உதவிக்கு அழைக்கிறீர்கள்.நேரடியாக
  இத்தொழிலில் கிடைத்த அனுபவம் காரணமாக பதிப்பாளர்,விற்பனையாளர் என்ற வகையில் இதைச் செய்யப்போகிறேன் என்று எழுதியிருக்கலாம்.அது சரியா தவறா என்று பிறர் கேட்பது நாகரிகமல்ல.

  ReplyDelete
 15. பத்ரி: வண்ணநிலவன் புத்தகம் குறித்த தகவலுக்கு நன்றி.

  எங்கு, என்ன தொழில் செய்வது எனபது நிச்சயமாக உங்கள் விருப்பமே. மற்றவர் கேள்வி கேட்க முடியாது. ஆனால், லாப நோக்கில் செயல்படும் பொது கிழக்கு நல்ல புத்தகங்கள் வெளியிடுவதை நிறுத்திவிடுமோ என்ற ஆதங்கத்தில் தான் அப்படி எழுதினேன். மன்னிக்கவும்.

  ReplyDelete
 16. வெங்கடேசன்: யோசியுங்கள். லாபமே இல்லையென்றால் கம்பெனி மூடிவிடும். அதன்பின் நல்ல புத்தகமோ, மோசமான புத்தகமோ, எதையுமே போடமுடியாதே?

  நான் அங்கே சொல்லவந்ததன் கருத்தே வேறு.

  ReplyDelete
 17. நல்ல ஒரு கட்டுரை. பணம் பண்ணினால் தான் வேறு பல செயல்கள் செய்ய முடியும்.

  என்ன கடைசியில் அதிக பிரதிகள் விற்கும் போது வாசகர்களுக்கும் கொஞ்சம் விலை குறைவாக புத்தகங்களை தர முடியும் என்ற உண்மையை அடிச்சி விட்டிருந்தீர்கள் என்றால் இவ்வளவு விமர்சனம் வந்திருக்காது.

  நீங்கள் அதை அடக்கம் காரணமாக விட்டுவிட்டிர்கள் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 18. "எதைச் செய்து, எங்கு வாழ்ந்து பணம் பண்ணவேண்டும் என்பதைத் தீர்மானம் செய்வதற்கு எனக்கு சுதந்தரம் வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே? நன்றி "

  Badri,
  enge koba pattu viduveerkalonnu ninaichen.panivaga adhe samayam aaniththaramaga solli irukinga.
  Nandi.

  ReplyDelete
 19. அன்புள்ள பத்ரி,
  தமிழ் பதிப்பகங்களுக்கு தங்களை முன்மாதிரியாக கருதி வருகிறேன். பலதரப்பட்ட புத்தகங்களை கிழக்கு வெளியிட்டாலும், வெகுசனங்களுக்கு அதுதான் சரியான தீனியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிழக்கு தத்தெடுத்திருக்கும் இலக்கியப் புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்பது உண்மைதான். அதற்காக அந்த முயற்சியை எப்போதும் கைவிட்டு விடாதீர்கள். லாபம் பார்த்து என்ன செய்யப் போகிறோம்? செலவு செய்யத் தானே! இலக்கியத்திற்காகச் செய்யுங்கள். இது சம்பந்தமாக உங்கள் சொந்த விருப்பங்கள் மாறாதிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்!
  நன்றி,
  பாலா - கோவில்பட்டி

  ReplyDelete
 20. கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!
  http://www.vinavu.com/2012/01/13/dial-for-shit/

  ReplyDelete
  Replies
  1. முகம்மதுவையும் குரானையும் இஸ்லாத்தையும் விமர்சித்தால் ஈமானுள்ள முஸ்லீம்கள் எப்படி காண்டாவர்களோ, ஏசுவையும் பைபிளையும் கிருத்தவத்தைவும் விமர்சித்தால் நம்பிக்கைகொண்ட கிருஸ்துவர்கள் எப்படி காண்டாவர்களோ அது போலவே ....கம்யூனிசத்தின் மதகுருவையும் (மார்க்ஸ்) புனிதப் புத்தகத்தையும் (தாஸ் காபிடல்) மதத்தையும் (கம்யூனிசம்) விமர்சித்ததால் காண்டாகி டயேரியா போகிறார்கள்...

   Delete
 21. //நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். //

  //சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். //

  //கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன்.//


  பத்ரி, வொய் திஸ் கொல வெறி? சொன்னதை இன்னும் கொஞ்சம் finesse ஆகச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். மேலும் எப்போதுமே கிழக்கு லாப நோக்கத்துடன் நடத்தப்படும் கமர்ஷியல் வென்ச்சர் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தானே? யார் அது தப்பு என்று இப்போது புதிதாகச் சொல்லிவிட்டார்கள்?

  என்னதான் பண்டமாகப் பார்த்தாலும் ஒரு பற்பசையைவிட ஒரு புத்தகம் சமுதாயத்தை அதிகமாக பாதிக்கவே செய்யும் இல்லையா? எனவேதான் இது கொஞ்சம் முரட்டுத்தனமாகச் சொல்லியதாகத் தோன்றுகிறது.

  புனைகதைகளைப் பொறுத்தவரை தரமான கமர்ஷியல் ரைட்டர்களும், அவர்களை அக்கரையுடன் பதிப்பிக்கும் கமர்ஷியல் பதிப்பகங்களும் நிச்சயம் இன்னும் அதிகமாகவே தமிழுக்குத் தேவை. ஆங்கிலத்தில் பாருங்கள்- தரமாக எழுதும் எத்தனை கமர்ஷியல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? (ஜான் கிருஷாம், மைக் கிரிக்டன், டான் ப்ரௌன் போல). அந்த மாதிரி தமிழில் வர வேண்டும். இங்கு கமர்ஷியல் எழுத்தாளர்கள் என்று 1000 நாவல் எழுதியதாகச் சொல்லிக்கொள்பவர்களே இருக்கிறார்கள்!

  சரவணன்

  ReplyDelete
 22. அன்புள்ள பத்ரி,
  இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். நீங்கள் சொல்வதுபோல வணிக நோக்கோடு தமிழ் எழுத்தாளர்கள் செயல்படுவதில் சிக்கல் உள்ளது. நாம் வேண்டுமானால் காசு செலவழித்து விளம்பரப்படுத்தலாம். அதில் தவறே இல்லை ஆனால் இலக்கியம் என்பது வெகுஜனங்களுக்கானதில்லை. இலக்கிய வாசிப்பார்வம் கொண்டவர்கள் சிறுபான்மையினரே. சுஜாதா போன்ற எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்வது நூறு சதம் பொருந்தும். அந்தவகை எழுத்தாளர்களை உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் தூக்கி நிறுத்த முடியும். அதனால் வியாபாரம் பெருகலாம், இலக்கிய ஆர்வமல்ல.

  ReplyDelete
  Replies
  1. அண்பும் பண்பும் கொடுக்க இயலாத உயரமான ஐவரி டவரில் இருக்கும் பாலா, இலக்கியம் என்பதை ஏன் சிறுபான்மையினர் முடிவு செய்யவேண்டும் ? இலக்கியத்துக்கும் தாசில்தார்கள் இருந்து சான்றிதழ் வழங்கினால் தான் அது இலக்கியமா ?

   பெரும்பான்மை மக்கள் படித்து ரசிக்கும் புத்தகங்கள் ஏன் இலக்கியம் ஆகாது அல்லது ஆகமுடியாது ? ராமாயணமும் மகாபாரதமும் சிலப்பதிகாரமும் இலக்கியம் இல்லையா ?

   Delete
 23. திரு.பத்ரி அவர்களுக்கு,

  இந்த கட்டுரையில் நீங்கள் சொல்லியிருக்கும் பல கருத்துகளுடனும் நான் ஒத்துப்போகிறேன். நல்ல தமிழ் புத்தகங்கள் வெறும் 1000-2000 பிரதிகளே விற்கின்றன என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சில சுமாரான எழுத்தாளர்களும், கவிஞர்களும் அதிகமான விளம்பரம் செய்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை வைத்து விழா எடுப்பதால், நல்ல எழுத்தாளர்கள், தங்கள் புத்தகத்திற்கு இவ்வாறான் விளம்பரம் செய்தால், எங்கே தங்களையும் இந்த லிஸ்டில் சக இலக்கியவாதிகள்( தற்போது நிலவும் சூழலுக்கு,இந்த குரூப் ஒரு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன்)சேர்த்து விடுவார்களோ என அஞ்சுவதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். உ.தா. சாருவின் எக்சைல் நாவலுக்கு எடுத்த விழாவைப்பற்றியும், முன்பதிவு திட்டத்தைப்பற்றியும் பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது அடிப்பொடிகள் எவ்வாறெல்லாம் பகடி செய்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். விற்பனை முறைகளில் சீரிய மாற்றங்கள் செய்து, மக்கள் அறியும் விதமாக பரவலாக அனைத்து புத்தகஙளும் கிடைக்கும் வகை செய்தால், தமிழிலும் புத்தகங்கள் ஒரு வருடத்திற்குள் 20000-25000 பிரதிகள் விற்கும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

  ReplyDelete