Tuesday, January 17, 2012

திருவள்ளுவர் எப்போது பிறந்தார்?

இன்று திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்), 60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால் தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

தில்லைக்குமரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை இதன் பின்னணியை விவரிக்கும்.

தை முதல் நாள்தான் ஆண்டின் முதல் நாளாக இருக்கவேண்டும்; ஏனெனில் அது solstice-க்கு அருகில் உள்ள நாள் என்பது அறிஞர் கூற்று. சோல்ஸ்டைஸ் என்பது கதிரவன் கடக அல்லது மகரக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டு திசைமாறிச் செல்லும் நாள். அது 22 டிசம்பர் 2011-ல் நடந்தது.

நம் வாழ்நாளில் இது ஜூன் 20-21; டிசம்பர் 21-22 ஆகிய தினங்களில்தான் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருக்கப்போகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என்று பார்த்தால், பூமியின் அச்சு கொண்டுள்ள கோணம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்துக்கு ஏற்ப சோல்ஸ்டைஸ் மாறிக்கொண்டே இருக்கும்.

கிறிஸ்துமஸ் திருவிழாவே, பழைய பேகன் திருவிழாவான சோல்ஸ்டைஸ் திருவிழாவை அபகரித்துக்கொண்டதுதான் என்றும் சொல்வார்கள்.

பழந்தமிழர் எத்தனை ஆண்டுகளுக்குமுன் என்ன காரணம் கொண்டு சோல்ஸ்டைஸை ஆண்டின் முதல் நாளாகத் தீர்மானித்தார்கள் என்பதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் தெளிவாக இல்லை. அதுவும் இன்று சோல்ஸ்டைஸிலிருந்து கிட்டத்தட்ட 25 நாள்கள் தள்ளிப்போயிருக்கும் நிலையில் அதன் காரணமாகத்தான் தை முதல் நாள் என்பது ஆண்டின் முதல் நாள் என்று ஒருவர் அழுத்திச் சொல்வது அறிவியலுக்கு உகந்ததாக இல்லை. சோல்ஸ்டைஸுக்கு நெருக்கமானது என்றால், மார்கழி 1-ம் தேதியை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? (அதுவும் மாதங்களில் நான் மார்கழி என்றுவேறு கண்ணபிரான் சொல்லியிருக்கிறான் என்று சொல்லி இந்துக்களை தாஜா பண்ணிவிடலாமே?)

இது ஒரு பக்கம் என்றால், திருவள்ளுவரின் பிறந்த ஆண்டை எந்த அடிப்படையில் அவ்வளவு துல்லியமாக கிமு 31 என்று குறித்துள்ளார்கள்? பகுத்தறிவான வழியில் சித்திரையையும் 60 ஆண்டுச் சுழற்சியையும் கேள்வி கேட்கும்போது முன்வைக்கப்படும் மாற்றும் பகுத்தறிவுக்கு ஏற்றவகையில் இருக்கவேண்டுமல்லவா?

இது குறித்து யாரேனும் பயனுள்ளதாக ஏதேனும் சொல்லமுடியுமா?

19 comments:

  1. சித்திரை ஆண்டின் முதல் ஆண்டாக கொள்வதற்கு விவசாயம் ஒரு காரணமாக இருக்கலாம்..
    கோடை மழை, சித்திரை பட்டம் (புது நெல்,தானிய விதைப்பு), வசந்த காலம் போன்றவைகளால் சித்திரை ஆண்டின் தொடக்கமாக வைக்கப்பட்டிருக்கலாம்..

    ReplyDelete
  2. எனக்கு சித்திரை கோஷ்டியைப் பற்றிக் கேள்வியே இல்லை. அவர்கள், இதுதான் நாங்கள் ஆண்டாண்டு காலமாகச் செய்துவருவது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களிடம் விவாதிக்கமுடியாது. சித்திரையோ, வைகாசியோ, ஆனியோ, ஆடியோ, ஆவணியோ, எனக்குக் கவலையில்லை. ஆனால் தை என்பது அறிவியல்பூர்வமானது, கிமு 31 என்பது சான்றுகளுடன் கூடியது என்று சொல்லும்போதுதான் கேள்வி எழுகிறது. அதுபற்றித்தான் விவாதமே செய்யமுடியும். அதை யாராவது விளக்குவார்களா என்றுதான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சித்திரை தான் சரி. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் 'Tropical year systemஐ' பின்பற்றியுள்ளனர். அதாவது சூரியன் மேஷ ராசியில் '0 பாகையில்' (0த் டிகிரி) வரும் போது ஆண்டு துவங்குகிறது. எதற்கெடுத்தாலும் 'வெள்ளைக்காரனுக்கு வால்' பிடித்தால் இப்படி தான் இருக்கும்

      Delete
    2. எனக்கு தெரிந்த இன்னொரு தகவலையும் சொல்கிறேன்

      'பங்குனி மாதம் கடை (கடைசி) மாதம் ' என்று அகத்தியர் பாடல் ஒன்றில் உள்ளதாம். இதை திரு. பழ கருப்பையா அவர்கள் ஒரு விவாத நிகழ்ச்சியில் சொன்னது. நன்றி

      Delete
  3. Check it out.

    http://valavu.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  4. முதலில், திருவள்ளுவர் தினம் இன்றல்ல, நேற்று, அதாவது 16 ம் தேதி. பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்ல் மற்றும் திருவள்ளுவர் தினம். அதற்கு மறுநாள், (அதாவது இன்று, ஜன 17) சென்னையில் காணும் பொங்கல் எனப்படுவது அரசு கணக்குப்படி 'உழவர் தினம்'. 3 நாட்களும் அரசு விடுமுறை.

    திருவள்ளுவர் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது? திருவள்ளுவர் தினத்தன்று என்றால், அது தை 2ம் தேதி. எப்படி ஒரு மாதத்தின் 2ம் தேதி புதிவருடம் தொடங்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் நானும் 60 ஆண்டு சுழற்சி முறையை நிராகரிக்கிறேன். அந்தப் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாகவும் இல்லை. அது தமிழர்களுக்கான கணக்காக இருக்க முடியாது.

    சரவணன்

    ReplyDelete
  5. இந்தியாவில் தமிழகம், வஙக்ம், அசாம், பஞ்சாப், மணிப்பூர், கேரளம்,ஒரிசா ஆகிய மானிலங்களில் ஏப்ரல 13 அல்லது 14 ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இலங்கை(சிங்களர்), தாய்லாந்து, பர்மா, கம்போடியா முதலிய நாடுகளில் இதே போல ஏப்ரல் மத்தியில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆந்திரம்,கர்னாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மானிலங்களில் மாதம் என்பது அமாவாசையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மார்ச் மூன்றாவது வாரத்தில் கொண்டாடப்ப்டுகிறது.இந்திய வானவியல் முறையில் மேஷ ராசி ஏப்ரல் 12 அல்லது 14 ஆம் தேதி தொடங்குகிறது. மேற்கத்திய முறையில் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் Aries என்ற முதல் ராசி தொடங்குகிறது.இதிலிருந்து தமிழகத்தில் புத்தாண்டு எப்போது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ஆனால் அரசு ஆணை பிறப்பித்து எந்தெத் தேதியை வேண்டுமானாலும் புத்தாண்டு தினமாக அறிவிக்கத் தடை ஏதும் இல்லை.

    ReplyDelete
  6. Whether it is Jan 1st or Dec 1st, How is it Going to affect our life? There is no Beginning or End for Time, it is Infinite, So dont waste you time discussing these kind of B.S.

    ReplyDelete
  7. Dear Badri,

    Actually the Full moon day of Marghazhi ie Thiruvadirai was considered as start of new year in Vedic Sacrifices.

    refer link

    On the Margazhi full moon, apart from completing the sarpabali, the pakayajna called "agrahayani" must be performed. Like "sravani", the name "agrahayani" is also derived from the name of the month of the same name - Agrahayani is Margazhi. "Hayana" means "year" and the first month of the year is "Agrahayana". In ancient times the year started with this month. The first of January [of the Gregorian calendar] falls in mid-Margazhi. It was from us that Europe took this as their new year. Though we changed our calendar later, they stuck to theirs. There are two more pakayajnas called "caitri" and "asvayuji": these fall respectively, as their names suggest, in Cittirai and Aippasi.

    http://www.kamakoti.org/hindudharma/part19/chap6.htm

    In fact the name of Tamil Months itself is sankrit.

    The word Thai is derived from the word Thishyam. In Thai full moon falls o the star of Poosam. Poosam is called both Pushyam and Thishyam. Thai is derived from Thishyam.

    Valmiki used the word Thishyam in Sundrakandam.

    In Margazhi, Full moon falls on the star Mirugaseersham. Margazhi is derived from Mrugaseershi.

    In Panguni, the fullmoon falls on Uthiram which is called Uthra Palguni and hence the Tamil name Panguni.

    Masi from Magam, Chithirai from Chitra, Vaigasi from Visakam etc etc.

    regards

    sankar

    ReplyDelete
  8. சாருவின் எக்ஸைல் தஞ்சைக்கு வருமா?

    ReplyDelete
  9. தமிழின் ஆண்டு தொடக்கம் தை என்று சொல்பவர்களுக்காக:-

    தமிழருக்காக ஒரு தனி அல்லது தொடர் ஆண்டு வேண்டும் என்பது ஒகே. இப்போ இருக்கிற ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை என்பது கூட ஒகே.

    ஆனா திருவள்ளுவர் எப்போ பிறந்தார்னு எப்படி சொல்றாங்க. இத தெளிவு படுத்தனும் இல்லை. அத மக்கள் (பெரும்பாண்மை) எத்துக்கனும் இல்லை. சரி அப்படியே திருவள்ளுவர் இவங்க சொல்ற அதே நேரத்தில பொறந்திருந்தாலும், அவர் பிறந்ததற்காக அதை தமிழின் ஆண்டு தொடக்கம் என்பதாக கருத முடியுமா?.... திருவள்ளுவருக்கு முன் தமிழர்களே வாழ்ந்ததில்லையா?. அப்படியேன்றால் இது ஒகே. அப்படியில்லை என்றால் எப்படி இதை ஏற்று கொள்வது. இதை திருவள்ளுவரே ஒத்துக்க மாட்டாரு..

    சரி அப்படியே இருந்தாலும் அவர் பிறந்த 2ம் தேதின்னு சொல்றாங்க, அது எப்படி சார் தொடக்கமாய் இருக்க முடியும், அதனால ஏதோ தை 1 தேதின்னு சொல்றமாதிரி இருக்கு, இவங்க சொல்றது.

    சரிப்பா, எல்லாம் ஒகே அப்படியே இருந்தாலும் அது என்ன 31+2012 ஏன் +31 எனக்கு புரியால.. ஓஓஓ தமிழன் எதுலயும் பின்னாடி இருக்க கூடாதா?. முன்னாடி தான் போய்ட்டிருக்கனும்ற அர்த்தத்தில் தான் இப்படியா? வாவ் கிரேட் தமிழ் உணர்வு....

    இதை எல்லாம் ஒரு காரணமாய் கொண்டு தமிழ் ஆண்டு பிறப்பை மாற்றுவதென்பது சுத்த ********* தனம்.

    1. தமிழருக்காக ஒரு தனி அல்லது தொடர் ஆண்டு வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கமாயிருந்தால், அதை சித்திரையை முதல் கொண்டே செய்யலாமே?

    2. சரி, ஆண்டுகளின் பெயர் தமிழ் இல்லை என்றால் அதையும் தமிழில் மாற்றி சித்திரையை முதல் கொண்டே செய்யலாமே?

    3. திருவள்ளுவர் பிறந்த தினம் தான் தமிழ் ஆண்டு தொடக்கமாய் இருக்கணும் நீங்கள் நினைத்திர்கள் என்றால், திருவள்ளுவர் பிறந்த நாளை சித்திரை 1 க்கு மாத்திக்கலாமே?. இப்பொ இருக்கிற திருவள்ளூவர் பிறந்த தினம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

    4. தமிழர்கள் காலத்தில் முன்னோடிகளாக இருக்கவேண்டுமென்றால், 2012+31 ஏன்?. 2012+5000 போட்டுகளாமே?. இன்னும் முன்னோடிகாளாயிடுவோமே?

    தமிழ் ஆண்டு தொடக்கத்தை மாற்ற வேண்டும் என்றோரின் எண்ணங்களை நான் குறை கூற வரவில்லை. ஆனால் அதற்க்கு சரியான காரணங்களை கூறுங்கள்.. இல்லையென்றால் காலமும், உலகத்தாரும் நம்மை ஏளனம் செய்ய நேரும். ஏற்கனவே நிறைய இடத்தில் இது நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் ஆண்டை மாற்ற சிலருக்கு அதிகாரம் இருக்கலாம். அது மட்டுமே மாற்ற தகுதியாய் இருந்து விட முடியாது. அனைவரும் அல்லது பெரும்பாண்மையானோர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்க்கு ஏற்றுக்கொள்ளும் படியான சான்றுகளும் வேண்டும். அதை விடுத்து ஏதோ அதிகாரம் இருப்போர்கள் எல்லாம் செய்யமுடியும் என்றால் போல் செய்தால், வருங்காலம் உங்கள் தவறுகளை திருப்பி செய்து கொண்டேயிருக்கும். மேலும் என்றாவது உண்மை புலப்படும் போது உங்கள் செயல் நீங்கள் இவ்வுலகில் இல்லாவிடிலும் உங்களுக்கு அவபெயரை தரும் என்பதை மறக்காமல் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவோர் நடந்து கொள்ளவேண்டும்.

    நான் தமிழை நேசிப்பதன் காரணமாய் தான் இவற்றை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தயவுகூர்ந்து தவறாக நினைத்துகொள்ள வேண்டாம்

    Saran

    ReplyDelete
  10. @பத்ரி,,
    உங்களுக்கு comment போட்டா reply பண்ணவேமாட்ரீங்களே சார்?. உங்கள் வலைபக்கத்தின் Left sidebar லுள்ள இணையதளங்களின் பட்டியல் எதன் அடிப்படையில் இணைத்துள்ளீர்கள். பிரபலமானவர்கள் என்பதாலா?. உங்கள் விருப்பத்தினாலா? அல்லது வேறுகாரணங்கள் உண்டா?.
    வேறுகாரணங்கள் அல்லது தகுதிகள் இருந்தால் அதை தெரிந்துகொண்டால் நானும் அத்தகுதிகளை பெற்று என்னுடைய வலைப்பக்கத்தையும் அங்கே இடம் பெற செய்வேன் :)

    Saran R

    ReplyDelete
  11. அன்புள்ள பத்ரி..
    இந்த உரலியில் உள்ள தமிழ் புத்தாண்டு பற்றிய விளக்கம் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது..
    பார்க்க:https://www.facebook.com/notes/kannan-ganesan/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-/324656034223609

    ReplyDelete
  12. அண்ணா ஆட்சியை பிடித்த 1967ம் ஆண்டுதான் திருவள்ளுவர் பிறந்த 2000ம் ஆண்டு என்று எந்த விதமான அறிவியல் பின்ணணியுமில்லாமல் குருட்டாம்போக்கில் நிர்ணயம் செய்யப்பட்டதே திருவள்ளுவர் ஆண்டு.

    ReplyDelete
  13. சரண்: எனக்குப் பிடித்த, நான் பின்பற்றிய அல்லது பின்பற்றிக்கொண்டிருக்கும் பதிவுகளைத்தான் என் பதிவில் இணைத்துள்ளேன். நீங்கள் கேட்டுக்கொண்டதால் நான் இணைப்பேன் என்று உறுதிகூறமுடியாது. உங்கள் பதிவுகள் பிடித்திருந்தால் இணைப்பேன்.

    ReplyDelete
  14. Some more research is required in this. the whole concept of keeping pongal day as new year is culminating from the anti-brahminism of dravidian movements.
    a clear un-biased view on this required
    Surya

    ReplyDelete
  15. இந்தத் திருவள்ளுவர் ஆண்டுங்கறதே ஒரு பம்மாத்து சார். கி.ஆ.பெ மாதிரி ஆளுங்க ஒண்ணாச் சேர்ந்து உருவாக்கினது. இதற்கு அறிவில பூர்வமாக/வரலாற்றுப் பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. பொங்கலை ஒட்டி ஒரு எக்ஸ்ட்ரா லீவு வரட்டுமேன்னும் இவங்க ஏற்பாடு செஞ்ச விஷயம் இது. பட், இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இதை (திருவள்ளுவர் பிறந்த நாள் + தை தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள்) திமுக ஆரம்பிச்சு வக்கலை. அவங்களுக்கு முன்னாடியே சில தீவிரத் தமிழ் எழுத்தாளர்கள் (மறைமலை, கி.ஆ.பெ மாதிரி ஆசாமிகள்) ஆரம்பிச்சு வச்சது. ஓட்டு அரசியலுக்காக பின்னாடி திமுக இதை கையிலெடுத்துக்கிச்சி. அவ்ளோதான்.

    ReplyDelete
  16. தமிழ் ஆங்கிலம் தெலுங்கு என்று மொழி வாரியாக ஆண்டுகளை பிரிப்பது இன்றைய புதுமை. ஜனவரி 1 என்பது ஆங்கில புத்தாண்டு அல்ல, கிறிஸ்துவ புத்தாண்டு - இதன் முன்னோடி ரோமானிய புத்தாண்டு; அதற்கு முன்னோடிகள் யவன, பாபிலோனிய புத்தாண்டுகள்.

    ஹிந்து மதத்தில் பல புத்தாண்டுகள் உள்ளன - சித்திரையில் தொடங்குவதா ஐப்பசியில் தொடங்குவதா என்று வேத கால சர்ச்சையும் உள்ளது! சூரிய சித்த்தாந்தத்தில் தொடங்கி பல வடமொழி வானியல் நூல்களே ஆண்டு, மாதம், திதி, நட்சத்திரம், நாழிகை, முகூர்த்தம் போன்ற காலபிரமாண குறிப்புகளை நிற்ணயமும் மாற்றமும் செய்கின்றன.

    பல மன்னர்கள் தங்கள் ஆட்சியில் வந்த நாளிலிருந்து புத்தாண்டு தொடக்கி கல்வெட்டுகளில் பதித்துள்ளனர். யாமறிந்து யாரும் வள்ளுவரை இழுக்கவில்லை. சங்க இலக்கியத்தில் புத்தாண்டை பற்றியும் பேசவில்லை, வடமொழியிலிருந்து தனித்து நிற்கும் ஒரு தமிழ் வானியலையும் சொல்லவில்லை.

    -கோபு (writergopu@yahoo.com)

    ReplyDelete
  17. இது தொடர்பாக எனது சமீபத்தைய பதிவு. http://msaravanakkumar.blogspot.com/2012/01/blog-post_14.html

    ReplyDelete