தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்திய அணியில் விளையாட உள்ளே முயற்சித்தார் என்று காலே மீது தேர்வுக்குழு உறுப்பினர்கள் கிரன் மோரே, பிரனாப் ராய் இருவரும் புகார் செய்திருந்தனர். இதன் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலே தேர்வுக்குழு உறுப்பினர்களை அணுகி அவர்களை நச்சரித்தார் என்பது முடிவாகியுள்ளது. இதற்காக வருந்தி காலே ஒரு கடிதமும் எழுதியுள்ளாராம். ஆனால் தான் லஞ்சம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒருபொழுதும் சொல்லவில்லை என்கிறார் காலே. சரியான சாட்சியம் இல்லாததால், ஆனால் அதே சமயம் காலே ஏதோ செய்ய முயன்றுள்ளார் என்பது தெரிந்ததாலும் ஜக்மோஹன் தால்மியா அவருக்கு ஏழு மாதத் தடை [டிசெம்பர் 2004 வரை] விதித்துள்ளார்.
இதனால் வருமாண்டிற்கான ரஞ்சிக்கோப்பைப் போட்டிகளின் முதல் சில ஆட்டங்களில் மஹாராஷ்டிர அணிக்காக இவரால் விளையாட முடியாது.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
5 hours ago
No comments:
Post a Comment