இன்றைய தி ஹிந்துவில் வெளியான செய்தி இது. மருத்துவம், மற்றும் அதே துறை சார்ந்த கல்லூரிகளில் கிடைக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாடம் | மொத்தக் கல்லூரிகள் | மொத்த இடங்கள் | |||
---|---|---|---|---|---|
அரசு | தனியார் | அரசு | தனியார் | ||
அரசு நியமனம் | நிர்வாக நியமனம் | ||||
MBBS பொது மருத்துவம் | 11 | 3 | 1,305 | 124 | |
BDS பல் மருத்துவம் | 1 | 6 | 60 | 208 | |
B.Pharm மருந்துத்துறை | 2 | 30 | 110 | 939 | 646 |
B.Sc Nursing செவிலியர் பணி | 2 | 38 | 50 | 688 | 1,032 |
BPT Physiotherapy | 2 | 37 | 50 | 712 | 1,068 |
BOT Occupational Therapy | - | 6 | - | 150 | 100 |
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இருப்பது மிகக்குறைவான இடங்களே. இதற்கும் மேல், தனியார் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட வேண்டிய இடங்களுக்கான நுழைவுத் தேர்வை யார் நடத்துவது என்று அடிதடிக் குழப்பம் நடக்கிறதாம். ஜூன் 8ஆம் தேதிதான் சுப்ரமணி கமிட்டி (உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது) யார் இந்த நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று தீர்மானிப்பார்களாம். அரசு நியமிக்கும் இடங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிந்துவிட்டது.
மெடிகோ இன்ஃபோலைன் என்னும் தளத்தில் இந்தியா முழுமையிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விவரங்களும், அங்கு என்னென்ன பட்டங்களுக்கான பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன என்ற தகவலும் உள்ளன. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கர்நாடகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல உள்ளன. தமிழக அரசால் அதிகமான இடங்களை உருவாக்க முடியாது என்றால், தனியார் துறையினரையாவது ஊக்குவிக்கலாம். தனியார் துறை பொறியியல் கல்லூரிகளில் பல ஊழல்கள் உள்ளன: வெளிப்படையாக அதிகப்படியான தொகையை வாங்குகின்றனர்; சரியான வசதிகள் இல்லை. இருந்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மூலமாகத்தான் தமிழகம் பல பொறியியல் மாணவர்களை உருவாக்கியுள்ளது. போன வருடக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள மொத்தப் பொறியியல் இடங்கள் 73,875. அரசுக் கல்லூரிகளின் இடங்கள் 5,870 மட்டுமே.
It is not a correct assessment because rampant commercialization of medical education in Maharastra,
ReplyDeleteKarnataka and A.P had resulted in negative impacts.Doctors are trained in colleges without adequate infrastructure and money rather than merit becomes the criteria for admission under management quota.I have written in Thinnai on this, citing an
editorial in EPW
தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இரண்டிலுமே ஊழல்கள் உள்ளன. அதை நான் முன்னமேயே என் பதிவில் சொல்லிவிட்டேன்.
ReplyDelete"தனியார் துறை பொறியியல் கல்லூரிகளில் பல ஊழல்கள் உள்ளன: வெளிப்படையாக அதிகப்படியான தொகையை வாங்குகின்றனர்; சரியான வசதிகள் இல்லை. இருந்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மூலமாகத்தான் தமிழகம் பல பொறியியல் மாணவர்களை உருவாக்கியுள்ளது." இதுதான் நான் சொன்னது.
இந்த ஊழல்களைக் குறைக்க வேண்டிய செயல்களைச் செய்துவிட்டு அரசு தனியார் அறக்கட்டளைகளை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.
முடியாத காரியமில்லை. ஆனால் இந்த தனியார் கல்லூரிகளைத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் (தங்கபாலு போன்றோர்). ரவுடிகள் (ஜேப்பியார் போன்றோர்). பெரும் தொழிலதிபர்கள். நிறைய அரசியல் தொடர்புள்ளவர்கள். இவர்கள் கல்லூரிகளைத் தொடங்குவதே பணம் சம்பாதிக்கத்தான். ஆனால் சிறிது முயற்சி செய்தால் அரசால் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியும். அதை விடுத்து அரசுக் கல்லூரிகளிலும் எண்ணிக்கையைக் கூட்டாமல் இருந்தால்... அரை டாக்டர்கள் எவ்வளவோ தேவலாம் என்றாகி விடும். முழு quacks வைத்தியம் பார்க்கிறார்கள் இப்பொழுது.