இணையத்தில் வலைப்பதிவு வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் 1, 2, 3 என்று வரிசையாக பட்டியலிட ஆசை போல.
பா.ராகவன் தன் பதிவில் ஒன்பது கட்டளைகள் என்று வலைப்பதிவாளர்களுக்கு, மின்குழுமத்தில் எழுதுபவருக்கு, இணைய முகமூடிகளுக்கு, இணைய இதழ்களுக்கு எழுதுவோருக்கு என்று இதுவரை கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் புதிதாக (இணையத்துக்கு) எழுத வந்துள்ள, நமக்கு மிகவும் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் பல வலைப்பதிவுகளையும், இணைய இதழ்களையும் மேய்ந்து தான் புரிந்துகொண்டதை ஒன்றிலிருந்து பத்துவரை ஒரு பட்டியலிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலைப் போலவே இன்னுமொரு பட்டியல் அவரிடமிருந்து - ஒரு நூறு புத்தகங்களை தான் படித்ததில் தனக்குப் பிடித்ததாகச் சொல்கிறார். இதில் நான் படித்திருப்பது: 3, 4, 5, 7, 10, 11, 13, 14, 16, 23, 25, 29, 30, 32, 35, 36, 64 ஆகியவை. கைவசம் இருப்பது 61, 69, 98 - இன்னமும் படிக்கவில்லை. கியூவில் உள்ளது.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
5 hours ago
Badri, please dont consider S.Ramakrishnan on the same level as Pa.Raghavan and thus insult S.Ramakrishnan. Thanks - PK Sivakumar
ReplyDeleteஇந்தப் பட்டியலைப் போலவே இன்னுமொரு பட்டியல்
ReplyDelete>>
ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லையே, அப்புறம் எப்படி "போலவே"? :-)