Wednesday, June 09, 2004

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் பாராளுமன்றத்தில் 7 ஜூன் 2004 அன்று ஆற்றிய உரை தொடங்குமுன்னர், சொன்ன கவிதை இது. அன்று காலை காலாற நடந்துகொண்டிருக்கும்போது இவருக்கு திடீரென்று தோன்றியதாம். திருக்குறள் ஒருசில (சிதம்பரம் பட்ஜெட் போடும்போது சொல்வார்) தவிர பாராளுமன்றத்தில் தமிழில் சொந்த சரக்கு எடுத்து விட்டவர் நம்மாள்தான் இதுவரை.

வாஜ்பாயி பிரதமராக இருந்திருந்தால் எசப்பாட்டு படித்திருப்பார் ஹிந்தியில்.

===

நேற்றைய கேள்விகளுக்கு 'match the following' பகுதிக்கு பலர் சரியான விடை சொன்னார்கள். ஆனால் யாருக்கும் அப்துல் கலாம் பெயர் தோன்றவில்லையா? எல்லோருக்கும் GKஇல் முட்டைதான்:-) பலரது கவிதைகள் நன்றாக இருந்தன.

5 comments:

 1. அப்துல் கலாம் அவர்கள் தன்னால் தமிழில் இந்தக்கவிதையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று சொன்னதாக மாலையில்தான் படித்தேன் உடனே பதில் எழுத முடியவில்லை

  ReplyDelete
 2. your writings are very nice
  i had just started with my blog (www.sugumar.com)
  but i dont know how to publish tamil content
  can you help me please !?

  keep thinking and writing, you are too good :)
  sugumar (sugumar_1975@yahoo.com)

  ReplyDelete
 3. அய்யோ, நிஜமாவே அந்தக் கூட்டத்தில் கலாமும் வந்தார்...டூ லேட் :)

  ReplyDelete
 4. திரு. சித்தார்த் பாசு என்கிற பத்ரி அவர்களுக்கும் மற்றும் வலை மேய்பவர்களுக்கும்..

  சி.பா அவர்களே, உங்கள் இரண்டாம் கேள்வியை இன்னொரு முறை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெறும் ஆறு வார்த்தைகளைக் கொடுத்து யார் நினைவுக்கு வருகிறார் என்று கேட்கும் உங்கள் கேள்வியே தவறு என்பதுதான் என் வாதம். யாருடைய கவிதையில் வருகிறது என்று கேட்டாலே பதில் சொல்லமுடியாத கேள்வி இது. ஏனெனில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 6 வார்த்தைகளும் இன்று எல்லோர் கவிதைகளிலும் சகஜமாக இருக்கக் கூடியவை. ஒரு நாளைக்கு தமிழன் எழுதும் கவிதைகளில் இந்த ஆறு வார்த்தைகள் உள்ள கவிதைகள் 5%, 5 அல்லது 4 மட்டும் இருக்கும் கவிதைகள் 13%, 3 வார்த்தைகள் இருக்கும் கவிதைகள் 25%, 2 வார்த்தைகள் மட்டுமாவது இருக்கும் கவிதைகள் 51% மற்றும் ஒரு வார்த்தை மட்டும் இருக்கும் கவிதைகள் 6% என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நேற்று ஒரு வலைப்பதிவில் மட்டுமே இந்த 6 வார்த்தைகளைப் போட்டு 4 கவிதைகள் வந்திருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த நிலையில், இந்த வார்த்தைகளைப் போட்டு "சமீபத்தில் எந்தப் பிரபலத்தினுடைய கவிதையில் இந்த வார்த்தைகள் வருகின்றன?" என்று கூடக் கேட்காமல், யார் நினைவுக்கு வருகிறார்கள் என்று பொத்தாம்பொதுவாகக் கேட்டிருப்பது, உங்கள் கேள்வியில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை. இப்படியாக நீங்கள் கேட்க நினைத்ததை சரியான கேள்வியாக்காமல் அடுத்தவரின் G.K-ற்கு 0 மதிப்பெண்கள் வழங்கியது அநீதி. எனவே போட்டியில் பங்கு பெறாமலே -2 மதிப்பெண்கள் பெறுகிறீர்கள்

  நடந்து முடிந்த போட்டியில் வந்திருந்த 13 மறுமொழிகளில் போட்டியில் பங்குபெற்றவர்கள் 4 பேர் மட்டுமே. ஜெய்ஸ்ரீ, மீனாக்ஸ், எழில், சுந்தர். அதில்..

  சுந்தர் அவர்கள் முதல் இரண்டு கேள்விகளுக்கும் தவறான பதிலைச் சொல்லி, 5-5 என்ற மதிப்பெண்ணைப் பெறுகிறார்.(தெரியாததை பாஸ் செய்துவிடுவதே நல்லது சுந்தர். ஆனால் நன்றி உங்கள் தவறான பதில்களுக்கு :)

  எழில் அவர்கள் இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தும் ஒன்று தவறாகிப் போனதால் 5-2 மதிப்பெண்களை பெறுகிறார்.

  மீனாக்ஸ் மற்றும் ஜெயஸ்ரீ இரண்டு கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி 5+3 வாங்கியிருந்தாலும், அதில் மீனாக்ஸ், 2 கேள்விக்கான தவறான பதிலைச் சொன்னதால் 8-2 வாங்கியிருக்கிறார்.

  எனவே இந்தப் போட்டியில் ஒரு கேள்விக்கு சரியான பதில் தெரியவில்லை என்று சொன்னாலும் ஆர்வத்துடன் முதலில் ஓடிவந்து தன் கவிதை முயற்சியை அளித்து 8 மதிப்பெண்கள் பெற்ற ஜெயஸ்ரீ அவர்கள் ....

  என்றெல்லாம் யோசித்துக் கொண்டிராமல், இதை அனைவரும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  பி.கு:
  1. கவிதையைப் போட்ட கலாம், அத மரத்தடில போடாம பாராளுமன்றத்துல போடுவாரா மனுஷன்? என்னமோ போங்க!
  2. நாளை "கமெண்ட்ஸ் எழுத 9 கட்டளைகள்"னு அந்தப் பக்கத்துல வந்துடுமா?? பயமாயிருக்கே.

  ReplyDelete
 5. ஜெயஸ்ரீ அக்கா, இதைக் கலாம் படிக்காம இருப்பார்னா நினைக்கிறீங்க? :) கண்டிப்பா ஒரு நாள் மரத்தடிக்கு வருவார்!!

  ReplyDelete