இந்த அற்புதமான உணவுப்பொருளை சாப்பிட்டிருக்கிறீர்களா? எந்தவகை பொறித்த அப்பளமும், இந்த பொறித்த இலைவடாத்திற்கு முன் நிற்க முடியாது.
ஹார்லிக்ஸ் குழந்தை சொல்வதைப் போல, இதை அப்படியே சாப்பிடலாம். அதுதான் அதிக ருசி. ஒரு டம்ளர் அரிசி, அத்துடன் ஒரு கை ஜவ்வரிசி, ருசிக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து நன்கு குழைய அரைத்து, சிறிது உப்பும், முழுச் சீரகமும் போட வேண்டும். பின் வாழையிலையில் கரண்டியால் ஒரு ஸ்பூன் அரைத்த மாவை வட்டமாக எழுத வேண்டும். இந்த வாழையிலையை நீராவியில் வேகுமாறு வைத்து, மேலே மூடி, இருபது விநாடி கழித்து எடுத்தால் சுடச்சுட இலைவடாம் தயார்.
அப்படியே பிய்த்து அப்படியே வாயில் போடவேண்டியதுதான். ருசியான காலை உணவு தயார். (இன்று காலை என் வீட்டில் இதுதான் உணவு.)
பிய்த்து எடுத்த வடகங்களை வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம். நல்ல ஜுரம் வந்தவர்கள், பொறிக்காமல், நெருப்பில் காய்ச்சி, ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இதெல்லாம் செய்யப் பொறுமை கிடையாது என்பவர்களுக்காக வீடு தேடி வந்து டெலிவரி செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்னையில். தொலைபேசியில் சொன்னால், சுடச்சுட வீட்டிற்கே வந்து சப்ளை செய்வார்களாம். தொடர்பு கொள்ள வேண்டியவர்: ஜெயந்தி பார்த்தசாரதி, தொலைபேசி எண்: 2471-5430. ஒரு 'fresh' இலைவடாம் ரூ. 1.
காய்ந்த இலைவடாம் 100க்கு விலை ரூ. 120 ஆகுமாம்.
வாசகனாதல்
12 hours ago
சமையல்னா அதுக்கடுத்து கோலம்தானா? நான் கோலம்லாம் போடறதில்ல. நேத்து என்னோட மேக்ஸிமம் காண்டிரிபியூஷன் இலையிலேர்ந்து வடாத்த உரிச்சதுதான்!
ReplyDeleteBadri, I agree that ilai vadaam is great. But then how did you have it alone for breakfast?
ReplyDeleteDear Badri,
ReplyDeleteIt kindled my childhood memories. Bala-maami and Thangamaami used to help the others in our compound for making this delicious item.
At home we often fight (four children) for an extra piece.
Now at IISc, still i am tasting it in our mess...
A good stuff...
BTW have you tasted that stuff immdtly after cooking it but before drying it in sun?...ha..i like it very much...
பத்ரி, எந்த *கட்டளைகளுக்கும்* அடிப்பணிய மாட்டீர்களா? :)
ReplyDelete