இலட்சியம், அறிவு, அமைதி
புதையல், சிகரம், தீவு
கேள்விகள்:
1. மேலே முதல் வரியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையான சொற்களை இரண்டாம் வரியிலிருந்து எடுத்து பொருத்தி அமைக்கவும். (3 மதிப்பெண்கள்)
2. இந்தச் சொற்களைப் பார்த்ததும் மனதில் தோன்றும் மனிதர் பெயர் என்ன? (2 மதிப்பெண்கள்)
3. மேற்கண்ட சொற்களை அமைத்து ஒரு கவிதை இயற்றவும். (நல்ல கவிதையாக இருந்தால் 5 மதிப்பெண்கள்)
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
பதில்கள்:
ReplyDelete1. இலட்சியம் - சிகரம், அறிவு - புதையல், அமைதி - தீவு
2. பெயர்கள்:
இலட்சியம் - கலைஞர் (40/40)
அறிவு - மன்மோஹன் சிங் (பொருளாதாரம்)
அமைதி - ப. சிதம்பரம் (கடைசி வரை "நிதி" பற்றி மூச்!)
புதையல் - டாக்டர். அன்புமணி (அடிச்சாரப்பா லாட்டரி)
தீவு - ஜெயலலிதா (தன்னந்தனி)
சிகரம் - தமிழக பொது ஜனம் (இன்றைய சிகரம் நாளைய பாதாளம் and vice versa)
3. கவிதை - (நன்றி: பாரதியார்)
தேடிப் புதையல் நிதம் கண்டு - பல
சின்னஞ்சிறு இலட்சியங்கள் பேசி - மனம்
வாடி அமைதியின்றி உழன்று - பிறர்
வாடப் பலரைத் தீவுகள் ஆக்கி - நரை
கூடி அறிவுச் சிகரம் எய்தி - கொடும்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வாழ்வேனென்று நினைத் தீரோ?
பரவாயில்லை! ரெண்டுமே நல்ல முயற்சிகள். இன்னமும் சில பதில்களை (வருமா?) எதிர்பார்க்கிறேன். பின்னர் விடைகள் :)
ReplyDeletehas anna university asked you set questions for TNPCEE and is this a sample question for the same :)
ReplyDeleteஇந்தச் சொற்களனைத்தையும் காணும் போது ஏ ஆர் ரஹ்மான் மனதில் வருகிறார் :-)
ReplyDeleteஅறிவுவிதை விதை!
இலட்சிய உரம் சேர்!
அகந்தையை தீவு செய்!
மெய்ஞ்ஞானப் புதையல் தேடு!
அமைதிப் பாதை சமை!
சிகரம் நீ செல்வழியில்!
badri, nallaathaanae iruntheenga :)
ReplyDeleteபா.ராவின் ஒன்பது கட்டளைகளைப் பத்ரி படித்ததின் விளைவு , வேறொன்றுமில்லை மதி :).
ReplyDelete1. இலட்சியத் தீவு
ReplyDeleteஅறிவுச் சிகரம்
அமைதிப் புதையல்
2. கூட்டமாய் யாராரோ வந்தார்கள், தெளிவாயில்லை, தலாய் லாமா என்று சொல்லி வைக்கிறேன்!
3. தீயும்மறிவும் புதையல் வெறியுமா யென்
இலட்சியத் தீவெல்லாஞ் சுற்றி யலைந்தேன்
அமைதியுங் காணேன் சிகரமுங் காணேன்
அலைகட லுறங்கினும் ஆழ்மன முறங்குமோ?
பெயில் மார்க்கா இருந்தா எங்க அப்பாக்கிட்ட சொல்ல வேணாம்:)
இந்தச் சொற்களை வைத்து யான் ஒரு கவிதை/பாடல் எழுதியுள்ளேன்.அது மனோஜ் சியாமளன் இயக்கத்தில் உருவாக உள்ள 'பெயரிடப்படாத திரைப்படத்தில்' (படத்தின் பெயரே அதுதான்)இடம் பெற உள்ளது. ரக்மான் இசையில் உதித் நாராயணன் மற்றும் ஜெனிப்ர் லோபேஸ் பாட உள்ளார்கள்,
ReplyDeleteஎனவே சிறிது காலம் கழித்து அது உலகெங்கும் ஒலிக்கும்.
அடுத்து இந்த குறிப்பை இட்டவர் யார் என்பதை ஊகிக்க ஒரு போட்டி நடத்தலாம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteJSri - //. மீனாக்ஸ், நீங்க எழுதியிருக்கறது பாரதியாரோடதா, பாரதில உங்க டச்சா? நெஜமாவெ தெரியாததால கேக்கறேன்.//
ReplyDeleteபாரதியாரின் புகழ் பெற்ற கவிதையின் முதல் பாடலை நான் பத்ரி கொடுத்த இந்தச் சொற்களை அமைத்து மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் கவிதையை மகாநதி படத்துல சிறையில இருக்கும் போது கமல் சொல்வார்.