Wednesday, June 02, 2004

எழுத்தாளப் பெருமக்கள் வலைப்பதிவுகள்

பா.ராகவன் மனத்துக்கண் என்றொரு வலைப்பதிவை வைத்திருப்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

வெங்கடேஷ் நேசமுடன் என்றொரு வலைப்பதிவைப் பராமரிக்கிறார். வாரம் ஒருமுறை மின்னஞ்சல் வழியே நண்பர்களுடன் உரையாடும் வெங்கடேஷ் அந்த மின்னஞ்சலின் இடுகைகளைத்தான் பதிவில் ஏற்றுகிறார். போனவார விஷயம் இன்னமும் ஏறவில்லை. இன்று செய்துவிடுவேன் என்கிறார்.

புதுவரவு: எஸ்.ராமகிருஷ்ணனின் அட்சரம். இவரிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

இன்னமும் பல எழுத்தாளர்கள் வலைப்பதிவு உலகத்துக்கு வரவேண்டும்.

3 comments:

  1. posted by ravi srinivas
    this relates to previous posting.i am unable to post it there, so posting it here.

    see the note on the SC judgement on making a language compulsory at
    http://ravisrinivas.blogspot.com

    ReplyDelete
  2. பத்ரி, உங்களுக்கு ஜே.எஸ்.ராகவன் தெரியுமா? தமிழின் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர். (அடிக்கடி இவரது எழுத்துகளை திருவாளர் இட்லிவடை எடுத்துப் போடுவார்.) சற்றுமுன் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். விரைவில் அவர் ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பார்- இது ஒரு தகவலுக்காக.

    பாரா

    ReplyDelete
  3. ஜே.எஸ்.ராகவன் - ஒரேயொரு புத்தகம் படித்துள்ளேன். சுமாராகத்தான் இருந்தது. புத்தகம் பெயர் ஞாபகம் இல்லை. அந்த பிராண்ட் நகைச்சுவை என்னை அவ்வளவாகக் கவரவில்லை.

    அவரது புத்தகங்கள் முக்கியமாக எதையாவது படிக்க வேண்டும் என்றால் தலைப்பைச் சொல்லவும். வாங்கிப் படிக்கிறேன்.

    ReplyDelete