Saturday, March 26, 2005

குமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்

Ananda Vikatan, largest-selling Tamil weekly

ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ABC) ஜூலை-டிசம்பர் 2004 கணிப்பின்படி ஆனந்த விகடன் சராசரியாக 4,30,000 பிரதிகள் விற்பதாகவும், குமுதத்தை விற்பனையில் தாண்டி விட்டதாகவும் 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.

பெரிதும் பேசப்பட்ட மஞ்சள் தூள், மிளகு, உப்பு, ஷாம்பூ, குங்குமம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டோம் என்று விட்ட புருடாக்கள் ABCஇடம் பலிக்கவில்லை போலும்.

குமுதம் 4,10,000 என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குங்குமம் 1 லட்சத்துக்கு சற்று மேலாக இருக்கலாமாம்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் விகடன் குமுதத்தைத் தாண்டியுள்ளது. குமுதம் பல்வேறு நேரங்களில் 5 லட்சம், 6 லட்சம் பிரதிகளையெல்லாம் தாண்டியிருக்கிறது. விகடன் பல நாள்களாக 2.5 லட்சத்திலிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் திடீரென அதிகமாவதற்கு என்ன காரணமாக இருக்கும்? அதுவும் குமுதத்தையும் மிஞ்சுவதற்கு?

15 comments:

  1. இவ்வளவு நாளாக வலது கையிலிருந்த மண்னைக் கண்ணில் போட்டுக் கொண்டிருந்தோம். இப்பொழுது இடது கைப் புழுதி என்று மாறியிருப்பதில் நிம்மதி.

    அடிப்படையில் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த புள்ளிவிபரம் குமுதத்தைச் சீறு கொண்டு எழச்செய்யும். விளைவை நினைத்தால் பயமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நல்லவேளை வெங்கட்.. 'பத்து லட்சம்' பத்திரிகை வீறு கொண்டு எழும் என்று சொல்லாமல் விட்டீர்களே. அப்படி நடந்தால் தொலைவது 'குடும்ப' தொலைக்காட்சி (வார்த்தை உபயோகம் நன்றி : ஜெயா டி.வி.!) பார்த்து ரசிக்கும் நேயர்கள் தான்! சாதாரணமாகவே பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை வெளியாகும் புதுசு கண்ணா புதுசு...ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு முறையாக ஆகி விடும். (தமிழகத்தில் வசிக்கும்) தமிழ் வாசகர்களுக்கு இன்னும் ரெண்டொரு மாதங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த முறை ஆடிட்டிங்கில் விற்பனையை கூட்டுவதற்காக 'ஓசி' பொருட்களை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

    என்ன இருந்தாலும் 'புழுதி' என்பதெல்லாம் 'டூ மச்' வெங்கட் :)

    ReplyDelete
  3. Kumudam will also make subscription a requirement for its web site along with options like
    reduce price
    Increase cinema coverage
    Give free samples

    ReplyDelete
  4. ஆஹா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா. அடுத்த 3 மாசம் வாங்கறவனுக்கு ( நன்றாக கவனியுங்கள், வாசகனுக்கு அல்ல) ஒரே கொண்டாட்டம் தான். ஒரே இலவசப் பொருட்களாய் போட்டு தாளிப்பாங்க. குடும்பத் தொலைக்காட்சி பாடு திண்டாட்டம் தான். இப்ப என்ன பாட்டுப் போடுவாங்க (ப்ளாப் கண்ணா ப்ளாப்பு ;-)) ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் ஒரு ஜனரஞ்ச பத்திரிக்கை என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, கொஞ்சம் இலக்கியமும், கொஞ்சமாய் விஷயஞானமும் கொண்டிருக்கிறது. வெத்தாக, குஷ்புவையும், பாலச்சந்தரையும் பற்றி எழுதி, வாங்கிக் கட்டிக் கொண்டது போல் இல்லாமல், தன் மாணவ நிருபர் அவரின் சொந்த சரக்கை, செய்தியாக உள்ளே தள்ளியது தெரிந்தவுடன், பகிரங்கமாய், பத்திரிக்கையில் மன்னிப்புக் கேட்ட ஆவி, கொஞ்சம் நல்ல ஆவிதான் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  5. "ஆனந்த விகடன் ஒரு ஜனரஞ்ச பத்திரிக்கை என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, கொஞ்சம் இலக்கியமும், கொஞ்சமாய் விஷயஞானமும்..." ஹூம்! எல்லாம் பிரமை...:)))

    ReplyDelete
  6. ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் குமுதம் முதலில் இருந்தது, சில சமயம் மலையாள மனோரமா. இப்போ யாரு? இந்தியா டுடே?

    ReplyDelete
  7. //இப்போ யாரு? இந்தியா டுடே?//

    totalling all languages?! :)

    ReplyDelete
  8. இந்த எண்ணிக்கையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள்தொகையோடு (முழுவதும் வேண்டாம்; ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ளோர், கல்வியறிவு உடையவர்களை மட்டும்கூட) வைத்துப்பார்க்கும் போது ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை குமுதம் விகடனையெல்லாம் விரும்பிப் படிப்பதைவிட வேறு வழியில்லாமல் படிக்கவேண்டிய நிலைதான் உள்ளது.

    ReplyDelete
  9. பத்திரிகையின் விலையில் 30 சதவீததிற்கு மேற்பட்ட மதிப்புக் கொண்ட இலவசங்கள் அளிக்கப்பட்டால் அந்த சர்குலேஷனை abc கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அதாவது ஒரு பிரதியின் விலை 5 ரூபாய் என்றால் அந்த பிரதியோடு 1.50 மதிப்புக்குத்தான் இலவசம் வழங்கப்படலாம்.
    குங்குமம் வழங்கிய இலவசப் பொருட்களின் சந்தை மதிப்பு ஒரு பிரதியின் விலைவை விட அதிகம்.
    எனவே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    குமுதம் 6 லட்சம் பிரதிகள் விற்பனையானது என்பது ஒரு மித். எஸ்.ஏ.பி. இருந்த போது ஓரிரு முறை அது அந்த அளவை எட்டியது. அது அந்த நாளில் பெரும் சாதனைதான். அதன் சராசரி சர்குலேஷன் 6 லட்சமாக இருந்ததில்லை.

    சர்குலேஷன் கூடுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சிதரும் என்று சொல்லமுடியாது.தீபாவளி மலர் போன்ற இதழ்களுக்கு எப்போதும் மற்ற வாரங்களைவிட சர்குலேஷன் அதிகமாக இருக்கும்.சர்குலேஷன் அதிகமாவதிலும் பிரசினைகள் இருக்கின்றன. என் பொறுப்பில் இருந்த போது ஒருமுறை குமுதம் தீபாவளி மலர் 7 லட்சம் பிரதிகளைத் தொட்டது. அது மூன்று இதழ்கள். எனவே 21 லட்சம் பிரதிகள் அச்சிட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், விநியோக்கிக்கப் படவேண்டும். அச்சகம், சர்குலேஷன், ஸ்டோர்ஸ் எல்லாத் துறைகளும் திணறிவிட்டார்கள். இதைத் தவிர அச்சிடுவதின் cost என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு அதிகரித்துக் கொண்டு போகும். ஆப்சட் முறை பற்றித் தெரிந்தவர்களுக்கு இது புரியும். அதை நான் இங்கு விளக்கவிரும்பவில்லை.Law of diminshing reurns என்று ஒரு விதி இருக்கிறதல்லவா?

    ஆனந்தவிகடன் நிச்சியம் சாதனை செய்திருக்கிறது. ஆனால் இதைத் தக்கவைத்துக் கொள்வது ஓர் கடினமான சவால். வாரப்பத்திரிகைக்களுக்கான வாசக அடித்தளம் சுருங்கி வருகிறது என்பது மட்டுமல்ல அது பல கூறுகளாகவும் பிரிந்து விட்டது.வாரப்பத்திரிகைகளின் பாரம்பரியமான அம்சங்களைத் தாண்டி, புதிய விஷயங்களை (உ-ம்: பங்கு சந்தை) படிக்க விரும்புகிற வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவை popular features அல்ல. இந்தப் புதிய வாசகர்களையும் எண்ணிக்கையில் பெருவாரியான பழைய வாசகர்களையும் எப்படி Balance செய்வது என்பதுதான் சவால். அதை ஆவி திறம்பட எதிர் கொண்டது. குமுதம் அதில் தவறியது.

    ஹிந்து நாளிதழ் அண்மையில் 1 மில்லியன் பிரதிகளைத் தாண்டியது. அதைப் பற்றி யாருமே இங்கு மூச்சு விடவில்லையே!

    மாலன்

    ReplyDelete
  10. மாலன் சார்.. தமிழ் தினசரிகளின் விற்பனை நிலவரம் குறித்து சொல்லுங்களேன்.. நீங்கதான் நடுநிலையோடு சொல்ல சரியான ஆள்..!

    ReplyDelete
  11. //பத்திரிகையின் விலையில் 30 சதவீததிற்கு மேற்பட்ட மதிப்புக் கொண்ட இலவசங்கள் அளிக்கப்பட்டால் அந்த சர்குலேஷனை abc கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அதாவது ஒரு பிரதியின் விலை 5 ரூபாய் என்றால் அந்த பிரதியோடு 1.50 மதிப்புக்குத்தான் இலவசம் வழங்கப்படலாம்.
    குங்குமம் வழங்கிய இலவசப் பொருட்களின் சந்தை மதிப்பு ஒரு பிரதியின் விலைவை விட அதிகம்.//

    அதுசரி ! இலவசத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 'சரக்கு' மதிப்பு வாய்ந்ததா? இத்தனை பிரதிகள் ஓடுமா? இந்த இலட்சணத்தில் ABC எப்படி கணக்கிலெடுத்துக்கொள்ளுமாம்?

    ReplyDelete
  12. குமுதம், விகடன், குங்குமம் எல்லாத்தையும் சேத்துப் பாத்தாலும் 'ஹாய் மதன்' தவிர ஒண்ணும் தேரமாட்டேங்குது !!! என்ன circulation இருந்து என்ன?

    ReplyDelete
  13. எனது சின்ன வயது தொடக்கம் வீட்டில் குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாவி, கலைமகள், கல்கி என்று நிறைந்திருக்கும். வீட்டில் எல்லோருமே வாசித்து விவாதிப்பதுமுண்டு. திரைப்படங்கள் என்றாலும் இந்தியச் சினிமாதான். இந்த நிலைதான் புலம்பெயர்ந்த பின்பும் தொடருகின்றது. என் கவலை எல்லாம் நல்ல இலக்கியத்திற்கும் சிங்கள சினிமாவிற்கும் முழுமையான அறிமுகம் கிடைக்காமல் பல ஈழத்தமிழர்களை இந்திய இரண்டாந்தர சஞ்சிகைகளும் சினிமாக்களும் ஆட்கொண்டு விட்டன என்பதே.

    ReplyDelete