Sunday, March 27, 2005

பெரியத்திரையில் காதல்

நேற்றைய ஆட்டத்தில் சிறு இடைவேளை. ராஹுல் திராவிட், விரேந்தர் சேவாக் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் இடைவேளை. திராவிடுக்கு அவசர அவசரமாக உள்ளே போகவேண்டியிருந்தது போல. நடுவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சென்றார். அதுவரை சும்மா இல்லாத டெலிவிஷன் கேமரா கூட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மேய்ந்துகொண்டிருந்தது.

ஓர் அழகான இளம்பெண். முகத்தில் மூவர்ண பெயிண்ட். கையில் "Zaheer I <இதயம்> you" என்னும் அட்டை. கேமரா அவரைப் பிடித்துக் காண்பிக்க, அது அரங்கில் உள்ள பெரியத்திரையில் பெரிதாகக் காண்பிக்கப் பட்டது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தில் இன்னமும் சிவந்தது. அதே நேரம் இந்தப் படத்தை இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும் பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்து கேமரா அவர்களை நோக்கித் திரும்பியது. யுவராஜ், ஜாகீரை நோக்கிக் கையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

கேமரா மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி. இப்பொழுது அந்தப் பெண் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினார். கேமரா கட் செய்து ஜாகீரைக் காண்பித்தது. ஜாகீர் விளையாட்டாக முத்தத்தைப் பிடித்து பதிலுக்கு ஒன்றை அனுப்பினார். அடுத்து இரண்டு கேமராக்கள் இருவரையும் பிடித்து பக்கத்தில் பக்கத்தில் வைத்து முழுதாகத் திரையில் காண்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த சேவாகும், அரங்கில் உள்ள நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண்ணின் பெயர் நூர் ஹுசைன். பெங்களூர் கல்லூரியில் படிக்கிறாராம்.

6 comments:

  1. Nalla kavidhai padiththadhu pOl irundhadhu

    ReplyDelete
  2. I think, Short sentences makes it great.

    ReplyDelete
  3. I think badri is slowly realising the truth and slowly started admitting the truth about our 'real' master batsman 'Vir'ender Sehwag.

    Thanks badri.

    ReplyDelete
  4. Watch the Zaheer - Noor video here . Very funny !!!

    ReplyDelete
  5. //Watch the Zaheer - Noor video here . Very funny !!! ///

    மிஸ் பண்ணிட்டேனேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நன்றி தெய்வமே.... !

    ReplyDelete
  6. பத்ரி, இந்த மேட்ச் தோற்கும் என்று எனக்கு 5 நாள் முன்னதாகவே தேரியும். நீங்கள் மேட்ச் பார்க்கப் போகிற மேட்சுகள் எல்லாமே இப்படித்தான் ஆகின்றன என்று சரித்திரம் சொல்லுகிறது

    ReplyDelete