Tuesday, March 15, 2005

வாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு

எனக்கு வாழ்க்கை வரலாறுகள் மிகவும் பிடிக்கும். வாழ்க்கை வரலாறுகள் வழியாக நாம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

கிழக்கு பதிப்பகம் வாயிலாகப் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் வெளியிட முயற்சி செய்கிறோம். திருபாய் அம்பானி, ரஜினிகாந்த், ரமண மஹர்ஷி, வீரப்பன், காமராஜர், சச்சின் டெண்டுல்கர், சார்லி சாப்ளின் - இப்படி அனைவரும் உண்டு இதில். இன்னமும் ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கை வரலாறுகள் வரப்போகின்றன. அடுத்து வரப்போகும் சிலவற்றினை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்: தாமஸ் ஆல்வா எடிசன், நாராயண மூர்த்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ராமச்சந்திர குஹா சில மாதங்களுக்கு முன் சென்னையில் பேசிய பேச்சொன்றுக்குச் சென்றிருந்தேன். அதைப்பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன். [குஹாவின் வேறொரு பேச்சு பற்றிய முந்தைய இரண்டு பதிவுகள்: ஒன்று | இரண்டு.] பெரிய ஆசாமிகள்தான் என்றில்லை. சாமான்யர்களுடைய வாழ்க்கை வரலாறுகளின் மூலம் சொல்லப்படாத பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பது குஹாவின் வாதம். நான் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்கிறேன்.

சாமான்யர்களோ, பெரிய ஆசாமிகளோ... யாரைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுவையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுத விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9 comments:

  1. badri,

    what about vishy anand and lakshmi mittal ? ;)

    N. Chokkan,
    Bangalore.

    ReplyDelete
  2. நிச்சயமாக உண்டு:-)

    இந்தியாவை உருவாக்கிய, இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆயிரம் பேர்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பற்றி எழுத ஆரம்பிக்கலாம்.

    எத்தனையோ பேர்கள் எழுதப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. do you remember the '100 thamizhargaL' list dinamani published a few years back ? That was a very good collection, with introduction abt 100 important personalities (from all fields) in TN,

    N. Chokkan,
    Bangalore.

    ReplyDelete
  4. அவசர அவசரமாக யோசித்ததில் தோன்றிய பட்டியல், யாருக்காவது
    உபயோகப்படுமான்னு பாருங்க...

    ருஸ்ஸி மோடி
    சிவாஜி கணேசன்
    வெர்கீஸ் குரியன்
    பம்மல் கே சம்மந்த முதலியார்
    எம்.ஜே.கோபாலன்
    சி.சு.செல்லப்பா
    சி.கே.ரங்கனாதன்
    சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
    செண்பகராமன்
    குட்டிமணி , தங்கதுரை & ஜெகன்
    எம்.கே.தியாகராஜ பாகவதர்
    இளையராஜா
    விஸ்வநாதன் ஆனந்த்
    ஜெமினி எஸ்.எஸ்.வாசன்
    மஹனோலோபிஸ்
    ஜே.பி.சந்திரபாபு
    குரு தத்
    கணித மேதை ராமானுஜம்
    ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
    பரேஷ் பரூவா
    ஜே.சி.குமரப்பா
    பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
    எஸ்.முத்தையா
    ஜி.டி.பிர்லா
    கமலஹாசன்
    இகாரஸ் பிரகாஷ்

    ReplyDelete
  5. பத்மா அரவிந்த் (தேன்துளி) சொல்லுவது போல் விஞ்ஞானிகளைப் பற்றிய அறிமுகங்கள் மிக முக்கியம்.

    விஷ்வேஷ்வரய்யா
    அப்துல் கலாமின் "விங்ஸ் ஆப் பயரில்" வரும் இந்தியாவின் ஆரம்ப கால விஞ்ஞானிகள்
    ஜி.டி. நாயுடு
    விக்ரம் சாராபாய்

    சமூக விஞ்ஞானிகள் லிஸ்டில்
    பெரியார்
    அன்னை தெரஸா
    முனைவர் சுவாமிநாதன்
    மருத்துவர் செரியன்
    வினோபா
    ஜெயபிரகாஷ் நாரயண்

    விளையாட்டில்
    பிரகாஷ் படுகோனே (பாட்மிட்டன்)
    மில்கா சிங்
    பி.டி.உஷா
    மல்லேஸ்வரி
    சானியா மிர்ஸா
    லியாண்டர் பெயஸ்/மகேஷ் பூபதி
    தன்ராஜ் பிள்ளை
    "ஹாக்கி" பாஸ்கர்
    விஜய் சிங் (கொல்ஃப்)

    சினிமா/இசை - யில்
    மிருணாள் சென்
    ஹரிபிரசாத் செளராசியா
    ட்ரம்ஸ் சிவமணி
    திரிலோக் குர்த்து
    ரவிஷங்கர்
    அஷ்தோஷ் கெளரிகர்
    ஷாருக் கான்/ அமீர் கான்
    சத்யஜித் ரே
    ஷ்யாம் பெனகல்
    அடூர் கோபால கிருஷ்ணன்
    ஜாவீத் அக்தர்
    கண்ணதாசன்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    எழுத்தாளர்களில்
    குஷ்வந்த் சிங்
    ஷோபா டே
    அருந்ததி ராய்
    சல்மான் ருஷ்டி
    கமலாதாஸ்
    பால் சக்கரியா
    புதுமைப்பித்தன்
    மெளனி
    கல்கி
    சாண்டில்யன்
    கு.ப.ரா
    க.நா.சு

    அரசியல்வாதிகளில்
    லல்லு பிரசாத் யாதவ் + திருமதி. லல்லு
    கக்கன்
    காமராஜர்
    ரெட்டைமலை சீனிவாசன்
    நரேந்திர மோடி
    பருக் அப்துல்லா
    சந்திரபாபு நாயுடு
    நரசிம்மராவ்
    மன்மோகன்சிங்
    ஜஸ்வந்த் சிங்
    முரசொலி மாறன்

    பேப்பர் அதிகமாகவும், பிரிண்டிங் செலவு குறைவாகவும் இருந்தால்

    இகாரஸ் பிரகாஷ்
    உருப்படாதது நாராயணன் ;-)

    ReplyDelete
  6. சமூக விஞ்ஞானிகள் லிஸ்டில் நான் சொல்லவந்தது வெர்கீஸ் குரியன் ... மருத்துவர் செரியன் அல்ல, தவறுக்கு மன்னிக்கவும்.

    இன்னமும் நினைவில் வந்தவர்கள்

    நாதுராம் கோட்சே
    இந்திராகாந்தி
    சுபாஷ் சந்திர போஸ்
    நக்கசலைட்டுகளின் தலைவர் சீதாராமைய்யா (சரியா?!!)
    தஸ்லீமா நஸ்ரின்
    ஜோதிபாசு
    சுப்பரமணிய சிவா
    பகத் சிங்
    பால் தாக்கரே
    திருபாய் அம்பானி
    Dr.கஸ்தூரி ரங்கன் (இஸ்ரோ)
    Dr.கமலா செல்வராஜ்
    முனைவர். ரங்கராஜன் (ஆர்பிஐயின் கவர்னர்)

    ReplyDelete
  7. ஐகராஸ், எம்.கே.டியின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புத்தக ஏற்கனவே இருக்கிறது. அண்மையில் கொஞ்சூண்டு படித்தேன். ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.அநேகமாக மணிமேகலை பிரசுரமாக தான் இருக்கும்.

    ReplyDelete
  8. This thread is very interesting and useful - thanks to all the people responded :)

    Narain,

    I've written biographies of khushwant singh and Salman Rushdie (not really biographies, more like 'life and works of ...')

    "Khushwant singh" is available with Kizhakku Pathippagam, "Salman Rushdie" was published by Sabhari Pathippagam and now its out of print.

    I am also writing a short biography of Vijay Singh (golf) for a magazine, not as a book.

    N. Chokkan,
    Bangalore.

    ReplyDelete