சென்ற ஞாயிற்றுக்கிழமை நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் மொழிப்பற்று, அது சார்ந்த சில அரசியல் விவகாரங்கள் பற்றி சில கட்டுரைகள் வந்துள்ளன.
படிக்க சுவாரசியமானது.
தென் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மொழி மீதான அதீதக் காதல் (அல்லது அது இல்லாமை) பற்றி நான்கு சிறு கட்டுரைகள் இங்கே.
ஹிந்தி கற்றுக்கொள்வது என்றால் ஹிந்திக்காரனுக்கு அடிபணிவது என்று பொருளா என்று கேட்கிறார் மாலன்.
ராமதாசும், தொல்.திருமாவளவனும் தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைப்பது பற்றி கத்தி எந்தப் பிரயோசனமும் இல்லை. அவர்களது ஆதரவாளர்களே இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார் MSS பாண்டியன்.
Tuesday, March 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
MSSபாண்டியயனி கட்டுரைக்கான சுட்டிக்கு நன்றி. மற்ற இரணடும் எரிச்சலை மட்டும் தந்தன.
ReplyDeleteஎன் வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்
ReplyDeletehttp://kumizh.blogspot.com/2005/03/blog-post.html
முதல் சுட்டியிலிருந்து (நான்கு சிறு கட்டுரைகள்): And in many schools, students prefer Hindi to Tamil so that they can go to Delhi in search of employment.
ReplyDeleteதமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதற்குப்பதில் இந்தியையோ, ஏன், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஏன் செவ்வாய்க்கிரகத்து மொழியை எடுத்தால்கூட, தமிழைவிட மதிப்பெண் அதிகமாக வாங்கலாம் என்பது ஒரு காரணமென்பதைமட்டும் சௌகரியமாக மறந்துவிடுவது நல்லதுதானே!! தென்மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளின் cut-throat போட்டியில் மதிப்பெண்கள் ஒரு முக்கியமான விஷயம் என்ற அடிப்படை விஷயத்தை மறந்தால் எப்படி! தொழிற்கல்லூரிகளுக்குச் செல்வதற்குத் தேவையில்லை எனினும், mark mania, பக்கத்துவீட்டுக்காரப் பையன் 1150/1200 எடுத்தால் நீ 1151/1200 ஆவது எடுக்கவேண்டும் என்று இந்தியாவில், குறிப்பாகத் தென்மாநிலங்களில் எப்படித் தலைவிரித்து ஆடுகிறதென்ற பின்னணியிலேயே இதைப் பார்க்கவேண்டும்.
இரண்டாம் சுட்டியிலிருந்து: There are two kinds of Tamil, one that prevails in the classics and another that is spoken at the streets. Whose rights, whose identity, do they care for? That of scholars or pedestrians?
என்று மாலனின் கட்டுரையில் இருக்கும் வாக்கியம் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இப்போது கிரேக்கம் பேசுபவர்களால் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய கிரேக்கத்தை முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது. இங்கே உள்ள கிரேக்க நண்பனொருவனிடம் பழைய ஒடிஸி இலியட் எல்லாம் உன்னால் படிக்கமுடியுமா என்றதற்கு - அவை 'பழம் கிரேக்க'த்தில் உள்ளவை. படிக்க முடியும், ஆனால் வெகு சிரமம் என்றான். கிட்டத்தட்ட நமது பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் அதே கதைதான் அனைத்து மொழிகளுக்கும். ஏன், ஆங்கிலத்திலேயே அதே கதைதானே. ஒரு மொழியின் காலரீதியான நீட்சியை, வாழ்வை ஒரு cross-section போல ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கமுயல்வதுதான் பிரச்னை. யாருடைய உரிமை, யாருடைய அடையாளம் என்பது அபத்தமான வாதம். இப்படிப் பார்க்கலாம் - ஒரு ஆசாமியைத் தூக்கிக்கொண்டு போய் அவனுக்குப் பழக்கமில்லாத, சம்பந்தமே இல்லாத இடத்தில் parachute செய்துவிடுகிறார்கள். அந்த இடத்து மக்கள் 'நீ யார்' என்று அவனைக் கேட்கும்போது என்னசொல்லமுடியும் அவனால்? 'என் பெயர் X' என்றதோடு நிறுத்திக்கொள்ள முடியுமா? X என்ற அடையாளத்தின் வெறுமை, மொழி, கலாச்சாரம், நாடு போன்றவற்றால் நிரப்பப்பட்டு அர்த்தமடைகிறது. இப்படியே போனால் மதம் ஜாதி என்றும் 'மீயர்த்தப்படுத்தப்பட்டு' சண்டை நிகழும் என்று அடுத்து சொல்வார்கள்; தர்க்கம் குதர்க்கத்தில்தான் முடியும் பெரும்பாலும் - அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. scholars, pedestrians அனைவரும் சேர்ந்ததுதான் சமுதாயம். Scholarly language என்பதை வரையறுப்பது எப்படி? பாதசாரியின் மொழியையும் அறிவாளியின் மொழியையும் ஏதோவொரு இழைவழி அம்மொழிக் கலாச்சாரம் இணைத்துக்கொண்டேதான் இருக்கும் - அதைக்குறித்த கவலை தேவையில்லையென்பது என் அபிப்ராயம். ஆங்கிலம்பேசும் மேற்கத்திய சமுதாயங்களில் அறிவாளிகளின் மொழியை குடும்பத்தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் simplified science ஆக ஊடகங்கள் கொடுக்கவில்லையா? படிக்கச் சிக்கலான மொழியிலுள்ள இலக்கியங்களை மேடைநாடகங்களாக்குவதன், திரைப்படங்களாக்குவதன்மூலம் ஒரு மொழி தானும் மாற்றமடைந்து, தான் அடங்கியுள்ள கலாச்சாரத்தையும் தனது பிரத்யேக வழியில் முன்னெடுத்துச் செல்கிறதென்பது எவருக்கும் விளங்கக்கூடிய ஒரு எளிய, உண்மையான பார்வை. இதை மேலும் விளக்கவேண்டிய அவசியமுள்ளதா என்ன?
South Indians have no apprehension of subjugation by English, as they have for Hindi.
இந்தி, உருதிலிருந்து தமிழ் பேச்சுமொழியில் கலந்திருக்கும் வார்த்தைகளைக் "கொடுக்காததால்" அவை தமிழில் இல்லவே இல்லை என்று ஆகிவிடாது.
பின், மது கிஷ்வர் குறிப்பிட்டிருந்த உபகதை: ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகவேண்டும்? பாட்டி செத்தபிறகு தமிழ் தேவையில்லை என்ற ரீதியில் உளறுவதெல்லாம் ஒரு கணக்கா! மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் தனித்துவமான அடையாளம் என்பதுகூடத் தெரியாமலா!! ஒருவேளை, நமக்குத் தெரியாத வகையில் தமிழ்க் கலாச்சாரமும் வட இந்தியக் கலாச்சாரமும் அச்சு அசல் ஒன்றேதானோ என்னமோ! நாடு முழுவதையும் McDonalds மாதிரி ஒரேயடியாக homogenize செய்துவிட்டால் (பேச்சுவழக்கில் homogenizeக்கு ஹிந்தியில் என்ன பதமென்று கேட்டுப்பார்க்கலாம் ஹிந்தி ஆர்வலர்களிடம்!!) நல்லதுதான் என்பதை சிரம்தாழ்ந்து ஒப்புக்கொள்கிறேன்!!
மூன்றாம் சுட்டியிலிருந்து: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரை மட்டும் உருப்படியாக இருந்தது. ராமதாஸ், திருமாவளவனின் தமிழ் அரசியல் ஸ்டண்டுகளுக்கெல்லாம் கூட்டம் வரும் என்ற ரீதியில் நினைத்துக்கொண்டிருந்தால் அதெல்லாம் வெறுங்கனவே. சவுக்கடி, தனி மாநிலம், தமிழ் என்று யாகவா முனிவர் மாதிரி பீலாக்களை சொந்த நலனுக்காக விட்டுக்கொண்டிருப்பதையெல்லாம்... ஹிஹி!!
சுட்டிகளுக்கு நன்றி பத்ரி...
ReplyDeleteபத்ரி, இது மாலனுடைய பதிவுக்கானது. அங்கு வழியில்லையாதலால் இங்கு இடுகிறேன்.
ReplyDeleteநன்றி மாலன் உங்கள் விளக்கத்துக்கு. எனக்கு ஆங்கிலத்தில் படித்து அதை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தி எதிர்ப்பை விமர்சிப்பதற்கு கருணாநிதியின் பேரன்களுக்கு இந்தி தெரிந்திருக்கிறதே என்று ஒரு மட்டையடி விவாதமுறை ஒன்று இருப்பதுப்போல, இந்த மது கிஷ்வர் அறிவு நாணயமற்ற முறையில் ஒரு பொருந்தாத உரையாடலின் அடிப்படையில் தமிழர்களின் தமிழ் வெறியை தனது வாசகர்களிடம் கடைவிரிப்பதை மாலனும் பயன்படுத்தி, இந்தி எதிர்ப்பை தமிழ் தெரியாத பொண்ணு சொல்றாபாரு என்ற சோ- தனமான விவாதத்தைப் பயன்படுத்துவதாக நினைத்தேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழை இழப்பது தனி விசயம். ஆனால் தமிழென்பது அந்தப்பெண்ணின் உரையாடலில், மொழிமட்டுமல்ல அதிகாரமும் கூட. உண்மையில் நான் தமிழ் வழி கல்வி, ஆட்சி, சட்டம் இவைகளில் தமிழ் பற்றி யோசிப்பதெல்லாம் அந்த மொழி பேசும் மக்களின் அதிகாரத்தை (அவர்களின் மேல்) முன் வைத்தே. ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆங்கிலம் தெரியாத காரணத்தால், ஒரு விவசாயி எப்படி அன்னியப்பட்டு போகிறார்; அது எப்படி இடைத்தரகர்களை, ஊழலை கொண்டு வருகிறது போன்றவை குறித்தே..
எனவே மது கிஷ்வர் புரிந்துகொள்ளாமல் முன் வைத்த மடத்தனத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சியே.
அப்புறம் சங்கரபாண்டி எழுதியதுபோல இந்தியை வெறுப்பது போன்ற தோற்றத்தை வடக்கில் மட்டுமல்ல, நம்மிடையிலும் பரப்பி, அதை நம்பி பலர் குற்ற உணர்ச்சியில் தவிக்குமாறு செய்த பெருமை சோ போன்றவர்களையே சாரும்.
//அப்புறம் சங்கரபாண்டி எழுதியதுபோல இந்தியை வெறுப்பது போன்ற தோற்றத்தை வடக்கில் மட்டுமல்ல, நம்மிடையிலும் பரப்பி, அதை நம்பி பலர் குற்ற உணர்ச்சியில் தவிக்குமாறு செய்த பெருமை சோ போன்றவர்களையே சாரும்.//
ReplyDeleteஅடடா, இது சுந்தரமூர்த்தியின் பதிவில் சங்கரபாண்டியின் பின்னூட்டத்தை முன்வைத்து, இங்கென்று நினைத்துவிட்டேன்.
ஒரே குழப்பம்.
பி.கு
மாலன் சுந்தரவடிவேல் என்பது சுந்தரமூர்த்தியையா?
see my response in my blog
ReplyDeleteravi srinivas