Monday, March 14, 2005

சென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி

நேற்று (ஞாயிறு, 14 மார்ச் 2005) சென்னை அரும்பாக்கத்தில் Indian School for Self Employment என்னும் சுயதொழில் பயிற்சிப் பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இங்கு நடத்தப்படும் வகுப்புகள்:

1. Diploma in fashion technology - 6 months - Rs. 10,000 - சிறுவர், பெரியவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்து உருவாக்குவது
2. Post graduate diploma in fashion technology - 6 months - Rs. 14,000
3. Call centre training - 1 month - Rs. 2,500
4. Diploma in interior designing - 6 months - Rs. 10,000
5. Diploma in photography - 3 months - Rs. 4,000
6. Diploma in videography (including non-linear editing) - 3 months - Rs. 4,000
7. Modeling and co-ordination - 2 months - Rs. 6,500
8. Personality development - 2 months - Rs. 3,000
9. Finishing school - 3 months - Rs. 7,500

நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் D.ராஜேந்திரன் IAS, சிறுதொழில் துறைச் செயலர், தமிழ்நாடு, R.நடராஜ் IPS, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜேந்திரன் பேசும்போது நாட்டில் அரசுத்துறையிலோ, பெரும் நிறுவனங்களிலோ வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைப்பதில்லை. எனவே சிறுதொழில், குறுதொழில் மூலம்தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். (குறுதொழில் என்றால் ரூ. 25 லட்சத்துக்குக் குறைவாக முதலீடு செய்திருப்பது. அதற்கு மேல், ரூ. 3 கோடி வரை என்றால் சிறுதொழில் என நினைக்கிறேன்.) மேற்படி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால் அரசு ஆவண செய்யத் தயாராக உள்ளது என்றார். [ஆனால் எனக்கு இன்னமும் அரசு எந்த வகையில் குறுந்தொழில், சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவுகிறது என்று புரியவில்லை. ஒருநாள் ராஜேந்திரனிடம் சென்று பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.]

இந்தப் பள்ளியின் தலைவர் பத்திரிகையாளர், ஜெயா டிவி சுதாங்கன்.

சுயதொழில் சார்ந்த இன்னமும் பல பாடத்திட்டங்களையும் புகுத்தப் போவதாகச் சொன்னார். சமையல் கலை, இதழியல் போன்ற சிலவும் சேர்க்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Indian School for Self Employment
(Regd. Under Tamilnadu Society Act 1975 No. 287/2003)
Office: 666, PH Road, 1st Floor, Aminjikarai, Chennai 600029
Workshop: 842 (New. No. 447), P.H.Road (Near Vaishnava College), Arumbakkam, Chennai 600106. Ph: 2475 4445, 98840-52369

6 comments:

  1. பத்ரி, இதே போல் திருமணமாகி வெட்டியாக சீரியல் பார்த்து கொண்டிருக்கும் பன்னிரண்டாவது அல்லது கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு என ஏதாவது சுயதொழில் பயிற்சிகள் இருக்கின்றனவா. இருந்தால் பதியுங்கள். எனக்கு தெரிந்து குறைந்தது ஒரு 20-30 பெண்கள் இருக்கிறார்கள், இவர்களுக்காக ஏதாவது என்னால் செய்ய இயலும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நாராயணன்: இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொது. பத்தாவது படித்திருந்தால் போதும். (என்னைக் கேட்டால் அதுகூட அவசியம் இல்லை என்று சொல்வேன்.)

    இந்தப் பயிற்சி வகுப்புகளுடன் இன்னமும் பலவற்றையும் சேர்க்க வேண்டும். அத்துடன் மேற்கொண்டு சுயதொழில் புரியத் தேவையான கடன் வசதிகள் அல்லது வேறு அரசு சார்ந்த உதவிகள் எப்படி, எங்கு கிடைக்கும் என்பதற்கும் சேர்த்து வழிகாட்ட வேண்டும்.

    இதுபற்றிய கருத்துகள் ஏதானும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  3. சில தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்ததும் பதிகிறேன்.

    அத விடுங்க. இப்போது தான் ராம்கியுடன் பேசி முடித்தேன். வாழ்த்த்துக்கள் உங்களுக்கும், பா.ராவுக்கும், எழுதிய ராம்கிக்கும். சில யோசனைகளை ராம்கியிடம் சொல்லியிருக்கிறேன். அவர் உங்களிடத்தில் பேசுவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. பிற்சேர்க்கை: பத்ரி, டேட்டா எண்ட்ரி போல துணி தைய்ப்பது, கைவினைப்பொருட்கள் செய்வது, பிறவகையான பெரும்பான்மையான தொழில்கள் செய்யும் வாய்ப்புகள் உள்ளதா ? I am looking at mass distributed production industries, so that we can delicate piece meal work to every individual (men/women) and take this further.

    ReplyDelete
  5. ஆயத்த ஆடைகள் டிசைன் செய்யவும், தைக்கவும் சொல்லித்தருகிறார்கள். இப்பொழுதைக்கு இதில் கற்று வெளியே வருபவர்கள் சிறு/குறுந்தொழில் செய்பவர்களாகத்தான் இருக்க முடியும். இங்கிருந்து இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அதன்மூலம் பெரிய சந்தையை சமாளிப்பது உடனடித் திட்டமாக இருக்க முடியாது. அதற்கு நாள் பிடிக்கும்.

    ReplyDelete
  6. பத்ரி, நீங்கள் கேட்கும் தகவல்கள் SISI'ல் கேட்டுப் பார்த்தீர்களா? அங்கு தாங்கள் அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

    யக்ஞா

    ReplyDelete