9/11 முடிந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இதைக் காரணம் காட்டியே ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த ஜார்ஜ் புஷ், நியோகான்கள், இன்னமும் அடுத்து யாருடன் சண்டை போடலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் 9/11 அல்-கெய்தாவினால் மட்டும்தான் நிகழ்த்தப்பட்டதா அல்லது அதிலும் நியோகான்கள் கைவரிசை உண்டா என்னும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர். இதற்கென ஓர் இணையத்தளத்தை உருவாக்கி தங்களுக்குள்ள சந்தேகங்களை அங்கு எழுப்புகின்றனர். இந்தச் சந்தேகங்களை முன்வைக்கும் Confronting the Evidence என்னும் டிவிடியைத் தயாரித்து இலவசமாக அளிக்கின்றனர்.
பிரான்ஸில் இருக்கும் வலைப்பதிவு வாசகர் ரவியா இந்த டிவிடியை வாங்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தார் (ஃப்ரெஞ்சு சப்டைட்டில்களுடன் கூடியது!). டிவிடி வந்த சில நாள்கள் கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டேன். பின் பொழுதுபோகாத ஒரு வார இறுதியில் இந்த டிவிடியைப் போட்டுப் பார்த்ததில் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பல உலக நிகழ்வுகளில் உள்ளதாகச் சொல்லப்படும் Conspiracy theoryகள் பலவற்றையும் கேட்டு, புறந்தள்ளியிருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட டிவிடி நிஜமாகவே அதிர வைத்தது. கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் ஓடும் இந்த விடியோவை நடுவில் நிறுத்த யாருக்கும் மனது வராது.
இதை நான் பா.ராகவனுக்கும் போட்டுக் காண்பித்தேன். அதன் தொடர்ச்சியாக ராகவன் இந்த வார விகடனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். படித்த வாசகர்கள் பலரும் டிவிடியின் பிரதி கிடைக்குமா என்று விகடன் அலுவலகத்தை முற்றுகை இடுவார்கள் என நினைக்கிறேன்.
இந்த டிவிடியில் என்ன உள்ளது என்பதை மேற்படி இணையத்தளத்திலேயே பார்க்கலாம். சுருக்கமாக:
1. பெண்டகனில் மோதியதாகச் சொல்லப்படும் விமானம் (போயிங் 757) நிஜமாகவே மோதியிருந்தால் அது ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் துளையைவிடப் பெரிதான ஒரு துளையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எனவே இந்தத் துளை/சேதம் வேறுவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது? அதில் இருந்தவர்கள் என்னவானார்கள்? பெண்டகன் அருகில் போயிங் விமானத்தின் எந்த பாகங்களுமே கிடைக்கவில்லையாமே? விமானம் மோதினால் அதில் உள்ள எரிபொருள் பற்றி எரியும்போது அருகில் இருக்கும் எதுவுமே பிழைக்காது. ஆனால் விடியோ படங்களைக் கூர்ந்து கவனித்தால் அருகில் ஒரு மேஜை, நாற்காலி, அதன்மேல் திறந்தபடி இருக்கும் புத்தகம் என்று பலவும் எரியாமல் உள்ளன. விமானத்தின் கறுப்புப்பெட்டி கூட எரிந்து காற்றோடு காற்றாகிப் போனதாகச் சொல்லும் நிர்வாகம், உடல்கள் அனைத்தும் கிடைத்தன என்றும் அவற்றின் அடையாளங்கள் காணப்பட்டு ஒவ்வொருவரும் யார் யார் என்று கண்டறியப்பட்டனர் என்றும் சொல்கிறார்களே, அது எப்படி?
2. உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்கள் மோதியதால் சிதறி விழுந்ததா அல்லது வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதா? இதுபற்றி நிறைய உரையாடல், சாட்சியங்கள் டிவிடியில் உள்ளன.
3. உ.வ.மை விழுந்தபின்னர் அங்குள்ள தடயங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதற்குக் காரணமென்ன?
4. சம்பவம் நடக்கப்போகும் நாள் முன்கூட்டியே புஷ் அரசுக்குத் தெரியுமா? அன்று ஏதோ காரணங்களால் அமெரிக்கப் போர் விமானங்கள் பலவும் அலாஸ்கா, கனடா வான்வெளியில் போர்ப்பயிற்சிக்கென அகற்றப்பட்டதாகவும், இருக்கும் விமானங்களும் கடத்தப்பட்ட விமானங்களைத் தாக்காவண்ணம் குழப்பமளிக்கும் தகவல்கள் தரப்பட்டதாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன. FAA சரியாக நடந்துகொள்ளவில்லை என்று அதன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்படுகிறது.
5. 9/11 கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவரில் நான்கு பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனராம்! (இதுபற்றிய பிபிசி செய்தி இதோ!) அப்படியானால் யார்தான் இந்தக் கடத்தலைச் செய்தது?
6. நியோகான்கள் 'புது பேர்ல் ஹார்பர்' ஒன்று நடந்தால்தான் அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை தாங்கள் விரும்பியவாறு மாற்றம் அடையும் என்றும் சொல்லியுள்ளனர். (Rebuilding America's Defenses, Strategy, Forces and Resources for a new century (PDF), Page 51) உ.வ.மை தான் அந்தப் 'புது பேர்ல் ஹார்பரா'?
அமெரிக்காவில் பெரும்பான்மை மீடியாக்களில் இந்த விவகாரம் பற்றி அவ்வளவாகத் தகவல்கள் ஏதும் இல்லையாமே?
(சென்னையில் இருப்பவர்களுக்கு - வேண்டுமென்றால் இந்த டிவிடியைச் சில படிகள் எடுத்து வைக்கிறேன். விரும்புபவர்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு பார்க்கலாம். புது டிவிடி பிளேயர்களில் பார்க்கலாம். கணினியில் விண்டோஸ் மீடியா பிளேயரில் divx என்னும் pluginஐ நிறுவிப் பார்க்கலாம். டிவிடி வேண்டுபவர்கள் தனியஞ்சல் அனுப்புங்கள். பின்னூட்டம் இட வேண்டாம்.)
பேனா மருத்துவமனை
7 hours ago
Conspiracy theories !
ReplyDeletePLEASE search the web for debunking the same conspiracy theories.People are more intrested in making money by making such movies.
USAF aircrafts always move around to Alaska and the like for annual exercises.The Indian Air Force too participated in one such exercise recently.
//அமெரிக்காவில் பெரும்பான்மை மீடியாக்களில் இந்த விவகாரம் பற்றி அவ்வளவாகத் தகவல்கள் ஏதும் இல்லையாமே?//
ReplyDeleteஅமெரிக்க யூதர்கள் வசமிருக்கும் பலம் பொருந்திய மீடியாக்களில் செப்டம்பர்-11 தாக்குதலை மிக சாதகமாக இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன் படுத்திக் கொண்டனர். இது பற்றிய சந்தேகங்கள் சமகாலத்தில் இணையத்தில் வைக்கப்பட்டன.
1) கருப்புப்பெட்டியில் பதியப்பட்ட தகவல்கள் 1500-2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் அழியாது. 99% சதவீத விமான விபத்துக்களில் கருப்புப்பெட்டி சேதமடையாது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு விமானங்களிலும் கருப்புப் பெட்டி கிடைக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை.
2) உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை அமெரிக்கா தன் ராடார் கண்களால் நோக்கி வருகிறது. கடத்தப்பட்ட நான்கு விமானங்களும் சுமார் 3-4 மணி நேரம் அவற்றின் பாதையைவிட்டு விலகியுள்ளன. அதுவும் அமெரிக்காவில் இப்படி அசாதாரணமாக நான்கு விமானங்கள் வட்டமடித்ததை ஏன் உளவுத்துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை?
3)செப்டம்பர்-11 அன்று இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சரோன் நியூயார்க் செல்வதாக திட்டம் இருந்தது.தாக்குதல் நடக்கும் சில நாட்களுக்குள் பயணத்திட்டம் மாற்றப்பட்டது ஏன்?
4) நான்கு விமானங்கள் ஒவ்வொன்றாக தாக்குதல் நடத்தும் வரை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத் துறை கைகட்டி, வாய் பொத்தி நின்றது. அமெரிக்க வானில் தாறுமாறகப் பயணம் செய்து கொண்டிருந்த அந்த விமானங்களை, ஏன் இப்படிப் பறக்கின்றீர்கள் என்ற கேள்வியையே, அமெரிக்காவின் விமானக் கட்டுப்பாட்டு அறை எழுப்பவில்லை
பெண்டகனின் மீது விமானம் தாக்கிய போதும், அது பெண்டகனை நோக்கி வரும் போது கூட, விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கவில்லை, பெண்டகனின் விமானத் தரைக் கட்டுப்பாட்டு அறை அலறிவில்லை. இத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் தரைக்கட்டுப்பாட்டு அறை எந்த எதிர்ப்பையும் காட்டாது இருந்தது இன்று அவிழ்க்க முடியாத புதிராக இருந்து வருகின்றது.
5) இரண்டு தாக்குதல்கள் நடந்து முடிந்த பின்பு, உடனடியாக யூதத் தொலைக்காட்சி நிறுவனங்கள் இவ்வாறு அலறின. இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம்! பாருங்கள்! பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அழிவை எவ்வாறு கொண்டாடுகின்றார்கள் பாருங்கள் என்று உரக்க அழுத்தி அழுத்திச் சொன்னார்கள். அமெரிக்காவின் உளவுத் துறைக்குத் தெரியாத மர்மம் தாக்குதல்நடந்த சில மணி நேரங்களிலே இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எவ்வாறு தெரிந்தது? இன்றளவும் இது மர்மமாகவே நீடிக்கின (இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில மணி நேரங்களில் பாலஸ்தீன முஸ்லிம்கள் ஆடிப்பாடுவதை யூதத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டன அல்லவா? அவை முழுக்க முழுக்கப் பொய் என்ற கூற்று வெளியாகி உள்ளது. அந்தப் படம் 1991 ல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த போது, அந்த மக்கள் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் ஆடியது. இந்த உண்மையை பிரேசில் நாட்டைச் சேர்ந்தத கார்வால்கோ என்ற பத்திரிக்கையாளர் கண்டெடுத்துப் பிரகடனப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தை அமெரிக்க கட்டடங்கள் எரிவதோடு இணைத்துக் காட்டியது சிஎன்என் என்ற அமெரிக்க யூத செய்தி நிறுவனம். இதிலிருந்து வெளிப்படும் உண்மை என்னவெனில் அமெரிக்கா மீதான தாக்குதல்களும் அதைச் செய்திகளில் எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் முன்னரே திட்டமிட்ட செயல்கள் தாம் என்பதே! )
6) இந்தத் தாக்குதல் நடந்து முடிந்தவுடனேயே முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என அடையாளம் உள்ளோர், பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான சம்பவங்கள் நிகழ்ந்தன. உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன. திடீர்க் கைதுகள் நடந்தன. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என பலரை அமெரிக்க அரசு அடையாளம் காட்டியது. அத்தனை பேரும் முஸ்லிம்கள். அந்த விமானத்தில் பயணம் செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பலர் உயிருடன் இருந்தார்கள் என்ற அதிசயமும் நடந்து. இத்தனையும் குறிப்பிட்ட ஒரு சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தை நோக்கியே நிகழ்த்தப்பட்டது.
பின்லாடன் உயிரோடு பிடிக்கப்பட்டால்தான் உண்மை உலகுக்கு தெரிய வரும். இல்லாவிட்டால் "Arrest the Wind" என்று File ஐ மூடிவிட்டு அமெரிக்கா ஆயுத விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் என்பது மட்டும் நிச்சயம்.
பத்ரி,
ReplyDelete1. அமெரிக்காவில் மெயின் ஸ்ட்ரீம் தவிர்த்து பல உப ஸ்ட்ரீம்களும் உண்டு - மைக்கேல் மோர் துவக்கமாக, பல தீவிர இடது சாரி (அரசாங்கம் சாரா) குழுக்கள் கூட இத்தகைய சூழ்ச்சித் திரிபுகளை சட்டை செய்யவில்லை. இது பற்றி விகடனில் கட்டுரை வந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு நீங்கள் எடுத்துக் கொடுத்தீர்கள் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.
2. உ.வ.மையம் எப்படி விழுந்தது என்பதற்கு பல கட்டுமானப் பொறியாளர்களைப் பேட்டி கண்டு, மையத்தின் பொறியியல் வரைபடத்தின் ஆதாரத்தோடு, இரு வருடங்களுக்கு முன்பாகவே நம்பக்கூடிய PBS தொலைக்காட்சியில் விவரமான ஆவணப்படம் வெளிவந்தது. கட்டிடத்தைத் தாங்கும் கட்டுமானத் தூண்களைச் சுற்றியிருந்த தீப்பாதுகாப்புக் கவசம் இந்த அளவு சூட்டினை (விமான எரிபொருள் எரியும் சூட்டினை) தாங்கும் சக்தியில்லாதது என்பதில் பிரச்னை ஆரம்பிக்கிறது.
3. அமெரிக்க நியோ கான் அரசாங்கம் ரொம்ப மோசமானதுதான். ஆனால், தனது சொந்த மக்கள் மீது இத்தகைய மோசமான தாக்குதல் (அதுவும் ராணுவ தலைமையகத்தின் மீது) திட்டமிட்டு (அதுவும் ஆட்சிக்கு வந்து எட்டே மாதங்களில்!) நிகழ்த்தி விட்டு தப்பி விடுவோம் என்று நினைக்கும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. ஒரு ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்து ஆட்சியே கலைத்த நாடு இது. தனது விபரீத விளையாட்டுக்களை வெளிநாடுகளில் தான் வைத்துக் கொள்வார்கள் என்பது ஆறுதலளிக்காத விஷயமென்றாலும் நிஜம்.
9/11 அன்று யூதர்கள் அனைவரும் லீவு போட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தனர் என்ற புரட்டுச் செய்திக்கும் உங்கள் பதிவில் உள்ள செய்திகளுக்கும் உண்மை அளவில் அதிக வித்தியாசம் இல்லை.
பத்ரி,
ReplyDeleteஇது கொஞ்சம் டூ மச். இது போன்ற திரிப்புக்கள் யாரால் செய்யப்படுகின்றன என்று இரண்டாவது பின்னூட்டத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும்.
விமானம் இடித்ததை கண்ணால் கண்டவர்கள் பலர் உள்ளனர். இந்த உளறள்களை
ReplyDeleteஎல்லாம் பிரசுரித்து...
இதோ மேலும் சில அதிர்ச்சிக் கண்டுபிடிப்புகள்:
ReplyDeleteகோயமுத்தூர் குண்டுகளை கருணாநிதி அரசுதான் வைத்தது.
மும்பை குண்டுகளை மும்பை மாநகராட்சி தான் வைத்தது.
லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் டோனி ப்ளேரின் அரசுதான்
மேட்ரிட் குண்டுகளை வெடித்தது ஸ்பெயின் அரசுதான்.
--
தீவிரவதப் பூசணிக்காயை எந்த சோற்றில் மறைக்கலாம் என்று திரிந்து கொண்டிருக்கும் நல்லவர்களுக்கு நல்ல வாய்ப்பு.
-நான் கோயிஞ்சாமி இல்லீங்கோ
இது விகடனில் 'நையாண்டி' பகுதியில் இடம் பெற்றதா? தாங்களும் நகைச்சுவைக்காகத்தானே லைட்டான இந்தப் பதிவை எழுதினீர்கள் ;;-)
ReplyDeleteGood comedy.
ReplyDeleteSecurity in the inland US, as we know today, was nothing compared to pre 9/11. Primarily because the belief was - keep the borders secure, and we are safe.
I am not sure if the black boxes of the flights that hit WTC and the Pentagon were not found, but I do remember it was found in Pennsylvania, where the fourth plane went down.
Conspiracy theories are fun to read and watch, so if it helps for one sensational article in Vikatan, why not go for it. Very simple, huh :)
பத்ரி:
ReplyDeleteமாற்றுக்கருத்து என்ற பெயரில் மண்டைகாயும் விடயங்களையும், கான்ஸ்பிரஸி தியரியையும் அவிழ்த்துவிடுவது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இந்த ப்ளைட்-77 (Google for "Flight 77 Pentagon") விவகாரம் ரொம்ப நாட்களாய் இருந்து வந்திருக்கிறது. வலைப்பதிவு நண்பர் ஒருவர் கூட சில மாதங்களுக்கு முன் இதை பற்றிப் பதித்திருந்தார். பெண்டகான் இதற்கு தக்க பதிலளித்தும் யாரும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திலில்லை!
ஆனால் இந்த விஷயம் ஒரு நல்ல நகைச்சுவையாக ரசிக்கக்கூடியது. சமிபத்தில் ரசித்த மற்ற நகைச்சுவை கதிர்காமரை அமேரிக்க கூலிப்படை 'ஸ்நைப்பர்' உதவி கொண்டு கொன்றதாகக் கூறப்பட்டது (நாராயண் பதிவில் இந்த பொக்கிஷம் காணக்கிடைக்கும் http://urpudathathu.blogspot.com/2005/08/blog-post_24.html#112485262523075742). அதற்கான காரணம் அதிலும் வயிறுகுலுங்கச்செய்யும் 'தமாசு' (aka laugh riot) - "அமெரிக்க அரசிற்கு திரிகோணமலையின் மீது ஒரு கண்".
OMyGosh! You guys are really funny!
.:dYNo:.
(P.S: And don't ask me who killed the foreign minister... I think its not who we think it is!)
மேலும் -
ReplyDelete1. ஒரு சாதாரண கூகிள் தேடலில் பெண்டகன் மோதல் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது - குறைந்த பட்சம், பொங்கும் சந்தேகங்களின் மீது நீராவது தெளிக்கிறது:
http://urbanlegends.about.com/library/blflight77.htm
2. கறுப்புப் பெட்டிகள் தொலைந்து போகவில்லை. பெண்டகனில் கண்டெடுக்கப்பட்டன.
3. படத்தின் சந்தேகங்கள் பல ஒரு 'தினை மீதாங்கே பனை நின்றார்போல்' தன்மையில் இருக்கின்றன - அதாவது ஒரு சிறு சந்தேகப் பொறி மீது ஏராளமான பெரும் கேள்விகள் - 'பெண்டகன் மீது பெரிய விமானம் மோதி இருக்க முடியாது', ஆதலால், ' பெரிய விமானம் என்ன ஆயிற்று?, அது குண்டு வைத்து தகர்க்கப் பட்டதா?, அது எங்கே விழுந்தது?, அதில் இருந்தவர்கள் புதைக்கப்பட்டார்களா, எரிக்கப்பட்டார்களா?' இத்யாதி, இத்யாதி.
4. For what it's worth, இந்தப் படம் இணையத்திலும் காணக் கிடைக்கிறது:
http://www.reopen911.org
அடப் போங்கய்யாங்க கான்ஸ்பிரஸியும் மண்ணாங்கட்டியும் தான்.
ReplyDeleteநம்ம மெய்னோ அம்மணிகிட்ட சொல்லி அமைச்சரவை லல்லுவை விட்டு ஒரு பானர்ஜி ரிப்போர்ட் தயார் பண்ணி உண்மையிலே அந்த பிளேன்கள்ல எல்லாம் எங்கேயோ சிகரெட் துண்டுங்க கிடந்து பத்திகிச்சிங்க அதனாலதான் இந்த விபத்து. அப்படின்னு ஒரு ரிப்போர்ட் கொடுக்க சொல்லுங்க அப்படியே அண்ணன் லல்லு கோபி அன்னானுக்கு பதிலா ஐநா தலைமை அளவுல வர அரபிக்காரங்கல்லாம் ஆமா போடுவாங்கல்ல. அப்படியே விமான பாதுகாப்பு பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு பானர்ஜி மாமாவை அப்படியே குடும்பத்தோட ஒரு உலக டூரும் ஸ்பான்ஸர் பண்ணுங்க....ஏம்பா காதில பூ வைக்கறதுக்கு ஒரு அளவு வேணாம்! அப்படியே காஸ்மீர் பண்டிட்டுங்கல்லாம் சுற்றுலாங்காட்டி வந்து தில்லி பக்கம் குந்தியிருக்கானுங்கந்னு ஒரு டிவிடி எடுத்து அதப்பத்தியும் காலச்சுவடு ஆனந்தவிகடன் இதுலலெல்லாம் போட்டு மதச்சார்பின்மைக்கு ஒரு ஓவும் போடுங்கல ஒக்கமக்கா.
கூத்தில கோமாளி
ப்ளாக்கை கூடுதலும் பாக்கணுமின்னா இப்படியெல்லாமாடே போடுறது. செத்தவனுங்களுக்கு கிடைக்க வேண்டிய நாயத்தையும் கொஞ்சமெல்லாம் மதிக்கணும் அம்பி
ReplyDeleteஅமேரிக்காவை குற்றம் சொல்வது இப்பொழுது fashion.
ReplyDeleteThere is a So much Conspiracy behind these Conspiracy theories.
ReplyDeleteJust read the second feeback from Nalladiyar..
It would have been better if you have talked about them also..
அப்படியே இந்த அமேரிக்கா பசங்க நிலாவுக்கு போயிட்டு வந்ததும் பொய்ன்னு சொல்றாங்களே, அதைப் பத்தியும் விகடன்லே ஒரு கட்டுரை போட்டுடுங்க :)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//விமானம் இடித்ததை கண்ணால் கண்டவர்கள் பலர் உள்ளனர். இந்த உளறள்களை எல்லாம் பிரசுரித்து...// -அனானிமஸ்
ReplyDeleteFive Israelis were seen filming as jet liners ploughed into the Twin Towers on September 11, 2001 ...
//9/11 அன்று யூதர்கள் அனைவரும் லீவு போட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தனர் என்ற புரட்டுச் செய்திக்கும்// - ஸ்ரீகாந்த்
Media coverage of Israel's underground in the US –
and the 9/11 connection
புஷ்லாதின் வரலாறு
//நான் கோயிஞ்சாமி இல்லீங்கோ// -சொன்னவர் அனானிமஸ்
சரிங்க கோயிஞ்சாமி இல்லாதவரே.
இந்த தளத்தில் பல விடையளிக்கப்படாத கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் பூரண 'ஆரோக்கியமாக' இருந்தால் கொஞ்சம் படிச்சு பதில் சொல்லுங்க.
'நேசமா' எழுதறவங்களுக்கு நல்லவர்களைக் கண்டாலே 'அலர்ஜியா' இருக்கும் போல? 'புலி' மாதிரி பாய்கிறார்கள்.எண்ணமோபோங்க....
பத்ரி...
ReplyDeleteகொஞ்சம் நிதானமா எழுதுங்க... இல்லன்னா நீங்க அரபு நாடுகளிலிருந்து "பெட்ரோ டாலர்" வாங்கிட்டதா ஆரோக்கியம் போன்றவர்கள் குற்றம் சுமத்துவார்கள்.
Badri, watch this too.
ReplyDeletehttp://www.freedomunderground.org/memoryhole/pentagon121.swf
pls post usefull things.Not these kind of junks.
ReplyDelete