George Monbiot வலைப்பதிவிலிருந்து: The New Chauvinism. கார்டியன் இதழில் 9 ஆகஸ்ட் வெளியானது, தி ஹிந்துவில் 10 ஆகஸ்ட் வெளியானது.
அருமையான கட்டுரை. இன்றைய தேதியில் இந்தியாவுக்கும் பொருத்தமானது.
தொடர்பாக பல விஷயங்களைச் சுட்டமுடியும். சமீபத்தில் சில தமிழ் உணர்வுக் குழுக்கள் வெளியாரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பினர். இந்தத் தமிழ் இனத்தைச் சேர்ந்த பலர் இன்று இந்தியா முழுவதும், ஏன், உலகம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகின்றனர். கோவை ஞானி போன்ற நன்கு படித்தவர்களும் கூட தமிழகத்தில் உள்ள "மார்வாடிகள்" மீது தனி அன்பு காட்டுகின்றனர். தனது "மார்க்சியத்திற்கு அழிவு இல்லை" கட்டுரைத் தொகுதியில் பல இடங்களில் தமிழக மார்வாடிகள் தமிழகத்தில் சொத்து சேர்ப்பது பற்றிப் பேசுகிறார் கோவை ஞானி!
இந்திய தேசியத்தைக் காரணம் காட்டி இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எதை முன்வைத்தாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்று வலதுசாரிகள் (இணையத்திலும் அச்சு ஊடகத்திலும்) சொல்கின்றனர்.
மோன்பியாட் சொல்வது போல அதீத தேசிய உணர்வுதான் பல நேரங்களிலும் நாடுகளுக்கிடையேயான போர்களை ஆரம்பித்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
//மோன்பியாட் சொல்வது போல அதீத தேசிய உணர்வுதான் பல நேரங்களிலும் நாடுகளுக்கிடையேயான போர்களை ஆரம்பித்து வைத்துள்ளது. அப்படிப்பட்ட தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.//
ReplyDeleteநிச்சயமாக.
பதிவிற்கு நன்றி பத்ரி.
-மதி
அருமையான கட்டுரை பத்ரி. சுட்டிக்கு நன்றி.
ReplyDelete//Patriotism of the kind Orwell demanded in 1940 is necessary only to confront the patriotism of other people: the Second World War, which demanded that the British close ranks, could not have happened if Hitler had not exploited the national allegiance of the Germans.//
இது மட்டும் தான் உறுத்துகிறது. அதாவது, நமது தேசியவாதம் இன்னொருவரின் தேசியவாதத்திற்கு எதிராக உபயோகப் படுத்தப்படலாம் என்று சொல்லுவது அவரது முக்கிய கோட்பாட்டை சற்று நீர்த்துப் போகச் செய்கிறது. இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் எதிராக உபயோகப்படுத்தினால் மட்டும் என்ன தப்பு என்ற கேள்வியை எழுப்புகிறது. ஹிட்லரை எதிர்க்க தேசியவாதம் தேவையில்லை. அதர்மம் எதிர்க்கப் படவேண்டும் என்ற கோட்பாட்டு அடிப்படையே போதுமானது.
//இன்றைய தேதியில் இந்தியாவுக்கும் பொருத்தமானது.
ReplyDelete//
"இந்திவின் தேசிய செய்தித்தாள்" என பறைசாற்றிக்கொள்ளும் 'இந்து'வுக்கும், அதன் முதன்மை ஆசிரியர் ந. ராமுக்கும் மிகமிகப் பொருத்தமானது. படித்துத் திருந்துவார்களா அல்லது இதுவும் இன்னொரு வியாபார உத்தி தானா என்று தெரியாது. இந்திய தேசியத்தோடு, இலங்கை தேசியத்தையும், சீன தேசியத்தையும் தூக்கிப் பிடிப்பதால் மட்டுமே தன்னை ஒரு சர்வதேச மனிதாபிமானி என்று நினைத்திருக்கும் ஒருவர் இதை தன் பத்திரிகையில் வெளியிட்டிருப்பது முரண் நகை.
இன்னுமொரு விஷயம்:
ReplyDelete// நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்?//
இதைப்போலவே,
" நான் ஏன் என் இனத்தை நேசிக்க வேண்டும்?"
" நான் ஏன் என் மதத்தை நேசிக்க வேண்டும்?"
" நான் ஏன் என் மொழி பேசுபவர்களை நேசிக்க வேண்டும்?"
என்றும் கேள்விகள் நியாயமாக எழுப்பப்படலாம். பிறப்பின் விளைவால் வந்தமைந்த கூறுகளைக் கொண்டு மேன்மைவாதம் பேசுவது என்பதே எதிர்க்கப் பட வேண்டிய அடிப்படைக் கருத்தாக்கம்.
ஸ்ரீகாந்த்: கார்டியன் பத்திரிகையில் letter to the editor எழுதுபவர்கள் (நம்மூர் மாதிரி kudos, apropos என்று வெத்துவேலை இல்லை) மேற்படி பத்திக்கு சில அருமையான பதில்களை எழுதியுள்ளனர். இந்தச் சுட்டியில் உள்ளது. அதில் ஒரு பதில் இங்கே:
ReplyDeletePatriotism implies pride. I consider myself "lucky" to be British, with advantages many in the world are denied, but how can I be "proud" of a fortunate accident of birth?
Louisa Mallett
York
//பிறப்பின் விளைவால் வந்தமைந்த கூறுகளைக் கொண்டு மேன்மைவாதம் பேசுவது என்பதே எதிர்க்கப் பட வேண்டிய அடிப்படைக் கருத்தாக்கம்.// சரியான கூற்று.
இதனால்தான் "I am proud to be Indian/American/Russian", "கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹைன்", "தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா" எல்லாம் ஓவராகத் தெரிகிறது!
அமெரிக்க conservative "newamericancentury.org"க்கு எதிராக உருவாக்கப்பட்டது இந்த வலைத்தளமென்று நினைக்கிறேன். எந்த நாட்டுக்கும் இதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம், இந்தியா உட்பட ;-)
ReplyDeleteஇந்தக்கட்டுரை ,
ReplyDeleteஈராக் போருக்கு காரணம் பேட்ரியாட்டிஸம் மட்டுமே என்பது போல ஒரு தோற்றம் உள்ளது. அது முழு உண்மை இல்லை, பேடிரியாட்ஸம் மக்களை ஒத்துக்கொள்ளச்செய்யமட்டுமே உதவியது அதுதவிர ஆதிக்க உணர்வும், பல லாபங்களையும் கணக்கில் கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. அதனாலேயே ஐ.நா சபை புறந்தள்ளிவிட்டு இப்போர் மேற்கொள்ளப்பட்டது. இன்று இதே ஆதிக்க வெறியை வட கொரியாவுடன் கொண்டுள்ள பேச்சுவார்த்தையில் காணமுடியும். அணு ஆயுதநீக்கத்தில் கையெழுத்து போடாதவன் எல்லாம் கயவாளிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு வருதாக உணர்கிறேன். அதைத்தொடர்ந்து சுய லாபங்களை நிவர்த்தி செய்ய தேவையான வேலைகளை மெதுவாக அமெரிக்கா முன்னெடுத்துச் செல்லுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று.
மிகவும் பொருத்மாகிப்போனது ஆப்கானிஸ்தான். பொய்களைச் சொல்லி சூரையாடியது ஈராக்கில்.
இந்த அமரிக்கா மிது என்னதான் கோபம் உமக்கு ?
ReplyDeleteவட கோரியாவில் நடக்கும் சர்வாதிகார அட்சியில் மக்கள் படும் பாடு உலகம் அறியாதோ ? அவர்கள் கையில் அனு அயுதம் வெறு கொடுக்க வேண்டுமோ ?
ஆப்கானிஸ்தான் மக்கள் , அடிப்படை வாத இஸ்லாமிய தலிபான் இடம் சிக்கி பட்ட பாடு உலகம் அரியாதோ ?
புத்தர் சிலை கூட சொல்லுமே அவர்கள் முட்டாள்தனத்தை பற்றி !
இப்பொது அங்கே ஜனநாயக அட்சி !
உன்மை பேசுங்கள் , யாரால் ஆப்கானிஸ்தான் மக்கள் நன்மை பெறுகிரார்கள் ?
தலிபானிடமா ? அல்லது தேர்தல் நடத்தி - மக்களால் முடுசூட பெற்ற ஒரு அரசிடமா ?
>>>>தேசியத்தைக் காரணம் காட்டி இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எதை முன்வைத்தாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும்
ReplyDelete>>>>தேசியம் தேவையே இல்லை. சர்வதேச மனிதநேயம்தான் அவசியம்.
Contradicting!
அதாவது உலகலாவிய மனிதநேயத்தை அடிப்படையாக கொண்ட குளோபல் கம்யூனிட்டி வரவேண்டும் என்கிறா(/றீ)ர். ஜார்ஜ் ஏதோ குகைக்குளிருந்து நீண்ட தூக்கத்திலிருந்து இப்போதுதான் விழித்திருக்கிறார் போல அல்லது கோமாவிலிருந்து விழித்ததும் பண்டைய நாகரீகத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார் போலும். உலகமே 'நான்', 'எனது' என்ற பற்றுதல் இருப்பதால்தான் இயங்குகிறது. அதை தொலைக்கச்சொல்வது மனித குலத்தையே அழித்துவிடும்.
>>>>இதனால்தான் "I am proud to be Indian/American/Russian", ... எல்லாம் ஓவராகத் தெரிகிறது!
அப்படியானால் தனிதேசியம் வேண்டும் என்று கேட்பவர்களும் ஓவராக ரியாட் செய்கிறார்கள் என்கிறீர்களா?
.:dYNo:.
டைனோ: ஒரு பதிவுக்குள்ளாகவே "selective quotation" போட்டு விளையாடுகிறீர்களே? நான் "தேசியம்" தேவையில்லை என்று சொல்லவில்லை. "அதீத தேசிய உணர்வு", நாடுகளுக்கிடையே வெறுப்பை, பகையை, வெறியைத் தூண்டும் தேசிய உணர்வு - "அப்படிப்பட்ட தேசியம்" தேவையில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன்?
ReplyDeleteதனி தேசியம் கேட்பவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் வேறு சில மொழி/மத உணர்வுகளால் நசுக்கப்படுவதுதானே? இலங்கையையே எடுத்துக்கொள்வோமே? இலங்கை விடுதலை அடைந்த உடனே தமிழர்கள் தனிநாடு கேட்டனரா? எத்தனை வருடங்கள் ஆயின. ஏன் அப்படி ஆனது?
What do you say to a cultural identity that this nationalism gives us? I don't think we can ever do away with this. People have talked about it for a long time now.
ReplyDeleteபத்ரி தேசீயம் தேவை இல்லை என்று சும்மா ஜல்லி அடிக்க வேண்டாம். முதலில் சாதீயத்தை உங்களால் விட முடியுமா? உங்கள் வீட்டில் சாதீய அடையாளங்களை ஒழித்துவிட்டு நாட்டின் தேசிய அடையாளம் ஒழியக் குரல் கொடுங்கள். சாதீயம் போலவே தேசியமும் அடையாளங்களைக் கொண்டது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று முன்னமே சொல்லியாகிவிட்டது.
ReplyDeleteஅதுபடி நடந்தோமா என்ன ? சும்மா இப்ப ஏதோ ஒரு ஆங்கில இணையத்தில் கண்ட செய்தியை வைத்து அவர்கள் ஏதோ புதிதாக சொல்லிவிட்டது போல் ஜல்லி அடிக்க வேண்டாம்.
>>>>"selective quotation" போட்டு விளையாடுகிறீர்களே?
ReplyDeleteஇல்லை பத்ரி, உண்மையிலேயே கேட்டேன்!
அதீத தேசிய உணர்வு Vs. தேசிய உணர்வு (Fanatism Vs. Nationalism) என்பதை எப்படி வரையறுப்பது யார் வரையறுப்பது? உலகளாவிய கோட்பாடுகளைக்கொண்டு வரையறுக்கவேண்டுமென்றால் தேசியம் என்பதே அடிபட்டுபோகுமே? Where do one draw the line? அதீத தேசியவாதம் தேவையில்லை என்றால் தேசியத்தையே மறுப்பதைப்போலத்தானே? There is no such thing as half-pregnant!
>>>>"அப்படிப்பட்ட தேசியம்" தேவையில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன்?
ஆமாம்... ஆனால் அதீத தேசியப்பற்றின்றி ஒரு தேசியப்போராட்டத்தை நடத்தவியலுமா?
>>>>தனி தேசியம் கேட்பவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் வேறு சில மொழி/மத உணர்வுகளால் நசுக்கப்படுவதுதானே?
நசுக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் மறுக்கப்படமுடியாதது. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு சமூக போராட்டத்தையும் நடத்தலாம் தனிதேசியத்திற்கான போராட்டமாகவும் நடத்தலாம். என்று ஒரு சமூக போராட்டம் தனிதேசியப் போராட்டமாக உருமாற்றமடைகிறதோ அன்றே அதீத தேசியம் அங்கு பரவிவிடுகிறது, பரப்பப்படுகிறது. அதனால் "இதனால்தான் "I am proud to be Indian/American/Russian", ... எல்லாம் ஓவராகத்" தெரிந்தால், தனிதேசியமும் ஓவராகத் தெரிகிறதா என்றே கேட்டிருந்தேன்.
.:dYNo:.
// to the extent that it was patriotism that made Britain’s participation in the invasion possible //
ReplyDeleteதமாஷின் உச்சகட்டம் இந்த வரி.... ஜார்ஜ் புஷ் வெள்ளை காக்கா பறக்கிறது என்று சொன்னால் டோனி ஆமாம் என்று தலையாட்டுவார் என்பது பால்குடி மாறா பாலகனுக்கு கூட தெரியும்... ƒஅதன் பெயர் patriotism வாவ்.
ஈராக் மறுசீரமைப்பு டெண்டர் பணிகளுக்கும் அதன் பின்னர் அமையும் பெட்ரோல் சாம்ராஜ்யத்திற்கும், தலையாட்டாவிட்டால் வேலையாகுமா... the only great country whose intellectuals are ashamed of their own nationality என்றிருக்க அது என்ன இந்தியாவா?
The world will be a happier and safer place when we stop putting our own countries first என்பதற்கு பதில் The world will be a happier and safer place when we stop putting ourselves first என்றிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்
/நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்?/
ReplyDeleteபத்ரி இந்த கேள்வியை நீங்க ஏன் "ஒரு இந்தியத் தமிழன்" கிட்ட கேக்க கூடாது. :-)
பத்ரி.. திகம்பர சாமியார், நாட்டை ஏன் நேசிக்க வேண்டும் என்ற தனது பேட்டியில் உங்களது பதிவுக்கு ஒரு இணைப்பு கொடுத்துவிட்டார், தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில்... எதுவும் இருப்பின் தெரிவிக்கவும்.
ReplyDeleteஅனானி // இந்த கேள்வியை நீங்க ஏன் "ஒரு இந்தியத் தமிழன்" கிட்ட கேக்க கூடாது // நீங்க யாரு ?
ReplyDeleteபோன கேள்வி பெயர் விட்டுப்போய்விட்டது -
ReplyDeleteஅனானி // இந்த கேள்வியை நீங்க ஏன் "ஒரு இந்தியத் தமிழன்" கிட்ட கேக்க கூடாது // நீங்க யாரு ?
இந்த தேசியம் என்பது ஒரு மாயை .பங்களாதேஷ் -ல 60 வயசுக்கு மேல உள்ள எல்லோரும் இந்தியனா பிறந்து ,பாகிஸ்தான் காரனா மாறி ,இப்போ பங்களாதேஷ் காரனா இருக்காங்க ..இது போல நாம எந்த நாட்டு காரன் -க்றத எப்பவும் நாம தீர்மானிக்குறதில்ல .காந்தி ,மவுண்ட்பேட்டன் ,இந்திராகாந்தி போன்றவங்க தீர்மானிக்குறாங்க .நாம குடிமகனா இருக்குற நாட்டுக்கு ராஜிய ரீதியா விசுவாசமா இருக்கணும் என்கிறத தவிற இதுல வேற ஒரு வெங்காயமும் இல்ல . என்னுடைய முன்னோர்கள் 100 வருடத்துக்கு குறைவாகத் தான் 'இந்தியன்'..ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழன் .ஆனா சில பேர் 'நான் முதல்ல இந்தியன் .அப்புறம் தான் தமிழன் '-னும்பாங்க ..என்ன வரிசையோ ? ஒரு இழவும் புரியல்ல .
ReplyDeleteகுறைந்த பட்சம் என் வாழ்நாள்-ல என் தாய்மொழி மாறப்போறது கிடையாது ..ஆனா என் தாய்நாடு மாறாதுண்ணு சொல்ல முடியுமா? (வேறு நாட்டுக்குடிமகனா மாறுறத பத்தி சொல்லல) .அது என் கையிலயா இருக்கு ?எவனோ முடிவெடுக்குறான் ..உடனே 'இந்தியன்' .'பாகிஸ்தானி' -னு தேசபக்தி போர் நடத்துராங்க ..பாகிஸ்தான எதிர்க்குறது தான் இந்தியாவுல நிறைய பேருக்கு தேசபக்தி ..பாகிஸ்தான் -லயும் அப்படி தான் . என்ன வெங்காயமோ?
//குறைந்த பட்சம் என் வாழ்நாள்-ல என் தாய்மொழி மாறப்போறது கிடையாது //
ReplyDeleteஅந்த தாய்மொழியை மாற்றுவதற்கான திட்டம்தான் தேசப்பற்று என்ற பெயரில் புகட்டப்படுகிறது. நான் மிகையாக எழுதுவதாக நினைக்க வேண்டாம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்றொரு மொழி உலகில் இருக்கவில்லை. தமிழொடு சமஸ்கிருதம் கள்ளத் தொடர்பு கொண்டு, அதனால் உண்டான குழந்தைதான் மலையாளம். அதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம், துளு என்று பல மொழிகளை உருவாகியதும் இந்த அடிப்படையில்தான். உருவாக்கியதன் நோக்கம் வந்தேறிகள் பிரித்தாளும் சூழ்ச்சியே.
தேசபக்தி என்பது ஆரிய வெங்காயம்.
இது பெரியார் வெங்காயம்.....
(வெங்காயத்தின் அர்த்தம் புரிந்திருக்கும்)