சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.
தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:
* தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டியதில்லை.
* அரசு தன்னுடைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் கல்லூரிகள் மீது திணிக்க முடியாது.
* அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்கள் இவ்வளவுதான் என்று விதிக்க முடியாது. (ஆனால் தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்த என்று கமிட்டி/வாரியம் ஒன்றைக் கொண்டுவரலாம்.)
* அரசினால் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையைத் தீர்மானிக்க முடியாது. தனியார் கல்லூரிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம். இந்த நுழைவுத் தேர்வு/சேர்க்கை முறையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசுகள் கமிட்டி/வாரியங்களை ஏற்படுத்தலாம்.
இந்தத் தீர்ப்பை ஒருமனதாக வழங்கும்போது நீதிபதிகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தையும் TM பாய் தீர்ப்பில் 11-நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பையும் விட்டு விலகாத வண்ணம் தீர்ப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. நீதிபதிகள் சில இடங்களில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் சட்டங்களை இயற்றாத காரணத்தால் நீதிமன்றம் இருக்கும் சட்டங்களை வைத்து தீர்ப்புகளை வழங்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தீர்ப்பு வந்த நாள் முதலாக அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் குறை சொல்லியும், இந்தத் தீர்ப்பை மாற்றும் வண்ணம் சட்டம் இயற்றுவோம் என்று சூளுரைத்தும் வருகின்றனர். இதன் விளைவாக அரசியல்வாதிகள் தங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் ஒரு பெரிய போராட்டம் நடப்பதைப் போலக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். இது உச்ச நீதிமன்ற நீதிபதி லாஹோதியினை வருந்த வைத்துள்ளது. "வேண்டுமானால் நீதிமன்றங்களையே இழுத்து மூடிவிடுங்கள்" என்று அவர் சொல்லும் அளவுக்கு "confrontation", "precipitation" போன்ற வார்த்தைகளை கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களது வக்கீல்களும் பிரயோகித்து வருகின்றனர்.
இப்படியான நிலைமையில் சரியான விவாதங்கள் நிகழ முடியாது.
தனியார் கல்லூரிகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பற்றி சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே சட்டங்கள் தேவை. இதைத்தான் நீதிமன்றமும் சொல்லியுள்ளது. ஆனால் அப்படி இயற்றப்படவேண்டிய சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும்?
1. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு நியாயமானது. அதில் கிட்டத்தட்ட அனைவருமே ஒற்றுமையான எண்ணத்தை வைத்துள்ளனர். நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்திரிக்கப்படுவது நியாயமல்ல. நீதிபதிகள் எதற்கும் சார்பானவர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை. சரியான சட்டம் இல்லாதவரை தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டினைத் திணிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றுதான் அவர்களது தீர்ப்பு சொல்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனைச் சரி செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது கவனமாகச் செய்தால் அந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாரும் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் செய்யமுடியும். அவசரகதியாகச் செய்தால் அதனால் யாருக்கும் நன்மையில்லை.
2. தனியார் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகள், சேர்க்கை முறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்: அரசு இயற்றும் சட்டங்கள் மூலமாக இதைக் கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அப்படி ஏதேனும் கட்டுப்பாடு வந்தால் அது உச்ச நீதிமன்றம் சென்று தோல்வியைத்தான் தழுவும்! அவ்வாறு செய்யாமல் தனியார் கல்லூரிகளிடமே சேர்க்கை முறையை விட்டுவிடலாம். ஆனால் அந்தச் சேர்க்கை முறை நியாயமான வகையில் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தால் போதுமானது என்று தோன்றுகிறது.
3. கல்விக் கட்டணத்தைத் தீர்மானித்தல்: இதுவரையில் கல்விக் கட்டணங்களை அரசே தீர்மானித்து வந்தது. இதைத் தனியார் கல்லூரிகள் கடுமையாக எதிர்த்தன. இவ்வாறு கட்டணத்தைத் தீர்மாணிக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பொழுது கொண்டுவரும் சட்டத்திருத்தத்தில் அரசு தனியார் கல்லூரிகளின் கட்டணங்களைத் தீர்மானிக்காமல், TRAI போன்ற கட்டுப்பாட்டு வாரியம் ஒன்றின் மூலமாக கட்டணத்தைக் கட்டுப்படுத்தினால் போதும்.
அதாவது ஒரு செமஸ்டருக்கு ரூ. 13,000 தான் (ஒரு பேச்சுக்கு) கட்டணம் வைக்கலாம் என்று சொல்லாமல், ஒவ்வொரு கல்லூரியையுமே கட்டணத்தைத் தீர்மானிக்கச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு கல்லூரியும் அந்தக் கட்டணத்தை முன்கூட்டியே கட்டுப்பாடு வாரியத்திடம் அளிக்க வேண்டும். எதனால் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதாவது ஒரு கல்லூரி தான் உலகத் தரத்தில் நூலக வசதி கொடுக்கப்போவதாகவும் அதற்கென வருடம் ரூ. 2,500 அதிகமாக வசூலிக்கப்போகிறேன் என்றும் சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதற்கான அனுமதி தரப்படவேண்டும். அதேபோல முழுவதுமாக ஏர்கண்டிஷன் செய்யப்பட்டதாகக் கல்லூரி அறைகள் இருக்கும் என்றும் அதற்காக வருடத்துக்கு ரூ. 10,000 அதிகம் வசூலிக்கப்போகிறோம் என்றும் ஒரு கல்லூரி சொன்னால் அது ஏற்கக்கூடியதாக இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது அந்தக் கல்லூரியின் கட்டணம் தமக்குக் கட்டுப்படியாகுமா என்பதையும் முடிவுசெய்துகொள்ளலாம். அமெரிக்காவில் தனியார் கல்லூரிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டணத்தை வசூலிக்கிறார்கள். அதை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. நாளடைவில் இந்தியாவிலும் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த என்று யாரும் இருக்கக்கூடாது. ஆனால் இன்று அப்படிச் சொன்னால் என்னை அடிக்கவருவார்கள்.
இட ஒதுக்கீட்டிலோ அல்லது அல்லாமலோ வரும் மாணவர்களால் கல்விக் கட்டணத்தைக் கொடுக்கமுடியாது என்ற நிலை வருமானால் அரசு மான்யமாகவோ கடனாகவோ மாணவர்களுக்கு உதவி செய்யலாம். அதை விடுத்து தனியார் கல்லூரிகளில் இவ்வளவுதான் கட்டணம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தால் பல கல்லூரிகள் (1) இழுத்து மூடுவார்கள் அல்லது (2) சட்டத்துக்குப் புறம்பாக, அடாவடித்தனம் மூலம் ரசீது கொடுக்காமல் பணம் வசூலிப்பார்கள். இரண்டுமே நாட்டுக்குக் கெடுதல்.
சத்யா கல்விக்கட்டணம் பற்றி Financial Express-ல் எழுதியுள்ள கட்டுரை இங்கே: State control over fee cap is simply untenable
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
Hi Badri,
ReplyDeleteAm interested in responding to this post. Its really nice that your blog gives a lot of focus to this issue. I dont have a tamil editor..Is it OK to post a response in English(am doing it already anyway..but if its not OK..i can delete this one as well..)
Best regards,
Magesh
Magesh: You are free to post your comments in English.
ReplyDeleteIf the judges really wanted to preserve the Social-justice, they could have postponed the verdict and asked the govt to pass necessary constitutional changes within stipulated time.
ReplyDeleteஅருமையாக பதிவு செய்துள்ளீர்கள். வளரும் இந்தியாவில் இன்னமும் எத்துணை ஆண்டுகளுக்குதான் இந்த இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்? ஓட்டுக்காகத்தான் அரசியல் வியாதிகள் இட ஒதுக்கீடு பற்றி கோஷம் போடுகிறார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ReplyDeleteGood post.Yes, Goverment can bringup a committe which intercepts the money taken from students.
ReplyDeleteDefintely, donations named "recepit less" amount should not be encouraged.
தமிழகம் போல கல்லூரி இடங்கள் உபரியாக இருக்கும் மாநிலங்களில், அமெரிக்கா போன்ற வவுச்சர் (voucher) முறையைப் பின்பற்றலாமே. அதாவது, நீங்கள் சொன்னது போல ஒரு கல்லூரி இடத்துக்கு (மருத்துவம், பொறியியல், சட்டம், கலை எனத் தனித்தனியாக) ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம். அது 13000 ரூபாய் என்று கொள்ளுவோம். ஒவ்வொரு கல்லூரியும், தனது மாணவர்களிடமிருந்து என்ன கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கலாம். ஆனால், ஒவ்வொரு கல்லூரியும் தனது கொள்ளளவில் 30 சதவிகிதம் அரசாங்கத்திற்குத் தத்தம் செய்து விட வேண்டும். அந்த இடங்களுக்கு அரசாங்கம் அந்த உச்ச வரம்பு பணத்தை மட்டுமே செலுத்தும். அரசாங்கம், அப்படித் தத்தம் செய்த இடங்களை ஒரு பட்டியலிட்டு, அவற்றை தனது வழிகளில் (இட ஒதுக்கீடு, பொருளாதாரச் சூழல், தனிப் பரிட்சை) நிரப்பிக் கொள்ளலாம். அப்படித் தேர்ந்தெ்டுக்கப்படும் மாணவர்களுக்கு ஒரு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அளவிற்கான பணத்திற்கு கல்வி வவுச்சர்கள் வழங்கினால், எந்தக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதை மாணவரே தேர்ந்து சேரலாம், அல்லது ஒரு ஒற்றைச் சாளர முறையில் இத்தேர்வினை வரிசைப்படுத்தலாம்.
ReplyDeleteஇதன் மூலம், காசுள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம், தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்கள் அரசாங்க சலுகை உதவியுடன் படிக்கலாம்.
இது போன்ற ஒரு முறை சாத்தியமா? இதில் உள்ள குறைபாடு என்ன?
"நீதிபதிகள் எதற்கும் சார்பானவர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை"
ReplyDeleteஉடன்பாடில்லா கருத்து. இதுவரை வந்துள்ள பல வழக்குகளின் முடிவுகள் உங்கள் கருத்துக்கு முரணாகவே இருப்பதாக எண்ணுகிறேன். என் ஒரு சில பதிவுகளிலும் இதைக் கூறியுள்ளேன்.
"நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்திரிக்கப்படுவது நியாயமல்ல. " எனக்கு அதுவே உண்மையாகப்படுகிறதே!
variyaakum. aanal anaithu kallori galukum koduka vendiyirukkum. appuram thaniyar kalurigal
ReplyDeletethirakka permission kodukka matargal.
'americavil kattanathirku ucha varambu illai'
- aanal americavil competition ( potti ) ulladhu. indhiyavil adhu illai. ella
urimaiyalargalum sangathil ondru koodi price fixing seidhu viduvaargal.
indhiyavil anaivarukkum ore tharathil kalvi illai.
aanal indhiya mazhuvadhum ore paritchai vaithaal adhil payan perubavargal
yaaraaga irukkum.?
- indhiyavil 35 million peruku kalvi arivu kidayathu. ellorukkum ore tharmaana kalvi
alithaalume kooda anaivarum ore madhiri padika mudiyadhu. patikkathavan maganum
IAS officer makanum ore soozhnilai kondavargal illai.
- kalvi viyabaram aga koodadhu endru needhipadhi kanneer vidugiraar. idhu eppadi
saathiyam? naan arindha oru munnal MP vaadagai veetil kudiyirundhar. oru kaluri
arambithar. ipozudhu 13 maruthuva poriyiyal kalorigalum , tv channelum kuda
vaithirukkirar. laabam sambathipadhu avarudaya kutramillai. thaniyar kalurigal nadathinal
adhu vyabaramdhan aagum.
srikanth sollvadhu yetrukollakoodiyadhe. arasangam idharkana selavai makkal meedhu
ReplyDeletevariyaakum. aanal anaithu kallori galukum koduka vendiyirukkum. appuram thaniyar kalurigal
thirakka permission kodukka matargal.
'americavil kattanathirku ucha varambu illai'
- aanal americavil competition ( potti ) ulladhu. indhiyavil adhu illai. ella
urimaiyalargalum sangathil ondru koodi price fixing seidhu viduvaargal.
indhiyavil anaivarukkum ore tharathil kalvi illai.
aanal indhiya mazhuvadhum ore paritchai vaithaal adhil payan perubavargal
yaaraaga irukkum.?
- indhiyavil 35 million peruku kalvi arivu kidayathu. ellorukkum ore tharmaana kalvi
alithaalume kooda anaivarum ore madhiri padika mudiyadhu. patikkathavan maganum
IAS officer makanum ore soozhnilai kondavargal illai.
- kalvi viyabaram aga koodadhu endru needhipadhi kanneer vidugiraar. idhu eppadi
saathiyam? naan arindha oru munnal MP vaadagai veetil kudiyirundhar. oru kaluri
arambithar. ipozudhu 13 maruthuva poriyiyal kalorigalum , tv channelum kuda
vaithirukkirar. laabam sambathipadhu avarudaya kutramillai. thaniyar kalurigal nadathinal
adhu vyabaramdhan aagum.
http://www.viduthalai.com/20050824/thalai.html
ReplyDeleteதருமி: நீதிபதிகளின் முடிவு நமக்கு ஏற்புடையது, ஏற்புடையதல்ல என்று சொல்லலாம். அவர்களது முடிவு சரி, தவறு என்றும்கூடச் சொல்லலாம். அவர்கள் முட்டாள்கள் என்றும் கூடச் சொல்லலாம். ஆனால் கருத்துரீதியாகச் சார்புடையவர்கள் என்று சரியான சாட்சியம் இல்லாமல் சொல்வது தவறாகும்.
ReplyDelete-*-
விடுதலை தலையங்கம் படித்தேன். வீரமணி இந்த விஷயத்தில் கருத்து சொல்லியே ஆகவேண்டும். சமூக நீதிக் காவலர்களின் தலைமைக் காவலர் அல்லவா?
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நடராசன் மேற்கோள் காட்டியதாக வீரமணி காட்டும் மேற்கோள் - இனாம்தார் வழக்கிலும் (சமீபத்திய தீர்ப்பு) நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டு, இது உதாரணம் காண்பிக்கப்பட்ட மேற்கோள்தான், சட்டத் தீர்ப்பு அல்ல என்று மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். இதுவும்கூட மெஜாரிட்டி தீர்ப்பில் இல்லை, மெஜாரிட்டி தீர்ப்புடன் ஒத்துப்போகும் ஆனால் தனியாக தீர்ப்பெழுதிய நீதிபதிகள் கொடுத்த உதாரணம் மட்டுமே என்றும் சமீபத்திய தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர்.
கோர்ட்டை இழுத்து மீடிவிடுவேன் என்று தலைமை நீதிபதி மிரட்டவில்லை. அப்படி நீதிபதி சொன்னதாக வீரமணி சொல்வது அபாண்டம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நீதிமன்றம் எதற்கு? நீங்களே அதை இழுத்து மூடிவிடுங்கள் என்றுதான் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சொன்னார்.
லாஹோதி இதைத் தவிர்த்திருக்கலாம். பொதுவாக நீதிபதிகள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மக்கள் பிரதிநிதிகளின் படிப்பறிவு கம்மி. அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை முழுவதுமாகப் படிக்கமாட்டார்கள். ஏன்? நாடாளுமன்றத்தில் தங்கள் முன்னால் இருக்கும் மசோதாக்களையே முழுக்கப் படிக்காமல் "Aye" , "No" என்று குரல் வாக்கெடுப்பு மூலம் கொறடா சொன்னதைச் செய்துவிட்டு வந்துவிடுவார்கள். பலர் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றங்களுக்கோ போவதுகூடக் கிடையாது.
ஆனால் இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அரைகுறையாக யாரோ சொன்னதைக் கேட்டுவிட்டு மேசையைத் தட்டி நாடாளுமன்றமே சிறந்தது, நீதிபதிகள் ஜாதி வெறி பிடித்தவர்கள், அகந்தை கொண்டவர்கள், மக்கள் சக்தியோடு போட்டிபோட வருகிறார்கள் என்று திட்டுவார்கள்.
நீதிபதிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது.
Anonymous ஒருவர் சொன்னது: "If the judges really wanted to preserve the Social-justice, they could have postponed the verdict and asked the govt to pass necessary constitutional changes within stipulated time."
ReplyDeleteஇம்மாதிரியெல்லாம் செய்யமுடியாது. ஒரு பக்கம் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் சேர்ந்து வழக்கு தொடுத்துள்ளனர். அரசு கொஞ்சமாவது யோசித்ததா அந்த நேரத்தில்? இல்லை.
கோர்ட் அந்த நேரத்தில், அரசிடம் நீங்கள் போய் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்துகொண்டு வாருங்கள் என்றா சொல்லவேண்டும்? இப்பொழுதைய தீர்ப்பிலும் கூட நீதிபதிகள் பல இடங்களின் சட்டமன்ற/நாடாளுமன்ற சட்டங்கள் தேவை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுவரையில் வழக்குகளை பைசல் செய்யமாட்டோம் என்று சொல்வது எந்தவகை நியாயம்? இருக்கும் சட்டங்களுக்குள்ளாக interpret செய்வதுதான் அவர்கள் வேலை.
ஸ்ரீகாந்த்: அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகள் அல்லது GRE போன்ற தகுதித்தேர்வு இருந்தால் இது சாத்தியமாகும். வவுச்சர் முறை நல்லமுறை. இதைப்பற்றி மாநில அரசுகள் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும்.
ReplyDeleteஅதே சமயம் தமிழகம் போன்ற இடங்களில் பல இடங்கள் வீணாகப்போவதற்குக் காரணம் அந்தக் கல்லூரிகள் மோசமானவை என்பதுமாகும்.
இந்தக் கல்லூரிகளை சரியான முறையில் மாநில அரசு கட்டுப்படுத்துவதில்லை. மாணவர்களே சேர விருப்பம் இல்லாத கல்லூரி என்றால் அது இழுத்து மூடப்பட வேண்டும், அல்லது வேறு நிர்வாகம் அதை வாங்கிக்கொண்டு மாற்றங்கள் செய்து உருப்படியான கல்லூரியாக மாற்றவேண்டும்.
அத்துடன் தமிழகத்தில் இருக்கும் 60% மதிப்பெண்கள் என்னும் கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர 50% மதிப்பெண்கள் இருந்தாலே போதுமானது. இதனாலேயே தமிழக மாணவர்கள் பலரும் கர்நாடகம் செல்கிறார்கள்.
சமீபத்திய தீர்ப்பின்படி பார்த்தால் மாநில அரசுகளின் மதிப்பெண் விதிகளை தனியார் கல்லூரிகள் பொருட்படுத்தவேண்டியதில்லை.
ஏழை மாணவர்களுக்கான சலுகைகள் பற்றியும் சமீபத்திய தீர்ப்பு பேசுகிறது. NRI மாணவர்களை அதிகக் கட்டணத்தில் சேர்த்துக்கொண்டு அப்படி அதிகப்படியாகப் பெறும் கட்டணத்தை ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், ஃப்ரீஷிப் போன்று கொடுக்கலாம் என்று சொல்கின்றனர் நீதிபதிகள்.
ஆனால் இது நடைமுறையில் வேலை செய்யாது என்று தோன்றுகிறது. இன்று தனியார் கல்லூரிகளை அமைத்திருக்கும் பலரும் திருடர்கள். நேற்று ஆனந்தகிருஷ்ணன் தி ஹிந்துவில் எழுதியிருப்பது: "It is an open secret that the professional institutions engaged in undesirable commercial practices are owned or controlled by powerful persons. Many are major donors to political campaigns."
இந்தக் கல்லூரிகளை சரியான முறையில் எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.
//கோர்ட்டை இழுத்து மீடிவிடுவேன் என்று தலைமை நீதிபதி மிரட்டவில்லை. அப்படி நீதிபதி சொன்னதாக வீரமணி சொல்வது அபாண்டம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நீதிமன்றம் எதற்கு? நீங்களே அதை இழுத்து மூடிவிடுங்கள் என்றுதான் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சொன்னார்.//
ReplyDeleteVeeramani has clearly quoted where he found the news. It was in Times of India dated 23rd. If you are not convinced, refer this link
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1208145,curpg-1.cms
//கோர்ட் அந்த நேரத்தில், அரசிடம் நீங்கள் போய் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்துகொண்டு வாருங்கள் என்றா சொல்லவேண்டும்? இப்பொழுதைய தீர்ப்பிலும் கூட நீதிபதிகள் பல இடங்களின் சட்டமன்ற/நாடாளுமன்ற சட்டங்கள் தேவை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுவரையில் வழக்குகளை பைசல் செய்யமாட்டோம் என்று சொல்வது எந்தவகை நியாயம்? இருக்கும் சட்டங்களுக்குள்ளாக interpret செய்வதுதான் அவர்கள் வேலை. //
ReplyDeleteLahoti then reminded him, "We are not telling you. You advise your clients properly. If this is going to be your attitude we will close all the courts and you do whatever you want. You do your duty, then we will do our duty."
Is this how they interpret the Constitution/LAW?
As the tamil nadu CM JJ once mentioned that the judges are humans too, the CJ is showing his true colours.
//நீதிபதிகள் சில இடங்களில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையில் சட்டங்களை இயற்றாத காரணத்தால் நீதிமன்றம் இருக்கும் சட்டங்களை வைத்து தீர்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.// இதைக்கூட சொல்ல முடியவில்லை. நீதிமன்றங்கள் சமூக நீதிக்கு எதிரானவை என்று பேசுகிறார்கள். நான்கு வர்ணங்களில் ஒன்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேல் பூசி விடுகிறார்கள்.
ReplyDeleteமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சேர்ந்து ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான தேர்வு என்று சொல்லும்போது உச்சநீதிமன்றம் உத்தமமானது.
அவர்களே மூடினாலும்சரி அல்லது அந்த கைங்கர்யத்திற்கு அரசு பெயர் ஏற்றுக் கொண்டாலும் சரி(நடக்காது) மூணுல ஒண்ணு குளோஸ்..அப்புறம் நிர்வாகம்..அதைக் கூட இருந்தே பாதி அழிச்சாச்சு.. மீதி இருக்கறது எங்க தலைவர்கள் கூடும் சபை மட்டும் தான்.. ஆஹா..இதைத்தான் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்குது நாடு..
மகளிர் ஒதுக்கீடு குறித்து தானைத் தலைவன் முலயாம்சிங் யாதவ்
"அம்பேத்கர்,நேரு..இவங்களை எல்லாம்விட நீங்க புத்திசாலிங்களா? அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வந்துட்டீங்க" ன்னு சொன்னாராம்.(ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
Anon: நான் சில ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்துள்ள மேற்கோள்களை அப்படியே கொடுத்துள்ளேன். சுட்டிகளும் சேர்த்து. முடிந்தால் வீரமணியிடம் சேர்ப்பித்துவிடவும். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் நேரடி மேற்கோள் எதுவும் இல்லை.
ReplyDeleteThe Hindu: A visibly annoyed CJI said, "When we said please come [up] with legislation, you are talking about confrontation. We are told it is confrontation. You must advise your people [government] to exercise self-restraint. Why are we told time and again by the Government that it is not taking a confrontationist attitude? Who is taking a confrontationist attitude? If this is the attitude of the Government to go after a judgment without understanding it, then wind up the courts and do whatever you want."
Indian Express: Chief Justice of India R C Lahoti pulled up Attorney General Milon K Banerjee saying: ‘‘If this is the attitude of the government to go after a judgment without understanding it, then wind up the courts and do whatever you want.”
Deccan Herald: In an unprecedented outburst, Supreme Court Chief Justice R C Lahoti asked the government to “wind up” the courts if it opposed a judgement without understanding it. “If this is the attitude of a government to go after a judgement without understanding it, then wind up the courts and do whatever you want,” Mr Lahoti said, stunning the courtroom as he lashed out at Attorney General Milon K Banerjee.
The Telegraph: In an unprecedented outburst, Chief Justice R.C. Lahoti yesterday told the government to “close down all the courts in the country and do whatever you want” while hearing a petition on reservation for Dalit Christians.
-*-
The Times of India: According to agency reports, a bench comprising Chief Justice R C Lahoti took strong exception to what it termed "unwanted criticism" of its recent order doing away with quota in private professional institutions, and told attorney-general Milon K Banerjee: "Tell us, we will wind up the courts and then do whatever you want."
Hindustan Times: “You tell your client (the government), we will wind up the courts and then you do whatever you want... Should you not tell your client to give the courts the respect they deserve?”
-*-
இங்கு தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இரண்டிலும் சற்றே மாறுபட்ட பொருள் வருமாறு மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது. (இரண்டுமே ஒன்றிலிருந்து மற்றொன்று சற்றே மாறுபட்டது.)
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஒன்றில்தான் "நான் நீதிமன்றத்தை இழுத்து மூடிவிடுவேன், நீ செய்ய முடிந்ததை செய்துகொள்" என்று பொருள் வருமாறு எழுதப்பட்டுள்ளது. எனக்கு என்னவோ அதை நம்ப விருப்பமில்லை. மெஜாரிட்டி செய்தித்தாள்களில் நீதிபதி தனது இயலாமையைக் காண்பிப்பது போலத்தான் பொருள் கொள்ள முடிகிறது, தனது முரட்டுத்தனத்தை அல்ல.
நான் இழுத்து மூடுவேன் என்று சொல்வதற்கும் நீங்களே மூடுங்கள் என்று
ReplyDeleteசொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீதிபதி நிதானம் இழந்துவிட்டார்
என்பதே உண்மை.
என்.ஆர்.ஐக்கள் படிக்க வராவிட்டால் யாரிடம் பணம் வாங்கி ச்காலர்ஷிப் கொடுப்பார்.
அரைகுறையாக பிரச்சினைகளின் ஆழம் தெரியாமல் மேலோட்டமாக தேவையில்லாத
கருத்துகள் கூறியுள்ளார்.
Sorry for the comments in English (I have Windoiws ME).
ReplyDeleteMy opinions
1. Government restricting or fixing the fees is not going to do anyone good and it is practically impossible. But government should look for "hidden fees" and thwart such attempts. Hope you know hidden fees means tution fees of Rs 2000 and Library fees of RS 1 lakh
2. About reservation uplifting the society, please see here.
The Merit List for Admission to Medical Colleges in Tamil
Nadu gives and Interesting point
Read the full piece here at
http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm
Open Seats - 430
321 BC students,
57 MBC students
14 SC students will get into the open competition.
38 Forward Community
This literally means that students from BC and MBC score well than the Forward Community Counterparts
This also means that the students from the so called forward community are able to get LESS THAN 10 percent of seats available......
That is if 430 seats are available forward community gets 38
If 100 seats are available Forward Community will get 9 seats (38*100/430)
If 81 seats are available Forward Community will get 8 seats (38*85/430)
So WHEN 100 seats are available
WITHOUT RESERVATION
FOrward Community will get 9 seats
WITH 18 % reservation for SC and 1 % reservation for ST
Forward Community is getting 8 seats
That means, reservation is giving JUST ONE OUT OF THE 100 Seats from Forward Community to the SC and ST
Why then there is such a huge cry against Reservation ??
How is this possible in Tamil Nadu ????? ie students from backward communities outshine those from forward communities
2 Answers for this question
1. Periyar
2. Kamarajar