இன்று வரவிருந்த விமரிசகர்களில் சிலரால் (அசோகமித்திரன், பிரபஞ்சன், ஆனந்த்) பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை.
முதலில் ந.முத்துசாமி பேசினார். [24.4 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 2.97 MB]
தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேசினார். [23.13 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 2.79 MB]
அடுத்து சா.தேவதாஸ் தான் எழுதி வந்திருந்த கட்டுரையை வாசித்தார். [14.48 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 1.78 MB]
கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் பதில் சொல்வதாக இருந்தது. ஆனால் யாரும் எதையும் கேட்கவில்லை. அதனால் பொதுவாகத் தன் எழுத்துகள் மீது இருக்கும் கேள்விகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் விடை அளிக்குமாறு பேசினார்; அது தொடர்ந்து இந்த கூட்டத்தின் ஏற்புரையாக முடிந்தது. [51 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், 6.12 MB]
விண்திகழ்க!
2 hours ago
இலக்கிய சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, விமர்சன அரங்கு, போன்ற தமிழ் இலக்கியம் தொடர்பான விழாக்களுக்கு என்று பொதுவான அடையாளம் இருக்கிறது. அவை, பொதுவாக சனிக்கிழமை மாலை நேரத்தில் துவங்கும். அழைப்பிதழில் இடம் பெற்றிருப்பவர்களில் ஓரிருவர் விழாவுக்கு வரமாட்டார்கள். விழா துவங்குமுன்பு, சமோசா, இனிப்பு உள்ளிட்ட விருந்துபசாரம் நடக்கும். விழாவுக்குத் தலைமை ஏற்பவர், விழா நாயகரை பாராட்டியே பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். சிறப்புரை ஆற்றுபவர்களுக்கும் அந்தக் கடமை இருந்தாலும், ஒப்புக்காக, சில விமர்சனங்களை வைப்பார்.. விழா நாயகரின் முக்கியத்துவத்துவத்தின் அடிப்படையில், பத்திரிக்கை உலகத்தில் இருந்தும், இலக்கிய வட்டாரத்தில் இருந்தும் பெரும்புள்ளிகள், சிறும்புள்ளிகள் , மீடியம் சைஸ் புள்ளிகள், வந்து தலையைக் காட்டி விட்டு, வெளியே வந்து, இலக்கியம், அரசியல், இலக்கிய அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அரட்டை அடித்துக் கொண்டே கா·பி பருகுவார்கள். ஒரு குழந்தை அங்கும் இங்குமாக விளையாடி, கவனத்தைக் கலைக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவர்கள், கைகுலுக்கி, " நாலஞ்சு மாசமிருக்கும் இல்லே நாம பார்த்து" என்று குசலம் விசாரித்துக் கொள்வார்கள். புதிதாக மாற்றப்பட்ட செல்பேசி எண்கள் பரிமாறிக் கொள்ளப்படும். விழா நாயகர் ஏற்புரை நடத்துவார். கூட்டம் நடந்து முடிந்ததும், குட்டி குட்டி சப்-கமிட்டி மீட்டிங்குகள் நடக்கும். மெல்ல கலைந்து போவார்கள்.
ReplyDeleteஇந்த லட்சணங்களுக்குக் கொஞ்சமும் குறையாமல் நடந்து முடிந்த நிகழ்ச்சியில் எனக்கு ரொம்ப பிடித்தது அடையாறு ஆனந்த பவனின் சமோசாவும் பாதுஷாவும் தான்.
சந்தடி சாக்கில நீங்க ஒரு கவரேஜ் குடுத்துட்டீங்க போல பெரகாசு...??!!
ReplyDelete( முதல் பாராவை சொன்னேன். )
I liked the Badusha, but Samosavil Kaaram kammi :-).
ReplyDeleteபத்ரி... நேற்றே எழுத நினைத்து விருந்தினர் வருகையால் தள்ளிபோய்ட்டுது..
ReplyDeleteநாஞ்சில் நாடன் பெச்சு சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது.. பாதியில் நின்றுவிட்டது. windows media playerல் என்னவோ codec used to encode ப்ரச்னை என்று செய்தி கொடுத்தது. தேவதாஸ் பேச்சு ஆரம்பத்திலேயே மக்கர் செய்துவிட்டது.
ந. முத்துசாமி பேச்சு பாதிவரைதான் கேட்டேன்.. (ஒலிக்குறிப்பில் ஒன்றும் ப்ரச்னை இல்லை.. நான் பாதிதான் கேட்டேன்.. விழாவுக்கு வர இயலாததற்க்காக இருந்த வருத்தம் போயே போச்)
எஸ்.ரா ஏற்புரை எனக்கு பல புதிய விஷயங்களை சொன்னது. ஒலிக்குறிப்புகளுக்கு நன்றி.
(நாஞ்சில் நாடன், தேவதாஸ் wmv ப்ரச்னை எனக்கு மட்டும்தானா, வேறு யாருக்காவதுமா என்று யாராவது த.செ. தெரியப்படுத்தவும்)