Tuesday, August 16, 2005

இளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்

புதிய காற்று என்னும் பத்திரிகையின் ஆகஸ்ட் மாத இதழில் நா.மம்மது என்னும் தமிழ் இசை ஆராய்ச்சியாளர் "இளையராஜா சிம்பொனி - சமூகப் பார்வை" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

கட்டுரையைத் தொடங்கும்போது இவ்வாறு ஆரம்பிக்கிறார்:
'தகுதி, திறமை' என்ற வைதீக மாயைகளை உடைத்து வெற்றி கண்டவர்கள் சமூகத் துறையில் இரட்டைமலை சீனிவாசனும் அயோத்தி தாசரும் என்றால் கலைத்துறையில் இளையராஜா.
இளையராஜா ஏதோ ஒரு செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் "இனியும் ஓதுவார்களை நம்பிப் பயனில்லை" என்று சொன்னதாகச் சொல்லி, அதை முன்வைத்து தன் கட்டுரையை விரிக்கிறார் ஆசிரியர்.

இளையராஜாவின் சினிமா இசையில் எங்கெல்லாம் ஓதுவார்கள் காத்து வளர்த்த தமிழ்ப்பண் இடம் பெறுகிறது என்ற நீண்ட ஒரு பட்டியலைத் தருகிறார்.

"'புலையன்' என்ற சொல் உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழியவில்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

இளையராஜாவின் திருவாசக சிம்பொனியில் எங்கெல்லாம் "புலையன்" என்ற சொல் வருகிறது என்று காண்பிக்கிறார். பின் வேதம், வேள்வி, அசுரர், முனிவர் போன்ற சொற்கள் வரும் இடங்களைக் காண்பித்து இந்த வார்த்தைகள் நெருடவில்லையா, இந்த வார்த்தைகளே இல்லாத திருவாசக வரிகள் இளையராஜாவுக்குக் கிடைக்கவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

பின் இளையராஜாவின் இசை தொடர்பான பல கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக இளையராஜா இசை என்பதே பக்திப் பாடல்களுக்காக என்று சொன்னதை (இளையராஜா - இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம்-ரமேஷுடனான உரையாடல், பக். 64-65) கேள்விக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர்.

கட்டுரையை முடிக்கும்போது இளையராஜா மேற்கத்திய இசையைத் தூக்கி வைப்பதை ஏற்காது, இவ்வாறு முடிக்கிறார்:
நமது மண்ணும், குடி பிறப்பும், வேரும் அருவருக்கத் தக்கதல்ல. பெருமைப் பட வேண்டியது.

நிற்பார் நிற்க, நில்லா உலகில்
நில்லோம் இனி நாம் செல்வோமே
- சிம்பொனி பாடல் 1, தாழிசை 5

போவோர் காலம் வந்தது காண்
பொய் விட்டுடையான் கழல் புகவே
- சிம்பொனி பாடல் 1, தாழிசை 1

என் அருமை நண்பர் தொ.பரமசிவனும் நானும் நண்பர்களும் மேற்கண்ட சிம்பொனி வரிகளைக் கேட்டபோது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள். நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும். இந்த மண்ணின் மணத்துடன், வேர்களுடன், வேர்களைத் தேடி...
-*-

நேற்று ராஜ் டிவியில், மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இளையராஜா திருவாசக சிம்பொனி சிடி வெளியீட்டு விழாவின் ஒளிக்கோவையைக் காண்பித்தனர். கமல், ரஜினி, ஜெய்பால் ரெட்டி, பாரதிராஜா ஆகியோர் பேச்சுக்களிலிருந்து சில துண்டுகளும், திருப்பொற்சுண்ணம் பாடலுக்கான நாட்டியத்தையும், ஒரு பாடலை சேர்ந்திசையாக பவதாரணி + குழுவினர் பாடுவதையும் காண்பித்தனர். இடையிடையே ஒளித்துண்டுகளாக ராஜாவின் கருத்துக்களும் வந்தன.

விழா தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றும்போது கிறித்துவப் பாதிரியார் (பெயர் நினைவில் இல்லை) மிகவும் சங்கடப்பட்டார். இளையராஜா சற்றும் யோசிக்காமல் அவரையும் ஒரு திரியை ஏற்றச் சொல்ல அவர் நழுவி, இளையராஜாவையே ஏற்ற வைத்தார். கடவுள் வாழ்த்து சமஸ்கிருத ஸ்லோக வரிகளுடன் கூடிய இளையராஜா இசையமைத்த "ஜனனி, ஜனனி, ஜகம் நீ அகம் நீ" என்னும் பாடல், பவதாரணி பாடினார்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் பார்த்தனர் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாகத்தான் SCVஇன் அடாவடித்தனம் நீங்கி எனது set-top boxஇல் ராஜ் டிவி சானல் கிடைக்கிறது.

30 comments:

  1. மம்மதுவும் கட்டுரையை (பிரச்சனை இல்லையெனில்) இங்கே தந்தால் நன்ற்றியுடையவனாய் இருப்பேன். ஞாநி/சாரு போல, வேற்று polemicsகளாக இல்லாமல், ஆழமான ஒரு விமரசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஞாநி மீதான என் முக்கிய விமரசனமே அவருக்கு வெறுப்பின் வேகத்தில் இத்தகைய கேள்விகள் எதுவுமே வரவில்லை. சமணர்களை கழுவிலேற்றிய சைவப்பிரதியை ஒரு தலித் 21ஆம் நூற்றாண்டில் நவீனப்படுத்துவதன் முரணோ கேள்வியோ இல்லாமல், கணடதையும் மோசடி என்று ஒளரி தன் வெறுப்பை மட்டுமே கொட்டியதுதான் ஞாநியை அடையாளப்படுத்துகிறது.

    ReplyDelete
  2. "விழா தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றும்போது கிறித்துவப் பாதிரியார் (பெயர் நினைவில் இல்லை)..."

    அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்....மிக சிறந்த பேச்சாளர்....

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  3. வசந்த்: நாளை ஸ்கேன் செய்து பக்கங்களை தனியஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.

    சிவா: அது நிச்சயமாக காஸ்பர் ராஜ் இல்லை. வேறு ஒரு பாதிரியார். காஸ்பர் ராஜ் முகம் எனக்கு நன்றாகவே தெரியும்.

    ReplyDelete
  4. இந்த விழாவை தொகுத்து வழங்கியவரை பற்றி ஒரு வரியும் இல்லையே. அவர் நல்ல தமிழில் பேசினாரா, இந்த விழாவின் சாராம்சத்தை உள்வாங்கி பேசினாரா? கடவுள் வாழ்த்து பாடிய பவதாரணி அந்த பாடலை நன்கு உள்வாங்கி பாடினாரா? காஸ்பர் ராஜுடன் நான் பேசியிருக்கிறேன். என்ன அவர் காஸ்பர் ராஜ் இல்லையா, அட அவருடனும் நான் பேசியிருக்கிறேன்.

    - சிம்னி (புகை கூண்டு)

    ReplyDelete
  5. Badri: //வசந்த்: நாளை ஸ்கேன் செய்து பக்கங்களை தனியஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்//

    appafdiyee sudamini at gmail dot com -ukkum pileeeeeeeeeese!

    ReplyDelete
  6. நாளை ஸ்கேன் செய்து பக்கங்களை தனியஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்

    a copy to mugamoodi@hotmail.com please

    ReplyDelete
  7. enakkum: balaji_cheenu@yahoo.com

    Thanks, Badri.

    ReplyDelete
  8. enakkum: balaji_cheenu@yahoo.com
    Thanks in advance.

    ReplyDelete
  9. Badri: //வசந்த்: நாளை ஸ்கேன் செய்து பக்கங்களை தனியஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்//
    enakkum: srirangan@t-online.de

    Thanks, Badri.

    Sri Rangan

    ReplyDelete
  10. பாவம் பத்ரி :)

    ReplyDelete
  11. செகத் கசுபர் கத்தோலிக்க பாதிரியார்.!
    கத்தோலிக்க கிறித்தவ பாதிரி மார்கள் குத்து விளக்கேற்ற சங்கடப் படவே மாட்டார்கள்.

    //"விழா தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றும்போது கிறித்துவப் பாதிரியார்....//

    இவர் வேறொருவராகத்தான் இருக்க முடியும். அவர் பிற கிறித்தவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    முடிந்தால் எனக்கும் ஒரு பிரதி..[மம்மது]

    //பாவம் பத்ரி :)//?

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. பத்ரி - இசை ரீதியாக திருவாசகத்தை விமர்சிக்கும் (முழு) விமர்சனத்தை நான் இன்னும் கண்டேனில்லை. இதில் ஒரளவுக்காவது அப்படியிருக்கும் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பும்பொழுது என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. Lighting Kutthuvillaku in some general function is a south indian style regardless of relgion
    I am sure that the Christian priest hesitated due to humblesness rather than connecting this to any relgious procedure

    ReplyDelete
  15. Badri: //வசந்த்: நாளை ஸ்கேன் செய்து பக்கங்களை தனியஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்//

    அப்படியே எனக்கும் ப்ளீஸ்.

    tulsigopal@xtra.co.nz

    ReplyDelete
  16. enakkum oru CC
    kavirajanr@gmail.com
    Thx in advance

    ReplyDelete
  17. //Lighting Kutthuvillaku in some general function is a south indian style regardless of relgion//
    அய்யா அனானி, வாங்க வணக்கம்..மதச்சார்பற்ற அரசாங்கம்னு சொல்லிக்கிட்டு எல்லா விழாக்களையும் குத்துவிளக்கேற்றி இந்து மத முறைப்படி கொண்டாட வேண்டியது.. அப்புறம் அதையே தென்னிந்திய வழக்கம்னு பொதுமைப்படுத்திட வேண்டியது. குத்துவிளக்கு ஏத்தக்கூட இந்தியாவுல இருந்துக்கிட்டு தயங்கற அளவு மதவெறி அவர்கிட்ட இருந்ததைப்பார்த்தீங்களா, இந்துக்கள்கிட்ட அப்படி இருக்கான்னு போற வர்ற இடமெல்லாம் வெறுப்பை விதைக்க வேண்டியது..அதனால விளக்கேத்தறதை இந்திய வழக்கம்னு சொல்லி இந்து வழக்கத்தை மத்தவங்கமேல திணிக்கற வன்முறையை கைவிட முயற்சி பண்ணுவோம்..

    ReplyDelete
  18. Thx for the scanned article. First time uruppadiyana vimarsanam. hope raja also reads it. many of the criticisms are valid and constructive unlike gnani and charu (he is sure biased dont know for what reasons).

    ReplyDelete
  19. பத்ரி,ஆக்கத்தை ஸ்கேன் பண்ணிப்போட்டு நமது விருப்புக்கு உதவிய உங்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
    அன்புடன்
    ப.வி.ஸ்ரீரங்கன்

    ReplyDelete
  20. பத்ரி, கட்டுரையை வலையேற்றியதற்கு நன்றி

    மம்மது அவர்களின் கட்டுரை, திருவாசக இசைக்கோர்வை மீதான விமர்சனமோ அல்லது, இளையராஜாவின் பொதுவான திரை இசை குறித்த விமர்சனமோ அல்ல. " ஓதுவார்கள் ஒத்துவரமாட்டார்கள்" என்று இளையராஜா கொடுத்ததாகச் சொல்கிற ஸ்டேட்மெண்ட்டுக்கான எதிர் வினையே. இளையராஜா, தன்னுடைய பிறப்பு அடையாளங்களைத் மறைத்துக் கொண்டு, மேட்டுக் குடியினருடன் ஐக்கியமாக முயல்கிறார் என்கிற குற்றச்சாட்டு, கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அந்தக் குற்றச்சாட்டை மீண்டும் ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார், மம்மது.

    ReplyDelete
  21. மம்மதுவின் கட்டுரையை வாசிக்கத் தந்ததற்கு நன்றிகள் பத்ரி!

    ReplyDelete
  22. அண்ணே எடுத்துக்கொண்டேன் நன்றி ;-)

    ReplyDelete
  23. கட்டுரை கிடைத்தது பத்ரி.

    மிகவும் நன்றி.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  24. you are right in "theruthondan"
    come to think of it.. Yes its just to create some inconvience to the christian priest they would have asked to light the kuthuvilaku..
    The whole celebration could have been done in a differnt way...
    None of the VIPs did contribute anything to this effort .. and just to create a commercial value they invited all sorts of so called VIPs into the function.. /.\

    ReplyDelete
  25. மம்மதுவின் கட்டுரைக்கு மிகவும் நன்றி. அவருக்கென்று ஒரு அரசியல் மற்றும் தமிழ் சார்ந்த சட்டகம் இருப்பினும், எந்த வித காழ்ப்பிற்கும் இடமின்றி எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. இளயராஜா அதை படிப்பாரா, படித்தாலும் உள்வாங்குவாரா என்பது மிகவும் சந்தேகமே!

    மம்மது தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் எங்கேயும் அது ஆத்திரமாய் மாறாததையும், அவருடய ஏக்கம் எல்லாம் இளயராஜா இன்னும் செய்ய வேண்டும் என்று இருப்பதையும் புரிந்துகொள்ளலாம். மேலும் ஆப்ரகாம் பண்டிதர் என்று தொடங்கிய மரபில் அவர் இளயராஜாவை இறுதியில் வைப்பதையும் காணலாம். இதை படிக்க தந்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  26. "Kanal Pakkangal" Writer Chella gave a nice analysis on Ilayaraja Thiruvasakam controversy. Visit http://www.kanal-pakkangal.com . He gave fitting reply to Charu and Gnani.

    ReplyDelete
  27. நன்றி
    வசந்த் கூறியிருப்பவையே என் கருத்தும்.

    ReplyDelete