இந்த வாரம் முதல் ஆனந்த விகடனில் மூன்று புதுத் தொடர்கள் தொடங்கியுள்ளன. பா.ராகவன் சில உலக அரசியல், சமூக நடப்புகள் பற்றியும், சொக்கன் சில ஆசாமிகள் பற்றியும் எழுதுகின்றனர். சொக்கன் ஒசாமா பின் லேடனில் தொடங்குகிறார்.
வைரமுத்து கருவாச்சி காவியம் என்று ஒரு கதைத் தொடரை எழுதுகிறார். (இவரது முந்தைய விகடன் தொடரான கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாதெமி பரிசு வாங்கியது.) இது ஞானபீடத்தைப் பெற்றுத் தருகிறதா என்று பார்ப்போம்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
பத்ரி
ReplyDeleteநம்பினால் நம்புங்கள். வைரமுத்து மீது எனக்கும் தனிபட்ட மரியாதை உண்டு. அவருடைய கடும் உழைப்பை கண்டு வியந்து இருக்கிறேன்.
ஆனால் அவர் மீது மாற்று கருத்துகள் பல உண்டு. கள்ளிகாட்டு இதிகாசம் நல்ல படைப்பு. ஆனால் தன்னுடைய செல்வாக்கை பயன் படுத்தி அவர் சாகித்ய அகாடமி விருதை வாங்கினார் என்பது பரவலான கருத்து, அதுமட்டும் அல்ல அந்த கருத்தை பிரபல எழுத்தாளர் என்னிடம் பகிர்ந்தும் கொண்டார். அந்த எழுத்தாளரும் பல விருதுகள் பெற்றவர். பல விருதுகளுக்கு நடுவராக இருந்தவர்.
வைரமுத்து தன்னுடைய கடுமையான உழைப்பினால் நன்கு முன்னேறி பல வெற்றிகளை குவித்தவர்.
ஆனால் இன்றைய இளைஞர்களின் வெற்றிகளை மனம் உவந்து பாராட்டாதவர், அதனை தட்டி கொடுத்து ஊக்க படுத்தும் குணமும் அவரிடம் இல்லை.
தவறாக எழுதி இருந்தால் என்னை மன்னிக்கவும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
மயிலாடுதுறை சிவா, உன் சலம்பலுக்கும் பீலாவுக்கும் ஈகோவுக்கும் ஒரு அளவே இல்லையா
ReplyDeleteMr யாரோ or Badri , முதலில் வைரமுத்துவின் அத்தனை படைப்புக்களையும் படித்துப்பாருங்கள், பிறகு அவருக்கு ஏன் கொடுத்திருக்ககூடாது என்பதை விளக்குங்கள், யாருக்கு கொடுத்திருக்கலாம் என்பதையும் சிபாரிசு செய்யுங்கள்..
ReplyDeleteஎங்களைப் போன்ற பாமரர்களும் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் என்ன குறை என்பதை தெரிந்து கொள்கிறோம்
ரெமோ நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி யாரோவிடம் இல்லை, சிவாவிடம். நீங்கள் கேட்ட அதே கேள்வியைத்தான் யாரோவும் வேறு வார்த்தைகளில் சிவாவை பார்த்து கேட்டிருக்கிறார்.
ReplyDeleteஞானபீடமெல்லாம் பார்ப்பனர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கே கிடைக்கும். வைரமுத்து அதைச் செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteதலித் ரெமோ
மாயவரம் சிவாவின் வலைப்பூவையும், பின்னூட்டங்களையும் தவறிப் போய் கண்ணில் பட்ட ஒரு மிக முக்கிய தமிழக பெரும்புள்ளி என்னிடம் கேட்டார் - 'அமெரிக்காவுக்கு போயும் இந்தாளுக்கு மண்டையில் மசாலா இல்லையே' என்று. எனவே தோழர்களே கண்டு கொள்ள வேண்டாம். இப்படி தான் பெரிய ஆட்களை தனக்கு நெருக்கமாக தெரிந்த மாதிரி கதை விடும் ஆசாமி. இவர் சொல்லும் பிரபலங்களிடம் போய் கேட்டால் இப்படி ஒரு பெயரையாவது அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்பது விளங்கி விடும். கண்டுக்காதீங்கோ. உலகத்திலேயே தான் மட்டும் தான் அதி புத்திசாலின்ற நெனப்பு. விட்டுத் தள்ளுங்க.சாகித்ய அகாடமின்னா என்ன, எந்த ரீதியில் அந்த பரிசு கொடுப்பாங்கன்னு தெரியுமான்னு கேளுங்க பார்ப்போம். ஒரு பிரபல எழுத்தாளர் இவர்கிட்ட வந்து சொன்னாராம். யப்பா. பில்டப் கொடுக்கிறதுக்கும் எல்லையே இல்லாம போய்டிச்சிப்பா. உட்டாக்க தோள் மேல உட்கார்ந்துகிட்டு காதிலே 'அள்ளி' ஊத்துவாரு போல.
ReplyDeleteயோவ் பத்ரி! வைரமுத்து, சொக்கன் ஆகியோரின் தொடர்களைப் படித்தேன். இணையத்தில் பா. ராகவன் தொடர் இல்லையே? அது வேறு பத்திரிக்கையா? சரியாகப் பார்த்துச் சொல்லுமய்யா. (மாயவரத்தான், மன்னார்குடி என்றெல்லாம் பெயர் இருக்கும் போது நான் சென்னைவாசி என பெயர் வைத்துக் கொள்ளக் கூடாதா?)
ReplyDeleteயோவ் வெண்னை சென்னைவாசி, இங்கே பாருமய்யா...
ReplyDeletehttp://www.vikatan.com/av/2005/aug/21082005/av0203.asp
யோவ் செவ்வாய்கிரகத்தான்! உங்க கிரகத்திலயும் இண்டர்நெட் கனென்ஷன் கொடுத்துட்டாரா தயாநிதி மாறன்? நீ சொன்ன இணைய முகவரிக்குச் சென்று பா. ராகவனின் கட்டுரை படித்து விட்டேன். அக்கட்டுரையில் இந்துத்துவ நெடி அடிக்கிறது. அது போகட்டும்! எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு வர ஆசையாய் இருக்குறது. விசா இருந்தால் எடுத்து அனுப்பு. நான் அங்கு வர உடனடியாக ராக்கெட் அனுப்பு. சென்னை போரடிக்கிறது.
ReplyDeleteதயாநிதிமாரனா? அவங்க குடும்பத்தினருக்கு இன்னும் செவ்வாய் வரைக்கும் 'வளர்ச்சி' வரவில்லை. அது வரையில் நாங்கள் (செவ்வாய்கிரகத்தவர்கள்) பிழைத்தோம். செவ்வாய் கிரகத்துக்கு விசா தானே? வாருமய்யா. உம்மைப் போன்ற ஆசாமிகளைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். உடனடியாக சுய விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் ((போதிய தபால் தலை ஒட்டி) எனக்கு அனுப்பி வைக்கவும். கூடவே பத்தாயிரம் டாலரை (நல்ல நோட்டாக) வைத்து அனுப்பவும். பரிசீலித்து விசா ரெடி பண்ணுகிறேன். அடுத்த முறை 'டிஸ்கவரி' வரும் போது 'டிக்கி'யில் தொற்றிக் கொண்டு வரவும்.
ReplyDelete