Thursday, August 04, 2005

இட்லி

idli... is sort of white rice cake which they eat by dipping into a red gunge. It is... despicable.
இப்படியாகத்தான் எனது பிரிட்டிஷ் நண்பர் இட்லியைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். இவர் இந்தியாவுக்குப் பலமுறை வந்திருக்கிறார். இந்திய உணவை விரும்பிச் சாப்பிடுபவர். இட்லியைத் தவிர...

அவர் கிடக்கிறார். தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான உணவு இட்லி. உளுந்து, தேவையான அரிசி என்று முன்னர் ஆட்டுரலிலும், இப்பொழுது ஷாந்தா டில்டிங் வெட் கிரைண்டரிலும் (அல்லது பிற பிராண்ட்களிலும்) தினமும் பல லட்சம் டன்கள் அரைபட்டு, மாவாக வழித்துக் கொட்டப்பட்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இருந்தால் அவ்வளவாகப் புளிக்காமலும் இல்லாவிட்டால் புளித்து வழிந்தும், அடுத்த நாள் முதல் நீராவியில் இட்டு அவிக்கப்படும் இட்டவி - இட்டலி - இட்லி.

தெருவோர ஆயா கடை, பிராண்டட் முருகன் இட்லிக் கடை என்று எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கும் இட்லி. ரயில் பயணங்களில் மிளகாய்ப்பொடியுடன் ஒரு லிட்டர் எண்ணெயில் முழுகி இருக்கும் இட்லிகள், வெங்காயத் துவையலில் பிரட்டப்பட்ட இட்லிகள், சரவணபவனில் கொதிக்கும் சாம்பாரில் முழுகி இருக்கும் மினி இட்லிகள் அல்லது முழு இட்லிகள். வெள்ளை சட்னி, பச்சை சட்னி, சிகப்புச் சட்னி என்று சுற்றிவரப் பல சட்னிகள். சாதி மத பேதம் இன்றி அனைவர் வீடுகளிலும் உருவாக்கப்படும் இட்லிகள்.

காலையில் ஏதாவது உணவகத்துக்குப் போனால் முதலில் ஒரு பிளேட் இட்லி ஆர்டர் செய்துவிட்டு அடுத்து என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கும் அளவுக்கு தமிழர்கள் வாழ்வில் இட்லியும் தண்ணீர் குடிப்பதைப் போல ஓர் அங்கமாகி விட்டது.

எனக்கு ஒரு விபரீத ஆசை. ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை இட்லிக்களை உருவாக்குகிறோம், சாப்பிடுகிறோம் என்று கணக்கிட முடியுமா? புள்ளிவிவரவியல் நிபுணர்கள் இதை எப்படிச் செய்வது என்று வழி சொல்வார்களா? ORG-MARG, TNS-MODE என்று யாரையாவது அணுகினால் சிரிப்பார்களா?

14 comments:

  1. அதில் எத்தனை செரிக்கிறது, வெந்தது எத்தனை, வேகாதது எத்தனை - இதையும் சேர்த்து கணக்குபண்ணலாமே :)

    ReplyDelete
  2. Not only in TN. Idly is a hot breakfast/lunch/dinner item in Karnataka too.

    Read about Idly Bazaar in Bangalore at

    http://www.thehindu.com/thehindu/mp/2005/07/12/stories/2005071200410400.htm

    ReplyDelete
  3. // அதில் எத்தனை செரிக்கிறது, வெந்தது எத்தனை, வேகாதது எத்தனை - இதையும் சேர்த்து கணக்குபண்ணலாமே :)//

    //அப்ப விஜயகாந்த் தான் சரியான ஆள் //

    :-)

    ReplyDelete
  4. //அப்ப விஜயகாந்த் தான் சரியான ஆள் //

    ;-)

    ஆனா எங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லாத உணவுப்பண்டம்.

    ReplyDelete
  5. Badri,
    Did you read Ambai's short story 'vIttin mUlaiyil oru samaiyalaRai' lately? :) Number of dOsais made by a housewife whose world doesn't extend beyond kitchen is counted in the story.
    There can be a idly vs dOsai counting contest

    ReplyDelete
  6. Related topic.. check this out!

    http://www.chakkarapani.com/main/articles/art_tamil_idli.html

    ReplyDelete
  7. சுடா இட்லி சாப்பிடனும் போலிருக்கு!!

    ReplyDelete
  8. இலங்கைத் தமிழர்கள் தோசை, அப்பம் சாப்பிடும் அளவுக்கு இட்லி சாப்பிடுவதில்லை.

    ReplyDelete
  9. பர்கர், பிஸா போன்ற அந்நிய உணவுக் கலாச்சாரத்துக்கு எதிரான சுதேசிப் போர் தொடங்கிவிட்டது..தொடரட்டும் தோசை, இடியாப்பம்,பொங்கல், உப்புமா புகழ்!

    ReplyDelete
  10. Aiyo idli saapidanum pola irukke ippo. Indha oorla kidaikaadhu and I don't have any grinder or mixer or any such thing here. Indha maadhiri padhivellam podaadheenga inime, please.

    ReplyDelete
  11. உஙகள் இட்லி பற்றிய கருத்து மல்லிகைப்பூ மாதிரி இருந்தது

    நாகூர் ரூமி

    ReplyDelete
  12. //ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை இட்லிக்களை உருவாக்குகிறோம், சாப்பிடுகிறோம் என்று கணக்கிட முடியுமா?//

    அப்போ பொழுது போகாத பொம்மு, கின்னஸ் கிச்சாமி மாதிரியான ஆளுங்களை தான் கூப்பிடணும்.

    ReplyDelete