தீம்தரிகிட ஞாநி முதல் சாரு நிவேதிதா வரை எல்லோரும் எழுதிவிட்டார்கள். இதில் ஞாநி அபத்தத்தின் உச்சக்கட்டம். சாரு அவுட்லுக் பேட்டியைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் எழுதியது. இதைத்தவிர இணையத்தில் சகலமானோரும் எழுதிவிட்டார்கள்.
ஆனால் முதல்முறையாக உருப்படியாக இளையராஜாவின் திருவாசகம் குறுந்தட்டில் என்னென்ன குளறுபடிகள் உள்ளன என்பதை விஷயம் தெரிந்த நண்பர் நாக.இளங்கோவன் திண்ணையில் எழுதியுள்ளார். எனக்கு திருவாசகம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் இசையைக் கேட்கும்போது இந்தப் பிரச்னைகள் தெரியவரவில்லை. இளங்கோவன் சொல்வது அத்தனையுமே ஏற்கக்கூடியதாக உள்ளது.
Pac-Man வீடியோ கேம்
3 hours ago
அபத்தத்தின் உச்சகட்டமான 'அந்த' கட்டுரையின் லிங்க் ப்ளீஸ்!
ReplyDeleteantha apaththak katturai: http://www.keetru.com/literature/essays/jnani.html
ReplyDelete--Soundar
http://soundar.blogsome.com
நாக.இளங்கோவனின் கட்டுரை அருமை.
ReplyDeleteBadri
ReplyDeleteI listened to it partly over a phone.
I am not all impressed by what I heard. It sounds like a Church (choir)
music and to me it doesn't fit in.
I have also read Gnani and Naga. I am glad at least a few persons are loooking at it differently.
I think most people are praising just
because it is Ilayaraja's.
நாக.இளங்கோவனின் விமர்சனம் ஒருபக்கச் சார்பாக இல்லாமல் விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது.
ReplyDeleteநன்றி பத்ரி.
நான் இதுவரை ஞாநியை வாசித்ததில்லை. அவருடைய எழுத்தில் ஒரு நெருப்பு இருப்பதை உணர முடிகிறது. எரித்துவிட்டார் இளையராஜாவை :) அவரது கருத்துக்கள் அபத்தம் என்றுப் புறந்தள்ளிவிட முடியாது. பலரும் அவ்வாறு கூறுவதைப் பார்த்தால் அவரது 'புனிதப் பசு' வாதத்தில் வலு்வுவுள்ளதாகத் தோன்றுகிறது. ஒரு சில வாதங்களைத் தவிர்த்து அவருடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteஇளங்கோவனின் விமர்சனமும் அருமை.
எனது சென்றப் பின்னூட்டத்தில் "அவரது 'புனிதப் பசு' வாதத்தில் வலு்வுவுள்ளதாகத் இருப்பதாகத் தோன்றுகிறது." என்று வந்திருக்க வேண்டும்.
ReplyDeleteIf anyone is interested in what IR has done musicwise, here are some pointers
ReplyDelete(for just a single song ofcourse):
http://launch.groups.yahoo.com/group/ilaiyaraaja/message/13030
http://launch.groups.yahoo.com/group/ilaiyaraaja/message/13072
http://launch.groups.yahoo.com/group/ilaiyaraaja/message/13154
For others I guess there is still a lot left to discuss :-).
arul
ஞாநியும் சாருவும் செய்திருக்க வேண்டிய வேலையை நாக இளங்கோவன் செய்திருக்கிறார். மிகவும் நடுநிலையான விமர்சனம். இனிமேல் ஞாநியின் விமரிசனத்தையும் சாருவின் விமரிசனத்தையும் எவ்வளவு தூரம் நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது கேள்விக்குரியதே!
ReplyDeleteஐயா பத்ரி,
ReplyDeleteஇளையராஜா பிராமனராக இருந்து இருந்தால் நீ அவரை எள்ளி நகையாடுவாயா? கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லவும். உனக்காக நான் காத்து இருக்கிறேன்!
//இளையராஜா பிராமனராக இருந்து இருந்தால் நீ அவரை எள்ளி நகையாடுவாயா?//
ReplyDeleteநல்ல கேள்விதான்..ஆனால் இதையே மாற்றியும் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இளையராஜா மார்பில் ஒரு நூல் இருந்தால் இன்று ஆதரிப்பவர்கள் அப்போதும் இதேபோல் ஆதரிப்பார்களா? அப்படின்னா நம்ம உலகத்துலே படைப்பை விமரிசிக்கறதில்லையா? ஆள் யாருன்னு பார்த்துத்தான் எல்லோரும் பேசறாங்களா? ஆஹா.. என் கண்ணைத் திறந்தீங்க "ப்ரா"மணரே!
"வாடி என் கப்பக்கிழங்கே" (வரிகளை விட்டுடுங்க) டியூன்ல இருந்த ஈர்ப்பு திருவாசகத்துல இல்லையே. ஒருவேளை மக்களுக்கும் திருவாசகத்துக்கும் தொடர்பே இல்லையோ என்னவோ?
திருவாசகம் மட்டுமில்லைங்க, தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை எதுவுமே எனக்குப் புரிவதில்லைங்க..
இவண்,
மண்ணாங்கட்டி