பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ராபின் குக் நேற்று மாரடைப்பால் காலமானார்.
டோனி பிளேர் ஈராக் மீது படையெடுத்ததைக் கண்டித்து தன் வேலையை ராஜினாமா செய்த குக் தொடர்ந்து பத்திரிகைகளில் லேபர் கட்சி அரசின் செயல்பாடுகளை விமரிசித்து வந்தார். 7/7 லண்டன் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து வெளியான வலதுசாரிக் கருத்துகளுக்கு மத்தியிலே எதிர்க்குரல் எழுப்பிய வெகு சிலரில் ராபின் குக் இருந்தார்.
டோனி பிளேர் அரசின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை இனி எதிர்த்து வலுவாகப் போராடக்கூடிய திறமை, ஆளுமை அவரது கட்சிக்குள் யாருக்கும் இல்லை. இது உலகுக்கு நல்லதல்ல.
கார்டியன் இரங்கல்: ஒன்று | இரண்டு | மூன்று
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
//டோனி பிளேர் அரசின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை இனி எதிர்த்து வலுவாகப் போராடக்கூடிய திறமை, ஆளுமை அவரது கட்சிக்குள் யாருக்கும் இல்லை. இது உலகுக்கு நல்லதல்ல.//
ReplyDeleteராபுன் குக் போன்றவர்கள் பதவியில் இருந்தபோதே கூட டோனி ப்ளேரின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் குறையவில்லை. ராபின் குக்கின் மறைவு, உண்மையில் சமாதான நடுநிலையாளர்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்புதான்.