Wednesday, March 04, 2009

பாகிஸ்தான் புதைகுழி

மும்பைமீது பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானைப் பற்றி எழுத ஆரம்பித்து, தொடரமுடியவில்லை. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை பாகிஸ்தானின் நிலை மேலும் புதைகுழிக்குள் போயுள்ளது. மீளவே முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதச் சுழலுக்குள் சிக்கிச் சீரழிந்துபோகத் தொடங்கியுள்ளது அந்த நாடு. அதன் தாக்கம் இந்தியாமீது கடுமையாக இருக்கும். ஆனால் எப்படி இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுத்து நிறுத்துவது என்பதற்கும் நம்மிடம் தெளிவான உபாயம் இல்லை.

பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதல்ல அது என்றுமட்டும் எனக்குத் தோன்றுகிறது. எல்லைப் பாதுகாப்பை அதிகரிப்பது என்ற தட்டையான ஓர் உபாயத்தை மட்டும்தான் என்னால் யோசிக்கமுடிகிறது. ஆனால் அது எவ்வளவு கடினம், கடல்வழி, தரைவழி என எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்களை நாம் கண்காணிக்கவேண்டும் என்று நினைக்கும்போது பகீரென்கிறது.

பாகிஸ்தான் உருவான முதல் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு செயல்படும் குடியாட்சி என்ற நிலையிலிருந்து நழிவிவிட்டது. பிறகு, செயல்படும் தேசம், செயல்படும் இறையாண்மை என்பதிலிருந்தும் இப்போது முற்றிலுமாக வழுவிவிட்டது. யார் யாருக்கு அடிபணிகிறார்கள்? அரசியலமைப்பு முறையில் யார் தலைவர்? யார் நாட்டுக்குப் பொறுப்பு? பாகிஸ்தானிகளுக்கே தெரியாது. கண்ணெதிரே ஒரு நாடு நாசமாகிறது. இதற்கு அவர்களிடம் உள்ளூர இருந்த இந்திய வெறுப்பும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் காரணம்.

ஒரு பாசிடிவ் அஜெண்டா இல்லாத நாட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாகிஸ்தானிடம் எந்த பாசிடிவ் திட்டமும் இதுவரையில் இருந்ததில்லை. இந்தியாவிடம் ஏவுகணையா? நமக்கும் வேண்டும் ஒன்று. இந்தியா கோதுமை சப்பாத்தி சாப்பிடுகிறார்களா, சரி, நாமும் அதையே சாப்பிடுவோம், இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடுவோம். அணுகுண்டு ஒன்று செய்தார்களா, நாம் இரண்டு செய்வோம்.

ஆனால் இந்தியாவின் பிற எந்த உள்நாட்டு தொழில்முனையும் முயற்சியைப் போன்றும் பாகிஸ்தானில் எதுவுமே நடக்கவில்லை. பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தபோது எனக்குக் கிடைத்த பெரும் அதிர்ச்சி, அவர்களது மிகப்பெரிய மாநிலமான பஞ்சாபில் நிலவிய கடுமையான நிலப்பிரபுத்துவ நிலை. நிலப்பங்கீடு என்ற ஒன்று பாகிஸ்தானில் நடைபெறவே இல்லை. இந்தியாவிலும் பல மாநிலங்களின் இது இன்றும் ஒழுங்காக நடைபெறவில்லை என்றாலும் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் உள்ளது.

என் பாகிஸ்தானிய நண்பருடன் நாங்கள் காரில் பல இடங்களுக்குச் சென்று வந்தபோது ஆங்காங்கு காங்கிரீட்டால் செய்து இறக்கப்பட்டிருந்த மசூதிகள் முளைத்தபடி இருந்தன. எல்லாம் 1990களின் உருவாக்கம். இந்தியாவில் தாராளமயம் நுழையும் நிலையில் பாகிஸ்தானில் வஹாபியிசம் சவுதி அரேபியப் பணம், சவுதி அரேபிய காங்கிரீட் மசூதிகள் மூலமாக இறங்கின. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே கல்வியில் வெகுவாகப் பின்தங்கியிருந்தாலும் இந்தியா தட்டித் தடுமாறி ஏகப்பட்ட பணத்தை ஒருவழியாக அடிப்படைக் கல்வியில் போடத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் அரசு, இதைப் பற்றி கவலைப்படவேயில்லை.

அதனால் பெரும்பாலான ஏழைகள் பிள்ளைகளை மதரஸாக்களுக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள கல்வி நிலை மோசமானது என்பதைத் தவிர வேறெதையும் சொல்லமுடியாது. வெறுப்பைச் சொல்லித்தருவது என்பது பாகிஸ்தானின் அரசுப் பள்ளிகளிலேயே நடக்கும்போது, மதரஸாக்களைப் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அடுத்த கட்டம் தாலிபன்களின் உருவாக்கம். இன்று அதே தாலிபன்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியைத் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.

மற்றொரு பக்கம் எதிராளியை அழிக்க எந்த மாதிரியான அறமற்ற முயற்சியையும் கையாளலாம் என்ற எண்ணம். இதுவும் தீவிர மதநம்பிக்கையாளர்களிடமிருந்தே வருகிறது. இந்தியாவை அழிக்க என்று பாகிஸ்தான் உருவாக்கிய லஷ்கர்-ஈ-தோய்பா என்ற வளர்த்த கடா இன்று பாகிஸ்தானின் மார்பிலும் முகத்திலும் பாய்கிறது.

சர்தாரி-ஷெரீஃப் அரசியல் பிரச்னைகள், சர்தாரி-கியானி உறவு, ராணுவம்-ஐ.எஸ்.ஐ உறவு, ஐ.எஸ்.ஐ-தீவிரவாதிகள் உறவு, தீவிரவாதிகள்-மத அடிப்படைவாதிகள் உறவு என்று பாகிஸ்தான் முழுக்க கெட்ட சக்திகள், பிரச்னைகள் நிரம்பியுள்ளன. இன்றைய பாகிஸ்தான் இருக்கும் வலுவிழந்த நிலையில் எந்தப் பிரச்னையையும் அதால் தீர்க்கமுடியாது.

இதன் தர்க்கபூர்வமான முடிவு பாகிஸ்தான் இரண்டு அல்லது மூன்றாக உடைபடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி நடைபெறும் பட்சத்தில் உள்நாட்டுப் போர் நடக்கும். வடமேற்குப் பிராந்தியம் பிரிந்து ஆஃப்கன் பழங்குடிக் குழுவினர் அடங்கிய ஒரு நாடாக மாற விரும்பும். பலூசிஸ்தான் பிரியத் துடிக்கும் ஒரு பகுதி. இவை நடந்தால், பஞ்சாபையும் சிந்தையும் சேர்த்து வைப்பது என்பது எளிதல்ல. முதலாமது ஷெரீஃப் நாடாகவும், இரண்டாவது சர்தாரி நாடாகவும் போகும். அப்போது ராணுவம் என்ன நிலையை எடுக்கும்? அமெரிக்கா என்ன நிலையை எடுக்கும்? காஷ்மீரப் போராளிக் குழுக்கள் என்ன நிலையை எடுப்பார்கள்? இந்திய எதிர்ப்பு ஜிஹாதிக் குழுக்கள் என்ன நிலையை எடுப்பார்கள்?

எனவே இந்தியா என்ன நிலையை எடுக்கவேண்டும்?

இதற்கு இந்தியா நிறைய Game Theory மாதிரிகளைச் செய்து பார்க்கவேண்டும். அதற்கு ஏற்றார்போல, இந்தியா தனது பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

***

பாகிஸ்தானில் இருக்கும் புத்தியுள்ளவர்கள் பெரும்பாலும் நாட்டைவிட்டு ஓடப் பார்ப்பார்கள். அங்கே இருந்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும் அல்லது உயிர் போகும் என்பது இன்று சத்தியமாகிவிட்டது. அங்கே வசிக்கும் என் பல நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

17 comments:

 1. // மீளவே முடியாத இஸ்லாமியஅடிப்படை வாதம் //

  //இஸ்லாமிய அடிப்படைவாதமும் காரணம் //

  இது குறித்து விளக்கி ஒரு தெளிவான பதிவு போடுங்களேன்.ப்ளீஸ்.....

  உள்நோக்கம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

  ReplyDelete
 2. நீங்கள் கூறிய எல்லா கருத்துக்களையும் நானும் ஏற்று கொள்கிறேன்.
  மாற்று கருத்துகள் இல்லை.

  ஆனால் மேற்கூறிய இரண்டு கருத்துகள் எனக்கு புரியவில்லை.

  ReplyDelete
 3. As you have rightly observed, Pakistan is in a state of quagmire. Beyond the hackneyed and trite observations of Pakistan is a failed state, etc, Indian government should make wholehearted efforts to engage Pakistan civil society in combating the evil of fundamentalism. Going by happenings, democratically elected Zardari government is not going to last long and army is surely itching to step in.

  ReplyDelete
 4. அப்படியே நேரம் கிடைக்கும் போது Game Theory பற்றியும் விளக்கவும் இல்லையென்றால் தண்டனையாக நான் விளக்கிவிடுவேன்

  ReplyDelete
 5. மீளவே முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதச் சுழலுக்குள் சிக்கிச் சீரழிந்துபோகத் தொடங்கியுள்ளது.
  brother, it is completely wrong because we never say pakistan is islamic base country like saudi. if u can just go back to read the war between afgan and russia. in this modern high tech world, every body target to get super power... there is no any problem in this regen, we hope india may be get super power...
  i could not explain much about here, anyhow dont use this the word "Islam"

  have a nice day with regards...

  ReplyDelete
 6. இந்தியா game theoryக்களை செய்து பார்பபதா. தெளிவான ஒரு பார்வையே இல்லையே. அண்டை அயலை எப்போதும் பிரச்சனைகளோடே வைத்திருப்பது என்பது இந்தியாவின் ஒரே கொள்கையாக இருக்கிறது. பாக்கிஸ்தான் பிரிவது என்பது மிகுந்த ரத்தம் சிந்தலுக்கு பிறகே நடக்கும். அதை எப்படியும் தடுத்துவிட வளைகுடா நாடுகள் பார்க்கும். அமரிக்கா தன்னுடை நிரந்தர தளமமைக்க எல்லா வழிகளையும் பார்க்கும். சீனா குட்டையை குழப்பும் இதில். இந்தியா வாளாவிருக்கும்.

  ReplyDelete
 7. பாகிஸ்தான் பற்றிய உங்களுடைய கருத்துகள் முற்றிலும் தவறானவை என்பதை அ. மார்க்ஸ் போன்ற அறிஞர்கள் பலமுறை ஐயம் திரிபறச் சிற்றிதழ்கள் வாயிலாக நிறுவியுள்ளனர். பாகிஸ்தானின் சாலை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சி, மதசார்பற்ற கல்வி வளர்ச்சி, பெண் விடுதலைக்கான நடவடிக்கைகள் போன்றவை இந்தியாவைவிடப் பன்மடங்கு சிறப்பாக உள்ளன என்பதைத் தீராநதி போன்ற சிற்றிதழ்களைத் தொடர்ந்து வாசிப்பதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

  ReplyDelete
 8. அன்புள்ள ரெங்கதுரை. என் பதிவுகளின் காமெடி சேர்க்கும் உங்கள் திட்டத்தை வரவேற்கிறேன். நான் எங்கோ படித்ததை வைத்து எழுதும் பஜனையைச் செய்யவில்லை என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தான் சென்று பல நாள்கள் தங்கியிருந்து லாஹோர், இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி போன்ற நகரங்களுக்கும் தட்சசீலம், ஹாரப்பா போன்ற இடங்களுக்கும், இடையில் காரில் செல்லும்போது பல கிராமங்களுக்கும் சென்றுவிட்டு வந்தவன்தான் நான். தினமும் என்னுடன் பேசும் பாகிஸ்தான் நண்பர்கள் இன்னமும் உண்டு. பாகிஸ்தானில் பல ஆண்டுகள் கிரிக்கின்ஃபோ என்ற அமைப்பை நேரடி மேலாண்மை செய்தவன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பல அலுவலர்களோடு நேரடியாக ஃபோனில் பேசியுள்ளவன் (இன்று பஞ்சாபின் கவர்னராக இருக்கும் சல்மான் தசீர் என்ற பிசினஸ்காரருடன் மின்னஞ்சலிலும் ஃபோனிலும் உரையாடியுள்ளேன்...), என்று தைரியமாக என்னைப் பற்றிச் சொல்லமுடியும். வாகா எல்லையில் பாகிஸ்தான் பக்கம் உட்கார்ந்துகொண்டு மாலை கதவு மூடும் செரிமனியைப் பார்த்துள்ளேன்.

  நான் பாகிஸ்தான் சென்று அங்கே மனித உரிமை எப்படி இயங்குகிறது என்று கண்டறிந்து தீராநதியில் கட்டுரை வரைந்திடச் செல்லவில்லை. கிரிக்கெட் பார்க்கச் சென்றேன். இயல்பாக உள்ள ஆர்வத்தால் அங்குள்ள மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அவர்களது நட்பு என்னை வியக்கவைத்தது. தெருவில் உள்ளவர்கள் பெரும்பாலும் அன்போடு அழைத்து தேநீர் குடித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

  பல மக்கள் அதே நேரம், இந்தியா சிந்து நதித் தண்ணீரைத் திருடுகிறது என்று அங்கலாய்த்தனர். அங்கு சாலை வசதிகளைப் பற்றி தயவுசெய்து நீங்கள் எதையும் சொல்லவேண்டாம். நல்ல ஹைவேக்கள் உள்ளன. ஆனால் இன்று இந்திய ஹைவேக்கள் அவற்றை மிஞ்சிவிட்டன. அதைத்தாண்டி சிறு நகரங்களுக்கான சாலைகள் சரியில்லை. முஷரஃப் எழுதிய தன் வாழ்க்கையிலேயே அவர்கள் எவ்வளவு பெரிய சவாலைச் சமாளிக்கவேண்டியுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அங்கே நிச்சயமாக பிச்சைக்காரர்கள் தெருவில் இல்லை. ஆனால் ஏழைமை கடுமையாக உள்ளது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும் என்று நினைக்கிறேன்.

  கல்வி என்பது எவ்வளவு பின்தங்கியுள்ளது என்று அங்கு உள்ள கல்லூரி மாணவர்கள் பலரிடம் கேட்டபோது தெரியவந்தது. தேவையான கல்லூரிகள் கிடையாது. எனவே மேற்கொண்டு படிக்கவேண்டும் என்றால் வேறு நாட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளி அளவில் இது மேலும் மோசம். பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்காமல் இருத்தல் சர்வசாதாரணம். மீறி அனுப்பித்தாலும் பள்ளிக்கே ஸ்வாட் பள்ளத்தாக்கில் குண்டு வைக்கிறார்கள் கடன்காரன்கள்.

  ஆனால் தொடர்ந்து அ.மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் அற்புதமான நடைச்சித்திரிப்புகளைப் படித்து பாலும் தேனும் புரண்டு ஓடும் சொர்க்கபூமி பாகிஸ்தான் என்று நீங்கள் நினைத்தால், வாழ்க நீங்கள்! உங்கள் கனவை நான் ஏன் கலைக்கவேண்டும்?

  ReplyDelete
 9. நண்பர் ரெங்கதுரை: தொழில் வளர்ச்சி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஊசி செய்தல் முதல் ஆயுதம் செய்தல் வரை அனைத்தும் தொழில். இந்தியா எத்தனையோ ஆண்டுகள் தட்டுத்தடுமாறி கார்களை சொந்தமாகச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பெற்றது (டாடா). பாகிஸ்தானில் இன்றுவரை அது கிடையாது. பாகிஸ்தானின் தொழிற்சாலைகள் பலவும் மிகவும் பழமையானவை - உரம், ரசாயனம், பிளாஸ்டிக், இரும்பு என்று எதை உற்பத்தி செய்வதனாலும். இவற்றைப் புதுமையாக்க, செயல்நேர்த்தியைக் கூட்ட, புதிய முதலீடுகள் தேவை. பாகிஸ்தானுக்குள் உள்நாட்டு முதலீடுகள் என்பதே கிடையாது. முஷரஃபின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இது நடந்தது. ஆனால் பின் நின்றுபோனது. இன்று அந்நியச் செலாவணிக்கே சிங்கி அடிக்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானின் விவசாயம் சீரான நிலைமையில் உள்ளது. ஆனால் இதனால் பொதுமக்களுக்கு எந்தப் பயனுமில்லை. காரணம் நிலப் பங்கீடு நடக்காதது. பஞ்சாபில் பெரும் பெரும் குடும்பங்கள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் ஏக்கர் பெறுமான நிலத்தைத் தம் கையில் வைத்துக்கொண்டு அதில் பல கொத்தடிமைகளை வைத்து விவசாயம் செய்கின்றனர். அவர்களது வாக்குகளும் சேர்ந்தே விலை பேசப்படுகிறது. நவாஸ், ஷாபாஸ் ஷெரீஃப்களின் பலம் இங்கிருந்துதான் வருகிறது.

  பிற மாகாணங்கள் பஞ்சாப் அளவுக்கு வளமானவை அல்ல. எனவே இந்தப் பிரச்னை என்பதே இல்லை. பலூசிஸ்தான் பஞ்சப் பிரதேசம். கனிம வளங்கள் மட்டுமே. வடமேற்கு பிராந்தியம் தீவிரவாதம் மட்டுமே விளையும் மலைப் பிராந்தியம்.

  தேவையில்லாத ரொமாண்டிக் டான்ஸ் ஆடுவதை விட்டு சற்றே தள்ளி நின்று உருப்படியான சோர்ஸ் மெட்டீரியலைப் படியுங்கள்.

  ReplyDelete
 10. பாகிஸ்தானின் இன்றைய மேக்ரோ பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள விரும்பினால் இந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படிக்கலாம்.

  http://www.google.com/hostednews/afp/article/ALeqM5ik-OKcqvgnZweCV5-0vPZnFH9nNA

  ReplyDelete
 11. என்னுடன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பனிபுரிகிறார்கள், அவர்கள் பேசும் உருது 90% இந்தி போலவே இருக்கிறது. கேட்டால் இரண்டும் ஒன்றுதான் பிரிட்டிஷ்காரன் இரு மொழிகள் என பிரித்துவிட்டான் என கூறுகிறார்கள், மிகவும் அன்பாக இருக்கிறார்கள். இறைவனிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளார்கள். இவர்கள் நாட்டிலிருந்தா இப்படி கொடிய தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்று தோன்றுகிறது. நல்ல மதபற்றுள்ள முஸ்லிம் நன்பர்கள் அவர்கள். ஆனாலும் ஒரு சில சுயநலவாதிகளால் தீவிரவாதம் ஊக்குவிக்கப்பட்டு நாடு குட்டிசுவராக போகிறது. நம்மை கெடுக்க அரசியல்வாதிகள் என்றால் அவர்களை கெடுக்க ரானுவத்தினர், இம்மாதிரியான ஆட்கள். தங்களுக்கு கிடைத்த நாட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ள தெரியாமல் இந்தியாவிடம் தேவையில்லாத ப‌ங்காளி மனப்பான்மையுடன் நடந்து கொண்டது அவர்களது இன்றைய நிலைக்கு மூல காரணம். இதை பார்க்கும் போது மஹாபாரதத்தின் துரியோதனன் கதை தான் நியாபகம் வருகிறது, பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் தனக்கு ஹஸ்தினாபுரம் என்று கிடைத்த அரசை வைத்துக்கொண்டு அவன் நிம்மதியாக இருந்திருக்கலாம் , அதை விட்டு பாண்டவர்களை அழிக்கிறேன் என்று அவன் தன்னையே அழித்துக் கொண்டான். மொத்தத்தில் கெடுவான் கேடு நினைப்பான் , அதுவே இன்றைய பாக்கிஸ்தான் நிலை, ஆண்டவன் அனைவரையும் பாதுகாக்க வேண்டுவோம்

  ReplyDelete
 12. //
  பாகிஸ்தானில் இருக்கும் புத்தியுள்ளவர்கள் பெரும்பாலும் நாட்டைவிட்டு ஓடப் பார்ப்பார்கள். அங்கே இருந்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும் அல்லது உயிர் போகும் என்பது இன்று சத்தியமாகிவிட்டது. அங்கே வசிக்கும் என் பல நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
  //

  அங்கெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 13. ஏன் வஜ்ரா? பாகிஸ்தானில் நண்பர்கள் இருப்பது பாவமா?

  ReplyDelete
 14. நல்ல பதிவு. நன்றி பத்ரி.

  ReplyDelete
 15. இந்த கட்டுரையும் அதைப் பற்றிய விவாதமும் பாகிஸ்தான் பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

  ReplyDelete
 16. பத்ரி

  பாக்கிஸ்தானியர்களின் பொதுப் புத்தி குறித்த உங்கள் எண்ணம் தவறானது. பாக்கிஸ்தானியர்கள் அனைவரும் அல்லது 90% சதத்திற்கும் மேலே இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து வெளியே வர விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். இதில் ஏதோ மக்கள் எல்லோரும் நல்லவர்கள் அடிப்படைவாதிகள் இல்லாதவர்கள் போலவும் அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் மட்டும்தான் மோசம் போலவும் ஒரு சித்திரத்தை கொணர்கிறீர்கள். அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் எந்த நாடும் உருப்பட வழியேயில்லை. தானும் வாழ மாட்டார்கள் பிறரையும் வாழ விட மாட்டார்கள். பாக்கிஸ்தான் பற்றி ஒரு முன்னாள் ரா அதிகாரியின் சரியான கணிப்பை கீழ்க்கண்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் படியுங்கள்.


  http://timesofindia.indiatimes.com/articlelist/articleshow/4224319.cms

  No love lost

  5 Mar 2009


  Vikram Sood


  Over the years Pakistan has come to believe that the world is beholden to it because it exists. This notion of indispensability allows those in power in that country to be wild, delinquent and dangerous.

  Like the spoilt brat of a rich and doting parent, Pakistan either becomes petulant when it is not granted what it unjustifiably demands or becomes belligerent when it is granted that wish by its benefactor.

  Today, Pakistan has a begging bowl economy; terrorism is its main export. Unending unrest in Balochistan and sectarian violence in Dera Ismail Khan and Dera Ghazi Khan, coupled with a creaking law and order and judicial systems, evoke little confidence in that country.


  பத்ரி கீழ்க்கண்ட பாரா உங்களை மாதிரி பீசெக்குக்களுக்காகவே எழுதியுள்ளார். பத்ரி, பாரா பாய் என்று பேர் மட்டும்தான் போடவில்லை

  There are many in India who are ready to give Pakistan another chance forever. They say Pakistanis are like us but the poor souls are stuck with rotten governments and they need our help to get them out of their predicament.

  It is incredibly naive of us to build policies for our future and security on fond nostalgia, which is mostly one way. They teach their children mostly how to hate India with warped versions of history, even in their mainstream schools.


  It is strange that we still keep telling Pakistanis that we are all alike and have a common culture and so on. The truth is that they do not want to be like us and, quite honestly, we have nothing in common with them. Not anymore.

  First of all, our minority population is more Indian than the minorities there are Pakistani. And our majority too is different from the majority across the border. Pakistanis have never understood, therefore never accepted, the concept of accommodating minorities. Not that we do it perfectly but we do a fairly good job.


  In Pakistan, you are either a Shia, Bohra or an Ismaili or an Ahmediya. Being a woman, a Baloch, a Pushtun, a Sindhi or a Mohajir or a Hindu hari is a curse.

  Only a Sunni Punjabi is a true-blue Pakistani. Arguments with minorities are settled with a bullet. It is difficult for a Pakistani to understand that minorities can also have a say. Our cricket team symbolises our diversity. Pakistan does not have an equivalent of Bollywood and if it did, Hindus would never dominate the industry.


  There are other fundamental differences. They deny history and even geography, we seek our roots in our civilisation. Extremists there cry jihad in the name of god.

  We have room for all faiths at the Dargah in Ajmer Sharif, in Darbar Sahib (whose foundation stone was laid by Mian Mir) or San Thome. Fewer Pakistanis understand that it is easy or natural for an Indian to listen to Jafar Hussain Badayuni's rendering of Amir Khusro's `Bahut kathin hai dagar' or `Ek pita ekas ke hum baarek' by Bhai Maninder Singh and Bhai Jitender Singh or `Jai Madhav Madan Murari' by Jagjit Singh on any morning.


  In Pakistan today, we see images of mullahs leading a march to medievalism. In India, we see the young and exuberant marching into the 21st century. We are still behind the rest of the advanced world but are determined to catch up. Across the border, they wallow in a sense of victimhood, and blame everyone else for their plight.


  In Pakistan, the extremists believe that Islam and democracy are incompatible. Secularism does not exist in the mullah's vocabulary, or even in the minds of some self-proclaimed moderates like General Musharraf.


  So what do we have in common with Pakistan that we yearn for?


  The answer is nothing. We are two different countries with two different kinds of people on two different trajectories and we here should be happy with that.

  Pakistan will strike deals with al-Qaeda, will encourage Lashkar-e-Taiba to carry out attacks on India and will appease the Taliban. It would seem that they have a death wish. It would be prudent for us to take measures now in case Pakistan's wish is granted.


  The writer is a former secretary, Research and Analysis Wing.

  ReplyDelete
 17. இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அனேகமாக எல்லா கட்சிகளுமே ஆதரித்து வருகின்றன. அந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி இருக்கும் என்பதற்கு கீழ்க்கண்ட பேட்டியைப் படியுங்கள் பாக்கிஸ்தான் எந்த திசையில் செல்கிறது என்பது லேசாகவாவது புரியும். இந்தியாவிலும் இந்த நிலை வரும் நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை

  ஆணும், பெண்ணும் சமம் என்பது முட்டாள்தனம்.

  பெண் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. அவளுக்கு ஓட்டுரிமை கிடையாது.

  இஸ்லாமிய தேசத்தில் வாழும் சிறுபான்மையினர் ஜிசியா வரி கட்ட வேண்டும்.
  பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் மதம் மாற்றப் படுவர். கோவில்கள் தரைமட்டம்
  ஆக்கப்படும்.

  இந்தியாவைப் பிடித்து இஸ்லாமிய நாடாக மாற்றிய பிறகு, பௌத்த தேசங்கள் இலங்கை,
  பர்மா இவற்றை மாற்றுவது எளிது. மதம் மாற்ற சிறந்த வழி பயங்கரவாதமே.

  இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அல்லாவிற்கு வேண்டியவர்கள் இல்லை. பல கடவுள்கள்
  கும்பிடுபவனின் அருகில் வாழும் முஸ்லீமும், அவனைப் போலவே ஆகிறான். இஸ்லாம்
  அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் காபிஃர்களே! கைப்பற்றப் பட்ட ஹிந்துக்கள்
  அடிமைகள் ஆவர்.

  அறிவும் தொழில்நுட்பமும் நாகரீகத்திற்கு எதிரிகள்......

  இன்னும் பல......படியுங்கள்.

  *What Islam Wants: Islam's Diabolical Plan According to *Pakistan's *
  Jamat-e-Islami* Party

  18 Aug, 2008

  *Jamhooria** Islamia*, a monthly Baluchi magazine published from Panj-gar,
  published an interview in its 1999 February issue with Maulana Nawabzadaa
  Nabiullah Khan, a confidant of and adviser to Maulana Qazi Ahmed—the Amir of
  the leading Pakistani Islamic party, *Jamaat-e-Islami*. The interview was
  conducted by Jalil Amir. The following constitutes are excerpts from that
  conversation which reveals the fundamentalist ideology and designs of the
  organization and its leader.

  *EQUALITY OF MEN AND WOMEN IS STUPIDITY*

  *Q:* The women issue is very controversial nowadays. Taliban and some
  fundamentalist organizations restrict the freedom of women while some
  progressive Muslim intellectuals are insisting that the women are equal to
  men in all spheres. What are Qazi's views on women?

  *A:* As I said earlier, the Prophet Mohammad's (PBUH) views on women are the
  exact views of Qazi Ahmed and the Jamat. Equality of men and women is
  stupidity. What men can do, women cannot do. Women are weak physically and
  mentally compared to men. Men have to take care of women all the time.

  *WOMEN MUST STAY HOME*

  Women should not have a life outside the family. Education can be provided
  to them, but not to compete with men in public.

  *NO VOTING RIGHTS FOR WOMEN UNDER SHARIA *

  Qazi had said once that when JI comes to power in Pakistan, he will abolish
  the voting rights of women and minorities. Only the Muslim men can
  participate in voting or standing for elections. When I asked the proof from
  Hadiths, he had quoted many Hadiths in support of that. I asked him why is
  it that it is never talked about openly in the public by the Jamaat?
  Qazihad said that the hints are all over the place. But JI did not
  make it a big
  issue since the women who currently have the voting rights may vote against
  JI in the elections if such a thing is said openly.

  *NON MUSLIMS IN MUSLIM COUNTRIES MUST PAY JIZYA*

  *Q:* That brings us to the question of minorities. Will they have to pay
  Jizya tax?

  *A:* Yes. They have to pay the tax. As explained by Qazi Ahmed , the idea of
  Jizya is not protection money. But it is a monetary force on the non-Muslim
  to convert to Islam. Once the Jamaat comes to power, the minorities will be
  induced (forced) to become Muslims either by monetary or psychological
  factors.

  *ALL INDIAN HINDUS WILL BE CONVERTED INTO ISLAM *

  JI is already equating India with Hindus so that the Hindus of Pakistan will
  be forced to become Muslims. This was a very successful strategy during the
  Babri Masjid riots. JI was actively involved in destroying the Hindu temples
  in Punjab and Sindh. We ordered the destruction of the Hindu family property
  too. But our main aim was to destroy the Hindu temples. We wrote in the JI
  pamphlets that destroying each pagan temple makes a Muslim move closer to
  the heaven of Allah. We used the Hadiths in all the pamphlets.
  Babardestroyed the Ram temple in
  Ayodhya because he was a true believer. The same way, every Muslim should
  take it upon himself to destroy the Hindu temples in Pakistan. O! ur idea
  was to encourage the Muslims of India also to destroy the Hindu temples in
  India. But this was not met with much success since the Hindu police in
  India started attacking the Muslims who were doing Allah's duty.

  *Q:* What kind of government does JI envisage for Pakistan?

  *A:* It will be the Sharia government. Sharia will be made our constitution
  so that the eminent Muslim scholars who had completed the schooling in
  Madrasas will be appointed as the Judges in every court. Qazi wanted to make
  the presidium on the same model as the Khalifa. Presently our idea is that
  the entire top leadership of JI as well as all three military Generals will
  be part of the presidium for which the Qazi will be the Khalifa.

  *OUR MOTTO IS CONSTANT JIHAD*

  Our motto is "Constant Jihad". The idea is to keep Pakistan in a constant
  state of Jihad all the time. Qazi's vision is that Pakistan will be!
  thecentre of the new Islamic Empire that stretches from Burma to
  Afghanistan
  and from Srilanka to Tajikistan including Kashmir

  Towards that end, the Jamaat will use all tactics from terrorism in the
  kafir-controlled areas to negotiations in the Muslim controlled areas.
  Already the Jamaat leaders of Bangladesh and amaat leaders of India have
  accepted the primacy of Pakistani leadership in this regard.

  *SRI LANKA** AND **BURMA** WILL BE PRESSURIZED TO CONVERT TO ISLAM*

  *Q:* What about Srilanka and Burma?

  *A:* Both are Buddhist nations. For that matter even Baluchistan and
  Afghanistan were Buddhist once while Sindh and Punjab were Hindu earlier.
  Buddhists are generally weaker in matters of faith. Hence we hope they will
  become Muslim with a little pressure. But that will happen only after
  Jamaatconquers first Pakistan and then India.

  *Q:* What are the plans for India? It looks like the entire India policy of
  the Jamaat revolves around Kashmir.

  *A:* Yes that is true. But that is for a very good reason. See Kashmir is
  like a keystone that sits on top of the arch. It is true that the arch holds
  the entire weight of the keystone. But if you remove the keystone, then the
  whole arch falls down. That is why it is called the keystone. Kashmir is the
  keystone for India. Once you remove that, then India can no longer be
  secular and it will not be a united country either. Once Kashmir is taken
  out, these militancy movements will break India by asking the similar
  freedom for Nagaland, Kerala, Mizoram, Meghalaya, Manipur, Assam, Jharkand,
  Tamil Nadu, West Bengal and Khalistan.

  *INDIA** WILL BE MADE A 100% MUSLIM NATION*

  *Q:* Coming back to the same point, if India was to become many countries,
  how do you deal with the individual Hindu States? They may even become big
  enemies of Pakistan. Or they may again re-group to challenge Pakistan.

  *A:* Given the differences between the nationalities in India, the options
  for Pakistan are endless. Qazi's vision is to make the entire India a 100%
  Muslim Nation. A United India, where Hindus are majority is an impediment to
  that. Like Prophet Mohammad (PBUH) made Muslims out of pagans of Arabia,
  Qazi also wants to make Muslims out of the pagans of India.

  *Q:* This is a great vision since this was not even possible for the Muslim
  dynasties and Moguls who ruled India for the last 700 years.

  *A:* True. That is because they had never really established the Muslim
  Empire. Though the Kings were Muslims, they had entertained the Hindus in
  positions of power. When you make an unequivocal statement that only Muslims
  are voters and declare that India is an Islamic Republic, then automatically
  the people will become Muslims. Little bit of terror had to be applied to
  the heart of Hindus and Christians. I will give you a best example. The
  portions which now constitute Pakistan had 25% Hindu population before
  Independence.

  *TERRORIZATION IS THE BEST CONVERSION TOOL *

  After Independence, a lot of Hindus migrated to India. Yet after the
  migration, the Pakistani Hindu population was 15%. Do you know what is the
  percentage now? It is less than 1%. How was this made possible? How did the
  Hindus convert to Islam in a short span of 20 years whereas for 700 years
  they had never converted to Islam? That is purely because of the terror of
  the Partition.

  That terror forced the Hindus who remained in Pakistan to become Muslims. Pure
  and simple. JI used similar techniques in Punjab and Sindh. Each time a riot
  breaks out in India, we had used that pretext to strike terror among the
  Hindus, Christians and Ahmaddiahs. The similar terror will be at the heart
  of every non-Muslim, both Hindu as well as Christian, in the coming years in
  the entire of India. PRPOHET SUCCEEDED WITH TERROR SO CAN WE Qazi is an
  analytical genius who knows every strategy that was used by Prophet Mohammad
  (PBUH) and which will be and should be used in India to achieve the total
  submission to Allah.

  ReplyDelete