ஒரு மாதத்துக்குமுன் வருண், தான் கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேச்சைப் பேசியுள்ளார். இதன் ஒளித்துண்டுகளைத் தொலைக்காட்சியில் காட்டினர். இது சிடியாகவும் உலா வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் வருண், பாஜக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. வருண்மீது காவல்துறையும் வழக்கு பதிவுசெய்துள்ளது. கைதிலிருந்து தப்பிக்க வருண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு அறிவுரை ஒன்றை அளித்துள்ளது. வருண் காந்தி தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர் என்றும் அவரைத் தேர்தலில் நிறுத்தவேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் பாஜகவிடம் சொல்லியுள்ளது.
The Commission said, “Mr. Gandhi does not deserve to be a candidate” and asked the BJP not to nominate him from Pilibhit constituency for the Lok Sabha polls.இதை நீங்களோ, நானோ சொல்லலாம். பாஜகவின் உறுப்பினர்கள் சொல்லலாம். பாஜகவின் ஆதரவுக் கட்சிகளும் எதிரிக் கட்சிகளும் சொல்லலாம். இந்தியாவில் ஒரு சிலர் மட்டும் சொல்லக்கூடாது. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள், தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர்கள்... போன்ற constitutional பதவியில் இருப்பவர்கள், இதுபோன்ற அறிவுரைகளைத் தருவதிலிருந்து விலகி நிற்கவேண்டும்.
வருண் காந்தி தேர்தலில் நிற்பதை தேர்தல் கமிஷனால் சட்டபூர்வமாகத் தடை செய்யமுடியும் என்றால் அதைச் செய்யவேண்டும். ஆனால் இன்றைய சட்டங்களால் இதைச் செய்யமுடியாது. வருண் காந்தி மட்டுமல்ல, பல கிரிமினல்கள், திருடர்கள், வெளிப்படையாக லஞ்சம் வாங்கியவர்கள், ஏன் கொலையே செய்தவர்கள், மதக் கலவரத்தைத் தூண்டியவர்கள் எனப் பலரும் இன்று ஜாலியாகத் தெருக்களில் உலா வருகிறார்கள். தேர்தலில் நிற்கிறார்கள். மந்திரிகள் ஆகிறார்கள். அங்கெல்லாம் வாயைத் திறக்காத தேர்தல் ஆணையம், இங்கே தனது இயலாமையை வெளிக்காட்டினாலும்...
However, the Commission is conscious of its limitations under the law, as it stands at present, that it cannot impose such disqualification on the respondent and debar him from contesting elections unless he is convicted or held guilty by a competent court of law in an appropriate legal proceeding. In the circumstances, the Commission strongly condemns and censures the respondent, Mr. Gandhi....அத்துடன் நில்லாது தேவையற்ற ஓர் அறிவுரையை வழங்குகிறது.
இதுபோன்ற அறிவுரைகளுக்கு பதிலாக, The Representation of the People Act சட்டத்தில் தேவையான மாறுதல்களை வரவழைத்து, சட்டபூர்வமாக அதிகாரத்தைப் பெறும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபடவேண்டும். காங்கிரஸ் போன்ற கட்சிகள் நிஜமாகவே வருண் காந்தி போன்றவர்களைத் தடுத்து நிறுத்த விரும்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான அதிகாரத்தை வழங்க முற்படவேண்டும்.
தேர்தல் கமிசனின் நடுநிலையை கேள்விக்குறி யாக்கிவிட்டது இந்த கமெண்ட்.
ReplyDeleteVarun says "'I must point out that there are several candidates in the fray even today who have been convicted of or are being tried for crimes which carry a far larger sentence than the one of which I am accused. In fact the papers over the last few days indicate to us that people against whom cases are pending in the context of 1984 riots have also been given tickets by a major political party,'
சிபு சோரேன் போன்றவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகும்போது என்ன செய்து கொண்டிருந்தது இந்த கமிசன்.
Varun says "I cannot help but express my deep disappointment over the unseemly haste in which the Election Commission has passed an opinion without giving me even a fair opportunity to appear in person or through counsel to establish my innocence.".
தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது செய்யப்படும் தவறுகள் தேர்தல் ஆணையத்திடமிருந்து விசேஷ கவனம் பெறுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். The model code of conduct might not have teeth to bite, but does it not even deserve a tongue to speak out?
ReplyDeleteஎன்ன இந்தியாவோ, என்ன Constitution ஓ! கேவலம்.
ReplyDeleteசோனியா காந்தி தான் ஆக்ஸ்ஃபோர்டில் படித்ததாகப் பொய் சொல்லி பிரமாணம் தாக்கல் செய்து போட்டியிட்டாரே, பின்னர் சுவாமி அவர் படித்தது ஆக்ஸ்ஃபோர்டு நகரத்தில் உள்ள ஒரு ஸ்போக்கன் இங்கிலீஷ் டியூட்டோரியல் காலேஜ் டியூஷன் செண்ட்டரில் என்று ஆதாரத்துடன் காட்டியவுடன் தனது பொய்யை மழுப்பிய சோனியா மீது இன்று வரை இந்த தேர்தல் கமிஷனோ அல்லது கோர்ட்டோ என்ன நடவடிக்கை எடுத்தது? தெரிந்தே பொய்யான ஒரு தகவலைத் தந்து கமிஷனையும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி ஃப்ராடு சோனியா. அவர் மீது அவர் செய்த ஏமாற்று வேலைக்காக எவனுக்காவது நடவடிக்கை எடுக்க துணிவு இருந்ததா? அப்பொழுது இதே தேர்தல் கமிஷன் இப்படி ஒரு 420 கேசை, இப்படி ஒரு ஃபிராடை, இப்படி ஒரு சீட்டிங் கேசை, இப்படி ஒரு ஏமாற்றுக்காரியை காங்கிரசில் வேட்ப்பாளராக நிறுத்தக் கூடாது என்று சொன்னதா? தஸ்லீமா நஸ்ரீனைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்று எம் பிகளாகவும், எம் எல் ஏக்களாகவும் இருக்கிறார்களே அவர்களையெல்லாம் எலக்ஷனில் நிற்க விடக் கூடாது என்று முஸ்லீம் கட்சிக்கு இதே தேர்தல் கமிஷன் அறிவுரை கூறியதா? நாளைக்கே மூன்று பேர்கள் எரித்துக் கொல்லக் காரணமான கருணாநிதியின் பையன் எம் பி எல்க்ஷனுக்கு நிற்கும் பொழுது இதே கமிஷன் கருணாநிதியிடம் அவரை நிறுத்தாதே என்று சொல்லுமா? ஜகதீஷ டைட்லரும், சிபு சேரனும், ஒவாசி கட்சிக்காரர்களும், மார்கிஸ்டுகளும், தேர்தலில் நிற்கும் பொழுது வருணும் நிற்கலாம். யோக்கியம் பேசவும் இந்த தேர்தல் கமிஷனர்களுக்கு ஒரு யோக்கியதை தராதரம் வேண்டும்
ReplyDelete//
ReplyDeleteஎட்வின் சொன்னது…
என்ன இந்தியாவோ, என்ன Constitution ஓ! கேவலம்.
//
பிறகு என்ன மயி%&க்கு இருக்கிறீர். சவுதி அரேபியா, கியூபா, வட கொரியா போன்ற சுதந்திர நாடுகளுக்குப் போக வேண்டியது தானே ?
தேர்தல் ஆணயத்திடம் அத்தகய அதிகாரம் காங்கிரஸ் கட்சி வழங்கினால் காங்கிரஸில் உள்ள பலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வந்துவிடும். அது காங்கிரஸுக்கே தெளிவாகத் தெரிந்த விஷயம். ஆகவே அதிகாரத்தை வழங்கக்கூடிய கட்சி காங்கிரஸ் என்று நீங்கள் பகல் கனவு காண்பது வீண் என்பது என் தாழ்மையான கருத்து.
ReplyDeleteThe Election Commission has no jurisdiction to take action against Gandhi” for his alleged inflammatory speeches
ReplyDeleteThe model code of conduct comes into effect only after President Pratibha Patil notifies the elections in the official gazette. Till then Gandhi cannot be considered an Election Commission recognized candidate
the commission has acted in haste in moving against Gandhi for violation of the model code of conduct under the provisions of the Representation of Peoples Act 1951.
Only the police can move against him under the Indian Penal Code (IPC) for inciting communal passions
As of now Varun is only a probable candidate and an ordinary citizen against whom action can be taken only under the IPC if he makes inflammatory statements.
The Election Commission has no role to play till the notification of elections by the president
-Former election commissioner GVG Krishnamoorthy
வருண் சொன்னது காங்கிரசின் தூண்டுதலா யாருக்கு தெரியும் பெரிய இடத்து சமாசாரம். உதாரணம் ஸ்ரீ லங்காவில் விடுதலை புலிகளுடன் ஒன்றாக இருந்த கருணா அம்மன் என்பவர் தான் கண்டி தலதாமாளிகை என்னும் பௌத்த வணக்க ஸ்தலத்தை தகர்க்க குண்டு லாரி அனுப்பியவர். விடுதலை புலிகளை விட்டு பிரிந்து வந்ததும் அவர் சொன்னது என்ன தெரியுமா? தலதா மாளிகைக்கு குண்டு வைத்த புலிகளை தேடிப்பிடித்து கொல்ல வேண்டும் என்பதுதான். இப்படி வருண் காந்தி கட்சி மாறி டண்டனக்க வேலை பார்த்தால் என்ன செய்யிரதுங்கன்னோவ்
ReplyDeleteஇத்தகைய அயோக்கியத்தனமான ஒரு தேர்தல் ஆணையத்திடமிருந்து பா.ஜ.க. எவ்விதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்தக் கோமாளித்தனத்தை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதே பா.ஜ.க.வுக்கு நல்லது.
ReplyDeleteplease watch WIN and TAMIZHAN Tv every night ..what the police and EC is doing dont impose pseudo secularism. we are living in a hypocratic system
ReplyDeleteவின் மற்றும் தமிழன் டி.வி யை நான் எப்பொழுது போட்டாலும் கர்த்தரின் ஆசீர்வாதக்கூட்டம், பாவத்தைக் கழுவும் கூட்டம் என்று நடக்கும், இல்லை எவனாவது ஒரு பாதிரியார் வந்து பைபிள் கதையைச் சொல்லிகிட்டு இருக்கிறார்.
ReplyDeleteஇதுவரை வின் மற்றும் தமிழன் டி.விக்கள் இரண்டும் எவாஞ்சலிச டி.விக்கள் என்று தான் நினைத்தேன். இது போன்ற அரசியல் எல்லாம் கூட பேசுகிறார்களா ?
பத்ரி,
ReplyDeleteநீங்கள் சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இத்தகைய “அறிவுரைகளைச்” சொல்லும் சுதந்திரம் தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன்.
இதை காங்கிரஸுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு எனக் கருதாமல், நடுநிலமையான ஒரு நிலையில் இருந்து தேர்தல் கமிஷன் வெளிப்படுத்தியுள்ள கருத்து என்று கொள்ளலாமா?
தேர்தல் காலத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் குறித்துத் தேர்தல் கமிஷன் கருத்துத் தெரிவிக்கும் உரிமை அதற்கு வேண்டும் என்பது என் கருத்து.
”இந்துக்களின் மீது வன்முறை நிகழ்த்துபவர்களின் கையை வெட்டுவேன்” என்று பேசுவது வன்முறையைத் தூண்டும் பேச்சு என்பதில் சந்தேகம் இல்லை. (அவர் அப்படி பேசினாரா என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும்.)
ஆனால், ”காலிஸ்தான் ஆதரவாளர்களும் இந்தியாவின் எதிரிகளும் எனக்கு ஓட்டுப் போடவேண்டாம்” என்று பேச நிஜமாகவே தைரியம் வேண்டும். இதை எல்லா கட்சி வேட்பாளர்களும் சொல்லுவார்களேயாயின் இந்தியா முன்னேறும் நாள் விரைவில் வரும்.
வருணின் மீது சட்டபூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் தரவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.
“The Representation of the People Act” சட்டத்தில் என்ன மாறுதல் கொண்டு வரவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் மேடை தோறும் பார்ப்பனர்களைத் திட்டுகிறவர்களையும், பார்ப்பாத்தி-பார்ப்பான் என்று எழுதுகிற கருநாநிதியையும், தலித்துகளைக் கேவலமாகப் பேசுகிற உயர்சாதி திராவிடர் கழகத் தலைவர்களையும் என்ன செய்திருக்கவேண்டும்? (இவை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குரியவை. சட்டத்தில் எந்தத் திருத்தமும் கொண்டுவர வேண்டியதில்லை.)
இப்படி ஆபாசமாக எழுதும் கருநாநிதியைப் பற்றி மீடியாக்கள் ஏன் வாயையும், ....யும் மூடிக்கொண்டு இருக்கின்றன?
பத்ரி ஏன் இதைக் குறித்து இதுவரை எழுதவில்லை?
வருணைப் பற்றி எலக்ஷன் கமிஷன் தெரிவித்த கருத்தைப் பற்றிப் பேயாட்டம் போடும் மீடியாக்கள், எலக்ஷனுக்கு முந்தைய வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று முல்லாக்களின் ஃபத்வாவும், பாதிரியின் புல்லும் (bull) தரப்படுவதைப் பற்றி ஏன் பேசுவதே இல்லை?
இந்திய அரசியலமைப்பை மீறிய சக்திகளாக கிருத்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு இது.