போன வார குங்குமம் இதழில் இணைய தளங்களின் மூலம் எப்படி ஏமாற்றி காசு பிடுங்குகிறார்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆனால் அதற்கு போடப்பட்டுள்ள புகைப்படம் உங்களுடைய இந்த வலைத்தளம். கொஞ்சம் என்னன்னு விசாரிங்க.அந்தப் பக்கம் இங்கே:
இதில் பக்கத்தில் மேல் கோடியில், லே அவுட்டுக்காக - இணையப்பக்கம் என்று காண்பிக்க - சந்திரயான் பற்றி நான் எழுதிய ஒரு பதிவின் படம் வருகிறது.
மற்றபடி குங்குமம் எடிட்டோரியலில் உள்ள அனைவரும் என் நண்பர்கள்தான்:-) என்னை கேடி லிஸ்டில் சேர்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
தகவலுக்காக மட்டுமே.
அப்போ நீங்க கேடி இல்லையா?
ReplyDeleteநானும் மாயவரத்தானின் பின்னூட்டத்தை படித்து விட்டு குங்குமம் முழுதும் தேடினேன். மேலே லைட்டாக பிரசுரித்ததை எப்படித்தான் கண்டுபிடித்தாரோ?
ReplyDeleteஅது சரி, பொட்டு அம்மனுக்கும் உங்களுக்கு என்ன தொடர்பு?
பத்ரிக்கு நண்பர்கள் இல்லாத இடமே கிடையாது. மகிழ்ச்சியே.
ReplyDeleteஆனால் மாயவரத்தான் என்ன கண்ணு..? யப்பா..??