வேலூர் நகரில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக புத்தக விற்பனை ஷோரூம் திங்கள், 16 மார்ச் 2009 அன்று திறக்கப்பட உள்ளது.
வேலூரில் சில இடங்களில் NHM புத்தகங்கள் கிடைத்தாலும், ஒரே இடத்தில் அனைத்து NHM புத்தகங்களும் கிடைப்பதற்கு இது உதவும். இந்தக் கடையில் (100 சதுர அடி), NHM புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். பிற பதிப்பாளர்களின் புத்தகங்கள் இங்கே விற்பனைக்கு இருக்காது.
முகவரி: புதிய எண் 17, ரெட்டியப்பா முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர் 632 001
VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கடையைத் திறந்து வாழ்த்திப் பேசுகிறார். வேலூர் சன்பீம் பள்ளிகளின் தாளாளர் டி.ஹரிகோபாலன் வாழ்த்துகிறார். திங்கள் அன்று காலை 9.00 மணிக்கு சிறு நிகழ்ச்சி (எதிரே உள்ள ரங்கா கல்யாண மண்டபத்தில்) நடக்கும். சிறப்பு விருந்தினர்கள் பேசுவார்கள். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கடை திறக்கப்பட்டவுடன், புத்தக விற்பனை ஆரம்பமாகும்.
இனி வரும் மாதங்களில் தமிழகத்தின் பிற நகரங்களில் இதேபோல் பிரத்யேக கிழக்கு ஷோரூம்கள் திறக்கப்படும்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
ஷோ ரூம் வெகு விரைவில் பல நூல்களை தன்னகத்தே கொண்ட புத்தக சோலைகளாக மாற வாழ்த்துக்கள் :)
ReplyDeleteWhen will you open in our salem,is any special discount available in your exclusive show room.
ReplyDeleteVery nice. Hearty wishes to Badri and NHM team.
ReplyDeleteமேலும் மேலும் வளர வாழ்த்துகள்.
பாட்டாளி: சேலத்தில் ஒரு கட்டத்தில் தொடங்கலாம். தகவல் தெளிவானதும் சொல்கிறேன்.
ReplyDeleteபொதுவாக பள்ளிக்கூடங்கள் தவிர்த்து வேறு யாருக்கும் ஷோரூம்களில் நாங்கள் டிஸ்கவுண்ட் தருவதில்லை. இதனால் பல சண்டைகள் வந்துள்ளன. பல வாடிக்கையாளர்கள் கோபித்துக்கொண்டுள்ளனர். ஆனால் இதற்குக் காரணம் உள்ளது. எங்களது பெரும்பான்மை விற்பனை பிற புத்தகக் கடைகளில்தான் நடக்கிறது. நாங்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க ஆரம்பித்தால் இந்தக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழ் இருக்கும் ஷோரூமில் நாங்கள் டிஸ்கவுண்ட் கொடுத்தோம். பிற கடைகள் அதனை விரும்பாததால், இப்போது எங்களது ஷோரூமில் டிஸ்கவுண்ட் ஏதும் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
ஷோரூமில் என்ன வசதி என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் எங்கள் புத்தகங்கள் அனைத்தும் அங்கே கிடைக்கும். பொறுமையாக உட்கார்ந்து அவற்றைப் புரட்டிப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட புத்தகம் இல்லை என்றால், அது வேண்டும் என்றால், கடைப் பணியாளர் அந்தப் புத்தகத்தை உடனே தருவித்து ஓரிரு நாள்களுக்குள் கொடுத்துவிடுவார்.
Congrats Badri ! May your publishing firm spread its wings far and wide.
ReplyDeleteKavitha lending library(dont know if it is still there) in Rediappa mudali street was the place, where we(myself, my brother and host of other friends)had our initiation into any sort of reading(outside school texts). So am glad to see that NHM is opening a shop in that street. All the best with this venture.
ReplyDelete100 சதுர அடி என்பது மிகக் குறைவான பரப்பாகத் தெரிகிறதே. இதற்குள் உங்களுடைய எல்லாப் புத்தகங்களையும் வைக்க முடியுமா? அல்லது, நன்கு விற்கக்கூடிய மசாலாப் புத்தகங்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடா?
ReplyDelete