நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. [pdf கோப்பு] அதிலிருந்து தெளிவாக கீழ்க்கண்ட விஷயங்கள் தெரிந்துள்ளன.
1. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை தங்கள் அரசியல் காரணங்களுக்காக - புலி ஆதரவு, ஈழ ஆதரவு - பயன்படுத்தியது.
2. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு), இதனைக் கண்டிக்காதது; இதனால் வக்கீல்களுக்குத் துளிர் விட்டது; தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.
3. தொடர்ச்சியாக ஈழ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் காவலர்களைச் சீண்டியது. காவலர்கள் வழக்கறிஞர்கள்மேல் பல வழக்குகளைப் பதிவு செய்தது.
4. நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சுப்ரமணியம் சுவாமி மீதான வக்கீல்களின் தாக்குதல். அதன் அடியில் மண்டியிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு ஒரு பக்கம். அதைவிட மோசம் நீதிமன்றம் என்ற இடத்தின் புனிதம்மீதான எல்லை மீறலும் அதை வழக்கறிஞர்களே செய்துகாட்டியிருப்பதும். தமிழகத்தின், வலைப்பதிவுலகின் தலைசிறந்த அறிவுஜீவிகள்கூட சுப்ரமணியம் சுவாமி என்ற தனிமனிதன் மீதுள்ள காழ்ப்பால் இந்த அடிப்படையை ஜீரணிக்க மறந்துவிடுகிறார்கள்.
5. இதற்குப்பிறகு நிச்சயமாக நடப்பு அரசின் முழு ஆசீர்வாதத்துடன் காவலர்கள் வக்கீல்களை நையப் புடைத்துள்ளனர். இதுவும் மிகத் தவறான அணுகுமுறை. இது பிரச்னையைப் பெரிதாக்கும் ஒரு விஷயம்தான்.
***
இப்போது தீர்வு.
1. முதலில் அரசு நேரடியாக வக்கீல்கள் தலைமையிடம் தெளிவாகப் பேசவேண்டும். தனியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பொறுப்பேற்க இருக்கும் தலைமை நீதிபதி பேசவேண்டும்.
2. அரசு நிச்சயம் வழக்கறிஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என்னதான் ஒரு குழுவினருள் சிறு குழு தெரிந்தே தவறு செய்தாலும் காவல்துறை காட்டிய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. காவல்துறை அரசின் அனுமதியின்பேரில்தான் இதைச் செய்திருக்கிறது என்ற அனுமானம் தவறாகத் தோன்றவில்லை. எனவே அரசுச் செயலர், முடிந்தால் முதல்வரே பகிரங்கமாக நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். நாசமான பொருள்களுக்கு உடனடியாக இழப்பீடு தரவேண்டும்.
3. காவல்துறைத் தலைவர்களுக்கு தண்டனை என்று பெரிதாகத் தரவேண்டியதில்லை. இன்றைய காவல்துறை அரசியலின் கைப்பாவை என்ற அநியாயத்தை மாற்றவேண்டிய நீண்டகாலச் செயல்பாடு ஒன்று உள்ளது. சில காவலர்களை இடமாற்றம் செய்யலாம். பணி நீக்கம் தேவையில்லை. காவல்துறையும் அளவுக்கு மீறித் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.
4. வழக்கறிஞர்கள் தாங்கள் உயர்நீதிமன்ற வளாகத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அதை அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வைத்துக்கொள்ளலாம்.
5. ரவுடித்தனம் செய்த அனைத்து வழக்கறிஞர்கள்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள்மீது நியாயமான முறையில் வழக்குகள் நடைபெறவேண்டும். இதை வழக்கறிஞர்கள் சங்கம் தடுக்கக்கூடாது. அதிகபட்சமாக வேண்டுமானால் ஒரு plea bargain-மூலம் தண்டனைகளைக் குறைத்து வெறும் அபராதங்களாக மாற்றி சீக்கிரமாக முடித்துக்கொள்ளலாம்.
6. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக வக்கீல்களைக் கூப்பிட்டுப் பேசி, சிலவற்றைத் தெளிவாக்கவேண்டும்.
(அ) வழக்கறிஞர்கள் அரசியல் கோஷங்கள், போராட்டங்களை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே மட்டுமே நடத்தவேண்டும்.
(ஆ) நீதிமன்றத்துக்குள் வந்து குழப்பம், அடிதடி செய்யும் அனைத்து வக்கீல்களும் உடனடியாக வழக்காடும் உரிமையை குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது இழப்பார்கள்.
(இ) வழக்காட வரும் எந்த வழக்கறிஞரையும் தடுக்கும் வக்கீல்கள், சாதாரண கிரிமினல் குற்றங்களுக்காக காவலர்களால் பிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படலாம்.
***
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வரவுள்ள எச்.எல்.கோகலே வலுவாக நடந்துகொள்வார் என்று நம்புவோம். கூடவே தமிழக அரசும் தேவையான மென்மையுடனும் சாதுர்யத்துடனும் நடந்துகொள்ளவேண்டும். அடுத்து, வக்கீல்கள் தங்கள் சங்கத்துக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது போராட்ட குணம் கொண்டவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் தெளிவான சிந்தனை கொண்டவர்களையும், பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்கும் திறன் படைத்தவர்களையும் தேர்ந்தெடுத்தால் நல்லது.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
9 hours ago
வக்கீல்கள் விஷயத்தில் காவல்துறையின் நடவடிக்கை சரியானதே, ஆனால் சாமானியரிடம் அவர்கள் செய்யும் அராஜகத்தை கண்டிக்க எந்த கமிஷனை நியமிப்பார்களோ தெரியவில்லை. நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் நேற்று வந்த செய்தியை பாருங்கள்.
ReplyDeleteBeaten up for claiming right to stay put on his side seat till 9 pm in train
IN a blatant misuse of power, about a score of policemen beat up a passenger at the Nagercoil railway station and dragged him away on Friday morning. The man’s suspected crime: Daring to tell the wife of a police officer that he had the right to stay put on his side seat till 9 pm during the train journey the previous evening.
Whatever happened to the man, in his late 30s, who was travelling in the B-1 coach of Kanyakumari Express with his aged parents, wife and two small children, after he was led away, the Superintendent of Police, Kanyakumari district, and the railway police denied knowledge of any such incident.
However, eyewitnesses said that about 20 men in khaki - one of them in the group was in civvies - barged into the Three Tier AC coach as soon as the train pulled into platform No 3, took the man out to the bustling platform, punched him on the face and head and then dragged him away, even as his children and family member wailed helplessly.
A passenger, who travelled in the train, said that the man had entered into an altercation with a woman, who was allocated a side seat, after she wanted to pull down the beds and slee p soon after the train chugged out of Egmore around 5.30 pm on Thursday.
To the TTE, who explained to the woman that he cannot force passengers to pull down the berths before sleeping hours - between 9.30 pm and 6 am - the woman asked him if he had the rule book. According to a passenger, who witnessed the exchange of words, though the TTE offered to change her seat if she wanted, the woman declined.
Later, when the passenger enquired with the TTE about the incident, he was told that the woman was the wife of a police officer posted in Kanyakumari district. At Nagercoil station, the woman was seen boarding a police jeep.
இது அதிகார அராஜகத்தின் உச்சக்கட்டம். இம்மாதிரி சாதாரண பொது ஜனத்திற்கு பரிந்து பேச எவரும் இல்லை
//நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சுப்ரமணியம் சுவாமி மீதான வக்கீல்களின் தாக்குதல். அதன் அடியில் மண்டியிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு ஒரு பக்கம். அதைவிட மோசம் நீதிமன்றம் என்ற இடத்தின் புனிதம்மீதான எல்லை மீறலும் அதை வழக்கறிஞர்களே செய்துகாட்டியிருப்பதும். தமிழகத்தின், வலைப்பதிவுலகின் தலைசிறந்த அறிவுஜீவிகள்கூட சுப்ரமணியம் சுவாமி என்ற தனிமனிதன் மீதுள்ள காழ்ப்பால் இந்த அடிப்படையை ஜீரணிக்க மறந்துவிடுகிறார்கள்.//
ReplyDeleteசுசா என்கிற தனிமனிதர் மீது உள்ள காழ்ப்பு அல்ல பத்ரி. அதன் பெயர் பிராம்மண துவேஷம். சுசா மீது எனக்கு கடுமையான விமர்சனமும் ஐயங்களும் கேள்விகளும் உண்டு. அவரது சீன ஆதரவு நிலை, இன்று திடீரென அவர் இந்துக்களின் நண்பராகிவிட்ட நிலை, கண்ணை மூடிக்கொண்டு இலங்கை அரசை ஆதரிப்பது இதெல்லாம் எனக்கு அவர் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் சென்னை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது காழ்ப்புணர்ச்சியாலோ கோட்பாட்டு வேறுபாட்டாலோ அல்ல. இனவாத வெறுப்பியலினால். நாளைக்கு உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் கூட நீங்கள் என்னதான் முற்போக்கு நிலை எடுத்தாலும், உங்களை உங்கள் சாதி பெயரை சொல்லி நாயே என திட்டிவிட்டு நீங்கள் அவர்களை சாதியை சொல்லி திட்டியதாக சொல்லுவார்கள். அப்போது இந்த வலையுலக திராவிட பாசிஸ்டுகள் இதே காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வார்கள். திராவிட இயக்கமே ஒரு மனபிறழ்ச்சியின் மீதும் வெறுப்பின் மீதும் கட்டமைக்கப்பட்ட இயக்கம். இந்த பிராம்மண துவேஷத்தின் கீழே இருக்கும் மனவக்கிரங்களை வெளிக்கொணர வேண்டியது மிகவும் அவசியம். திராவிடவாதிகள் அனைவருமே மனப்பிறழ்ச்சியாளர்கள்.
//திராவிட இயக்கமே ஒரு மனபிறழ்ச்சியின் மீதும் வெறுப்பின் மீதும் கட்டமைக்கப்பட்ட இயக்கம். இந்த பிராம்மண துவேஷத்தின் கீழே இருக்கும் மனவக்கிரங்களை வெளிக்கொணர வேண்டியது மிகவும் அவசியம். திராவிடவாதிகள் அனைவருமே மனப்பிறழ்ச்சியாளர்கள்.//
ReplyDeleteஇல்லை அரவிந்த். திராவிட இயக்கத்தை வெறுப்பில் கட்டமைக்கப்பட்ட இயக்கம் என வர்ணிப்பது மிகக் குறுகிய பார்வை. இது இந்து அடிப்படை வாதம் அல்லது முஸ்லீம் அடிப்படை வாதத்திற்குக் கொடுக்க வேண்டிய வரையறை.
திராவிட இயக்கம் என் பார்வையில் சமூக சீர்திருத்தம், சாதி மத வேறுபாடு ஒழிப்பு, தமிழ் வளர்ப்பு, பெண்டிருக்கான சம உரிமை கோரல், வலிமையான தமிழகம் என்று முன்னேற்றப் பாதையில் மக்களை இட்டுச் செல்லும் கோட்பாடுகளுக்கான இயக்கம்தான். இந்த நெல்லுக்கு இட்ட நீரில் வளர்ந்த புல்தான் பிராமண எதிர்ப்பு. பூமாலை ஒரு சில குரங்குகள் கையில் இருப்பதால் மொத்த இயக்கத்தையும் மனப் பிழச்சியாளர்கள் என்பது சரியல்ல.
நான் பிறப்பால் பிராமணன். ஆனால் பழக்கத்தில் நாத்திகவாதி. மேல் நாட்டுப் படிப்பை விழுங்கிய பின்னும் பச்சைத் தமிழன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் என்பதில் பெருமிதப் படுபவன். எனக்கு நமது பாரத தேசத்தின் முன்னேற்றமும், திராவிட இயக்கத்தின் சரியான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்ற ஆழமான நம்பிக்கை உண்டு.
அவர்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எம்.பீ க்களே ஒரு ம$%^& புடுங்கமுடியாத இலங்கை பிரச்சனையில் சு.சாமிக்கும் சோவுக்கும் நாய் பட்டம்கொடுப்பதில் தீர்ந்துவிடுமா ?
ReplyDeleteமாணவர்களிடையே அரசியல், ஆசிரியர்களிடையே அரசியல், வழக்கறிஞர்களிடயே அரசியல், காவல்துறையில் அரசியல் என எல்லாத்துறைகளையும் தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு சமூகச்சீரழிவு கொண்டு வந்த திராவிடக் கட்சிகள் இப்போது அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி நம்மையும் திண்டாட விடுகின்றன. ஒரு frankenstein உருவாக்கினால் அது நம்மைத் தாக்கும். பல வளர்த்தால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போலும்.
ReplyDeleteநீங்கள் கொடுத்த யோசனைகளெல்லாம் படிக்க நன்றாக இருக்கின்றன. நிஜத்தில் ஒன்றும் நடக்காது.
I (am a layman) condemn the incidents happened inside the court room. However, lawyers (like tamilnadu 'dravida' politicians) are now an easy target for 'Urbanites'.
ReplyDeleteI can't take side with lawyer's on many issues but I strongly believe that they are doing the right thing by standing up for Eelam tamils. The nature of protest exhibited is only the effect of Govt's oppression/inaction on any meaningful democratic demands.
SriKrishna commission with its preset remit has dodged answering many important questions and there are many loose ends. However, if you consider Feb 19th incident alone; then
1) there is no reason for Su Samy's presence on the 19th Feb unless there was an intent on provoking lawyers. It seems very clear that the police violence was clearly preplanned by ??.
Please see the following comments from a writer in Economic and political weekly;
http://epw.in/uploads/articles/13217.pdf
Now, one must understand that 19th feb incidents have clearly;
1) diverted the Eelam tamil suppport protest to Police vs Lawyers issue.
2) and now atleast in the web, trying to turn this into Su Samy and Brahmin vs lawyers and dravida issue. Su Samy has always been a political blackmailer; I don't care whether he is a brahmin or not.
Aravind Neelakandan and his views are not different from those with extremist dravida or islamist views. He has over-generalised and jumping into 'brahmin' victimhood too soon. I believe any extreme irrational views such as hindutva or dravida or islamist are not and will not be good for human soceity.
//அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…
ReplyDeleteதிராவிட இயக்கமே ஒரு மனபிறழ்ச்சியின் மீதும் வெறுப்பின் மீதும் கட்டமைக்கப்பட்ட இயக்கம். இந்த பிராம்மண துவேஷத்தின் கீழே இருக்கும் மனவக்கிரங்களை வெளிக்கொணர வேண்டியது மிகவும் அவசியம். திராவிடவாதிகள் அனைவருமே மனப்பிறழ்ச்சியாளர்கள்.//
இதைப் படித்தவுடன் ரொம்ப நாளுக்கு முன் படித்த ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.
பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு முறை ஒரு மனநோய் மருத்துவமனைக்கு விஜயம் செய்தாராம். அங்குள்ள மனநோயாளிகள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு மனநோயாளி நேருவிடம் "நீங்க யாரு?" என்று கேட்டாராம். அதற்கு நேரு "நான் தான் ஜவஹர்லால் நேரு. நான் இந்தியாவின் பிரதம மந்திரி" என்று பதில் அளித்தாராம். அதைக் கேட்டு சிரித்துவிட்டு அந்த மனநோயாளி சொன்னாராம் "ஆமாம் இங்கு வரும்போது எல்லோரும் அப்படித்தான் சொல்லுவாங்க. வந்து கொஞ்ச நாள் இருந்தா சரியாயிடும்". அரவிந்தனைப் பார்த்தால் அந்த மனநோயாளியின் மீது ஏற்படும் பரிதாபம் தான் ஏற்படுகிறது. எல்லாம் வல்ல எல்லா கடவுளரும் விரும்பினால் கூட (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ....) அரவிந்தன் குணமடையும் வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை. பாவம்!
//1. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை தங்கள் அரசியல் காரணங்களுக்காக - புலி ஆதரவு, ஈழ ஆதரவு - பயன்படுத்தியது.//
ReplyDeleteBadri,
What is the issue here--using High Court campus for ALL political activities or only pro Tigers/pro Eelam activities?
Didn't the panel constituted by the BJP goverment under Justice Saharia, during the incarceration of Vaiko, Nedumaran and others under POTA, rule that verbal support to a banned organization doesn't constitute a crime?
When the government misuses its power to suppress political dissent citizens will misuse their privileges too. It happens in undeveloped democracies including India.
While it is entirely important to condemn the assault on anyone in the presence of judges inside a court room violating the sanctity of the court, the target of attack, Subramaniam Swamy, is not an innocent or clown as many try to charactirize. A common man or clown doesn't get Z level security at tax payer's exepense. He is a backroom political operator and many suspect he is a spy for Indian and foriegn intelligence agencies. Naturally he will attract threats and protests. The special security he is given sterenthens this view.
The issue here is using the High Court premises for _all_ political activity and in the eyes of Justice Srikrishna, particularly LTTE and glorification of Prabhakaran. He has his reasons and whether we like it or not, he is justified in pointing that out.
ReplyDeleteSubramaniam Swamy has been a clever operator. He has always been. Those who are duped by him should think several times before resorting to rush of blood actions.
The fault entirely lies with poor leadership qualities of Tamil lawyers. There will be extreme provocation and it takes good leadership to deftly handle the provocation and focus on the problem in hand. The TN lawyers failed in that. Utterly and completely.
"எச்.எல்.கோகலே வலுவாக நடந்துகொள்வார்"
ReplyDeleteமும்பையில் நான் அவரைப் பார்த்ததிலிருந்து, அவர் ரொம்ப சாதுங்க....அதிர்ந்து பேசத் தெரியாது. என்ன தைரியத்தில் இங்கு வருகிறாரோ?
//திராவிட இயக்கம் என் பார்வையில் சமூக சீர்திருத்தம், சாதி மத வேறுபாடு ஒழிப்பு, தமிழ் வளர்ப்பு, பெண்டிருக்கான சம உரிமை கோரல், வலிமையான தமிழகம் என்று முன்னேற்றப் பாதையில் மக்களை இட்டுச் செல்லும் கோட்பாடுகளுக்கான இயக்கம்தான். இந்த நெல்லுக்கு இட்ட நீரில் வளர்ந்த புல்தான் பிராமண எதிர்ப்பு. பூமாலை ஒரு சில குரங்குகள் கையில் இருப்பதால் மொத்த இயக்கத்தையும் மனப் பிழச்சியாளர்கள் என்பது சரியல்ல.//
ReplyDeleteஅப்படியா சரி...பெண்கள் முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமாக உழைத்த முத்துலஷ்மி ரெட்டி, பரதநாட்டியத்தை காலனிய பார்வை கீழ்மைப்படுத்தியிருந்த நிலையிலிருந்து மீட்டெடுத்த ருக்மிணி அருண்டேல், தமிழிசையை வளர்த்தெடுத்தவர்கள் என ஒரு பட்டியலிட்டு பாருங்கள். திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பு அதில் எவ்வளவு? ஈவெரா தன்னுடைய பேச்சுக்களிலெல்லாம் அனைத்து சமுதாய தீமைகளுக்கும் பார்ப்பனர்களே காரணம் என மீண்டும் மீண்டும் சொல்லி அதனை ஒரு அடிப்படைகோட்பாடாக மாற்றியிருந்தார். ஆரிய திராவிட இனவாதம் இன்றைக்கு அந்த அடி வாங்கியிருக்கிறது அறிவியலாளர்களிடம் நமது பகுத்தறிவு பாசறைகள் நாங்கள் ஆரிய படையெடுப்புக்கோட்பாட்டை கைவிட்டுவிடுகிறோம் என ஒரு அறிக்கை விடட்டுமே...முடியாது ஏனென்றால் பகுத்தறிவு என்பது முகமூடி உள்ளே இருப்பது நாசி யூதவெறுப்பை ஒத்த பார்ப்பன துவேஷம். அதனால்தானே வீரமணிக்கு உவேசாமிநாத ஐயரை கூட இழிவாக பேசமுடிகிறது. அதனால்தானே இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடன் மேடையை பகிர முடிகிறது. ஒட்டுமொத்த இயக்கமும் சாக்கடைதான். சமுதாய சீர்திருத்தம் என்பது போலியான முகமூடிதான். மற்றபடி எந்த மத அடிப்படைவாதிகளும் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.
திராவிட இயக்கம் என் பார்வையில் சமூக சீர்திருத்தம், சாதி மத வேறுபாடு ஒழிப்பு, தமிழ் வளர்ப்பு, பெண்டிருக்கான சம உரிமை கோரல், வலிமையான தமிழகம் என்று முன்னேற்றப் பாதையில் மக்களை இட்டுச் செல்லும் கோட்பாடுகளுக்கான இயக்கம்தான்.//
ReplyDeleteநல்ல காமெடி, தமிழன் காட்டுமிரான்டி தமிழ் ஒரு காட்டுமிரான்டி மொழி என்று சொன்ன ஈ.வே.ரா வழிவந்த திராவிட இயக்கம் தமிழ் வளர்த்தது என்பது. மதுக்கடைகளை தமிழகமெங்கும் திறந்தது சமூக சீர்திருத்தம் போலும். இப்பொழுது மும்பை ராஜ் தாக்கரே , மற்றும் ஜின்னா நிகழ்த்திய வெறுப்பு அரசியலுக்கும் திராவிட இயக்கங்களின் வெறுப்பு அரசியலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. காமராஜருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவரை தமிழகம் பார்த்ததில்லை, இப்பொழுது உள்ளவர்கள் எல்லாம் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பவரும், பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய்பவர்களும் தான்.
இன்றைய கால கட்டத்தில் திராவிட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் சில காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கின்றனர். அதில் ஒன்று பிரமண எதிர்ப்பு. இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புகளே இல்லை. என்ன நடந்தாலும் பார்ப்பனீயம் பாட்டுப் பாடலைனா தூங்க முடியாத மன நோயாளிகள் இருக்கவே செய்கின்றனர்.
ReplyDeleteதிராவிட இயக்க ‘பகுத்தறிவு’ பற்றி ப்ரவாஹனின் கட்டுரை இங்கே: http://www.sishri.org/manmozhi1.html
//
ReplyDeleteஇதைப் படித்தவுடன் ரொம்ப நாளுக்கு முன் படித்த ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.
பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு முறை ஒரு மனநோய் மருத்துவமனைக்கு விஜயம் செய்தாராம். அங்குள்ள மனநோயாளிகள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு மனநோயாளி நேருவிடம் "நீங்க யாரு?" என்று கேட்டாராம். அதற்கு நேரு "நான் தான் ஜவஹர்லால் நேரு. நான் இந்தியாவின் பிரதம மந்திரி" என்று பதில் அளித்தாராம். அதைக் கேட்டு சிரித்துவிட்டு அந்த மனநோயாளி சொன்னாராம் "ஆமாம் இங்கு வரும்போது எல்லோரும் அப்படித்தான் சொல்லுவாங்க. வந்து கொஞ்ச நாள் இருந்தா சரியாயிடும்". அரவிந்தனைப் பார்த்தால் அந்த மனநோயாளியின் மீது ஏற்படும் பரிதாபம் தான் ஏற்படுகிறது. எல்லாம் வல்ல எல்லா கடவுளரும் விரும்பினால் கூட (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ....) அரவிந்தன் குணமடையும் வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை. பாவம்!
//
இன்னும் நான் தான் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதம மந்திரி (நாம் தான் திராவிடர்கள், இந்தியாவின் பூரிவீக மக்கள்) என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே ?
ஜவஹர்லால் செத்துப் போய் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி கூட வந்து பின் ராகுல் காந்தியும் வந்தாயிற்று. அதே போல் திராவிடம்/ஆரியம் எல்லாம் பொய் என்று பல முறை நிரூபணம் ஆகிவிட்டது....