Saturday, March 07, 2009

காந்தி ஏலம்

இதை இவ்வளவு பெரிய விஷயமாக்க அவசியமே இல்லை. இந்தச் சரத்தின் அனைத்துக் கண்ணிகளுமே அபத்தமாகத் தெரிகின்றன. காந்தியின் பொருள்கள் ஏலத்துக்கு வந்ததில் அவரது உறவினர்கள் முதற்கொண்டு பிற இந்தியர்கள் வரை பதறவேண்டிய அவசியமே இல்லை. அடுத்தது அப்படியே அந்தப் பொருள்களை யாரோ வேறு ஒருவர் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போய் வைத்துக்கொண்டால் அதனால் இந்தியாவுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.

நவஜீவன் டிரஸ்ட், காந்தியுடைய இந்தப் பொருள்கள் எல்லாம் தங்களுடையது என்றும் யாரோ திருடித்தான் இவை எலம் விட்டவரிடம் சென்றிருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதும் அபத்தம். காந்தி தன் கையிலிருந்த பலவற்றை பலவேறு தருணங்களில் பலருக்குக் கொடுத்திருக்கலாம். அன்பின் வெளிப்பாட்டால் அதைச் செய்திருக்கலாம். நமக்குத் தெரிந்த ஒன்று அவர் ஜெனரல் ஸ்மட்ஸுக்கு தானே தைத்துக்கொடுத்த ஒரு செருப்பு. வேறொரு தருணத்தில் யாரிடமாவது தனது பயன்படுத்தாத ஒரு கண்ணாடியைக் கொடுத்திருக்கலாம். அது பல கை மாறி, கடைசி ஆசாமி, அதனைப் பணமாக மாற்ற முயற்சி செய்தால் அதை யாரும் தடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

விஜய் மல்லையா இந்த முயற்சியை அற்புதமான ஒரு மார்க்கெட்டிங்காக மாற்றியதற்கு அவருக்கு ஒரு ஷொட்டு. காந்தியர்கள் வாயால் பாராட்டு வாங்கிய சாராய வியாபாரி என்பது சாதாரண விஷயமல்ல. Brilliant strategy. அவ்வளவே. காங்கிரஸ் இதிலும் கை போட்டு தன்னால்தான் உலகமே இயங்குகிறது என்று சொல்லி கால் ஓட்டு அரை ஓட்டு வாங்க வழி இருக்குமா என்று பிச்சை தேடுவது அசிங்கம். மல்லையா பதிலுக்கு மூக்கை உடைத்தாலும் அதைப்பற்றி அம்பிகா சோனிகளுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

மற்றபடி பல கார்ட்டூன்களிலும் வந்ததுபோல, காந்தியையே மறந்துவிட்டு, காந்தி தின்ன தட்டு, போட்டுகிட்ட கண்ணாடி இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?

ஜெய் ஹோ!

6 comments:

  1. இந்த விசயத்தில் விஜய் மல்லையாவை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. பத்ரி,

    இதேதான் எனக்கும் தோன்றியது. ஆனால் உணாச்சிபூர்வமான தேச பக்தர்கள் இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  3. கடைசியில் சரக்கு வித்த காசுதான் காந்தியை காப்பாற்றியது.

    நாய் விற்றகாசு குறைக்காது. அதே போல் பீர் விற்ற காசில் கிக்கு ஏறாது.

    காங்கிரஸ் வெத்துவேட்டுக்கள் அதை ஏலத்தில் கமுக்கமாக எடுப்பதை விட்டு பேரம் பேசி விலையை நன்கு ஏற்றிவிட்டார்கள். இந்தியர்களின் காசு வெள்ளை துரைகளுக்கு போகவேண்டும் என்று எவ்வளவு ஆர்வம் இவர்களுக்கு !

    ReplyDelete
  4. எது உண்மை?
    யார் உண்மையில் ஏலம் எடுத்தார்கள்?
    அண்ட புளுகி அம்பிகா சோனி கூறுவதா?
    காந்தி வாழ்நாள் முழுவதும் போராடிய மது ஒழிப்பு திட்டத்தை குழி தோண்டி புதைக்க காரணகர்த்தாவாக இருக்கும் விஜய் மல்லையா கூறுவதா?
    யாருக்காவது தெரிந்தால் போட்டு உடையுங்களேன்?

    ReplyDelete
  5. //நவஜீவன் டிரஸ்ட், காந்தியுடைய இந்தப் பொருள்கள் எல்லாம் தங்களுடையது என்றும் யாரோ திருடித்தான் இவை எலம் விட்டவரிடம் சென்றிருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதும் அபத்தம். காந்தி தன் கையிலிருந்த பலவற்றை பலவேறு தருணங்களில் பலருக்குக் கொடுத்திருக்கலாம். அன்பின் வெளிப்பாட்டால் அதைச் செய்திருக்கலாம். நமக்குத் தெரிந்த ஒன்று அவர் ஜெனரல் ஸ்மட்ஸுக்கு தானே தைத்துக்கொடுத்த ஒரு செருப்பு. வேறொரு தருணத்தில் யாரிடமாவது தனது பயன்படுத்தாத ஒரு கண்ணாடியைக் கொடுத்திருக்கலாம். அது பல கை மாறி, கடைசி ஆசாமி, அதனைப் பணமாக மாற்ற முயற்சி செய்தால் அதை யாரும் தடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
    //

    Who knows how many other things Gandhi might have given to others in his lifetime? They might be auctioned one after other in future. It is absurd to expect GOI to buy each of these artifacts in auction.

    It is an irony that a liquor baron has to salvage the pride of Mohandass Gandhi.

    ReplyDelete
  6. காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் எடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்த விஜய் மல்லையா அவர்கள் அந்த பணத்தை இந்தியாவில் குடியினால் சீரழிந்த குடும்பங்களை தத்தெடுத்து உதவி வழங்கியிருந்தால் காந்தியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்

    ReplyDelete