இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில், வீரபாண்டியனுடன் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலரும் தமிழக வக்ஃப் வாரியத் தலைவருமான ஹைதர் அலியும் கலந்துகொண்டு உரையாடிய நேருக்கு நேர் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை, 7 மார்ச் 2009) ஒளிபரப்பாகிறது. இரவு மணி 9.00. மறு ஒளிபரப்பு திங்கள் கிழமை மாலை 5.30 என்று சொன்னார்கள்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றியது.
depression caused by tamil weather-forecasters
6 hours ago
கண்டிப்பாக பார்க்கிறோம்
ReplyDeleteஐயா நீயா நானா முடிந்த்தா நட்க்க உள்ளதா
ReplyDeleteநீயா, நானா - பத்திரமாக எனக்குத் தெரிவிக்காமல், காண்பித்து முடித்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திறமைசாலிகள். அவர்களது வேலை முடிந்ததும் நம்மை மறந்துவிடுவார்கள்.
ReplyDeleteகண்டிப்பாக பார்க்கிறேன்
ReplyDeleteBadri, I watched Neruku ner,today. I don't understand what you mean by Neeya naana. I have been watching weekly this program after you have posted, but it is not telecast till now. Kindly clarify
ReplyDeleteyou can ask them for a copy and upload in you tube
ReplyDeleteநீங்கள் மட்டும் என்ன? அந்த “அறிவுசீவி”களை விட ஒசத்தியா என்ன? வன்முறையின் தலைக்காவேரி சுப்ரமணியம் சுவாமி மீது “ரவுடி” வைக்கோல்கள் வீசிய முட்டைகளும் கற்களும்தான்.
ReplyDeleteஅதை மறைப்பானேன்? பாரபட்சமற்ற செய்தி வெளியீடு, செய்தி விமர்சனம் - அறிவு”சீவி”களுக்கு அப்பாற்பட்டது.
நேருக்கு நேர் நிகழ்ச்சி குறித்து உங்கள் வலையிலிருந்து தெரிந்துகொண்டு சன் நியூஸ் அலை வரிசையில் நிகழ்ச்சியை சில மணித்துளிகள் பார்த்தேன்.
ReplyDeleteபாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியைத் தாக்கியவர்கள் பயங்கரவாதிகள் என சொல்லவே அவர் மறுத்துக்கொண்டு இருந்ததையும் அவர்களை பகத் சிங் போன்ற விடுதலை வீரர்கள் என்றும் மறைமுகமாக சொல்ல வந்ததைப் பார்க்க என்னைப் போன்றவர்களுக்கு பொறுக்காது. தாங்கள் பொறுமையுடன் அவருக்கு மறுப்பு சொல்லிக்கொண்டு இருந்ததை பார்க்க ஏளனத்துடன் கலந்த கோபம் தான் ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வரும். தங்கள் பொறுமை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.
ஆனால் ஒன்று : இது போன்ற நிலையில் உள்ளவர்களே, அதுவும் நேருக்கு நேர் போன்ற நிகழ்ச்சிகளில் கூட இதை பயங்கரவாதம் என்று ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அம்மதத்தில் தீவிரவாதிகளும், உயர் மட்டத்தில் உள்ள மௌலானாக்களும் இதை தீவிர வாதம் தான்; இதை மாற்றிக்கொள்ள வேண்டும் தான் என்று எப்போது ஒப்புக்கொள்வது? என் ஆயுளில் அந்த பொன்னாள் வராது என்று தோன்றுகிறது (எனக்கு வயது 57). இன்னும் எத்தனை எத்தனை குண்டு வெடிப்புகளை இந்த நாடு / உலகம் காணப் pokinradho?