இன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். தெருவெங்கும் போஸ்டர்கள்.
இன்னும் பாக்கி, டில்லி ஜந்தர் மந்தரில் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது மட்டுமே. அது முடிந்ததும் கொழும்பில் மஹிந்தா, கொத்தபாயா, பேசில் மூவரும் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.
பிறகு அனைவரும் சேர்ந்து, இதுவரை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்காத ஒரே ஒருவர் பிரபாகரன் மட்டுமே என்றும் அதற்கான காரணத்தைத் தமிழர்களே புரிந்துகொள்வார்கள் என்றும் சொல்லி முடித்துவிடுவார்கள்.
Monday, March 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
போஸ்டேர்கள் அடிக்க செலவழித்த பணத்தை அப்படியே உண்டியலில் போட்டிருந்தால்
ReplyDeleteநிவாரண நிதிக்கு கொஞ்சம் காசு தேறியிருக்கும்.
உண்ணாவிரதம் இருந்து முகம் வாடியிருப்பதுபோல் ஒரு போஸ்டர் அடித்து பட்டி தொட்டிகளில் ஓட்டினால் தேதலில் கொஞ்சம் ஓட்டுக்களை தேத்தலாம்
நெத்தியடி....
ReplyDeleteசுருக்கமா சொன்னாலும்
நறுக்குனு இருக்கு
மற்றவர்கள் உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, ஹைகோர்ட்டில் முட்டையடித் திருவிழா, ஜாதீய வசைபாடல் [வேறு யாரை, பார்ப்பனர்களைத்தான்] இப்படிச் செய்தால் அதற்குப் பேர் "பாசம்",
ReplyDeleteஜெயலலிதா எது செய்தாலும் அது "ஆ"பாசம்!
பத்ரி, உங்களுடைய நியாயம், மிக அழகாகத்தான் இருக்கிறது!
உண்ணாவிரதம் ஜெயலலிதாவின் தோல்வி.தேர்தல் பயம் யாரையும் விட்டு வைக்கவில்லை.
ReplyDeleteஇதில் இன்னும் ஆபாசம் அவர் இலங்கைத்தமிழர்களுக்கு தனிநாடு கோரிக்கையை ஏற்கிறோம் என்ரது. நேற்றுவரை ஈழம் என்று ஒன்றுமில்லை...போரில அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் என அறிக்கை விட்டுக்கொண்டிருந்தது!!!
ReplyDeleteMr. Tangabaalu is coming to you in continuation of Selvi Jayalalitha
ReplyDeletetoday.
First let him inform the people the fate of things sent to the people of srilankan tamils.earlier.
The genocide has not been stoopped.
It goes on and on...
Is he collecting money to do the last rites for the tamils.by the people who are still alive.?
தமிழர்கள் தனி நாடு கேட்டு இலங்கையில் போராடுவதற்கு, மொழியை மட்டுமே காரணம் காட்டி இந்தியத் தமிழர்கள் ஆதரவு தந்துதான் ஆக வேண்டுமென்பது போதாது. அவர்களும் என்னைப் போலத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்கள் தனி நாடு கேட்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படி உணர்ச்சி வசப் பட்டால் இது மதத்தின் பேரால், தோலின் நிறத்தின் பேரால் நடக்கும் போராட்ட அளவிலேயே மதிக்கப் படும்.
ReplyDeleteமுஸ்லீம்கள் எங்கிருந்தாலும், அவர்கள் போராட்டம் எந்த நாட்டில் நடந்தாலும், எந்தக் காரணத்திற்காக நடந்தாலும் முஸ்லீமாகிய நான் உதவுவேன் என்று சொல்விக்கொள்வது போலவும், என் தோல் வெள்ளை நிறம், என் கண்கள் நீலக் கண்கள் இதே தோற்றம் உள்ளவர்கள் எங்கு தனிநாடு கேட்டாலும் நான் ஆதரிப்பேன் என்று சொல்வது போலவும் குறுகி வரையறைக்குள் விழுந்து விடும்.
உண்மையிலேயே தமிழர்களுக்கு இலங்கை அரசால் உரிமைகள் மறுக்கப்பட்டதையும், அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை அவர்களே ஆள வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பாக ஒரு அறிவார்ந்த தலைவர் அறிவு பூர்வமாக சர்வதேச அரங்கில் எடுத்து வைத்தாலொழிய இந்த உணர்ச்சி பூர்வமான போராட்டம் ஒரு இனத்தில் குரலாக மட்டுமே ஒலிக்குமே தவிர உலக மக்கள் அனைவரும் மதிக்க வேண்டிய மனிதர்களின் சுயமரியாதை குறித்த போராட்டமாக வெளிப்படாது. அப்படி வெளிப்பட்டால்தான் இதற்கு தமிழ்நாடு தாண்டியும், இந்தியா தாண்டியும் ஆதரவு கிடைக்கும்.
இதில் மற்றவர்களை அழித்ததால் மட்டுமே தாங்கள் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக அறியப்படவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கேட்பதுதான் இப்போதைய நிலையில் இருக்கும் பெரும் குறைபாடு. புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடும் போது அமிர்தலிங்கமோ அவருக்கு இணையான தலைமையோ ஐ.நா. வரை இந்தப் பிரச்சினையை ஜனநாயக முறையில் கொண்டு சென்றிருந்தால் பல நாடுகளில் இருந்து வரும் பண உதவியை இவ்வளவு சுலபமாக இலங்கை அரசால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. இது பாலசிங்கமோ தமிழ்செல்வனோ சாதிக்க முடியாத காரியம். இந்தியாவிலும் இலங்கைத தமிழர் ஆதரவு புலி ஆதரவாக மட்டுமே அறியப் படாமல் இன்று வரை வெளிப் படையாகத் தொடர்ந்திருக்கும்.
இப்போது கூட இலங்கைத் தமிழர்கள் பற்றி இந்தியத் தமிழர்கள் வேதனைப் படும் பொழுது அவர்கள் உள்ளோடு ஓடும் நெருடல் இந்த மண்ணில் அவர்கள் நடத்திய வன்முறைதான். தமிழகத்திற்கு வன்முறையைக் கொணர்ந்தது அவர்கள் தான் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் ஏகோபித்த ஆதரவு கொடுத்து அவர்களை விருந்தினர்களாய் நடத்திய போதும் சென்னையில் துப்பாக்கி கலாச்சாரமும், மொத்த மாநிலத்தில் வெடிகுண்டு கலாசாரமும் புலிகளால்தான் பிரபலப் படுத்தப்பட்டது. பலதரப் பட்ட விவாதங்களைக் கேட்டுப் பழகிய நமக்கு எதிர்க் குரல்களை முடக்கும் புலிகளின் வழக்கம் ஒத்து வரவில்லை.
தமிழர்களுக்கு இலைங்கையில் தனி நாடு அமைய வேண்டும். ஆனால் அதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டவும் அதை நடைமுறைப்படுத்தவும் ஒரு தலைவர் கூட இல்லை. இப்போது உணர்ச்சிப் பிழம்பாக நாம் கொதிப்பதால் மட்டும் எதுவும் சாதித்துவிட முடியாது என்று தோன்றுகிறது.
இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக போராடும் விடுதலை புலிகளுக்கும் இங்கு தமிழ்நாட்டில் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் என்ன வேறுபாடு?
ReplyDeleteவிடுதலை புலிகள் உண்மையான வீரர்கள். களத்தில் உயிரை துச்சமாக மதித்து ஒரு கொள்கைக்காக போராடுபவர்கள்.
இங்குள்ள ஆதரவாளர்கள் வறட்டு கூச்சல் போட்டு சுவர்கள் எங்கும் இங்குள்ள தமிழர்களை சகட்டு மேனிக்கு திட்டி போஸ்டேர்கள் ஒட்டி அறிக்கை
போர் நடத்தும் காகித புலிகள்.
நேற்று வரை காங் கட்சிக்காக காத்திருந்து அவ்ர்கள் வரவில்லை என்றவுடன்,இலங்கை தமிழருக்காக உண்ணாவிரதம்.அரசியலில் இதல்லாம் சகஜம்.
ReplyDeleteNormally south will have no or very less recognition from North. I stongly believe that suffering people in Srilanka should be called as Srilankan Indians and not Srilankan Tamils. TamilNadu is in India. And when we take this issue as Srilankan Indians, we could easily attact the interest of 100 crore people of India.
ReplyDeleteInstead we should not divide them as Tamils.
The so called tamil people have given verdict to kalaignar and congress kottani to rule again.The eelam factor has not affected their
ReplyDeleteperths.