இன்று வெளியான தகவல், இந்தியாவில் பணவீக்கம் 0.44% என்கிறது. இதை ஏனோ என்னால் நம்பமுடியவில்லை.
20 ஆண்டுகளில் இதுவே குறைவான பணவீக்கம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட பெட்ரோல்/டீசலின் விலை குறைந்தது இரண்டு மடங்கு ஆகியுள்ளது. இன்று ஆந்திரா அரிசி ஒரு கிலோ கிட்டத்தட்ட ரூ. 35 என்று உள்ளது. 20 ஆண்டுகளுக்குமுன் ரூ. 15-க்கும் குறைவாகவே இருந்தது. இப்படி எந்தப் பொருளை எடுத்தாலும் இரண்டு மடங்கு விலையில் இருக்கும்போது எப்படி கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைந்த பணவீக்கம் என்று சொல்கிறார்கள்?
சேவையை எடுத்துக்கொள்வோம். முடிவெட்ட ரூ. 70 ஆகிறது இன்று. கிட்டத்தட்ட அதே தரமுள்ள கடையில் 20 ஆண்டுகளுக்குமுன் ரூ. 20-ஐத் தாண்டி இருக்காது.
மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று இருப்பதைவிட நான்கில் ஒரு பங்குதான் 20 ஆண்டுகளுக்குமுன் இருந்திருக்கும்.
பணவீக்கம் கணக்கீட்டில் எதோ ஃப்ராட் நடக்கிறது. நாமும் தலையைத் தலையை ஆட்டி, அரசு என்ன நம்பரைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்.
அடுத்து, பணவீக்கம் என்பது போய், பணம் மெலியத்தொடங்குமாம். அதாவது பணத்தின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்குமாம். எனது இரண்டு காதிலும் பக்கத்துக்கு ஒன்றாக, இரண்டு முழம் பூ தொங்குகிறது!
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
18 hours ago
சரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த முரண்பாடு?
ReplyDeleteஎன்கிற தலைப்பில்
http://bullionbullish.blogspot.com/2009/03/blog-post_2086.html
ஒரு பதிவு வந்துள்ளது.
பணவீக்க கணக்கீட்டுமுறை கொஞ்சம் புரிகிற மாதிரி தெரிகிறது. படித்துப் பார்க்கலாம்.
சுட்டிக்கு நன்றி. ஆக, யாரை ஏமாற்ற இந்தக் கணக்கை அரசு தருகிறது என்று புரியவில்லை. நம்முடைய கணக்கீட்டு முறையை உடனடியாக மாற்றவேண்டும். பணவீக்கம் குறைந்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அரசு சொல்லும் விழுக்காட்டில் அல்ல.
ReplyDeleteசென்ற ஞாயிறன்று நீங்கள் (மற்றும் உங்கள் மனைவி) பங்கு கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி பற்றி சில கருத்துகள்
ReplyDelete- மற்ற பங்கேற்பாளர்கள் நல்ல காரசாரமாக பல கருத்துகளைச் சொன்னார்கள். ஆனால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு என (எனக்குப்) பட்டது) அல்லது கத்தரித்து விட்டார்களா ?
- அதுவும் உங்கள் மனைவிக்கு பேச வாய்ப்பே அளிக்கப்படவில்லையோ என தோன்றியது
- மற்ற பங்கேற்பாளர்களைவிட நீங்கள் மிகவும் முயற்சி செய்து ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசவேண்டும் என நினைத்து பேசியது போல (எனக்குப்) பட்டது.
- பொதுவாகவே இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் - சிறப்பு விருந்தினர்களை அதிகம் பேச விடுவதில்லை.
உங்களுக்கு இந்த அனுபவம் எப்படி இருந்தது ?
சுரேஷ்குமார்
சுரேஷ்: நிறைய கத்திரி. நானும் என் மனைவியும் நிறையப் பேசினோம். ஆனால் 1.5 மணி நேர நிகழ்ச்சியில் எதை வைத்திருப்பது, எதை வெட்டுவது என்பது தயாரிப்பாளர் கையில். நான் பொதுவாகவே தொலைக்காட்சியில் வரும்போது முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேச முற்படுவேன்.
ReplyDeleteதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிறையவே பங்கேற்பவன். அதனால் எந்தப் புதுமையும் இல்லை.
Inflation - the rate at which prices go up - is at 20 year low. Not the prices themselves.
ReplyDeleteSince the base itself has swelled a lot over the years, it's not surprising that the its growth rate has come down.
Anyway, it's true that there are a lot of problems with the way we calculate inflation.
About Vijay TV:
ReplyDeleteI was also interested to ask you about Now I am clear.
About this Post:
பணவீக்கம் குறைந்தது.
பஜ்ஜி விலை உயர்ந்தது.
வேறன்னத்த சொல்ல..
http://www.indianexpress.com/news/the-thursday-syndrome/351388/
ReplyDeleteIla Patnaik explains how we are all mislead by this WPI based inflation measures.
நீயா நானாவில் வரும் பெரும்பான்மையான விவாதங்கள் குப்பையாக உள்ளன! உதரணமாக, அறிவை கேட்டு செயல்பட வேண்டுமா அல்லது மனதை கேட்டு செயல்பட வேண்டுமா? என்னும் விவாதம் கேவலமாக இருந்தது. இது போன்று பல வந்தாலும், அவ்வப்போது நல்ல விசயங்களும் அலசப்படுகின்றன.
ReplyDeleteபத்ரி கலந்துகொண்ட நிகழ்ச்சியிகிருந்து நாம் அறிந்து கொள்வது, பணம் இருந்தால் மட்டும் சந்தோசம் வராது. பத்ரி செய்யும் தொழில் அவருக்கு ஒரு கட்டுக் கோப்பான வாழ்கையை வாழ உதவுகிறது. அதனால் அவர் தொழில் செய்பவர்கள் நேரம் ஒதுக்க முடியும், அது அவர்கள் கையில் தான் உள்ளது என்கின்றார். ஆனால், பல தொழில்களில் அது சாத்தியமில்லை.
Ramnath சொன்னது போல் உங்கள் பதிவின் ஆதாரக்கருத்து தவறானது. அதாவது பணவீக்கம் - எத்தனை வேகமாக விலைவாசிகள் உயருகின்றன என்பதற்கான குறியீடு (indicator for rate of price growth) இருபது வருடங்களில் குறைந்த அளவு உள்ளது. விலைவாசிகளே அல்ல.
ReplyDeleteஅதுவும் இது ஒரு வருடாந்திர அளவின் சென்ற வாரத்திய எண் (annualized number). சென்ற வருடம் இந்த வாரத்து விலைகளோடு இந்த வருடம் இந்த வாரத்து விலைகளை ஒப்பிட சென்ற ஒரு வருடத்திய வாராந்திர பணவீக்க சதவிகிதங்களின் சராசரியை எடுத்துக் கொண்டு கணக்கிட வேண்டும்.
பணவீக்கத்தை அரசாங்கம் கணக்கிடும் விதம் பல விமர்சனங்களுக்கு உரியது. அது தனி விஷயம்.
இந்தியப் பணவீக்கம் பற்றி மதிப்பிட, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஒப்பிடுவது ஒரு முக்கியமான அளவீடாகும். 20 ஆண்டுகளுக்கு முன் இது என்னவாக இருந்தது என்பது பற்றிய விவரம் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இல்லை என்றாலும், நிச்சயம் இன்றைய மதிப்புக்குப் பாதியளவிலேயே இருந்திருக்கும் என்பது என்னுடைய துணிபு.
ReplyDeleteகடந்த தேர்தலின்போது பா.ஜ.க. முன்வைத்த “இந்தியா ஒளிர்கிறது” கோஷத்தைப் போலவே, இந்தத் தேர்தலில் “பணம் மெலிகிறது” என்று காங்கிரஸ் கூட்டணியினர் ஜல்லியடிக்கலாம்.
இது பொதுவாக நம்பக்கூடிய விஷயம்தான் - ஆனால் பணவீக்கம் கரெக்டா .44% தானா என்பது வேற விஷயம்.
ReplyDeleteஇப்போது உலக நாட்டு பொருளாதாரங்களை இம்சிக்கும் விஷயம் பணவீக்கம் இல்லை ; பண முடக்கம் தான் அதாவது recession is the problem at the moment, not inflation.
அதனால்தான் பண போக்குவரத்தை சுலபமாக்க பல நாடுகள் மத்திய வங்கி வட்டி சதவிகிதத்தை 1% குறைவாக கொண்டு வந்து விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அது 0.5% என நினைக்கிறேன்; இங்கிலாந்தில் 1%. இந்த நாடுகளில் மத்திய வங்கி வட்டி சதவிகிதம் 1 வருடத்தில் 6% இருந்து 1% கீழே வந்து விட்டது. என்ன காரணம் - எல்லா அரசாங்களும் இப்போது கவலைப் படுவது பணமுடக்கம் - அது எப்படி ஏற்படுகின்றது என்றால், அடிப்படையில் வங்கி முறை சாய்ந்து விட்டது - collapse of the banking system all over the world. பாங்கிகளே ஒருத்தனுக்கு ஒருத்தன் கடன் கொடுக்க மாட்டேன் என்கிறான். பண விஸ்வாசம் மறந்து விட்டது. பாங்கிகள் தொழில், வணிகங்க்ளுக்கு கடன் கொடுக்க மறுக்கின்றன. பொது ஜனங்களுக்கு கேட்கவே வேண்டாம் - பாங்கிகள் என் பக்கத்தில் வராதே என்கிறன. இதனால் வணிகம் குறைகிரது; தொழில்சாலை வெளியீடுகள் சாய்கிறன. Industrial output and commerce are coming to a grinding halt. இதனால் பல லக்ஷ மக்கள் வேலை இழக்கின்றனர். மக்களுக்கு பணம் குறைகின்றதால், வாங்கும் சக்தியும் (purchasing power) சாய்கிரது. There is a collapse of demand for consumer and industrial goods. டிமாண்ட் சாய்ந்ததினால், பொதுவாக விலைகளும் சாய்கிறன.
இதை தடுக்க - அல்லது எதிற்க- அரசாங்கங்கள் மத்திய வங்கி வட்டியை மற்றும் குறைக்கவில்லை. மேலும் மேலும் பணத்தை அச்சிட்டு மக்கள் மேல் தள்ளி எப்படியாவது நுகர்வு சக்திகளை உந்தும் முயற்சி செய்கிறார்கள்.
பொதுவாக உலகமெல்லால் இன்ஃப்ளேஷன் பயங்கரமாக சாய்ந்து விட்டது. உலக அரசாங்களின் முயற்சி இப்போது இதை தடுப்பதே ஆகும்.
விஜயராகவன்
" இந்தியாவில் பணவீக்கம் 0.44% என்கிறது. இதை ஏனோ என்னால் நம்பமுடியவில்லை."
ReplyDeleteபண வீக்கம் என்றால் போன வருடத்திற்கு இந்த வருடம் ஒப்பீடே தவிற, 5 வருடம், 20 வருடம் முன் ஒப்பீடு இல்லை.
விஜயராகவன்
inflation is calculated in india on weekly/monthly basis i think, if the inflation is .44% it means relative to last week/month. the time standard is taken like that . if inflation is low it does not mean price will be low, it means only that price rise is contained only when there is deflation prices will decrease
ReplyDeleteஇருபது ஆண்டுகளுக்கு முன் முடிவெட்ட 20 ரூபாய், அரிசி கிலோ 15 ரூபாய்தான். அதே சமயம், அப்போது வருவாயும் இப்போதைவிட மிகக்குறைவாகத்தான் இருந்திருக்கும்.
ReplyDelete