Monday, March 09, 2009

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு

விவேகானந்தா எஜுகேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு, சென்னையைச் சுற்றி 20 பள்ளிகளை நடத்துகிறது.

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தப் பள்ளிகளில் உள்ள சுமார் 8,000 மாணவிகளைத் தேர்தெடுத்து நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், அவர்கள் அனைவருக்கும் ஓர் இலவசப் புத்தகத்தை வழங்குகிறது.

படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதன்மூலம், மாணவிகள் வாழ்க்கையில் அதிகம் சாதிக்கமுடியும் என்பதை வலியுறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்கென, அறிவியல் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையிலான புத்தகங்கள், சுய முன்னேற்றத்துக்கு உதவும் புத்தகங்கள் என்று தேர்ந்தெடுத்துள்ளோம்.

இன்று தொடங்கி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.

இதன்மூலமாக பல ஆயிரம் புதிய பெண் வாசகர்கள் உருவானால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

6 comments:

  1. அருமையான திட்டம். புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் தொழிலைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் காலத்தில், உங்களின் அடுத்தடுத்த அறிவிப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது.

    ReplyDelete
  2. பத்ரி சார் உங்களுடைய கேண்டீட் புத்தகம் படித்தேன். அதில் ஒரு சந்தேகம், தமிழாக்கம் செய்யும் போது அதில் வரும் பெயர்களையும் நம்ம ஊர் பெயர்களாக வைத்துக் கொள்ள கூடாதா? கேண்டீட் என்ற பெயரைத்தவிர மற்ற பெயர்களை படிக்கும் போது குழப்பம் ஏற்படுகிறது, யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த பெயர்கள் புதிய கதாபாத்திரங்கள் போன்றே தெரிகிறது. அந்த பெயர்கள் வேகத்தடை போல் உள்ளது.

    ReplyDelete
  3. பாடப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும்கூட ஒருவரும் உருப்படியாகப் படித்ததாகத் தெரியவில்லை. அறிவியல், சுயமுன்னேற்றப் புத்தகங்களை எங்கே படிக்கப்போகிறார்கள்? இருந்தாலும், உங்களுக்கு நம்பிக்கை அதிகம்தான்!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி, வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
    மாநகராட்சிப்பள்ளிகளிலும் தொடங்கலாமே? இம்முயற்சிக்கு இயன்றவரை பண உதவி செய்ய விரும்புகிறேன்.

    ReplyDelete
  5. //தமிழாக்கம் செய்யும் போது அதில் வரும் பெயர்களையும் நம்ம ஊர் பெயர்களாக வைத்துக் கொள்ள கூடாதா? //

    அப்படி செய்வதற்கு பெயர் தழுவி எழுதுவது (ரீமேக்)
    மொழிபெயர்ப்பு என்பது டப்பிங் !!

    சரியா பத்ரி சார்

    ReplyDelete
  6. புரிந்துகொண்டேன் புருனோ சார். நன்றி

    ReplyDelete