Friday, March 20, 2009

சுவரொட்டிகள், வாசகங்கள்

சில சுவாரசியமான சுவரொட்டிகள் கடந்த இரண்டு நாள்களில் காணக்கிடைத்தன.

“சீமானை தூக்கில் போடு!” என்கிறது ‘பறையர் பேரவை’ என்ற அமைப்பு ஒட்டியிருக்கும் போஸ்டர். ஏன் என்று சில காரணங்களை அடுக்கியுள்ளனர். ஆனால் அந்தக் காரணங்களுக்காக யாரையும் தூக்கில் போடமுடியாது என்பது வேறு விஷயம்.

“ஈழப்போராட்டத்தைத் திசைதிருப்ப வக்கீல்கள்மீது தடியடி நடத்திய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்” என்கிறது விவேகானந்தா கல்லூரி வாசலில் காணப்படும் போஸ்டர். இன்று காலை அந்த போஸ்டரைக் கிழித்து சுத்தமாக்கியிருந்தனர். தேனிக்கு அருகே ஓர் உணவகத்தில் உணவுடன் சேர்த்து தாங்கள் கையோடு கொண்டுவந்திருந்த சோமபானத்தையும் அருந்தியே தீருவோம் என்று சென்னை ‘வெற்றிப் பேரணிக்கு’ வந்துகொண்டிருந்த வழக்கறிஞர்கள் அறிவித்ததாகவும் அதன் விளைவாக உணவக ஊழியர்களுடன் அடிதடி நடந்ததாகவும் இன்று செய்தித்தாளில் செய்தி அறிவிப்பு. வாழ்க வக்கீல்கள்! வாழ்க அவர்கள் முன்னெடுத்திருக்கும் ஈழப்போராட்டம்!

“தமிழே, இலக்கியமே” என்று பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசனை வாழ்த்துகிறது ஒரு போஸ்டர். “தொல்காப்பியமே, திருவள்ளுவமே” என்று திமுக தலைவரை வாழ்த்தி அடிக்கும் அபத்த போஸ்டர்களுக்கு இணையாக தமிழக பாஜக ஆதரவாளர்கள் களத்தில் குதித்திருப்பது நல்ல வேடிக்கை. ஆனால் பாஜகவின் இணைய ஆர்வத்தைப் பார்க்கும்போது, “வலைப்பதிவே, ஆர்க்குட்டே, ட்விட்டரே, கூகிளே” என்று இல.கணேசனைப் பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

“ரப்பீஸ் அள்ளப்படும்” என்று லாரி ஒன்றில் காணப்பட்ட வாசகம். மிகவும் குழப்பத்தைக் கொடுத்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது “rubbish” என்ற தூய தமிழ்ச் சொல் என்று பின்னர்தான் புரியவந்தது.

4 comments:

  1. //தமிழே, இலக்கியமே” என்று பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசனை வாழ்த்துகிறது ஒரு போஸ்டர்.//

    தமிழகத் திராவிடத் தலைவர்கள் பலரும் தெலுங்கு அல்லது கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே. ஆனாலும், தமிழின் மறுபெயராகத் தம்மைச் சொல்லிக்கொள்ளத் தயங்காதவர்கள்.

    அதே பாதையில், தெலுங்கு பிராமணரான இல. கணேசன் செல்ல முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை. என்னதான் பா.ஜ.க. தலைவராக இருந்தாலும் கருணாநிதியிடம் அரசியல் கற்றவராயிற்றே!

    ReplyDelete
  2. //ரப்பீஸ் அள்ளப்படும்” என்று லாரி ஒன்றில் காணப்பட்ட வாசகம். மிகவும் குழப்பத்தைக் கொடுத்தது.அதில்குறிப்பிடப்பட்டிருப்பது “rubbish” என்ற தூய தமிழ்ச் சொல் என்று பின்னர்தான் புரியவந்தது//

    படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இது போன்ற அபத்த வாக்கியங்களை ஏராளமானவர்கள் பின்பற்றுகின்றனர்.’குப்பை அள்ளப்படும்’ என்று போட்டால் குழப்பம் வந்து விடுமாம். ரப்பீஸ் என்றால் வராது போலிருக்கிறது. Rubbish

    ReplyDelete
  3. //“ரப்பீஸ் அள்ளப்படும்” //

    ரப்பீஸ் !!!

    ReplyDelete