Friday, January 21, 2011

கருப்புப் பணம் - 2

கருப்புப் பணம் தொடர்பாக கடந்த தேர்தல் தொடங்கி அத்வானி பேசுவது தொடர்பாகவும், இப்போது உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருப்பதாலும்தான் இந்தத் தொடரை நான் ஆரம்பித்திருக்கிறேன்.

மொத்தம் நான்கு கேள்விகள் உள்ளன:

  1. கருப்புப் பணத்தை மீட்டுவிட்டால் மட்டும் போதும்; இந்தியா உலகின் நாலைந்து நாடுகளில் ஒன்றாகிவிடும் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. இந்தியா முதன்மை நாடாகவேண்டும் என்பதுதானே அனைவரின் எண்ணமும். எனவே இப்படி ஒரு கூற்றை முன்வைத்தவுடன், இந்தப் பிரச்னை முதல் பக்கத்துக்கு, தலைப்புச் செய்தியாக வந்துவிடுகிறது. இது உண்மையா என்பதை விசாரிப்பது என் முதல் நோக்கம்.
  2. கருப்புப் பணம் முதலில் எப்படி வெளிநாடுகளுக்குப் போனது? அப்படிப் போன பணம் எவ்வளவு இருக்கும்? சில மதிப்பீடுகள் சொல்வதுபோல 1.4 டிரில்லியன் டாலர் இருக்குமா? இந்தப் பணம் யாருக்குச் சொந்தம்? இதில் அரசாங்கம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் அரசு இழந்த தொகைதான் என்ன? இது இரண்டாவது கேள்வி.
  3. கருப்புப் பணம் எப்படி உருவாகிறது? உள்நாட்டில், வெளிநாட்டில் எப்படி பதுக்கப்படுகிறது? இது மூன்றாவது கேள்வி.
  4. கடைசியாக, கருப்புப் பணம் ஏன் உருவாகிறது, அதனை எப்படித் தடுப்பது? பிற நாடுகள் என்ன செய்கின்றன, நாம் என்ன செய்திருக்கலாம், என்ன செய்யவில்லை.
இந்த நான்கு கேள்விகளில் எதை முதலில் எடுத்துக்கொள்வது என்பதை நான் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் தீர்மானித்தேன். மக்கள் உணர்ச்சியை அதிகரித்து, அவர்கள் கோபத்தை அதிகரிக்க, ஓர் எளிமையான சூத்திரத்தை முன்வைக்கவேண்டும். அதனை சில அரசியல்வாதிகள் மிக அழகாகச் செய்கிறார்கள். இதோ பார், நம் நாடு ஏழைமையில் உழல்வதற்குக் காரணமே இந்தக் கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள்தான். அவர்கள் அப்படியே பணத்தை அலேக்காகக் கொண்டுபோய் சுவிஸ் நாட்டு லாக்கரில் வைத்துவிட்டார்கள். அதோ பார் ராஜிவ், இதோ பார் சோனியா. இதுதான் காரணம். அதனால்தான் நாடு அழிந்துவிட்டது. இந்தப் பணம் நம்முடைய பணம். இதோ வந்துவிட்டால், நாடே நம்பர் ஒன்.

இந்தக் கதையைக் கட்டாயமாக நம்ப விரும்புகிறார்கள் மக்கள். இது உண்மையா பொய்யா என்பதற்குள் போக இப்போது நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் முதலிலேயே சொல்ல விரும்புகிறேன். மக்கள் எதிர்பார்ப்பதுபோல பணம் வந்துவிட்டால் ஒரே நாளில் இந்தியா சொர்க்கபுரியாகும் என்றெல்லாம் பாஜக சொல்வதுபோல ஒன்றும் நடக்கப்போவதில்லை. இது குறித்துத் தனியாக விவாதிக்கலாம். (பழைய விவாதங்களைப் போல, அப்படியானால், எல்லோரும் கொள்ளை அடிக்கவேண்டும், சுவிஸ் வங்கியில் கொண்டுபோய் பணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்றா சொல்கிறாய் என்றால், நிச்சயமாக இல்லை.)

அடுத்த பதிவில், பணம் எப்படி வெளியேறுகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் ஆராய்கிறேன்.

8 comments:

  1. கருப்புப் பணத்தை எடுத்து மின்சாரமா நிலையமா? பயமுறுத்தறீங்களா? எங்கள் அண்ணன் ஜெய்ராம் ரமேஷ் கிட்ட போட்டுக் குடுத்துடுவோம், ஜ்ஜ்ஜாக்கிரதை

    ReplyDelete
  2. //பணம் எப்படி வெளியேறுகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் ஆராய்கிறேன்//

    இது நல்ல தொடக்கம். நீங்கள் கொஞ்சம் நிதானித்தே எழுதலாமே...

    ReplyDelete
  3. //(பழைய விவாதங்களைப் போல, அப்படியானால், எல்லோரும் கொள்ளை அடிக்கவேண்டும், சுவிஸ் வங்கியில் கொண்டுபோய் பணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்றா சொல்கிறாய் என்றால், நிச்சயமாக இல்லை.)//

    ச்சே! அப்டியல்லாம் சொல்லி நான் சுப்ரமணிசாமியோட Version ன்ற உண்மையை அவ்வுளவு சீக்கிரம் ஒத்துக்குவேனா என்ன?

    ReplyDelete
  4. So your next book is ready on this issue.

    ReplyDelete
  5. Diluting the facts of a criminal act is as criminal if not more criminal than the act itsel! Whereas the criminal by the very nature of his tactic concentrates mostly on illegal accumulation, a dilution of the evidence left behind is generally subcontracted! This becomes more pronounced when professionals seek to fully intergrate into this game of dissolving! The moral compass has been locked out safely and the criminal's feeling of even a miniscule of immorality gets washed away seeing the battery of powers intending to do a whitewash!

    Such being the case, as obvious and as evident, a move to open and push the rot out for it to be known to one and all needs not only bouts of a realistic assesments - which will come in the forefront any way- but also considerable bombastic advertisements. Such sound bites are necessary when the magnitude of loot has reached massive proportions and every power to be seen, including a so called clean head of the state, being a silent and a willing spectator for this anarchy!

    நீங்கள் எதை கரைக்க பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை திரு பத்ரி அவர்களே!

    // கருப்புப் பணத்தை மீட்டுவிட்டால் மட்டும் போதும்; இந்தியா உலகின் நாலைந்து நாடுகளில் ஒன்றாகிவிடும் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. இந்தியா முதன்மை நாடாகவேண்டும் என்பதுதானே அனைவரின் எண்ணமும். எனவே இப்படி ஒரு கூற்றை முன்வைத்தவுடன், இந்தப் பிரச்னை முதல் பக்கத்துக்கு, தலைப்புச் செய்தியாக வந்துவிடுகிறது. இது உண்மையா என்பதை விசாரிப்பது என் முதல் நோக்கம்.//

    யார் இப்படி முன்வைத்தார்கள் சார்? அப்படியே வைத்தாலும், இத்தகைய கொள்ளைகளை கண்டு முற்றிலும் insensitive ஆகிப்போன இந்நாட்டு மக்களுக்கு, விஷம் பரவிக்கிடக்கிறது பார் என்று எப்படி சொல்லுவது! இரா செழியன் அவர்களோ அல்லது அதே போல பொறுமைசாலிகள் சிலர் எழுதினால் யாராவது படிப்பார்களா? கருத்தையும் உள்ளர்த்தங்களையும் புரிந்து கொள்ளும் மக்கள் இந்நாட்டில் இருந்தால், நாம் ஏன் இது போல இருக்கிறோம்?? Hence Subramaniasamy and other "sound" parties are but a product of such a insensitive environment! Show a mature population and you will get mature commentators! But such balooning of facts does not in anyway of dilute the enormity of the loot!

    //இந்தக் கதையைக் கட்டாயமாக நம்ப விரும்புகிறார்கள் மக்கள். இது உண்மையா பொய்யா என்பதற்குள் போக இப்போது நான் விரும்பவில்லை. //
    You have got in the reverse. The population does not seem to be concerned. Its shocking but unfortunately its true. Hence the increase in decibel levels.

    ReplyDelete
  6. //சில மதிப்பீடுகள் சொல்வதுபோல 1.4 டிரில்லியன் டாலர் இருக்குமா? இந்தப் பணம் யாருக்குச் சொந்தம்? இதில் அரசாங்கம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் அரசு இழந்த தொகைதான் என்ன? இது இரண்டாவது கேள்வி.//
    Hasan Ali, the stud farmer based in Pune has been served a 50 thousand crores income tax notice. He is out on bail, hold your breadth - not for tax evasion and money laundering - but for a passport forgery case. I guess that Hasan Ali got into the IT net because some wise guy in IT department may have seen a Dawood / Pakistani/ Dubai Mafia connection and then served the notice. This was way back in 2007. This was before this man's and a few of his close crony's connection with NCP and Maharashtra Congress buddies was known. Once the mafia connection was discounted and the real owners of the loot were confirmed, IT dept and other investigating agencies suddenly kept quiet. Its three years now and this guy who has confirmed numbered accounts in Swiss banks is having a ball!

    So my point is, eventhough the numbers, figures and the alleged facts behind it may be over the top exclamations, it is more or less clear that a loot of a great proportion has happened in the past few years. So my request to you would be that one should not try and discredit the overall outlook towards such loot that is seeping into the minds of people, albeit very slowly!

    பிணங்களும் பிசாசுகளும் போர்வை இல்லாமல் பாய்ந்து வருது,
    நேர்மையும் நீதியும் ஆளில்லாமல் காய்ந்து வருது

    கொஞ்சம் இருக்கும் நாணயமும் கெஞ்சி கெஞ்சி கேட்க்கிறது
    நல்ல கஞ்சி மட்டும் கொடுத்துவிடு நஞ்சை நக்க நாளிதில்லை என்று

    நல்லவைகள் பலவும் நால் திசையிலும் ஓட
    ஆளும் முகமூடிகள் உண்மைகளை சாட
    எஞ்சியிருக்கும் சில உண்மை உள்ளங்கள் கொள்ளைகளை பார்த்து ஓலம் போட

    கொஞ்சி கொஞ்சி சொன்னானாம் சிங்கி அடிக்கும் இந்த சிங்கன்
    நல்லாட்சி பார் நாந்தந்தேன் என!

    அஞ்சி அஞ்சி அணைந்து போகும் அல்லி ராணியின் இந்த அடிமை
    ஆண்டு அனுபவிங்க எல்லோரும் என்று கண்ணை மூடியது கொடுமை

    வெள்ளை கூட்டங்களுக்கு குறி சொன்ன காத்தவராயனின் இந்த கடைசி மகள்
    கொள்ளை கூட்டம் ஒன்றை இந்தியாவில் நட்டதே இவரின் ஒரே புகழ்!

    ReplyDelete
  7. பா.ஜ.க எதைச் சொன்னாலும் அதை எதிர்க்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை பத்ரி அவர்களே. அப்படி உங்களை கட்டாயப்படுத்துவது என்னவாக இருக்கும் ?

    ReplyDelete
  8. we are awaiting for your updates ...

    ReplyDelete