Wednesday, January 12, 2011

கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது

தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, மென்பொருள் விருது ஒன்றை கணியன் பூங்குன்றனார் பெயரில் உருவாக்கி வைத்துள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்துதான் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது பனேசீ சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த தமிழ் இடைமுகம் கொண்ட அலுவல் செயலித் தொகுப்புக்கு அது தரப்பட்டது என்று ஞாபகம். அப்போது அறிவிக்கப்பட்டாலும், விருது 2010 கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்தான் தரப்பட்டது.

அடுத்து 2008, 2009 ஆண்டுகளுக்கான விருது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. 2009-ம் ஆண்டுக்கான விருதுக்கு NHM Writer தமிழ் (மற்றும் பிறமொழிகள்) எழுதியை அனுப்பியிருந்தோம். அது தொடர்பான கூட்டம் இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. பல்வேறு மென்பொருள்களையும் பரிசீலிக்க ஒரு நிபுணர் கூட்டம் வந்திருந்தது. ஐஐடி கான்பூர் சேர்மன் எம்.ஏ.ஆனந்தகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராசேந்திரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு, உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் குணசேகரன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதேவன், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத் தலைவர் செல்லப்பன், விஷ்வக் சொலுஷன்ஸ் வெங்கட்ரங்கன், இன்னும் பலரும் அரங்கில் இருந்தனர். ஒரு மென்பொருளுக்கு சுமார் 15 நிமிடங்கள் என்றுதான் செயல்விளக்கத்துக்கு நேரம் இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் என்பதால் குறைந்தது 20-25 செயல்விளக்கங்கள் இருந்தன. நாங்கள்தான் கடைசி!

நாகராஜனும் நானும் நுழையும்போது அனைவரும் சோர்ந்துபோயிருந்தனர். பாவம்! நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நாகராஜன் மென்பொருளை இயக்கிக்காட்ட, நான் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிப் பேசினேன். உண்மையில் இதனை விளக்குவது எளிதாகவே இருந்தது. ஏனெனில் அறையில் இருந்த பலர் அந்த மென்பொருளை ஏற்கெனவே பயன்படுத்துபவர்கள். அதிலும் ஜெயதேவன் போன்ற இந்தியவியல் துறையைச் சேர்ந்தவர்கள் டயாக்ரிடிக் பயன்பாட்டைப் பெரிதும் சிலாகித்தார்கள். பொற்கோ உடனடியாக அதைச் செயல்படுத்தச் சொல்ல, அதிலேயே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. டேவிதார் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியம் தரவில்லை. தான் அந்த லோகோ உள்ள மென்பொருளைப் பல மாதங்களாகப் பயன்படுத்துவதாகவும் ஆனால் அதன் பெயர்தான் என்.எச்.எம் ரைட்டர் என்று தனக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது என்றும் சொன்னார். ஒரு பொருளை பிராண்டிங் செய்வது எளிதல்ல. பயன்பாட்டில் இருந்துகொண்டே இருந்தாலும்கூட அது எந்தப் பொருள் என்றே தெரியாது பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

நாங்கள் சந்தித்ததிலேயே உள்ள கடுமையான கேள்வி, இந்த மென்பொருளுக்கு தமிழில் ஏன் பெயர் இல்லை என்பது. அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று தடுமாறினோம். அடிப்படையில் தமிழ் எழுத என்று உருவானாலும் இந்தியாவின், அதையும் தாண்டி உலக மொழிகள் பலவற்றையும் எளிதில் எழுத வகை செய்யும்படியே இந்த மென்பொருள் உள்ளது. உதாரணமாக இதைக் கொண்டுதான் பர்மிய மொழியில் இன்று பலரும் எழுதுகிறார்கள். பர்மிய ஆன்லைன் தளங்களில் இது தொடர்பான விவாதங்களை நீங்கள் பார்க்கலாம். சிங்களம், தாய், லாவோஸ், வியட்னாமிய, கம்போடிய, கொரிய மொழிகள் என கிட்டத்தட்ட (சீனம் தவிர்த்த) அனைத்து ஆசிய மொழிகளையும் இதைக்கொண்டு எழுதலாம். அந்த மொழிகளுக்கான கீபோர்ட் அமைப்புகளை உருவாக்குவது எளிது. ஆனால் இதனை நாங்கள் இதுகாறும் பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை.

*

சரி நீண்ட பீடிகைக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். இன்று காலை தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து தொலைபேசிச் செய்தி. 2009-ம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருதுக்கு NHM Writer மென்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த விருதும் 16 ஜனவரி 2011 அன்று (சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகளுடன் சேர்த்து) வள்ளுவர் கோட்டம் விழாவில் தரப்படுமாம்.

இதன் ஆக்கியோன் என்ற முறையில் நாகராஜனுக்கும், இதனைப் பயன்படுத்தி, மேம்பாடுகளைக் கேட்டுப் பெற்றவர்கள் என்ற முறையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருதுக்கான பங்கு உள்ளது.

இதற்கான ஒரே கைம்மாறு, மேலும் பல இலவச மென்பொருள்களை உருவாக்கி உங்களுக்கு அளிப்பதே.

50 comments:

 1. விருது பெற முழுத் தகுதியும் உள்ள மென்பொருள்தான் இது. நாகராஜனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மேலும் மேலும் பல பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நாகராஜன் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

  NHM Writer கொண்டு சௌராஷ்ட்ரா மொழியை எழுதுவதும் எளிதாக உள்ளது. நான் 'Key Map' செய்வதில் சிக்கல் எழுந்த பொழுது நாகராஜன் தான் ‘Developer Kit' தந்து உதவினார். அவருக்கு ஒரு ‘Special Thanks'.

  ReplyDelete
 4. Badri Sir,

  Congratulations for you and your team.
  Please continue to your service to Tamil.

  Bala.

  ReplyDelete
 5. Congratulations to Badri and Nagarajan...Your team deserves this and many more....Looking forward to soon use your new baby Feedle..

  Rajesh

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
  இதை உபயோகம் செய்த பிறகு.. இதன் எளிமை பதிந்து விட்டது. இதை ஜெயமோகன் வலை மூலம் அறிந்தேன். இதை வைத்து ஒரு கதை எழுதி ”சொல்வனம்” இதழில் publish-ம் நான் செய்தாகி விட்டது.
  மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
  அன்புடன்
  கணேஷ்.

  ReplyDelete
 7. கடந்த இரண்டாண்டுகளாக இதை வைத்து கிரெக்க எழுத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்
  α β γ என்று கலக்கலாம்

  ReplyDelete
 8. It is surprising that the award for 2009 is announced in 2011. What about the award for 2011 ? will it be in 2014 !

  Vijayaraghavan

  ReplyDelete
 9. நாகராஜன் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. //இதன் ஆக்கியோன் என்ற முறையில் நாகராஜனுக்கும், இதனைப் பயன்படுத்தி, மேம்பாடுகளைக் கேட்டுப் பெற்றவர்கள் என்ற முறையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருதுக்கான பங்கு உள்ளது.

  //

  விருதுக்கான பெருமையில் பங்கு உள்ளது என்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். பங்கு என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது. :-)

  ReplyDelete
 11. வாழ்த்துகள்!

  அடுத்த விருதுக்காக NHM Converter காத்திருக்கிறது!

  ReplyDelete
 12. மனமார்ந்த வாழ்த்துக்கள் பத்ரி.
  சாப்ட்வேர் உருவாக்க முறை அறிந்தவர்களிடமேல்லாம் முன் வைக்கும் எனது நீண்ட நாள் கோரிக்கை :-)
  1. டெக்ஸ்ட் டு வாய்ஸ் - தமிழில் இல்லை
  2. dictation software
  3. ocr தமிழ்
  http://www.sarma.co.in/ என்பவர் இது போன்ற பல முயற்சிகளை ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 14. வாழ்த்துகள் பத்ரி & நாகராஜன்.

  ReplyDelete
 15. நாகராஜனுக்கும் என்.எச்.எம். குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்த எழுதியை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

  என் வேண்டுகோளுக்கு இணங்கி, நாகராஜன், New Typewriter Keyboard நிரலை எனக்குத் தனியே தந்துள்ளார் (பொது வெளியீட்டில் இது இல்லை). அதில் லூ, சூ, நூ, ளூ, தூ போன்ற சில விசைகளைத் தட்ட இயலவில்லை. இந்த எழுத்துகளைத் தனியே வைத்துக்கொண்டு, எடுத்து ஒட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஹாய் கோபி தளத்தில் உள்ள New Typewriter Keyboard பயன்பாட்டில் இந்தச் சிக்கல் இல்லை.

  'மொத்த நிரலையும் தந்துவிடுகிறேன். நீங்களே உங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளுங்கள்' என்றால், அது சரியான தீர்வாகாது. இந்தச் சிக்கலைச் சரி செய்து, NHM எழுதியின் பொது வெளியீட்டில் இணைக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 16. வாழ்த்துகள் நாகராஜன், பத்ரி !!

  ReplyDelete
 17. நாகராஜனுக்கும் பத்ரிக்கும் எனது வாழ்த்துக்கள். இதை நான் NHM writer உதவியுடன் எழுதுகிறேன்.

  ஸ்ரீதர், சேலம்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் !!!!!

  ReplyDelete
 19. நான் பல நாட்களாக பயன்படுத்தியும் பலரிடம் அறிமுகப்படுத்தியும் வருகின்றேன்.

  மிகவும் பயனுள்ள மென்பொருளுக்கு இப்ப்ரிசு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.


  மனமார்ந்த வாழ்த்துகள்.

  சுப்பு

  ReplyDelete
 20. ஏற்கனவே ஏகப்பட்டது இருந்தாலும் எளிமைப்படுத்திய பயன்பாடும், வழுக்களற்ற(அல்லது தொல்லை தராத) வடிவமைப்பும், சரியான பிராண்டிங்கும் NHM writerன் பலம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. Excellent , Congrats!!!!!!

  Bala
  Texas

  ReplyDelete
 22. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோடு சேர்த்து NHMக்கு மூன்று தமிழக அரசு விருதுகள்.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. நான் இம்மென்பொருளைப்பற்றி அறிந்த நாள் முதல் பயன்படுத்தி வருகிறேன். எனது நண்பர்களின் கணணிகளிலும் அவர்களிளை கேட்காமலே நிறுவியும் வருகிறேன். :( , :), :( ,:) !!!!

  ReplyDelete
 26. மிக்க மகிழ்ச்சி, பத்ரி. அருமையான மென்பொருளை உருவாக்கியதற்கு நன்றி..

  ReplyDelete
 27. ராமதுரை எழுதியது
  இன்று காலை தினமணி செய்தியைப் பார்த்து தான் தகவல அறிந்தேன். தங்களுக்கும் தங்கள் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இப்படி ஒரு படைப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. கடந்த சில காலமாகவே நான் என்.எச்.எம் ரைட்டரைத் தான் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்கள் பலருக்கும் அதை சிபாரிசு செய்து அவர்களும் அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இப்படியான பல படைப்புகளை அளிக்க் எனது வாழ்த்துகள்.தமிழுக்கும் ( பிற மொழிகளுக்கும் தான்) தாங்கள் செய்து வரும் சேவை தொடரட்டும்.
  ராமதுரை

  ReplyDelete
 28. வாழ்த்துகள்.

  லாவோஸ் (Laos)என்பது "லேயாஸ்" என்று இருக்க வேண்டும்.

  சரவணன்

  ReplyDelete
 29. சரவணன்: கீழ்க்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்:

  http://britishexpats.com/forum/showthread.php?t=329668

  http://inogolo.com/pronunciation/Laos

  ReplyDelete
 30. வாழ்த்துகள் நாகராஜன், பத்ரி & software@NHM Team!

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 31. NHM Writer உருவாக்கத்திற்கு உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 32. ரோமிங் ராமன்Thu Jan 13, 03:19:00 PM GMT+5:30

  நாம் பயன்படுத்தும் (வாங்கிய ) பிராண்ட் வண்டிக்கு ஒரு விருது வழங்கிக் /வாங்கிக் கொள்ளப்பட்டாலே பெரிய சந்தோஷம். அப்படி இருக்க .. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு நவீன கால காரணிக்குக் கிடைத்தால் ஒரு பெரிய மற்றும் நிஜ சந்தோசம் எவ்வளவு பெரிதாக இருக்கும்... தட்ஸ் off !!! ரோமிங் ராமன்

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் பத்ரி சார்,

  @Vidhoosh
  உங்கள் இரண்டு கோரிக்கையை இந்த தமிழ் மென்பொருள் நிவர்த்தி செய்யும்

  ReplyDelete
 34. பத்ரி: உங்களுக்கு ஒரு சந்தோஷச்செய்தி. ஏழாம் தேதி பாவண்ணன் உங்களையும் பாராவையும் சந்திக்கும்போது NHM Writer/Converter பற்றி தெரியாதவராக வேறு எதிலோ டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் பேர்வழியாகத்தான் இருந்தார்.

  அவர் என் வீட்டிலிருந்த இரு நாட்களில், இந்த கணினி நிரக்ஷரகுட்சி அவருக்கு NHM Writer/Converter பற்றி ஒரு வகுப்பே எடுத்து புரியவைத்தேன். பெங்களூர் போய் என்.எச்.எம்.கரதலப்பாடமாய் எனக்கு ஒரு செய்தியும் நன்றியும் அனுப்பியிருந்தார். அது உங்களுக்கும், நாகராஜனுக்கும் சேரவேண்டியது. இப்போது சேர்ப்பித்துவிட்டேன்.

  நல்ல பதிவு! நன்றி பத்ரி!!

  ReplyDelete
 35. ஹை, நாகராஜன்.... சூப்பர்!

  பர்மிய மொழியுமா? இது தெரியாதே...புதுசு.

  ReplyDelete
 36. பத்ரியையும், நாகராஜனையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக்கொள்வது போல! கொஞ்சம் நெளிய வேண்டியிருந்தாலும், கண்டிப்பாக இதைச் செய்தே ஆகவேண்டும்!

  முரசு அஞ்சலுக்கும் முந்தைய (pre 1985) காலகட்டங்களிலிருந்து நானும் பல நண்பர்களும் இதிலெல்லாம் எவ்வளவு ஒன்றிப்போய், எவ்வளவு சோதனை முயற்சிகள், வேதனைகள், எரிச்சல்கள் எல்லாம் தாண்டி இப்போது இங்கே வந்து ஜம்மென்று சேர்ந்திருக்கிறோம்!

  எத்தனையோ பின்னிரவுகளின் நாகராஜனும் நானும் இது பற்றியெல்லாம் இப்போதும் முட்டி மோதிக்கொள்கிறோம்! பாராட்டுகள், நாகராஜன்!

  1985ல் சுஜாதா எனக்கு முரசு அஞ்சலை, நெடுமாறனை, தமிழ் நெட்டை, பாலாவை அறிமுகப்படுத்திய நினைவுகளெல்லாம் நெஞ்சில் வந்துபோகின்றன. பிதாமகர் சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதற்காகவே ஒரு ’கற்றதும் பெற்றதும்’ போட்டிருப்பார்!

  பத்ரி, உம் குலம் வாழ்க, உம் கொற்றம் வாழ்க! அங்கே முற்றத்தில் குதியாட்டம் போடும் எம்போன்ற எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக வாழ்க!

  கன்கிராட்ஸ் மை டியர் ஃப்ரண்ட்ஸ்!

  ReplyDelete
 37. முரசு அஞ்சலுக்குப் பிறகு, என் ஏய்ச் எம் க்கு முன்பாக பலரும் தமிழில் எழுத பயன்படுத்தியது " எ கலப்பை ".

  தனியொரு மனிதராக இதனை உருவாக்கி இலவசமாக தந்தவர், ஆஸ்திரேலியா வாழ் - சுப்ரமணியன் முகுந்த்.

  ReplyDelete
 38. வாசன் சொல்வது போல் ஈகலப்பையையும் நான் நினைவுகூர்ந்திருக்கவேண்டும், மன்னிக்க! இன்றும் ஆங்காங்கே ஒரு குருஜெகதீசன் (ஆண்ட்ராய்ட் டெவலப்பர்) போன்ற நல்லவர்களால், தமிழ் மென்பொருளின் தரம் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.

  வெல்டன் ஃப்ரண்ட்ஸ்!

  ReplyDelete
 39. Congrats for the award. I am so happy to understand that other language people are also using this software.

  If you could, I kindly request you to name this software in Tamil. I beleive that is the only way we could take Tamil into the international arena. If our people are naming our products in english, how will international community will understand our culture or how will our language getting popular

  I always dream about a company with name such as "அண்ணாச்சி மளிகை" listed in NASDAQ\BSE and product such as yours with some tamil name "பன் மொழி பலகை" or something that sort getting popular in international arena.

  Atleast those who are using this software will know Tamil and forced to say atleast this one word in tamil during their conversation.

  ReplyDelete
 40. அன்புள்ள பத்ரி,
  உண்மையில் தகுதியுள்ள ஒரு மென்பொருளுக்கான விருது.

  நான் முரசு அஞ்சல்,பாரதி,குறள் எழுதி,இ-கலப்பை போன்ற பலவற்றை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.
  ஆனாலும் என்.எச்.எம் உபயோகித்ததில் இருந்து வெகு எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் விதூஷ் வித்யா வேண்டியிருக்கும் விதயங்களை சேர்க்குமாறு உங்களுக்கு மடலிட்டிருந்தேன்,பார்த்தீர்களா என்று அறியேன்..

  பாராட்டுக்கள்.விருதுக்கும்,பதிவின் கடைசி இரு வரிகளுக்கும்..
  :))

  ReplyDelete
 41. வாழ்த்துகள், பத்ரி மற்றும் நாகராசன்.
  எ-கலப்பை அளித்த முகுந்த் மற்றும் தமிழா குழுவினருக்கும் நன்றி.

  நன்றி - சொ.சங்கரபாண்டி

  ReplyDelete
 42. தமிழ் இணையப் பயன்பாட்டில் இருப்பவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற என்.ஹெச்.எம். மென்பொருளுக்கு... இன்று தமிழ்நாடு அரசு கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது அளித்து பாராட்ட உள்ளது குறித்து மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  -தேனி.எம்.சுப்பிரமணி.

  ReplyDelete
 43. Congrats Mr.Nagarajan (My Maams) . Continue ur creative works and produce more regional & traditional softwares. All d best for your future inventions . . .

  Convey my wishes to ur team also .

  Pongal Vaalthukkal .

  Gopikrishna.C

  ReplyDelete
 44. வாழ்த்துகள். எனக்கு குரு.ஜெகதீசனைத் தெரியும் ;-)

  ReplyDelete
 45. வாழ்த்துகள். மேலும் பல சிறப்பான மென்பொருள்களை உருவாக்குங்கள்.

  ReplyDelete
 46. மகிழ்ச்சியான செய்தி, பாராட்டுகள் பத்ரி!!!

  வெங்கட்

  ReplyDelete