Wednesday, January 19, 2011

கருப்புப் பணம்

கருப்புப் பணம் மேட்டர் இப்போது தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்திருக்கும் ஒரு புது விவகாரம். பழசுதான்; ஆனால் இப்பப் புதுசு. அதனால் நானும் இதில் கருத்து சொல்லியே ஆகவேண்டும்.

கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பலரும் பல லிஸ்டுகளைப் போட்டாயிற்று. அது, தெருவெங்கும் டாய்லட் கட்டுவதில் ஆரம்பித்து, இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பதற்குச் சென்று, நாட்டின் 45 கோடி ஏழை மக்களுக்கு ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிப்பதுவரையில் நீள்கிறது.

இந்தக் கருப்புப் பணம் ஏதோ அந்நிய நாட்டில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் பணம், ஒரு பேச்சுக்கு அமெரிக்க டாலராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் இந்திய ரூபாய்களாக மாற்றினால்தான் இந்தியாவில் டாய்லெட் கட்டமுடியும்; ஒவ்வோர் ஏழைக்கும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கமுடியும். (அந்நியக் கடன் மேட்டரை மட்டும் இப்போதைக்கு கன்வீனியண்டாக விட்டுவிட்வோம். பின்னர் ஒரு சமயம் அதனை எடுத்துக்கொள்வோம்.)

கேள்வி 1: திடீரென இத்தனை அமெரிக்க டாலர்களை டாலர்-ரூபாய் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்.

பதில்: அமெரிக்க டாலர் சல்லிசாகப் போய், டாலருக்கு 45 ரூபாய் என்ற நிலைமை மாறி, டாலருக்கு 15 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் என்று சடாரென ஆகிவிடும். இந்த அதகளத்தில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற பெரும்பாலும் டாலரில் சம்பாதிக்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் கூண்டோடு கைலாசம் போவார்கள். சாஃப்ட்வேர் கனவான்கள் எல்லாம் நடுத்தெருவில் பிச்சை எடுப்பார்கள். ஏன் என்று புரியவில்லை என்றால், பொருளாதாரம் தெரிந்த ஒருவரிடம் சாவகாசமாக உட்கார்ந்து கேளுங்கள்.

இது நடக்கக்கூடாது என்றால், இந்தியா வேறு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். இந்த டாலர் சுமார் 1 டிரில்லியன் என்கிறார்கள். அதாவது 45 லட்சம் கோடி ரூபாயாம். அதற்கு இணையான ரூபாய்களை ரிசர்வ் வங்குமூலம் உருவாக்கி, ஒரு ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகிள் மூலம் உள்ளே வரும் டாலருக்கு பதில் இந்த ரூபாய்களை அளித்து, அரசே அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது மட்டும்தான் டாலர்-ரூபாய் சந்தையில் மாற்றங்கள் இருக்காது. நம் டாலர் கையிருப்பு சடாரென உயரும். அதே நேரம், 45 லட்சம் கோடி ரூபாய் புதுப் பணம் இந்தியச் சந்தையில் பாயும். இந்தப் பணத்தை ஒரு ஆண்டிலோ இரண்டு ஆண்டுகளிலோ இந்திய அரசு செலவழிக்க முனைந்தால் நாட்டின் பணவீக்கம் நாம் இதுவரை கண்டிராத அளவு மிகக் கடுமையாக உயரும். (இந்தியாவின் ஜிடிபியும் இந்தப் பணமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதைக் கருத்தில் வையுங்கள்.) அப்போதும் அழிவுதான். இதுவும் ஏன் என்று புரியாவிட்டால் மீண்டும், பொருளாதாரம் படித்துள்ள உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேளுங்கள்.

கேள்வி 2: பணத்தை எங்கிருந்தோ எடுத்து வருவதற்கு மாற்றாக, அதற்கு இணையான 45 லட்சம் கோடி ரூபாய்களைப் புதிதாக அச்சடித்து, ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ஏன் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கக்கூடாது?

பதில்: மேலே சொன்னதற்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், அந்நியச் செலாவணிக் கையிருப்பில் ஏற்படும் மாற்றம் மட்டுமே. அதனால்தான் பிரச்னை மிகப் பெரிது என்கிறேன்.

கேள்வி 3: அப்படியானால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டாமா? பத்ரி ஏன் இப்படி ஒரு வில்லங்கமான ஆளாக இருக்கிறார்? ராஜா உத்தமன், ராணி உத்தமி என்கிறார். இப்போது கருப்புப் பணத்தைக் கொண்டுவரவேண்டாம் என்கிறார்.

பதில்: இல்லை. எப்படி இராசா ஊழலில் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் பேசப்பட்டதோ, அதேபோலத்தான், கருப்புப் பணம் மேட்டரிலும் எகனாமிக்ஸ் புரியாமல் ஆளாளுக்குக் கொதித்துக் கொந்தளிக்கிறார்கள்.

கருப்புப் பணத்தால் (அது இந்தியாவில் இருக்கும் பணமோ, வெளிநாட்டுக்குப் போன பணமோ), அரசுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வராமல் போகிறது. அந்தப் பணத்தை மட்டும்தான் அரசு திரும்பப் பெற முனையவேண்டும். ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம், அதாவது உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் விரிவடையாமல் அரசின் கைகளுக்குப் பெருமளவு பணம் போய்ச் சேரக்கூடாது. அப்படிப் போய்ச் சேர்ந்தால், பொருளாதாரத்துக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமானவை. அரபு நாடுகளில் எண்ணெய் மூலம் வரும் ராயல்டி வருமானம் இந்த வகையைச் சார்ந்தது. அதன் காரணமாகவே அது ஒரு ‘மாயப் பொருளாதாரத்தை’ அங்கே உருவாக்கியது. இன்று துபாய் தத்தளிக்கிறது. அதேபோலத்தான் இந்தக் கருப்புப் பணம் ஏற்படுத்தும் ‘மாயப் பொருளாதாரமும்’.

அடிப்படை உற்பத்தியை அதிகப்படுத்த என் நண்பன் சத்யா சொன்ன ஒரு கருத்தை மட்டும் இங்கே விதைக்கிறேன். இந்தக் கருப்புப் பணத்தை ஏதோ விதத்தில் கைப்பற்றினாலும், அதனை இந்தியாவுக்குக் கொண்டுவரக்கூடாது. மாறாக, முற்றிலுமாக வெளிநாடுகளில் செலவுசெய்து, மின் உற்பத்தி நிலையங்களை முழுதாக வாங்கவேண்டும். அவற்றைக் கொண்டு இந்தியாவில் மின் உற்பத்தியை வெகுவாக அதிகரித்து, சந்தையில் இறக்கவேண்டும். இதன் காரணமாக இரண்டு விஷயங்கள் ஏற்படும். மின்சாரக் கட்டணம் வெகுவாகக் குறையும். மக்கள் அனைவருக்கும் மின்சாரம் மட்டின்றிக் கிடைக்கும். உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். அதன் விளைவாக, கடுமையான பணவீக்கத்துக்கு பதிலாக, நல்ல உற்பத்திப் பெருக்கமும் அதன் விளைவாக நியாயமான பணவீக்கமும் ஏற்படும். (ஆனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும்... எல்லாம் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எண்ட்ரோபி படுத்தும் பாடு!)

இப்படி புத்திசாலித்தனமாகச் செய்யாவிட்டால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

***

இது தொடர்பான சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்.

49 comments:

 1. 1) உங்கள மொத்தக்கட்டுரையின் வாதமே' சடாரென இத்தனை பணம் உள்ளே நுழைவதாக' கொள்வதால் தானே. அப்படி எப்போதாவது நடந்திருக்கிறதா. இந்தியாவிலோ வெளிநாட்டிலோ? ஒரு ஜிடிபி அளவுக்கு இருக்காது என்பது என் அனுமானம். அதனால் கட்டுரையின் basic premise அடிப்பட்டுப்போகிறது

  2) ஞாயமாக பணத்தை பதுக்கியவர்கள் மேலே வழக்குகளும், அதற்கான வரியும், வரிவருவாய் இழப்புக்கான வட்டியும் மட்டுமே அரசை சாரும். வழக்குகள் முடிந்து அதைப்பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

  3) உங்களிடமிருந்து கருப்புப்பணத்தை எப்படி ஒழிப்பது என்பது போன்றிய பற்றிய கட்டுரையை எதிர்ப்பார்கிறேன். இதைப்போன்ற நடக்கப்போகாத சங்கதிகளைப் பேசி என்ன பயன்

  ReplyDelete
 2. Good alternative thinking.

  ' துபாய் தத்தளிக்கிறது' your view is totally not right. Dubai is not having any oil resource (only Abu Dhabi is having oil and huge money), so Dubai depends on tourism, real estate etc for income source. Dubai problem is different and not '‘மாயப் பொருளாதாரதm'

  If you want I can write little big comment regarding that.

  Sample Abu Dhabi does not like Dubai's growth and now during this adverse situation, ADhabi is indirectly buying Dubai's properties/shares in the business.(even though it is a part of UAE)

  Sudharsan
  Dubai

  ReplyDelete
 3. Your last point regarding Power Station, Abu Dhabi govt (not UAE) is started doing this right now. They are actively doing this in Europe (London, Spain etc)Some portion in the name renewable energy. Another thing is buying like Carbon Credit. They use this money for buying Carbon Credit in China, India etc.

  ReplyDelete
 4. பத்ரிஜியின் புதுப்புது அவதாரங்களும் அவதானிப்புகளும் நம்மை நாள்தோறும் தொடர்ந்து பயமுறுத்துவது நாடெங்கும் தெரிந்ததே!

  இந்தக் கருப்புப் பணத்தையெல்லாம் நாட்டிற்கு உள்ளே கொண்டுவந்தால் நாடு குட்டிச் சுவராகப் போய்விடும் என்கிற நியாயமான அவர் கவலை என்னைப் புல்லரிக்கச் செய்கிறது. எலெக்ட்ரிக் சப்ஸ்டேஷன்களை வாங்குவதெல்லாம் ஷாக் அடிக்கக்கூடிய பம்மாத்து யோசனை, வேண்டாம்.

  இதிலே முக்கியமாக, உள்நாட்டுக் கருப்புப் பணம், வெளிநாட்டுக் கருப்புப் பணம் என்று இரண்டு மாடல்கள் உலாவருவது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சொல்லாமலேயே உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

  உ.க.பவை தெருவெங்கும் டாய்லட்கள் கட்டியே செலவழித்து விடலாம். நதிகளைத்தான் இணைக்க நமக்குத் துப்பில்லை, இந்த டாய்லட்களையாவது ஒருங்கிணைந்த டாய்லட்களாக அறிவிக்கலாம். அறிவிப்பு செய்தவுடன் பாராட்டுவிழா, கட்டி முடித்தவுடன் ஒரு அஃபிஷியல் ஃப்ளஷ் என்று அமர்க்களப்படுத்தி விடலாம். நாடெங்கும் கொஞ்சம் நாற்றம் அதிகமாகும். அதனாலென்ன, இருக்கிற நாற்றத்தில் அதுவும் நாளடைவில் கரைந்துபோம்.

  வெ.க. பணத்தை எம்போன்ற NRI பிரகஸ்பதிகளுக்குப் பங்குபோட்டுக் கொடுத்துவிட்டால், நாங்கள் அதை நாளடைவில் இந்தியாவில் திரும்பவும் கொண்டுவந்து முதலீடு செய்து மொத்தமாக இழப்போம்.

  இந்த இரண்டு முறைகளாலும் தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. புதிது புதிதாக முளைக்கும் கருப்புப் பணத்தை இதே முறையில் மறுபடி மறுபடி ரீசைக்கிள் செய்து கொள்ளலாம்.

  செவ்வாய் மற்றும் சனி கிரகங்களுக்கு இந்தியர்களைக் கொண்டுபோய் செட்டில் செய்யும் விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றியும் பத்ரிஜியின் அஸ்ட்ரோநாட் அவதானிப்புக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  நல்ல திரிபு, நன்றி பத்ரி!

  ReplyDelete
 5. 1) கடனடைக்கலாமே. GDP இல் சுமார் 80% கடன் வைத்து, அதற்கு வட்டி கட்டி வருகிறோம். இதனை அப்படியே வெளியில் கட்டிவிடலாம். இதனால் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங் உயர்ந்து ரூபாய் மதிப்பு உயரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சீனா போல கரன்சி பெக் ஒன்று போட்டுக் கொண்டு முரண்டு செய்து பார்க்கலாம்.

  2) டெஃபிசிட் ஸ்பெண்டிங் தானே செய்கிறோம், அப்போ உபரி பண சப்ளை உள்ளே இருக்குன்னு தானே அர்த்தம், ஒரு சொவரைன் ஃபண்டு ஒன்னு போட்டு, பணத்தை அப்படியே ஸ்விஸ் பாங்கிலேயே வச்சுட்டு அதிலிருந்து ஒவ்வொரு வருஷமும் கரண்ட் அக்கவுண்ட் டெஃபிசட்ட மட்டும் அடச்சுட்டு வரலாமே. இதனால பண வீக்கம் குறையுமே.

  ReplyDelete
 6. பணவீக்கம் என்றால் என்ன?நீங்கள் சிரித்தாலும் பரவாஇல்லை.அது எவ்வாறெல்லாம் ஏற்படுகிறது?

  ReplyDelete
 7. பல துறைகளில் முதலீடு செய்யலாம். (குறிப்பா மரபுசாரா மின் உற்பத்தி) அன்னிய முதலீட்டுக்காக கெஞ்சத்தேவையில்லை. முதலீடு செஞ்சா எல்லா பணமும் ஒரேடியா செலவாகாது. கொஞ்சம் கொஞ்சமாக செலவாகும்.

  \\திடீரென இத்தனை அமெரிக்க டாலர்களை டாலர்-ரூபாய் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும். \\ என்ன 1-2 ஆண்டுல எல்லா பணமும் வந்திருங்கிறிங்களா?.

  வெளிநாட்டில் எண்ணெய்வயல்களை குத்தகைக்கு எடுக்கலாம் அல்லது வாங்கலாம்.

  அடிப்படை கட்டமைப்புகளை விரிவுபடுத்தலாம்.
  ஆராய்ச்சி துறைக்கு அதிகம் செலவளிக்கலாம். (இப்ப செலவளிப்பது மிக மிக குறைவு)
  கல்வி துறைக்கு அதிகம் செலவளிக்கலாம். (இப்ப செலவளிப்பது மிக மிக குறைவு).

  ReplyDelete
 8. it need not be just electricity.. general infra. spending should do the same.
  it increases investments in manufacturing / construciton and services. adds employment..etc

  first thing should be multifacility jails for those who caused it.

  As if this is going to happen..

  Ex Republican whip is being sentenced to 3 yrs in US..dreaming about the same in India..

  ReplyDelete
 9. பத்ரி,
  குருமூர்த்தியின் நேற்றைய தினமணிக் கட்டுரையும், உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியுமே தங்களின் இந்த இடுகைக்கு காரணம் என நினைக்கிறேன்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  ReplyDelete
 10. அப்ப இவங்க கொள்ளை அடிச்சா அமெரிக்க டாலர் ௬௦ ஆகிவிடும். டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற பெரும்பாலும் டாலரில் சம்பாதிக்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் லாபம் மேலும் அதிகரிக்கும்.! நாட்டின் பணவீக்கம் நாம் இதுவரை கண்டிராத அளவு மிகக் குறையும்?? இது ஏன் என்று புரியாவிட்டால் மீண்டும், பொருளாதாரம் படித்துள்ள உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேளுங்கள்.!!!!

  அப்ப கொள்ளை அடிச்சது நாட்டு ஜனங்களுக்கு
  சரிங்கிரீர்களா? என்னங்க இது?

  ReplyDelete
 11. "இணைய சுப்ரமணிய சுவாமி" என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறோம். நல்ல பதிவு, நன்றி பத்ரி.

  ReplyDelete
 12. பணத்தை இந்தியாவின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்தாலும் பணவீக்கம் அதிகரிக்கும்; சில அத்தியாவசியப் பொருள்களின் விலையில் கடுமையான ஏற்றம் இருக்கும்.

  ஒரே ஓர் உதாரணம் தருகிறேன். இந்தப் பணத்தைக் கொண்டு சாலைகள் அமைக்க அரசு முடிவு செய்கிறது. அனைத்தும் இந்திய ஒப்பந்தக்காரர்களுக்குப் போகிறது. அவர்களுக்கு கருங்கல் ஜல்லி, தார், ஆஸ்ஃபால்ட், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் ஆகியவை வேண்டும். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவில் உற்பத்தி ஆகிவருகின்றன. அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட கிராக்கி இருக்கிறது. இப்போது திடீரென கிராக்கி கடுமையாக அதிகரிக்கிறது. உற்பத்தியை அதே வேகத்தில் அதிகரிக்க முடியாது. ஏனெனில் உற்பத்தியாளர்களிடம் அதற்கான மூலதனம் கிடையாது. அவர்களால் ஆண்டுக்கு 20-30% என்ற அளவில்தான் அதிகபட்சமாக உற்பத்தியைக் கூட்டமுடியும். அப்படியானால், கிராக்கி அதிகமாகி, விலை கடுமையாகக் கூடும். அனைத்து சரக்குகளும் அரசாங்கக் கொள்முதலுக்கே செல்லும். ஏனெனில் அரசாங்கத்தின் கையில்தான் பணமே இருக்கிறது. இதனால் சாதாரணப் பொதுமக்கள், தெருக்கோடியில் வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

  இதனால்தான் அடிப்படை உற்பத்தியை அதிகரிக்கும் செயல்களை அரசு தூண்டி, அதன்மூலம் தன் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பது.

  (அந்நியக் கடன், சோவரின் ஃபண்ட் ஆகியவை பற்றி மற்றொரு பதிவில் தனியாக எழுதுகிறேன்.)

  ReplyDelete
 13. சுமார் ஆறு வருடங்களுக்குமுன் எழுதிய இந்தக் கட்டுரை ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஒன்றை கவனியுங்கள்; இந்தத் திட்டத்தைக்கூட நாம் செயல்படுத்தவில்லை. எனவே கருப்புப் பணம் ஒரு டிரில்லியன் டாலர் கையில் கிடைத்தால் என்ன செய்யவேண்டும் என்று கவனமாக யோசிக்கவேண்டும்.
  http://thoughtsintamil.blogspot.com/articles/20040923_samachar.html

  ReplyDelete
 14. பிரச்சனையே, கருப்பு முதலைகள், கணக்கில் காட்டமல் முறைகேடாக சம்பாதித்த பணமும், அதற்கு ஒழுங்காக கட்டப் படாத வரியும்தான்.

  என்னைப் போல, மாத சம்பளம் வாங்கும், ஒழுங்காக வரிகட்டும் கோடானு கோடி மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

  வியாபாரம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்று சொல்லி, இவர்கள் வரி கட்டாமல் ஏய்ப்பது எந்த கணக்கில் சார் வரும்?

  ReplyDelete
 15. Am not sure I follow the economics. This is more like the logic in Sivaji. The black money dollars abroad when brought into India, will increase dollar availability for India and increase India's ability to buy stuff from abroad. The resultant increase in Rupee money supply in India will be significant enough to weaken the Rupee and maintain the parity with the weakening appetite for dollar. Inflation cannot be curtailed unless the Government isssues T Bonds to mop up the suprlus Rupees and spends it in meaningless infrastructure (ghost cities and empty malls) like China does. Additionally, I dont think the quantum of black money abroad would be $ 1 trillion (or close to the size of the GDP in exchange parity computations, which is what is relevant for this purpose, not PPP). Such a large flow (almost equal to China's reserves coming from years of export to US) would require approx 125 scams of the size of 2G! Sensational. Does not make sense.

  ReplyDelete
 16. TRS: The rediff article here interviews Prof. R. Vaidyanathan of IIM-B quoting the amount to be more than 1 trillion dollar. http://www.rediff.com/election/2009/mar/31inter-swiss-black-money-can-take-india-to-the-top.htm

  Several others estimate this to be closer to 1.4 trillion dollars.

  You know more than me, what can happen if more dollars are unleashed in the market in a single day. For example, if, say, 10 billion dollars are suddenly added in a single day to the dollar-rupee forex market, what will be the impact on the exchange rate.

  ReplyDelete
 17. >>>You know more than me, what can happen if more dollars are unleashed in the market in a single day. For example, if, say, 10 billion dollars are suddenly added in a single day to the dollar-rupee forex market, what will be the impact on the exchange rate.
  >>>>>>>>>>>>>>>>>

  why do you think that there will be change in the exchange rate? this money directly goes to india's forex reserve. not some one sending this money to india to some one else. if the government gets it then it directly goes to the forex reserve and shouldn't affect the exchange rate. please enlighten me if i am wrong.
  -Jagan

  ReplyDelete
 18. பத்ரி,

  உண்மை எப்பவும் இரண்டு அதீத எல்லைகளுக்கு இடையே தான் இருக்கும்.ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்டுவந்து கழிப்பறைகள் கட்டலாம் என்று சொல்வது அபத்தத்தின் ஒரு எல்லை என்றால்,மேற்கண்ட உங்கள் பதிவு அதன் மறு எல்லை.
  உதாரணம் சொன்னால்
  அம்பானியிடம் இந்த உலகத்தையே வாங்கும் அளவுக்கு பணம் இருக்கிறது என்ற வாதத்திற்கு மாற்றாக அவருக்கு தொழிலில் சரிவு ஏற்பட்டால் பிச்சை எடுக்கவேண்டிய நிலை வரும் என்று சொல்வது போல.
  வெளிநாடு வங்கிகளில் இந்தியர்களால் முடக்கி வைத்திருக்கப்பட்டுள்ள பணம் அனைத்தும் இந்தியஅரசிறக்கு சொந்தமானது. எனவே அத்தனை பணத்தையும் முதலில் Govt of India acct.க்கு அந்நிய செலாவணியிலேயே மாற்ற ஆவன செய்யவேண்டும்.அதற்கு பிறகு பிரதம மந்திரி,நிதியமைச்சர்,மற்றும் பத்ரி கொண்ட ஒரு துயர் மட்ட குழு அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என விவாதித்து தீர்மானிக்கட்டும்.
  நன்றி.

  ReplyDelete
 19. பத்ரி

  கருப்பு பணம் என்றால் என்ன

  --

  வருமான வரி கட்டாத பணமா (அதாவது நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று நினைத்து பதுக்குவது)

  அல்லது

  முறையற்ற வகைகளில் சம்பாதித்த பணமா (வருமானத்திற்கு, அதாவது முறையான வருமானத்திற்கு அதிகமான பணமா - லஞ்சம் என்று வைத்துக்கொள்ளலாம்)

  அல்லது

  முறையற்ற வகையில் சம்பாதித்ததால், வரி கட்ட விரும்பினாலும், வருமான வரி கணக்கு தாக்குதல் செய்யும் போது மாட்டி விடுவோம் என்பதால் வரி கட்டாத பணமா

  --

  சில உதாரணங்கள் தருகிறேன்

  இன்று தாலுகா அலுவலகத்தில் ஒரு குமஸ்தா பணிபுரிகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்

  அவரது மாத வருமானம் 15000 ரூபாய்
  வருட அரசு வருமானம் 180000

  இவர் மாதம் 5000 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்

  அந்த 60000 ரூபாய்க்கும் சேர்த்து வருமான வரி கட்ட அவர் தயார். (என்ன நாலாயிரம் வருமா) ஆனால் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பயம்

  இது வருமானத்திற்கு அதிகமான சொத்து

  --

  ரஜினி காந்தின் வருட வருமானம் 200 கோடி
  ஆனால் அதில் 66 கோடி வரி கட்ட வேண்டி வருமே என்று அவர் வருட வருமானம் 60 கோடி என்று கூறி 20 கோடி வரி கட்டுகிறார் (உதாரணம் மட்டுமே. ரஜினி ரசிகர்கள் சண்டைக்கு வர வேண்டாம்)

  --

  இப்பொழுது இந்த இரு பணங்களையும் ஒன்றாக கருதுவது நியாயமா என்பது என் கேள்வி

  ரஜினி, கொள்ளையடிக்கவில்லை, விதிகளை மாற்றவில்லை, சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்கவில்லை, வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை

  சொல்லப்போனால் அவர் சம்பாதித்தது முழுக்க சட்டத்திற்கு உட்பட்டே (ஐயா உதாரணம் தான். ரஜினிphobes சண்டைக்கு வராதீர்கள்)

  --

  பத்ரி மற்றும் பிறரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 20. வருமான வரி என்ற ஒன்றை நீக்கி விட்டு
  அதாவது சம்பாதிப்பதற்கு வரி கட்டுவதை நீக்கி விட்டு

  சேவை வரி, விற்பனை வரி ஆகியவைகளே
  அதாவது செலவழிப்பதற்கு மட்டும் வரி

  இருந்தால் எப்படி இருக்கும்

  ReplyDelete
 21. நீங்கள் சொல்வது சரியே புருனோ!

  1.கருப்பு பணம்=கணக்கில் வராத பணம்

  2.கணக்கில் வராத பணம்=வருமானத்தை குறைத்து வந்தது(அ)வருமானத்தை (தவறான வழியில்) பெருக்கி வந்தது.

  3.வருமானத்தை குறைத்து வந்தது=(உ-ம்)
  டாட்டா,பிர்லா,அம்பானி,ரஜினி,ஷாருக்கான் கமல்
  சுயதொழில் செய்வோர், ஏனையோர்.

  4.வருமானத்தை (தவறான வழியில்) பெருக்கி வந்தது:
  அரசியல்வாதி,அரசாங்க ஊழியர்,(நீதி மற்றும் போலீஸ் உட்பட)

  இதில் இரண்டாவது பிரிவினால்தான் அதிக ஆபத்து

  >>வருமான வரி என்ற ஒன்றை நீக்கி விட்டு
  அதாவது சம்பாதிப்பதற்கு வரி கட்டுவதை நீக்கி விட்டுசேவை வரி, விற்பனை வரி ஆகியவைகளே
  அதாவது செலவழிப்பதற்கு மட்டும் வரிஇருந்தால் எப்படி இருக்கும்>>
  இப்போ வருமானத்தை மறைப்பதுபோல அப்போ செலவையும் மறைப்பாங்க!
  வருமான வரி உச்சத்தை 30% என்று மாற்றி விட்டாலே போதும்.
  (குறைந்த பட்சம் 10%)
  exemption: Rs 3 lakhs/year.This should be raised by 5% every year

  ReplyDelete
 22. //அரபு நாடுகளில் எண்ணெய் மூலம் வரும் ராயல்டி வருமானம் இந்த வகையைச் சார்ந்தது. அதன் காரணமாகவே அது ஒரு ‘மாயப் பொருளாதாரத்தை’ அங்கே உருவாக்கியது. இன்று துபாய் தத்தளிக்கிறது.//

  துபாய்க்கு எண்ணெய் மூலம் வருமானம் கிடையாது. துபாய் தத்தளிப்பது அது முழுக்க முழுக்க கட்டுமான துறையினை நம்பியிருந்ததுதான். ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல ஊர் முழுக்க சொகுசு வீடுகள் கட்டிவெச்சிட்டு பொருளாதார தேக்க நிலையினால் வாங்க ஆள் இல்லாமல் போனதாலே துபாய் தத்தளிக்கிறது. எண்ணெய் வளத்தை முழுவதும் நம்பியிருக்கும் அபுதாபி செல்வசெழிப்போடு இருக்கிறது.

  ReplyDelete
 23. நடக்கிற காரியத்த பேசுங்க சாமி..
  கருப்பு பணமாவது திரும்ப வர்ரதாவது.. சான்சே இல்லை.
  (அப்படியே அந்த பணம் அத்தனையும் முப்பது- நாப்பது கப்பல்ல போட்டு எடுத்துட்டு வரும்போது, அத்தனையும் காணாம போயிடும். அதுக்கு ஒரு விசாரண கமிசனை வேண்ணா போடுவாங்க. இது அத்தனையும் நடக்க ஒரு 60-70 வருசம் ஆயிடும்.)
  -ஜெகன்

  ReplyDelete
 24. டாக்டர் சார்.. உங்களுக்கா தெரியாது :)
  அரசு ஊழியர் காசு வாங்கினா வேலையே போகும். த்லைவர் செய்வது வரி ஏய்ப்பு - அபராதம் மட்டுமே.
  சரியா?
  -ஜெகன்

  ReplyDelete
 25. பின்னூட்டம் போடக் கை பரபரக்கிறது. என் பணி ஒப்பந்தப்படி இது போன்ற விஷயங்களில் கருத்து சொல்லக்கூடாது:-(

  ReplyDelete
 26. Hmm, its an irony that only people like Raja and the ilk heed to Badri's advice and continue to park their dollars out of india in places like USA,Swiss,Mauritius etc.They are heeding Badri's advice and rendering a great (altruistic)service to our country by not bringing the money into the country.
  They will only use the money (ex: buy equipments for kalaignar tv etc) in international market for their businesses,which will in turn help our country by providing employment etc to our workforce.

  ReplyDelete
 27. <>

  At least this blog entry, i see this as topic. You might continue the series. But this is what is shown to us, so we are commenting on this.

  <>

  கடன் குடுக்கலாம்.  சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டரை ட்ரில்லியன் டாலர்கள். நமது வெறும் 300 பில்லியன் டாலர்கள். எந்த 1.5 ட்ரில்லியன் டாலரை அதனுடன் சேர்த்து விட்டால் அமெரிக்காவும் பயப்புடும். பயபுள்ள நீங்க இவ்ளோ டாலர வெளிய விட்டா, உங்க ரூபா ஏறதுக்கு முன்னாடி அவன் டாலர் காலி. அவன் விடுவான்? பத்ரி, அமெரிக்க பலம் தெரியாத ஆளா நீங்க? You disappoint me with this argument.

  Sources:
  http://www.chinability.com/Reserves.htm
  http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_reserves

  <>

  exactly, i felt the same.

  <>

  Isn't this true? Those luxury islands killed Dubai.

  << மாறாக, முற்றிலுமாக வெளிநாடுகளில் செலவுசெய்து, மின் உற்பத்தி நிலையங்களை முழுதாக வாங்கவேண்டும். >>

  Hopefully you are not about coal again. We need to spend that money on research of solar or renewable power and try to produce renewable power in our country.(Note: Research can be done in another country. We just need best minds in world to sit and get us the final product).

  P.S: Republishing this comment as per Badri's twitter request.

  ReplyDelete
 28. கருப்பு பணம் திரும்ப வழி இருக்கா ?! அதுவே கஷ்டம். அது வருமான்னே தெரியாத போது இது தேவையா?

  ReplyDelete
 29. my dear, if at all v manage to get the money, (in months or most probably years) v hv 2 ace economists at the top in the govt - so they vl know wat to do

  u dont hv to wory - bcoz they know very well wat to do

  ReplyDelete
 30. Badri: Am an admirer of your well analysed articles. However, this article requires some pause and reflection. One: Black money is a flow; not a stock. It just represents a stream of income hidden from State view to avoid paying tax. The Swiss coffers are made up of two components: (1) Rightful property of owner, held against law, in a form that is prohibited. An individual can easily escape Indian jurisdiction by migrating and keeping the money away from GOI reach. The issue is one of illegality and not immorality since the State is incorrect in its exchange restrictions that have given the State a right to first grab the candy jar to cover its inappropriate policies through FERA. Much of that illegality has gone away after the economy opened up. (2) Stolen possession of the owner (bribe money etc) that the GOI can "commandeer". Even if GOI is able to take possession of both, for argument sake, it has to issue Rupees to the rightful owners for the first component; it can commandeer only the second component. Even when it commandeers, it has to deposit the foreign currency with RBI and take possession of rupees (or do any action that would have a similar impact). RBI would have sudden receipt of dollars but realistically would not allow the dollars to be released in the market. (Example: China, all AGCC states that maintain an artificial parity to protect exports. There are no friends for fair market when it means a death spiral). Why do you think RBI would not do that? On the other hand GOI would end up having a large hoard of rupees. History shows that politics prevails over economics and GOI would spend this on infrastructure. Nation would have assets. But people (who helped build this infrastructure) would get the cash. The circulation of this money with its multiplier effect would create hyper inflation. This is exactly what China is avoiding by getting into a death spiral of building ghost towns and empty malls. At some stage this big ticket ponzi will hurt. Refer history. When Spaniards discovered gold in Mexico and brought it in big troves to Spain, Spanish economy went for a nose dive. Money, in the hands of a government, is not wealth. It is just a tool to help the economy grow or decay. The safer alternative would be to put this into a sovereign fund and invest it outside the Indian economy (like Abu Dhabi, Saudi Arabia etc do) and bring it into India in dosages the economy can absorb meaningfully. I might sound unpalatable to common sense. However, 15th century Spain is a good example to understand why huge inflow of foreign currency is not necessarily a great positive. Absorptive capacity of the economy is a reasonable restraint. I could be wrong. There is some probability that I could be right. Since I respect you and your readers, I think this view is worth having a second look. Affectionately TRS

  ReplyDelete
 31. Badri: The deposit is a stock (like a lake). GDP is a flow (like a river). A $ 1 trillion flow cannot generate a $ 1 trillion stock. The proportions are illogical. You can examine this in two ways: 1. Switzerland's total foreign currency holdings is $ 266 billion according to IMF website. Even if all banks in Switzerland agree to remit the Indian money to India, they cannot remit the estimated amount. 2. US public debt is $ 14 trillion. Of this $ 9 trillion is held by Americans. $ 4 trillion by foreign states. China is the giant here followed by Japan, Korea, Oil countries etc. Am not able to fathom Indians having acquired 25% of US dollars issued and not in circulation. People tend to sensationalize numbers. Am not saying "hidden wealth" is minor. It is major. Part of it is unethical. The best we can do is to understand the problem rightly. Then we may even resolve it!

  ReplyDelete
 32. Third and last: What do you think would happen to US economy if all the dollar funds are released into US or other supplier economies. Global GDP would shoot up by $ 1 trillion times multiplier. Would that not boost global economy and shore up their currencies? Holding it as $ and collecting interest will not have any impact. It simply means the debt holder in US debt records is shifted from Swiss Central Bank to RBI. We need a Leontiff model to understand the dynamics of such a massive shift of funds. Am sure the Chinese have one. While I dont know what would happen, I know that the Sivaji scam will not work! TRS

  ReplyDelete
 33. 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.

  தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!

  ReplyDelete
 34. 26/11 நடந்த பிறகு பாகிஸ்தானுக்கு பில்லியன்கள் கணக்கில் கடன் கொடுத்து உதவினால் ஊருல ஒரு குண்டு வெடிக்காது என்றீர்களே..அத இப்போ செஞ்சா என்ன? வர்ற கருப்பு பணத்துல பாதிய பாகிஸ்தானுக்கு கொடுப்போம். தீவிரவாதத்தையும் ஒழிச்ச மாதிரி இருக்கும், இந்தியாவோட மிலிடரி செலவும் குறையும்..

  மக்களே சிரிக்காதீயும்..பத்ரியார் நவின்ற கருத்தே இஃது..

  ReplyDelete
 35. ஒரு வசதிக்காக, இந்த buzz link

  http://www.google.com/buzz/102882004474266578827/7rPojMi767W/BUzz-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0

  ReplyDelete
 36. Why don't we use these black money in service sector's like free education, free medical? I think this won't create much problems.

  K. SAID ALAUDDEEN FAISZ

  ReplyDelete
 37. மிகக் குறைந்த உள்நாட்டுச் செலவுகளுடன் மிக அதிகமான productivity enhancement செய்ய வேண்டும் என்ற வாதம் புரிகிறது.
  இவையெல்லாம் இதுவரை நாம் திட்டமிடாத கேபிடல் செலவுகளாக இருந்தால் தான் அது செல்லுபடி ஆகும் அல்லவா.

  இல்லையென்றால், வெளியிலேயே வைத்துப் பைசல் செய்யப்பட்டாலும் அதனால் உள்நாட்டில் அதற்கு இணையான ஒரு தொகை இருக்கத்தானே செய்யும் (i.e.தொகை வெளியிருந்து வருவதற்கு பதிலாக உள்ளேயே மிஞ்சும்).

  மிஞ்சுவதை ரெவென்யூ செலவுகளுக்கு பயன்படுத்தினால் பணவீக்கம் அதிகரிக்கும்.
  மிஞ்சுவதுற்கு ஈடாக வரிவசூலைக் குறைத்தால், டிஸ்போஸபிள் இன்கம் அதிகரித்த் பணவீக்கத்தை உக்கிரப்படுத்தலாம்.

  ஆக தடாலடியாக எது செய்தாலும் பிரச்சினை தான்.
  நாளை மதியம் மூன்று மணியளவில் எல்லா ஸ்விஸ் பணமும் வந்து சேரும் என்று திட்டமிட்டால் என்ன பிரச்சினையோ, கிட்டத்தட்ட அதே பிரச்சினை தான் அடுத்த வருடம் பூரண வரிவிலக்கு என்பதாலும் (i.e. பணவீக்கத்தைப் பொருத்த வரை).


  பொதுவாக நினைக்கப்படுவது போல எக்ஸ்சேஞ்ச் ரேட்டிற்கும் ஏற்றுமதிக்கும் இருக்கும் உறவு அத்தனை நேரடியானது அல்ல என்று சமீபகாலமாக பொருளியல் நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவைப் பொருத்த மட்டில் வலுவாகிக்கொண்டிருக்கும் எக்ஸ்சேஞ் ரேட்டையும், விரிந்துகொண்டிருக்கும் ரிலெடிவ் பணவீக்கத்தையும் (i.e. தயாரிப்புச் செலவுகளின் ஏற்றம்) மீறி தான் கடந்த பத்தாண்டுகளில் ஏற்றுமதி வளர்ந்திருக்கின்றன.

  நமது எக்ஸ்சேஞ்ச் ரேட் வலுவாவதை ஒன்றும் செய்ய முடியாது. (செய்ய மாட்டேன் என்று ஒரு மாதிரி சொல்லி விட்டது ரிஸர்வ் வங்கி). இனி இப்படித்தான் என்று உணர்ந்து competitive ஆவதைத் தவிற வழியில்லை என்று சொல்வதும் சரிதான் என்று தோன்றுகிறது. ஏற்றுமதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வளர்ச்சி என்பதே, உலக அரங்கில் போட்டியிடும் தேவையால் இங்கு productivity அதிகரித்து அதனால் வருவது தானே.

  எவ்வகை repatriationஐயும் one-time bulk முதலீடாகப் பார்க்காமல் ஒரு சீரான வருடாந்திரத் வருமானமாக structure செய்ய முடியும் பட்சத்தில், பணவீக்கத்தையோ, எக்ஸ்சேஞ்ச் ரேட்டையோ தடாலடியாக பாதிக்காதபடி கேபிடல் செலவுகள் செய்துகொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 38. துபாய் சரியான உதாரணம் இல்லை என்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆனால் உண்மையில் 1975-ல் துபாயின் மொத்த உற்பத்தியில் 54% எண்ணெயால் கிடைத்தது. 2000-ல் இது 10%-ஆகச் சுருங்கியது. காரணம் பிர துறைகளில் காணப்பட்ட வளர்ச்சி. 2005-ல் 5% என்று மேலும் சுருங்கி, 2010 வாக்கில் வெறும் 3% என்றாகியுள்ளது. பிற துறைகள் கடுமையாக வளர்ந்துள்ளன என்பதுதான் காரணம். ஆனாலும் என் அடிப்படைக் கூற்று அதேதான். மாயப் பொருளாதாரத்தில் அடிப்படைப் பொருள் உற்பத்தி இல்லாமல் இருக்கும். நிதி, சுற்றுலா போன்ற துறைகள் மட்டும் விரிவாவதில்தான் பிரச்னை உள்ளது. எந்தக் கட்டத்திலும் அவை சடாரெனச் சுருங்கும். ஒரேயடியாக அழிந்துவிடும். அதன் விளைவாக நிஜப் பொருளாதாரம் கடுமையாகத் தாக்கப்பட்டு, நாடு அழிந்துவிடும்.

  மாயப் பொருளாதாரம் பிரச்னையைத்தான் வரவழைக்கும் என்பதே என் அடிப்படைக் கருத்து. அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 39. ஏற்றுமதிக்குக் கெட்டது என்றால் இறக்குமதிக்கு நல்லதுதானே என்ற கேள்வி தொடர்பாக. நம் பெரும்பாலான இறக்குமதி பெட்ரோல்தான். அதைத் தாண்டி நாம் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடல்ல. டாலர் வலுவிழந்தால் பெட்ரோல் விலை நிச்சயமாகக் குறையும். ஆனால் பெட்ரோல் விலை அதிரடியாகக் கீழே வீழ்வதை அரசு விரும்பாது. இரண்டு காரணங்கள்: ஒன்று, அரசின் வரி வருமானம் கடுமையாக பாதிக்கப்படும். இரண்டு, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். இப்போது மின்வண்டிகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நாடு அதிலிருந்து பின்வாங்கும். இந்தக் காரணங்களுக்காக செயற்கையாக பெட்ரோல் விலையை அதிகமாகவே வைத்திருக்க விரும்பும் அரசு. எனவே டாலர் இறக்கத்தால் மக்களுக்கு நேரடியாகப் பயன் இருக்காது. கெடுதல்தான் மிக மிக அதிகம்.

  ReplyDelete
 40. "ஆனால் பெட்ரோல் விலை அதிரடியாகக் கீழே வீழ்வதை அரசு விரும்பாது. இரண்டு காரணங்கள்: ஒன்று, அரசின் வரி வருமானம் கடுமையாக பாதிக்கப்படும்."

  இது சரியல்ல. ஏன் மீட்கப்படும் பணத்தைக் கொண்டு கடனை முதலில் அடைக்கலாமே?
  India's short term debts are very interest intensive. With the recovered amount, these short term debts can be cleared to a large extent. Once this is cleared the fiscal deficit in the union budget will go down drastically.
  Once deficit narrows down, the govt can afford to cut down on customs and excise revenues which means duty on oil imports can be cut down. Yes, it's possible to get cheap fuel for people and this will curb inflation.

  ReplyDelete
 41. For reference:

  http://www.google.com/buzz/102882004474266578827/F4wpw1E2eZC/%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%AE

  ReplyDelete
 42. Two points.

  1. It's factually wrong that India only imports petrol or only petrol is the major component imported. I believe you mentioned that suit your argument . Just like your quote on others in 2g.

  2.When rupee reaches 15/$ can't the demand for materials equalized by importing. I believe India is a largely importing company. So isnt it good that other industries can develop at the cost of IT. We can see a real estate boom not necessarily by IT.

  ReplyDelete
 43. How can the black money be poured back in to the nation.

  1. Sonia can ask PM to now raise NREGA from Rs.80 to Rs.100. The PM cant say no this time for lack of money.

  2. Toll in highways can be paid by Govt instead of people driving in the highways

  3. Instead of the fake Kalaignar Insurance scheme, a real insurance scheme can be introduced for all the citizens of India

  4. More IIT's and IIM's can be opened. Reduce the fight for reservation in those institutions.

  5. More loans for small scale industries thereby promoting entrepreneurship

  6. As some one suggested, more public toilets

  7. More infrastructure for schools. Free books, computers etc.

  Others please add on. The dollar infusion in a periodic manner is better than the dummy money printing carried on by the RBI to fight inflation.

  ReplyDelete
 44. பத்ரி,
  தட்டையாக யோசிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
  கருப்புப் பணத்தை-அது ஏய்க்கப்பட்ட வரியாக இருக்கலாம் அல்லது மறைக்கப்பட்ட வருமானமாக இருக்கலாம்-மீட்கும் பட்சத்தில் பேலன்ஸ் ஆப் பேமெண்ட் பிரச்னைகளை நீக்க உபயோகிக்கலாம்.

  ரூஸ்வெல்ட் செய்தது போல கட்டமைப்புக்களை நீண்டகாலத் திட்டத்தில்-ஒரு ஐந்தாண்டுகள் அல்லது பத்தாண்டுகள்-மேம்படுத்தலாம்.எளிதாக இது நமக்கு நாமே அல்லது 100 ரூபாய் வேலைத் திட்டம் போன்றதே;ஆனால் நான் எல்லா கட்டமைப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் சொல்கிறேன்.

  மற்றபடி 45 லட்சம் கோடியும் ஒரே நாளில் சந்தையில் பாயப் போவதில்லை.

  எண்ணெய்-டாலர் கண்ணாமூச்சிக்கு மாற்றான சிந்தனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏன் ரூபாயை எண்ணெய் வணிகத்திற்கான பணவிடையாகப் பயன்படுத்தக் கூடாது என்று எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 45. http://www.sify.com/finance/The-1-5-trillion-puzzle-India-needs-to-solve-imagegallery-others-lb1pq9fgfjb.html

  ReplyDelete
 46. Sir, this is a good delibaration, that what would happen such a huge money, 1.5 trillion dollars, bumps into our economy. But I differ from your argument that it would deflate the Indian Economy, so better they don't come into our country, in a gush. Its all suppositions and there is no way we are getting them as easy.

  My point is that, bumping in such a huge amount into the economy, will only strengthen the economy whichever way you look at it. Be it dollar rate, rupee value, inflation whatever. As you say this will bring TCS, Infosys, Wipro and sofetware kanavans to the street. Thats all it will do, there wont be much repurcussion of such an event. But it will help our imports, especially the trecherous crude oil. So net effect will be positive.

  Inflation is another point. Bumping in so much money will raise the the demand for labour and materials. They will hike up, but they should settle in about say ten years of time. Or you can have planned infiltration into industires, infrastructure, and agriculture, which will make a very strong India. So, IMO in any case that money will not hurt.

  ReplyDelete
 47. Damn this is a joke.Money will not be brought to India.It will destroy Switzerland.Mauritius,Panama,British Virgin Islands and finally the KKR along with the IPL.First the money stashed may be held by Indian Passport holders not exactly Residential.If an NRI like Lakshmi Mittal (for example) or Hinduja brothers hold $2 billion India cannot claim it because the country they earned is different.Its very well known that Quatrochi was let off in the Bofors scandal because it will destroy India's defense deals in future.Everyone knows he was close to the Mainos and he got kickbacks from Indian govt but nothing can be done because India needed Bofors birangis.Apparently Bofors Birangi was one of the major reason why we won the Kargil war.I am still wondering what are the Mainos going to do with $2.2 bn dollars

  ReplyDelete
 48. Just one point to add to my earlier note: Its not right to claim all of that money belongs to the Government (geez). Its the induvidual's money, illegal but still induvidual's money. That's another alternate. Give them a voluntary disclosure. They will not only bring in the money, also find a way to invest/spend them. If they invest, we are producing as many investors thats very very good for the country. Its a bold thinking, but people will make a hue and cry of it, how dare you say that dastardly act of such proportion be forgiven. Are you insane, treacherous, an insensitive garbage blah blah, but excuse me, this sum, 1.5 trillion dollars, is much less than what the expatriates are making for the respective host countries working day and night.

  A remark on earlier comments: strong currency need not equate to exports or competitiveness. Thats a Western concept. Ours need not be the same. For us, being so populous, it can equate to our internal strength (+ export - import + demand - supply of course). We should not be too much worried about a stronger rupee. But since Mr Chaidambaram himself was a proponent of weaker rupee, I do not want to go too much into this as I fear I can get wrong.

  ReplyDelete