Tuesday, January 11, 2011

2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள்

2009-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல் விருதுகளை நேற்று தமிழக அரசு அறிவித்தது. விருதுபெற்ற நூல்கள் பல்வேறு துறைகளை (மரபுக் கவிதை, புதுக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சுற்றுப்புறவியல், கணினிவியல், நாட்டுப்புறவியல், இதழியல், விளையாட்டு) சார்ந்தவை. தினமணி செய்தித்தாளிலிருந்து, விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்/பதிப்பாளர் தகவல் இதோ:

 1. பெரியார் காவியம், இரா. மணியன், சீதை பதிப்பகம்
 2. பூட்டாங்கயிறு, கவிஞர் கவிமுகில், வனிதா பதிப்பகம்
 3. ஏழரைப் பங்காளி வகையறா, எஸ். அர்ஷியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 4. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், ஆண்டாள் பிரியதர்ஷினி, ஏகம் பதிப்பகம்
 5. செம்பியன் தமிழவேள், சி. செந்தமிழ்ச்சேய், மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை
 6. பச்சைக்கிளியே பறந்துவா, பாவண்ணன், அன்னம் பதிப்பகம்
 7. அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ்
 8. செந்தமிழ் வளம்பெற வழிகள், கனகரத்தினம் (இலங்கை), மணிமேகலைப் பிரசுரம்
 9. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி. ஆசான், கயல்கவின்
 10. கம்போடியா நினைவுகள், கே.ஆர்.ஏ. நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ்
 11. தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வே.ரா. மணியம்மை, ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம்
 12. நீதிக்கட்சி வரலாறு, க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம்
 13. வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல், ஆர்.வி. ஜெபா ராஜசேகர், ஈடன் பதிப்பகம்
 14. சந்திரயான், சி. சரவணகார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம்
 15. பெரியாரைக் கேளுங்கள், மா. நன்னன், ஏகம் பதிப்பகம்
 16. காப்புரிமை, எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம்
 17. தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள், கி. முப்பால் மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 18. கற்றலும் கற்பித்தலும், ஜவகர் சு. சந்தரம், கங்காராணி பதிப்பகம்
 19. வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு, ம. சுவாமியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 20. தமிழ் இணையம், தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும், ம.செ. இரபிசிங், நர்மதா பதிப்பகம்
 21. நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை, சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம்
 22. ஒரு பைசாத் தமிழன் அயோத்திதாச பண்டிதர், வே. பிரபாகரன், திருவள்ளுவர் ஆய்வு நூலகம்
 23. ஒன்றே சொல், நன்றே சொல் (3 தொகுதிகள்), சுப. வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம்
 24. ஒலிம்பிக் சாதனையாளர்கள், ப்ரியா பாலு, நர்மதா பதிப்பகம்

நியூ செஞ்சுரி/பாவையின் நான்கு புத்தகங்கள், நர்மதா, கிழக்கு, ஏகம் ஆகியவற்றுக்குத் தலா இரண்டு புத்தகங்கள் என விருதுகள் கிடைத்துள்ளன.

9 comments:

 1. I have been following your daily posts on Chennai book fair. Would it be possible for you to give us data on how many books you sold, which were the best sellers, etc. after the book fair gets over ?

  ReplyDelete
 2. எல்லோரையும் சமாதானம் பண்ணிட்டாங்க போலிருக்கு..!

  ReplyDelete
 3. கிருஷ்ணன்: நிச்சயமாக. புத்தகக் கண்காட்சி முடிந்ததும் எங்கள் பதிப்பகத்தின் முதல் 20 புத்தகங்கள் எவை என்று பட்டியலிடுகிறேன். மொத்தமாக எத்தனை புத்தகங்கள் விற்றன, வருமானம் எத்தனை போன்ற தகவல்கள் பிரத்யேகமானவை, ரகசியமானவை அல்லவா? அவற்றை வெளியிடமாட்டோம். ஆனால் ஒரு வாசகருக்குத் தேவையான பல தகவல்களைத் தரத் தயங்கமாட்டோம்.

  ReplyDelete
 4. உண்மைத்தமிழன்: 24 எழுத்தாளர்கள், 18 பதிப்பகங்கள். எல்லோரையும் சமாதானம் செய்துவிட முடியாது!

  ReplyDelete
 5. kanimozhi,thamizhachi,ravikumar em.el.yae not getting any prizes ? really a surprise !
  i thought they would introduce new category - "enter kavidhaigal" and give them all a prize.

  ReplyDelete
 6. எழுத்தாளருக்கு ரூ. 20,000 (இருபதாயிரம்). பதிப்பாளருக்கு ரூ. 5,000 (ஐந்தாயிரம்).

  ReplyDelete
 7. என். ராமதுரை எழுதியது
  கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இரு நூல்களுக்கு பரிசு கிடைத்துள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி. வருகிற ஆண்டுகளிலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற எனது வாழ்த்துகள்.
  ராமதுரை

  ReplyDelete
 8. தாங்கள் பதிப்பித்த நூல்களுக்கு விருது கிடைத்த செய்தி தந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், நேற்று, தங்களின் என்.எச்.எம். ரைட்டர் பயன்பாட்டு தொகுப்பிற்கு அரசின் விருது கிடைத்திருப்பதனை ஆண்டோ பீட்டர் கூறினார். அது அதிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ் எழுத்து வகை வெள்ளத்தில் சிக்கிய என் போன்ற எழுத்தாளர்களுக்கு, நல்லதொரு பயன்பாட்டு தோணியாய் வந்தது உங்கள் மென்பொருள். இதனைப் பயன்படுத்தும் அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

  வாழ்க பல்லாண்டு.

  அன்புடன்
  பெ.சந்திர போஸ்
  சென்னை
  9444110303
  drchandrabose@gmail.com

  ReplyDelete